சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து 101.79 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று இடியுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 கி.மீ நடந்தே சென்று பழங்குடியினருக்கு சாப்பாடு தந்த நிஜ ஹீரோ – வெண்ணிலா; வீடியோ இதோ…
உலகளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.86 கோடியைக் கடந்துள்ளது.
இதுவரை 21.57 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 48.66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தின் டேரா கி காலி (DKG) பகுதியில் திங்கள்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 4 வீரர்கள் மற்றும் ஒரு இளைய அதிகாரி (JCO) கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் நைப் சுபேதார் ஜஸ்விந்தர் சிங், ராணுவ வீரர்கள் மந்தீப் சிங் வில், வீரர் கஜ்ஜன் சிங், சராஜ் சிங் மற்றும் வைசாக் எச் உயிரிழந்தனர். இதில், ஜஸ்விந்தர், மன்தீப் மற்றும் கஜ்ஜன் ஆகியோர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். உத்தரப் பிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த சராஜ் மற்றும் வைசாக் எச் கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்தவர்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு என்ணிக்கை தொடங்கும்; 31,245 அலுவலர், 6,228 காவலர்கள் பணியில் உள்ள்னர். வாக்கு எண்ணிக்கை முடிவினை மாநில தேர்தல் ஆணைய இணையதளமான tnsec.tn.nic.in-ல் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 1,428 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 13 பேர் உயிரிழப்பு
1.39 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தற்போது 15,992 பேர் சிகிச்சையில் உள்ளனர்
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் சி.சி.டி.வி காட்சி மூலம் பதிவு செய்யப்படுகிறது என்றும் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் – மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணும் பணியில் உள்ள அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்களை தவிர பொதுமக்களுக்கு வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 15ம் தேதிக்கு பிறகு ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து வரும் சரக்கு பெட்டகங்களை கையாளப்போவதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 40 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் வரை கொடுக்க வேண்டிய நிலுவை தண்ணீர் 26 டி.எம்.சி.யை வழங்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தியுள்ளது.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் ரிமாண்ட் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ுள்ளது.
“நான் என் மகன் துரை வையாபுரியை அரசியலுக்குள் ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களை கொண்டு வரவேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டு செய்கிறார்கள்” என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை 50 இடங்களில் கலைஞரின் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு டேவிட் கார்டு, ஜோஸ்வா ஆங்கிரிஸ்ட், கியூடோ இம்பென்ஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் ஏரியில் பதுங்கியிருந்த கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற நிலையில் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததில் கொள்ளையன் சுட்டுக்கொள்ளப்பட்டார்.
பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மலையாளம் மற்றும் தமிழ் திரைத்துறையில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு 2 நாள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரண் அடைந்த நிலையில் நீதிபதி கற்பகவள்ளி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கேரளாவை உலுக்கிய உத்ரா கொலை வழக்கில் அவரது கணவர் சூரஜ் குற்றவாளி என்று நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கொல்லத்தில் 2020 மே 7ம் தேதி கருநாகத்தை கடிக்க வைத்து மனைவி உத்ராவை கொலை செய்ததாக கணவர் சூரஜ் மீது தொடரப்பட்ட வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு பிறகு சொந்த ஊர்களில் இருந்து அவர்கள் வேலை பார்க்கும் நகரங்களுக்கு பயணிக்க 17,719 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மது அருந்தும் நபர்கள் மத்தியில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று டாஸ்மாக் கடைகளுக்கு முன்ப் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் போர்ட் வைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டு 500 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் அக்டோபர் 25ம் தேதி அன்று துவங்கும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டில் 67% பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தகுதி கொண்ட அனைத்து மக்களும் 2 டோஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன்கான் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.
அதிமுக கட்சி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் பொருட்டு, பொன்விழா நிகழ்வுகளை அக்டோபர் மாதம் 17ம் தேதி அன்று கொண்டாட உள்ளது அக்கட்சி. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பு
முந்திரி தோப்பில் பணியாற்றி தொழிலாளி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கடலூர் எம்.பி. ரமேஷ் பண்ரூட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் அதிகரித்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 17,976 புள்ளிகளாக உள்ளது .
மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கான ஐ.பி.எல். தொடர் நடத்த வேண்டும் என்று இந்திய அணியின் டி20 கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கோரிக்கை வைத்துள்ளார்.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் புகையிலை மற்றும் வெற்றிலை எச்சில் கறையை அகற்ற மட்டுமே ரயில்வே நிர்வாகம் ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் செலவு செய்வதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, கை அளவில் உள்ள பிரத்யேக காகித பாக்கெட்களை ரயில் நிலையங்களில் விற்க திட்டமிட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,352க்கும், ஒரு கிராம் ரூ.4410க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 21,563 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக் கூறி, புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணமாக, மாநிலம் முழுவதும் இன்று தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை