Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு மீண்டும் திரும்ப, ஜனவரி 18 வரை 15,599 பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னைக்கு தினசரி இயங்கும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 4334 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நிவாரணம்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜ் மற்றும் பார்வையாளர் அரவிந்த் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். 91 ஆயிரம் பெரியவர்களும் 9 ஆயிரம் குழந்தைகளும் வருகை தந்ததாக பூங்கா அதிகாரிகள் தகவல்
நள்ளிரவு 1 மணி, அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்க உள்ளோம் என உட்லண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கடேசன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், வீடு, கடை, வாகனங்கள் சேதம் அடைந்த நிலையில், இதன் உரிமையாளராக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெயராம் மற்றும் அவரது மனைவி இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட குறைவான மக்களே மெரினாவிற்கு வருகை தந்துள்ளனர். மெரினாவில் குளிக்க தடை, கடற்கரை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மதுரை, பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்தராஜன் குடும்பத்திற்கு நிதியுதவி. முதல்வரின் ₨3 லட்சம் மற்றும் அமைச்சர் மூர்த்தியின் சொந்த நிதி ₨2 லட்சம் மொத்தம் ₨5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு. டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு
தெலுங்கு நடிகர் சுனில் கதாபாத்திரத்துடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜெயிலர் படக்குழு…
உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 26 காளைகளை அடக்கி அபி சித்தர் என்ற இளைஞர் முதல் பரிசாக கார் வென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது தமக்கு சிறந்த அனுபவம். மகிழ்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு, மெரினா கடற்கரையில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது அங்கிருந்த மக்கள் டிஜிபிக்கு பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.
மத்தியில் ஆளும் பாஜகவின் 'நவ தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை' விமர்சித்த கேரள முதல்வர் விஜயன், கார்ப்பரேட் நிறுவனங்களும் பல பில்லியனர்களும் மட்டுமே அதன் பயனாளிகள் என்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்டர் இஷான் கிஷன் மிடில் ஆர்டரில் விளையாடுவார் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆர்.ஜே. பாலாஜி மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள 'ரன் பேபி ரன்’ திரைப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்து உள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சி.எஸ்.ஐ.எப் வீரர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
சத்தீஸ்கரை சேர்ந்த சிந்தாமணி தூக்கிட்டும், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் உயிரிழந்த சம்பவம் ஸ்ரீஹரிகோட்டா வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தினத்தை முன்னிட்டு சென்னையில் 4 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஜன.20 முதல் 24ஆம் தேதி வரை 4 நாள்கள் இது அமலில் இருக்கும்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ: “உதயநிதி – அழகிரி சந்திப்பால் தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் மாற்றமும் ஏற்படப்போவதில்லை. உதயநிதி – அழகிரி சந்திப்பு என்பது வாரிசு அரசியலுக்கான எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் விரிவான பாதுகாப்பு பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்; பெரியோர்களை பிரிந்து காணாமல் போகும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 8 வயது வரை உள்ள குழந்தைகள் கையில் பெற்றோர்களின் விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை பொருத்தப்படுகிறது.
கடந்த 2020 ஜனவரி மாதம் தேசிய தலைவராக பதவியேற்ற நட்டாவின் தலைமையில் 2024 நாடாளுமன்ற தேர்தலை பாஜக சந்திக்க உள்ளது. இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் ஜுன் 2024ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சத்தீஸ்கரை சேர்ந்த சி.எஸ்.ஐ.எப் வீரரகள் சிந்தாமணி தூக்கிட்டும், உ.பி.யை சேர்ந்த விகாஸ் சிங் துப்பாக்கியால் சுட்டும் தற்கொலை; 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 பேர் தற்கொலையால் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் அமைப்புகள் மீது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வால் அளிக்கப்படும் அழுத்தம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கவலை தெரிவித்தார்.
பா.ஜ.க எம்.பி வருண் காந்தி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் இரு வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டிருப்பதாகவும், தனது உறவினர் வருண் காந்தி கொண்டிருக்கும் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார். பஞ்சாபில் தனது பாரத் ஜோடோ யாத்திரையின் போது செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, “நான் அவரை சந்திக்க முடியும், அவரை கட்டிப்பிடிக்க முடியும், ஆனால் அவருடைய சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 23 காளைகளை பிடித்து முதலிடத்தில் இருந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் வேன் மோதி காயம் அடைந்தார். காவல்துறை கொண்டுவந்த வேன் மோதியதில் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தரின் காலில் காயம் ஏற்பட்டது.
மாமல்லபுரத்தில் தனியார் நட்சித்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து 8 வயது சிறுமி பலியானார். பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
ஐசிசியின் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியது.
விமானத்தில் அவசரகால கதவை திறந்த விவகாரத்தில் முக்கிய பிரமுகர் இருவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் தனியார் நட்சித்திர ஓட்டலில் நீச்சல் குளத்தில் தவறிவிழுந்து 8 வயது சிறுமி உயிரிழந்தார். பெற்றோருடன் பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்தபோது இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது
காரைக்காலில் நடைபெற்ற குதிரை ரேக்ளா பந்தயப் போட்டியில் புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்காவின் குதிரை முதலிடம் பிடித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் வீரர்களுக்கு காயம் ஏற்படாமல் தவிரக்க கொம்பில் ரப்பர் குப்பிகள் அணிவித்து காளைகள் அவிழ்க்கப்படுகிறது
சிவகங்கை, சிராவயல் மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்துள்ளார். மதுரை சுக்காம்பட்டியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
புதுக்கோட்டை வேங்கைவயல் தீண்டாமை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தொடங்கியது
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் துணிவு பட கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர் குடும்பத்திற்கு சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
காணும் பொங்கலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 26 பேர் காயம் அடைந்துள்ளனர்
சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் 106 கிலோ கேக்கை வெட்டி நிர்வாகிகளுக்கு வழங்கினார் எடப்பாடி பழனிசாமி .
ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும்? . திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் – சசிகலா
நான் சர்வாதிகாரி இல்லை, அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. தீர்ப்பு சாதகமாக வருவது இறைவன் கையில் உள்ளது – அண்ணாசாலையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு ஓபிஎஸ் பேட்டி.
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் கட்சி கொடி ஏற்றினார் இபிஎஸ்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 8 பேர் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
டெல்லியில் 2வது நாளாக பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது, இன்றைய கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார். 9 மாநில சட்டமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை: வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில்,சிபிசிஐடி போலீசார் தனியாக ஒரு வழக்கு பதிவு செய்தனர். 35 சிபிசிஐடி போலீசார் உள்ள 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது, இன்று முதல் அவர்கள் விசாரணையை தொடங்குகின்றனர்
சவுதி அரேபியாவிற்கான புதிய இந்திய தூதராக சுஹெல் அஜாஸ் கான் பொறுப்பேற்றார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ஆம் சுற்று முடிவில் 9 காளைகளை அடக்கி அபி சித்தர் முதலிடத்தில் உள்ளார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் சுற்று முடிவில், சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் 7 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில், அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வ வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்
சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளது. 2021ஐ விட 2022 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 8.50 லட்சம் பேர் குறைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டியில் முதல் சுற்று முடிவில், சித்தாலங்குடியைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் மூன்று காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார்.
பொங்கல் விடுமுறையை தொடர்ந்து, நாளை வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காணும் பொங்கலை முன்னிட்டு, மாமல்லபுரம், கோவளம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இன்று 480 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரசின் 2வது தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார்.
கேரளாவில் முகக் கவசம் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சமூக இடைவெளி பின்பற்றவும் அறிவுறுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் ஆர்.டி. மலைப் பகுதியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதில் 800 மாடுகள் மற்றும் 400 வீரர்கள் களம் இறங்குகின்றனர்.
சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் திரண்டுள்ளனர். திருக்கணித பஞ்சாங்கப்படி மாலை 6.04க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனீஸ்வரன் பெயர்ச்சியாகிறார்.