Advertisment

Tamil News Today: மாணவர்களுக்கு வழிகாட்ட ’கல்லூரிக்கனவு திட்டம்’.. முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்!

Tamil Nadu News, Tamil New Petrol price Today - 24 JUNE 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
M K Stalin

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகளுக்கு வழிகாட்டும்  வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக்கனவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

Advertisment

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய  உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவிறுத்தல். தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ 7,500 முதல் 12,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும்- போக்குவரத்துத்துறை உத்தரவு

உரிய பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று  ஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.  பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக் கூடாது என்றும் அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

கடலூர் வெடி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

கடலூர், எம்.புதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு.  


  • 20:30 (IST) 24 Jun 2022
    மரம் சாய்ந்து விழுந்து வங்கி மேலாளர் வாணி பலி

    சென்னை, கே.கே.நகரில் மரம் சாய்ந்து விழுந்து வங்கி மேலாளர் வாணி பலியாகியுள்ளார். சென்னை போரூரில் வசித்து வரும் வாணி, கே.கே.நகர் பகுதியில் காரில் சென்றபோது மரம் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.


  • 20:29 (IST) 24 Jun 2022
    யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணையை தொடரஅனுமதி

    யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்திருந்த நிலையில் விசாரணைக்கு தடை விதித்தால் ஆதாரங்களை சேகரிக்க முடியாது என குற்றவியல் வழக்கறிஞர் கூறியதை தொடர்ந்து தற்போது விசாரணையை தொடரலாம் என மீண்டும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


  • 19:33 (IST) 24 Jun 2022
    +1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் - தேர்வுத்துறை

    தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், +1 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஜூலை 7ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது முன்கூட்டியே வெளியிடப்பட உள்ளது.


  • 19:30 (IST) 24 Jun 2022
    கர்நாடகாவில் மனித கருக்கள் கண்டெடுப்பு

    கர்நாடகாவின், பெல்காவி மாவட்டத்தில் மழைநீர் கால்வாயில் 5 பாட்டிலில் அடைக்கப்பட்ட நிலையில் 7 மனித கருக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


  • 19:26 (IST) 24 Jun 2022
    அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் - ஜே.சி.டி.பிரபாகர்

    அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையால் தொண்டர்கள் வேதனையடைந்துள்தாக ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.


  • 18:52 (IST) 24 Jun 2022
    திரெளபதி முர்முவுக்கு அதிமுக மனப்பூர்வமாக ஆதரவளிக்கும் - ஓ.பன்னீர்செல்வம்

    பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்முவுக்கு அதிமுக மனப்பூர்வமாக ஆதரவளிக்கும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


  • 18:45 (IST) 24 Jun 2022
    அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் - ஜே.சி.டி.பிரபாகர்

    அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒற்றை தலைமை என்ற கோரிக்கையால் தொண்டர்கள் வேதனையடைந்துள்தாக ஜே.சி.டி.பிரபாகர் கூறியுள்ளார்.


  • 17:41 (IST) 24 Jun 2022
    இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி

    திருச்சி மத்திய சிறைச்சாலை சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் 30 பேர் மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏறபட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தங்களை விடுவிக்க கோரி 35வது நாளாக இலங்கை தமிழர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் இன்று காலை மண்ணெண்ணை ஊற்றி ஒருவர் தீ வைத்து கொண்டார்


  • 16:50 (IST) 24 Jun 2022
    கார்த்தி கோபிநாத் வழக்கு - இடைக்காலத் தடை!

    யூடியூபர் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கை ஜூலை 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

    கோவில் பணிகளில் நிதி மோசடி செய்தததாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்திக் கோபிநாத் மனு அளித்திருந்தார்.


  • 16:40 (IST) 24 Jun 2022
    நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்!

    நிதி ஆயோக்கின் தற்போதைய தலைமை அதிகாரி அமிதாப் காந்த் பதவி காலம் ஜூன் 30 உடன் நிறைவடையவுள்ள நிலையில், புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


  • 16:38 (IST) 24 Jun 2022
    காற்று மாசுவால் மக்களின் ஆயுள் காலம் குறையும் விவகாரம் - மனித உரிமைகள் ஆணையம்!

    காற்று மாசுவால் மக்களின் ஆயுள் காலம் குறையும் விவகாரம் தொடர்பாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


  • 16:36 (IST) 24 Jun 2022
    "தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம்" - வைத்திலிங்கம்!

    கட்சிக்குள் ஒற்றுமை வேண்டும் என்று தெரிவித்துள்ள அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடருவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


  • 16:30 (IST) 24 Jun 2022
    பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு!

    அரசு இளநிலை தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இடஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொள்ள இருக்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


  • 16:29 (IST) 24 Jun 2022
    தேர்தல் வழக்கு தள்ளுபடி !

    திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவிக்காலம் முடிந்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த முகாந்திரமும் இல்லைஎன்று தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 16:29 (IST) 24 Jun 2022
    தேர்தல் வழக்கு தள்ளுபடி !

    திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவிக்காலம் முடிந்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த முகாந்திரமும் இல்லைஎன்று தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

    என வழக்கு தள்ளுபடி


  • 16:14 (IST) 24 Jun 2022
    தேர்தல் வழக்கு தள்ளுபடி !

    திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியில் 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவிக்காலம் முடிந்துவிட்டதால் வழக்கை தொடர்ந்து நடத்த முகாந்திரமும் இல்லைஎன்று தெரிவித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


  • 16:04 (IST) 24 Jun 2022
    அஞ்சல் வாயிலாக குடும்ப அட்டை!

