Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
குரூப் 3 போட்டித் தேர்வு ஹால் டிக்கெட்
TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது, தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஜனவரி 28ம் தேதிகுரூப் 3 தேர்வு நடைபெற உள்ளது.
12 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட், 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. வேலை இழக்கும் ஊழியர்களுக்கு 6 மாத காலத்திற்கான ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் 4 மாத காலத்திற்கான ஊதியம் வழங்கப்படும் என கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
தை அமாவாசை
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கானோர், மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்தனர், கோவிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
கரூரில் நாளை நடைபெறும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் 26 ஆயிரம் பணியிடங்களை நிரப்பும் வகையில், 220 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்
“ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம்” என புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் காங்கிரஸ் ஆலோசனை
பழனி கோவில் கும்பாபிஷேகம் பதிவு செய்த பக்தர்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2000 பக்தர்கள் 23 முதல் 25ம் தேதிக்குள் கோவில் அலுவலுகத்தில் தங்கள் அசல் அடையாள அட்டையை காட்டி நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக நீர்தேக்க தொட்டியை இடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
பாரதிய ஜனதா ஆதரவு கொடுக்கும் கட்சிக்கு தாம் ஆதரவு அளிப்பதாக ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எடப்பாடியின் அதிமுக அணிக்கு ஜிகே வாசன் பூவை ஜெகன்மூர்த்தி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே புத்தாம்பூர் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கில் புகுந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. காரில் லேசாக பற்றிய தீ சிறிது நேரத்தில் அனைத்து இடங்களிலும் பரவியது.
டெல்லி துணை நிலை ஆளுனர் வி.கே.சக்சேனா மீது மாநிலத்தின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதில், ஆளுனர் வி.கே. சக்சேனா, கல்வித்துறை மீது 'தவறான குற்றச்சாட்டுகளை' கூறியதாகவும், தேசிய தலைநகரில் பணிபுரியும் ஆசிரியர்களை 'கேலி' செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கிரிக்கெட் வீரரின் பெயரில் ப்ளாட் வாங்கி தருவதாக ரூ.44 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ்வின் மேலாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த குற்றத்தில் உமேஷ் யாதவ் மீதும் புகார் எழுந்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் புகைப்படங்களை ஒரிஜினல் தரத்தில் அனுப்பும் புதிய வசதி வந்துள்ளது.
இதன் மூலம் நாம் எடுக்கும் படங்களை அதே தரத்தில் பயனர்களுக்கு அனுப்ப முடியும்.
சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்காக, தனது நூல்களின் தொகுப்பை சிறைத்துறை டிஜிபியிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு வழங்கினார்.
பொன்னியின் செல்வன் படம் வரலாற்றுக்கு ஒப்பாத வகையில் திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
பீகாரில் உள்ள புத்தர் கோவிலுக்குள் மதுபாட்டில்களை எடுத்துச் சென்ற ரஷ்ய நாட்டு சுற்றுலாப் பயணியை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
புத்தர் கோவிலுக்குள் சுற்றுலாப் பயணி ஒருவர் மது பாட்டிலை கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் என அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள சைபர் செல் இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர், பாஜக தலைவரிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்த நிலையில் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் கணஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் ஜன.19ஆம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கருப்பசாமி என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் அண்ணாமலையை இ.பி.எஸ் அணி ஆதரவாளர்கள் ஜெயக்குமார், தங்கமணி உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர்
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 28 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறி வருகிறது
பழனி முருகன் கோவிலில் வருகின்ற 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை பழனி முருகன் நவபாஷாண மூலவர் சிலையை தரிசிக்க இயலாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழ்நாடு அரசின் சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே துணைத்தலைவராக இருந்த மஸ்தான் மறைவை அடுத்து புதிய துணைத்தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க இ.பி.எஸ் அணிக்கு ஜெகன் மூர்த்தி தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது
தற்போதைய நிலையில், பா.ம.க யாருடனும் கூட்டணியில் இல்லை என பா.ம.க செய்தி தொடர்பாளர் பாலு விளக்கம் அளித்துள்ளார்
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உடன் ஈபிஎஸ் அணியினர் சந்திப்பு
இடைத்தேர்தலில் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு அளிக்க கோரும் அதிமுக மூத்த நிர்வாகிகள்
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனை ஓபிஎஸ் சந்தித்த நிலையில், முன்கூட்டியே கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்கும் ஈபிஎஸ் அணியினர்
இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு
கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
ஓரிரு நாளில் காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
வேறு சிலரும் வேட்பாளர் தேர்வில் உள்ளனர். வேட்பாளர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் – ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு தேர்தல் போட்டியும் இல்லை, ஆதரவும் இல்லை – பா.ம.க. தலைமை அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல். இடைத்தேர்தல் தொடர்பாக பாமகவிடம் ஆதரவு கேட்க உள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் அறிவிப்பு,
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தொடர்பாக, ஜெயக்குமார்,கே.பி முனுசாமி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் உள்ள இல்லத்தில் த.மா.கா தலைவர் ஜி.கே வாசனுடன் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பு. தங்கள் தரப்பு அ.தி.மு.க அணிக்கு ஆதரவு கோரி வாசனுடன் சந்திப்பு. பா.ஜ.க, பா.ம.க கூட்டணி கட்சிகளையும் சந்திக்க உள்ளனர்.
ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் தொடர்பாக இன்று மாலை3 மணிக்கு இபிஎஸ் தரப்பு மூத்த நிர்வாகிகள் சந்திக்கின்றனர், 4 மணிக்கு அண்ணாமலையை ஓபிஎஸ் சந்தித்து ஆதரவு கோருகிறார்.
ஓ.பன்னீர்செல்வம், இன்று காலை 10.30 மணிக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கோருகிறார், பாமக, பாஜக தலைவர்களையும் சந்தித்துப் பேச உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியை ஆதரித்து திமுக பிரசாரத்தை தொடங்கியது. பெரியார் நகரில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என் நேரு வீடு வீடாகச் சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் மெட்ரோ சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. விம்கோ நகர் – விமான நிலையம், சென்ட்ரல் – பரங்கிமலை வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை
ஈரோடு இடைத்தேர்தல் விவகாரத்தில் ஓபிஎஸ் அணியுடன் பேச தயாராக இல்லை; தனிமரமாகி விட்ட பன்னீர்செல்வம் விரக்தியின் வெளிப்பாடாகவே பேசி வருகிறார்- ஜெயக்குமார் பேட்டி
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். நாளை மறுநாள் நடக்க உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம்; ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்- ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் பேட்டி
*அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு. அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.
*ஈரோடு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். இரட்டை இலை கிடைக்காவிட்டால் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் சின்னத்தில் போட்டியிடுவோம்.
*ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்- ஓபிஎஸ் பேட்டி
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதனாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ராணிப்பேட்டை, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாட்டிலேயே முதன்முதலாக அனைத்து அரசு உயர்கல்வி நிறுவனங்களிலும் படிக்கும் மாணவிகளுக்கு மாதவிடாய் மற்றும் மகப்பேறு விடுமுறையை கட்டாயமாக்கி கேரள அரசு அறிவித்துள்ளது. அதன்படி பல்கலைக்கழக விதிகளின் கீழ் 75 சதவீத வருகைக்கு பதிலாக 73 சதவீத வருகையுடன் மாணவிகள் தங்கள் செமஸ்டர் தேர்வில் பங்கேற்கலாம். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவிகளும் 60 நாட்கள் வரை பேறுகால விடுப்பு பெறலாம்.