பண மோசடி வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிடம், 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இறுதியாக, நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பு தெரிவித்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து 106.66 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி நேற்றைய விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள்
லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலோடு காத்திருந்த நீட் 2021 தேர்வு முடிவுகள் நேற்று மாலை வெளியானது. என்டிஏ, தேர்வு முடிவுகளை மாணவர்களின் இமெயில் ஐடிக்கு நேரடியாக அனுப்பியுள்ளது. இருப்பினும், என்டிஏயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நீட் தேர்வு முடிவுகளை காணலாம்
கொரோனா வைரஸ் அப்டேட்
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.78 கோடியைக் கடந்துள்ளது.இதுவரை 22.45 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 50.19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, அவனி லெகாரா, லாவ்லினா, கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜ் உள்ளிட்ட 12 பேருக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் வீரர்களான அவனி லெகாரா, சுமித் அன்டில், பிரமோத் பகத், கிருஷ்ணா நகர், மணீஷ் நர்வால், கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகிய 12 விளையாட்டு வீரர்கள் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் டிசம்பர் இறுதியில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது உறுதி என்று மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் இருந்து விலகிய பஞ்சா முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார். தனது புதிய கட்சிக்கு 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' என பெயர் சூட்டினார்.
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஹுசுராபாத்தில் , பாஜக வேட்பாளர் எட்டல ராஜேந்தர், டிஆர்எஸ் வேட்பாளர் கெல்லு ஸ்ரீனிவாஸ் யாதவை விட 11,583 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையைப் பெற்றுள்ளார். 22 சுற்றுகள் கொண் இந்த எண்ணிக்கையில் 15 சுற்றுகளின் முடிவில் டிஆர்எஸ் 53,645 வாக்குகளும், பாஜக 63,079 வாக்குகளும் பெற்றுள்ளது. பெற்றுள்ளது.
தொடர்ந்து ஆந்திராவின் பத்வேல் தொகுதியில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் டி.சுதா 1,12,211 வாக்குகள் பெற்றார் – அவரை எதிர்த்து போட்டியிட்ட, பாஜகவின் பி சுரேஷ் 21,678 வாக்குகள் பெற்றார்.
கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தல் சிந்தகி தொகுதியில் பாஜகவின் பூசனூர் ரமேஷ் பாலப்பா, காங்கிரஸின் அசோக் மலப்பா மனகுலியை விட 31,185 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் பூசனு ரமேஷ் 93,380 வாக்குகளும், அசோக் மனகுலி 62,292 வாக்குகளும் பெற்றதாக கர்நாடக தலைமை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து ஹனகல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் மானே 7,426 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் சிவராஜ் சஜ்ஜனரை விழ்த்தினார். இதில் ஸ்ரீனிவாஸ் மானே 87,300 வாக்குகளும், சிவராஜ் சஜ்ஜனார் 79,874 வாக்குகளும் பெற்றனர்.
வங்காள இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெற்ற வெற்றி: 'மக்கள் வெற்றி' என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், . “வெற்றி பெற்ற நான்கு வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி மக்களின் வெற்றியாகும். மேற்கு வங்கத்தின் பிரச்சாரம் மற்றும் வெறுப்பு அரசியலை விட வளர்ச்சி மற்றும் ஒற்றுமையை எப்போதும் தேர்ந்தெடுக்கும் என்பதை இந்த வெற்றி காட்டுகிறது. மக்களின் ஆசியுடன், வங்காளத்தை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வோம் என்று உறுதியளிக்கிறோம்!” என்று கூறியுள்ளார்.
இமாச்சல பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஃபதேபூர், அர்கி, ஜுப்பல்-கோட்காய் ஆகிய மூன்று தொகுதிகளில்வெற்றி பெற்றுள்ளது. இதில் மண்டி லோக்சபா தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது
மேற்குவங்க இடத்தேர்தல் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தின்ஹாடா, கோசாபா மற்றும் கர்தா ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு்ளளது. முன்பு பாஜக வசம் இருந்த கூச்பேஹரில் உள்ள தின்ஹாடா சட்டமன்றத் தொகுதியில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் உதயன் குஹா 1,14,086 வாக்குகளைப் பெற்றார், அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பலாஷ் ராணா, 20,254 வாக்குகளைப் பெற்றார்.
சென்னை, தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு கூடுதலாக ரூ15 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ரூ10 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது
எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை உடைத்து மேகதாது அணை கர்நாடகாவில் கட்டப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு எதிரான வெற்றி பெறுவோம் என்றும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி அளித்துள்ளார்
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள வீட்டில் பத்திரப்பதிவு ஐ.ஜி. சிவனருளின் மனைவி சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினர் 16 இடங்களை கைப்பற்றியது. இமாச்சலில் இடைத்தேர்தல் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலை
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷூக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
ஜெய்பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த காவலர் கவிதாவின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், அந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
தீபாவளி திருநாளில் சூழ்ச்சிகளும், தீமைகளும் நம்மை விட்டு விலக இன்பமாய் கொண்டாடுவோம். நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் என அதிமுக பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமை செயலகத்தில் மரம் விழுந்த விபத்தில் உயிரிழந்த பெண் காவலர் கவிதாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாமக்கல்லை சேர்ந்த 2 மாணவர்கள், நீட் தேர்வில் 710 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
வேலூர் மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்தவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறலை கண்டித்தும் திமுக அரசு அலட்சியமாக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தும் இந்த அணையால் பயன்பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புலம் பெயர் இலங்கை தமிழர்களுக்கு ரூபாய். 225.86 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 120 உயர்ந்து, 36 ஆயிரத்து 64 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, 4 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 443 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 250 நாள்களில் இல்லாத அளவு, கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் போக்குவரத்து பெண் காவலர் ஒருவர் உயிரிழந்தார். போக்குவரத்து தலைமை காவலர் முருகன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சம்பவ இடத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
தீபாவளி சிறப்பு பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து 89,932 பேர் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.