    புதிய மின்னணு குடும்ப அட்டை மற்றும் அதன் நகலை அஞ்சல் வாயிலாக அனுப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் கட்டணத்தை பயனாளிகளிடம் வசூல் செய்து குடும்ப அட்டைதாரர்கள் முகவரிக்கு அனுப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


  • 16:03 (IST) 24 Jun 2022
    அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கு தள்ளுபடி!

    மஞ்சள் ஆறு குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கில் தடுப்பணைகள் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்காக மட்டுமே என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


  • 15:44 (IST) 24 Jun 2022
    2 கோடி மதிப்பிலான மீட்பு - 2 பேர் கைது!

    கடலூர், விருத்தாலச்சத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான 2 வெண்கல சிலைகள் மீட்க்கப்பட்டுள்ளது. மகிமைதாஸ் என்பவருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்த நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர்.


  • 15:24 (IST) 24 Jun 2022
    தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரியை தொடர்ந்து தமிழகம் முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.


  • 15:08 (IST) 24 Jun 2022
    ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும் - பால்வளத்துறை அமைச்சர் எச்சரிக்கை!

    தமிழக அரசின் ஆவின் கடைகளில் ஆவின் பொருட்கள் மட்டுமே விற்க வேண்டும். மற்ற பொருட்கள் விற்பனை செய்தால் கடையின் உரிமை ரத்து செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


  • 13:56 (IST) 24 Jun 2022
    வைத்திலிங்கம் தகவல்!

    அதிமுக பொதுக்குழு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை நாடவில்லை என வைத்திலிங்கம் கூறியுள்ளார்.


  • 13:32 (IST) 24 Jun 2022
    தலைவர்களிடம் ஆதரவு கோரும் திரெளபதி

    குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடம் திரௌபதி முர்மு, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் சரத் பவார் ஆகியோரிடம் ஆதரவு கோருகிறார்.


  • 13:15 (IST) 24 Jun 2022
    திரௌபதி முர்மு வேட்புமனுவை தாக்கல்!

    தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இருந்தனர்.


  • 13:10 (IST) 24 Jun 2022
    அவைத்தலைவருக்கே அதிகாரம்!

    அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்டதால் தற்போது அவைத்தலைவருக்கே அதிகபட்ச அதிகாரம் என சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.


  • 12:47 (IST) 24 Jun 2022
    அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை!

    அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்; அதுதான் அதிமுகவின் சட்ட விதி. அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது- சி.வி.சண்முகம்


  • 12:45 (IST) 24 Jun 2022
    ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது!

    அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகிவிட்டது. பன்னீர் செல்வம் பொருளாளர், எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் மட்டுமே தற்போது நீடிக்கின்றனர் - சி.வி.சண்முகம்


  • 12:25 (IST) 24 Jun 2022
    பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உண்டு.. சிவி சண்முகம்!

    பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உண்டு. 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே பொதுக்குழுவை கூட்டலாம். அதிமுகவின் சட்டவிதி 19(7)ன் படி பொதுக்குழுவை கூட்ட அறிவித்தோம். ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட்ட அழைப்பிதழ் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டது. பொதுக்குழுவை பற்றி வைத்திலிங்கம் அவதூறாக பேசியுள்ளார் என பொதுக்குழு கூட்டம் குறித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் கருத்துக்கு சி.வி.சண்முகம் விளக்கமளித்துள்ளார்.


  • 12:05 (IST) 24 Jun 2022
    செஸ் போட்டிகள் நடத்த ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு!

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட, மாநில அளவில் செஸ் போட்டிகளை நடத்த ரூ. 1 கோடி நிதி விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


  • 11:52 (IST) 24 Jun 2022
    யஷ்வந்த் சின்ஹாவுக்கு‘Z’ பிரிவு பாதுகாப்பு!

    எதிர்க்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு, மத்திய அரசு ‘Z’ பிரிவு பாதுகாப்பு வழங்கியது.


  • 11:43 (IST) 24 Jun 2022
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு!

    சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 37,960 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ. 4,745க்கு விற்பனையாகிறது.


  • 11:41 (IST) 24 Jun 2022
    இபிஎஸ் ஆலோசனை!

    தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் நாடியுள்ள நிலையில், இபிஎஸ் சென்னை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பொள்ளாச்சி ஜெயராமன், வைகைச்செல்வன், தங்கமணி, கே.சி.வீரமணி, பா.வளர்மதி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.


  • 11:28 (IST) 24 Jun 2022
    தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

    சட்ட விரோதமாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க முயற்சி நடக்கிறது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு அளித்தார். ”ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும். அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டதற்கு நான் ஒப்புதல் வழங்கவில்லை. சட்டப்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தான் பொதுக்குழுவை கூட்டமுடியும்” என்று ஓபிஎஸ் அளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் ஓ.பி.எஸ் சார்பில், மனோஜ் பாண்டியன் மனுத்தாக்கல்.


  • 10:31 (IST) 24 Jun 2022
    அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    பொதுமக்கள் அவசியம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பாதிக்கப்பட்ட 92 % பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 18 % பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்


  • 09:35 (IST) 24 Jun 2022
    17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

    நாடு முழுவதும் மேலும் 17,336 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிகப்பட்டுள்ளனர்.13 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவுக்கு 88,284 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


  • 08:15 (IST) 24 Jun 2022
    மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை

    அரசு பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு


  • 08:10 (IST) 24 Jun 2022
    திரெளபதி முர்மு இன்று வேட்புமனு தாக்கல்

    திரெளபதி முர்மு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்ய இருக்கிறார் . நண்பகல் 12:30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார்.


  • 08:00 (IST) 24 Jun 2022
    அக்னிபாத் திட்டம்; ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்

    அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆட்கள் சேர்ப்பதற்கான விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விண்ணப்பங்கள் இன்று முதல் தொடக்கம் .


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment