Advertisment

Tamil news Highlights: டிஎன்பிஎல் கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக்- கோவை அணிகள்

tamil Nadu News, Tamil News, Petrol price Today: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights: டிஎன்பிஎல் கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக்- கோவை அணிகள்

பெட்ரோல்-டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஎன்பிஎல் கோப்பையை பகிர்ந்து கொண்ட சேப்பாக்- கோவை அணிகள்

டிஎன்பிஎல் இறுதிப்போட்டி கோவையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 17 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. 139 ரன்கள் இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, 4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து மழை இருந்த காரணத்தால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

பைடனுக்கு மீண்டும் கொரோனா

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“ • 20:31 (IST) 31 Jul 2022
  செஸ் ஒலிம்பியாட் களத்திற்கு முதலமைச்சர் வருகை; பாலஸ்தீன சிறுமிக்கு வாழ்த்து

  செஸ் ஒலிம்பியாட் களத்திற்கு முதலமைச்சர் வருகை தந்து பார்வையிட்டார். பாலஸ்தீன் நாட்டை சேர்ந்த 8 வயது இளம் சுட்டி போட்டியாளருக்கு கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தார். • 19:56 (IST) 31 Jul 2022
  பொய் பரப்புரை வேண்டாம்- தங்கம் தென்னரசு

  தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அல்லும் பகலும் அரசு உழைத்துவருகிறது.

  தமிழகத்துக்கான முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் பொய் பரப்புரை செய்து கெடுக்க வேண்டாம் என அமைசசர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். • 19:51 (IST) 31 Jul 2022
  திமுக எம்எல்ஏ கார் விபத்து- பகீர் சிசிடிவி

  ஈரோடு மாவட்டம் அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏஜி வெங்கடாச்சலம் கடந்த 27ஆம் தேதி காரில் சென்றுகொண்டிருந்தார். கார் பவானி அருகே சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

  இதில் பலத்த காயமுற்ற எம்எல்ஏ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. • 19:09 (IST) 31 Jul 2022
  கேரளத்தில் குரங்கு அம்மை பாதிப்பாளர் மரணம்

  குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் மரணித்துள்ளதாக கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

  இதுவே இந்தியாவில் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டு ஏற்பட்ட முதல் மரணம் ஆகும். • 19:03 (IST) 31 Jul 2022
  பொன்னி நதி பாடல் வெளியீடு

  மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாடலான பொன்னி நதி இன்று மாலை வெளியானது.

  பொன்னியின் செல்வம் படம் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத் குமார், பிரபு, ஜெயராம், நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். • 18:10 (IST) 31 Jul 2022
  சஞ்சய் ராவத் கைது?

  சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நில மோசடி வழக்கில் 9 மணி நேரம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திய நிலையில் இந்த கைது நடவடிக்கை அரங்கேற்றப்பட்டுள்ளது. • 17:37 (IST) 31 Jul 2022
  அ.தி.மு.க.,வில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும் - சசிகலா

  அதிமுகவில் உள்ள அனைவரும் எனக்கு வேண்டியவர்கள் தான். அதிமுகவில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும். தற்போதைய சூழல்கள் காலப்போக்கில் சரியாகி விடும் என அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரன் உடனான சந்திப்புக்கு பின் சசிகலா கூறியுள்ளார் • 17:17 (IST) 31 Jul 2022
  பொய் பிரச்சாரம் செய்து கெடுக்க வேண்டாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு

  தமிழகத்திற்கான முதலீடுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பொய் பிரச்சாரம் செய்து கெடுக்க வேண்டாம். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அரசு அல்லும் பகலும் அயராது உழைத்து வருகிறது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார் • 17:03 (IST) 31 Jul 2022
  காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று ஜெரேமி லால்ரினுங்கா அசத்தல்; பிரதமர் வாழ்த்து

  காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஜெரேமி லால்ரினுங்காவுக்கு பிரதமர் மோடி, மிசோராம் முதல்வர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். • 16:44 (IST) 31 Jul 2022
  சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத் துறை விசாரணை

  மகாராஷ்டிராவில் நில மோசடி தொடர்பான வழக்கில் சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத்திடம் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. மும்பையில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டில் பல மணி நேரம் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது • 16:30 (IST) 31 Jul 2022
  செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்று - தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி

  செஸ் ஒலிம்பியாட் 3வது சுற்றில் இந்திய மகளிர் சி பிரிவில் விளையாடிய தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றுள்ளார். ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த எதிரணி வீராங்கனை பங்கேற்காததால் நந்திதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது • 16:14 (IST) 31 Jul 2022
  காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம்

  பர்மிங்காம் காமென்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 2வது தங்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பளுதூக்குதல் 67 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் ஜெரேமி லால்ரினுங்கா தங்கம் வென்று அசத்தியுள்ளார் • 14:52 (IST) 31 Jul 2022
  தேனி திருப்பம்: டி.டி.வி தினகரனை நேரில் சென்று வரவேற்ற ஓ.பி.எஸ் அணியினர்

  தேனியில் டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் தலைமையில் தினகரனை நிர்வாகிகள் வரவேற்றனர். அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு • 14:51 (IST) 31 Jul 2022
  தேனி திருப்பம்: டி.டி.வி தினகரனை நேரில் சென்று வரவேற்ற ஓ.பி.எஸ் அணியினர்

  தேனியில் டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் தலைமையில் தினகரனை நிர்வாகிகள் வரவேற்றனர். அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு • 14:03 (IST) 31 Jul 2022
  டெல்லி காவல் ஆணையராக நியமனம்

  தமிழக கேடர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணையராக நியமனம், • 14:02 (IST) 31 Jul 2022
  நர்சிங் மாணவி தற்கொலை வழக்கு

  திருவேற்காடு நர்சிங் மாணவி தற்கொலை வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். • 14:02 (IST) 31 Jul 2022
  தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு

  தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. கேரள - தமிழக எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டுள்ளது என மா சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். • 14:01 (IST) 31 Jul 2022
  சென்னையில் மழைக்கு வாய்ப்பு

  சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. • 14:01 (IST) 31 Jul 2022
  வீரர்களுக்கு வாழ்த்து

  காமன்வெல்த் பளு தூக்குதலில் பதக்கங்களை வென்ற மீராபாய் சானு, பிந்தியாராணி தேவி, சங்கேத் சாகர் மற்றும் குருராஜா பூஜாரி முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். • 13:11 (IST) 31 Jul 2022
  பத்ரா சால் நில ஊழல் வழக்கு

  பத்ரா சால் நில ஊழல் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்தின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை அமலாக்க இயக்குனரகத்தின் (ED) அதிகாரிகள் சோதனை நடத்தினர். • 13:00 (IST) 31 Jul 2022
  5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  தமிழகத்தில் தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. • 12:31 (IST) 31 Jul 2022
  தமிழ்நாடு காவல்துறை வரலாற்றில் இது முக்கியமான நாள்

  தமிழக போலீஸ் துறைக்கு கவுரவமிக்க குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில்; இந்தியாவில் அதிக மகளிர் போலீஸ் நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் இது முக்கியமான நாள். ஒவ்வொரு தமிழருக்கும் இது மகிழ்ச்சியான நாளாகும் என்று கூறினார். • 12:17 (IST) 31 Jul 2022
  தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது

  இந்தியாவிலேயே தமிழக காவல்துறைதான் சிறந்து விளங்குகிறது. காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு என தனியாக செயல்படுவது பாராட்டுக்குரியது. கடத்தப்பட்ட கடவுள் சிலைகளை மீட்பதில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பாக செயல்படுகிறது என துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டியுள்ளார். • 12:16 (IST) 31 Jul 2022
  தினகரனுக்கு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வரவேற்பு

  தேனியில் அமமுக செயல் வீரர்கள் கூட்டத்திற்கு சென்ற டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் தலைமையில், நிர்வாகிகள் வரவேற்பளித்தனர். • 11:42 (IST) 31 Jul 2022
  புதுச்சேரியில் கொரோனா

  புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 113 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தற்போது 813 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளனர். • 10:21 (IST) 31 Jul 2022
  சென்னை டு லண்டன் இனி தினசரி விமான சேவை!

  சென்னை-லண்டனுக்கு வாரத்தில் 3 நாட்கள் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. நேரடி விமானம் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். இதனால் கூடுதல் நாட்கள் விமானம் இயக்கலாம் என பயணிகளின் கோரிக்கையை ஏற்று வாரத்தில் அனைத்து நாட்களும் விமான சேவை வழங்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து சேவை வழங்கப்பட உள்ளது. • 09:33 (IST) 31 Jul 2022
  பள்ளிகளில் இனி செயலி மூலம் வருகைப்பதிவு

  பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலி மூலம் வருகைப்பதிவு செய்யப்பட உள்ளது. பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு • 09:12 (IST) 31 Jul 2022
  காசிமேடு மீன் சந்தையில் அலைமோதும் கூட்டம்

  காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் அலைமோதும் அசைவப் பிரியர்கள் கூட்டம். ஞாயிற்றுகிழமை என்பதால் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம்.

  மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்தது.Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment