Advertisment

Tamil News Live Updates: வேலூரில் இன்று பாஜக சார்பில் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Tamil Nadu News, Tamil News LIVE, Biporjoy Cyclone, Rohit Sharma,World Test Championship 2023– 10 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Amit shah

Amit shah

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

அமித்ஷா இன்று சென்னை வருகை

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக, தென்சென்னை பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாட மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 19:56 (IST) 10 Jun 2023
  நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் : சேலத்தில் மு.க.ஸ்டாலின் உரை

  உழைப்பிற்கான அங்கீகாரம் நிச்சயமாக கட்சியனரை வந்து சேரும். நாடும் நமதே நாற்பதும் நமதே இதை சேலத்தில் உரக்க சொல்கிறேன். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு என அலச்சியம் வேண்டாம். முன்கூட்டியே தேர்தல் வரலாம் என மு.க.ஸ்டாலின் சேலத்தில் உரையாற்றியுள்ளார். • 19:49 (IST) 10 Jun 2023
  மொபைல் கடை மீது மோதி நின்ற தனியார் பேருந்து

  கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஐந்து முனை சந்திப்பில், திடீரென பிரேக் செயல் இழந்ததால், தனியார் பேருந்து ஒன்று அருகில் இருந்த மொபைல் கடை ஒன்றின் மீது மோதி நின்ற சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. • 19:45 (IST) 10 Jun 2023
  சென்னை பல்கலைக்கழகத்தில் 1425 பேருக்கு பணி நியமன கடிதம்

  'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற்ற கலை & அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்களில் வென்ற 1425 பேருக்கு சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பணி நியமன கடிதங்களை வழங்கியதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். • 19:33 (IST) 10 Jun 2023
  சென்னையில் இருந்து மும்பை, மைசூர், டெல்லி உள்ளிட்ட 11 விமானங்கள் தாமதம்

  சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு. சென்னையில் 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்ததால் பயணிகள் அவதியடைந்த நிலையில், சென்னையில் இருந்து மும்பை, மைசூர், டெல்லி உள்ளிட்ட 11 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் தாமதம் • 18:59 (IST) 10 Jun 2023
  தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு

  தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், இதில் விசிக, மார்க்சிஸ்ட் கம்யூ., திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்பு • 18:37 (IST) 10 Jun 2023
  சென்னையில் சூறைக்காற்றுடன் திடீர் மழை : விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம்

  சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது! சென்னையில் தரையிறங்க வேண்டிய 8 விமானங்கள் முக்கால் மணி நேரத்துக்கு பின்னர் தரையிறங்கின! சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 5 விமானங்களும் தாமதமாக புறப்பட்டுச் சென்றன! வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் விமானங்கள் தாமதாம் என அதிகாரிகள் விளக்கம்! • 18:36 (IST) 10 Jun 2023
  அரசு பேருந்து கனரக லாரியின் மீது மோதி விபத்து

  சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக லாரியின் பின்னால் மோதி அரசுப் பேருந்து விபத்து. உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியில் நடந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 10 வயது சிறுவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி • 18:00 (IST) 10 Jun 2023
  சென்னை புறநகர் பகுதிகளில் லேசான மழை

  சென்னை: தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல் உள்ளிட்ட இடங்களில் மழை! • 17:59 (IST) 10 Jun 2023
  காதலியை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு இளைஞர் தற்கொலை

  கன்னியாகுமரி, மார்த்தாண்டத்தில் காதலியை சரமாரியாக கத்தியால் தாக்கிவிட்டு, இளைஞர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார். உயிருக்குப் போராடும் நிலையில் இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தலை துண்டாகக் கிடக்கும் இளைஞரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடந்த்தி வருகின்றனர். • 17:12 (IST) 10 Jun 2023
  கொடைக்கானலில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்

  வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குவிந்துள்ள நிலையில், 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேலாக‌ வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் கட்சி வெளியாகியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கூடுதலாக போக்குவரத்து காவலர்களை பணியில் அமர்த்த கோரிக்கை எழுந்துள்ளது • 17:09 (IST) 10 Jun 2023
  ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி

  ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்தும் மின்சாரம் பாய்ச்சியும் கொன்றுள்ளார். இது குறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் 4 மாதங்களில் ஏற்பட்ட பழக்கத்தால் கணவரை கொலை செய்த சம்பவம் அம்பலமாகியுள்ளது • 17:06 (IST) 10 Jun 2023
  கோரிக்கை நிறைவேறியதை பேருந்தில் நடனமாடி கொண்டாடிய மக்கள்

  டெல்டா மாவட்டங்களுக்கு சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், லால்குடி அடுத்த ஆலங்குடி மகாஜனம் கிராம மக்கள், கூடுதலாக பேருந்து வசதி கேட்டு கோரிக்கை வைத்திருந்த நிலையில், இன்றே நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து பேருந்தில் நடனமாடி கொண்டாடிய மக்கள்! • 16:37 (IST) 10 Jun 2023
  ஆளுநரை கடுமையாக விமர்சித்த அமைச்சர் பொன்முடி

  தமிழ்நாட்டின் வரலாறு தெரியாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி எதை எதையோ பேசி வருவதாக அமைச்சர் பொன்முடி விமர்சித்துள்ளார். • 15:42 (IST) 10 Jun 2023
  14-ந் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

  தமிழகம், புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

  இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் • 15:16 (IST) 10 Jun 2023
  பள்ளிக்கொண்டா கந்தநேரியில் ட்ரோன்களுக்கு தடை: காவல்துறை உத்தரவு

  வேலூர், பள்ளிக்கொண்டா கந்தநேரி பகுதிகளில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை

  பள்ளிக்கொண்டா கந்தநேரியில் நடக்கவுள்ள நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில் அறிவிப்பு

  மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு • 14:49 (IST) 10 Jun 2023
  புதுச்சேரியில் சாலை தடுப்பு சுவரில் மோதிய அரசு பேருந்து: பைக் மீது மோதாமல் காக்க முயற்சி

  புதுச்சேரி மடுவுபேட் அருகே சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகன ஓட்டுநர் மீது மோதாமல் இருக்க, சாலை தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதியது.

  ஓட்டுநரின் செயலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பைக் ஓட்டுநர் மற்றும் பேருந்து பயணிகள். • 13:59 (IST) 10 Jun 2023
  அமைச்சர் ரோஜா மருத்துவமனையில் அனுமதி

  ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா செல்வமணி(50) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி

  கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் • 13:59 (IST) 10 Jun 2023
  அமித்ஷா வருகை - 1,400 போலீசார் பாதுகாப்பு

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு, வேலூரில் பலத்த பாதுகாப்பு

  வேலூர், திருப்பத்தூர் உள்பட 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  சிஆர்பிஎப் வீரர்கள், காவலர்கள் என 1,400 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

  பொதுக்கூட்ட மேடைக்கு பின்புறம் முகாமிட்டு கண்காணிக்கும் சிறப்பு இலக்கு படை பிரிவு

  வெடிகுண்டு பரிசோதனை குழுக்கள் மோப்ப நாயுடன் 15 பிரிவாக பிரிந்து சோதனை • 13:41 (IST) 10 Jun 2023
  தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேச நிகழ்ச்சி- ஆர்ப்பாட்டம்

  மயிலாடுதுறையில் இன்று நடைபெற உள்ள தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச நிகழ்ச்சி

  தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வுக்கு பல்வேறு கட்சியினர் எதிர்ப்பு

  பட்டினப்பிரவேச நிகழ்ச்சியைக் கண்டித்து போராட போவதாக கட்சிகள் அறிவிப்பு

  கட்சிகளின் போராட்ட அறிவிப்பு காரணமாக ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

  தருமபுர ஆதீன மடத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 360க்கும் மேலான போலீசார் • 13:18 (IST) 10 Jun 2023
  மகளிர் ஜூனியர் ஹாக்கி - இறுதிபோட்டியில் இந்தியா

  ஆசிய கோப்பை மகளிர் ஜூனியர் ஹாக்கி தொடரின் அரையிறுதியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி முன்னேற்றம்

  பரபரப்பான ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் இந்தியா வெற்றி

  ஜப்பானை அதன் சொந்த மண்ணில் வென்று இந்தியா அபாரம்

  சிலியில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மகளிர் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடருக்கும் இந்தியா தகுதி • 12:56 (IST) 10 Jun 2023
  ஏரி ஆக்கிரமிப்பு - கட்டடங்களை அகற்றும் அதிகாரிகள்

  கீழ்கட்டளை ஏரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு நிலங்களை அதிரடியாக அகற்றும் அதிகாரிகள்

  ரூ.150 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நில ஆக்கிரமிப்பை அகற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்

  பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெறும் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணி

  ஆக்கிரமிப்பை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உடன் மக்கள் வாக்குவாதம்

  பட்டா நிலத்தை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் இடிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு • 12:48 (IST) 10 Jun 2023
  அரசு சொத்துக்களின் வாடகை பாக்கி - அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

  குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

  ஓசூரில் சேதமடைந்த வணிக வளாகத்தை புதுப்பிப்பதற்காக கடையை காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி

  மனுதாரர்கள் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வருகின்றனர் - ஓசூர் சார் ஆட்சியர்

  கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல, சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை - நீதிமன்றம் • 12:32 (IST) 10 Jun 2023
  மனித சங்கிலியாக கருணாநிதியின் முகம்

  மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2700 தூய்மை பணியாளர்கள் மனித சங்கிலியாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முகத்தை வரைந்து உலக சாதனை முயற்சி • 12:18 (IST) 10 Jun 2023
  தனியார் பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு

  திருக்கோவிலூரில் பிரேக் செயல் இழந்த தனியார் பேருந்து பிற வாகனங்கள் மீது மோதி விபத்து

  தனியார் பேருந்து மோதியதில் சாலையோரம் நின்றிருந்த முதியவர் கவுஸ்பாஷா உயிரிழப்பு

  ஆட்டோ, 4 இரு சக்கர வாகனங்கள், சாலையோர பழக்கடைகளை சேதப்படுத்திய தனியார் பேருந்து

  திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பில் நடந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை • 12:03 (IST) 10 Jun 2023
  பாலாற்று தரைப்பாலத்தில் கனரக லாரிகளை சிறை பிடித்த மக்கள்

  காஞ்சிபுரம், வாலாஜாபாத் அருகே பாலாற்று தரைப்பாலத்தில் கனரக லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்

  கனரக வாகனங்கள் செல்வதால் பாலாற்று தரைப்பாலத்தை மக்கள் செல்ல முடியாத சூழல்

  அதிக அளவிலான கனரக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு

  பாலாறு தரைப்பாலம் வழியாக கனரக வாகனங்கள் இயக்க கூடாது என ஊர்மக்கள் எதிர்ப்பு • 12:01 (IST) 10 Jun 2023
  மகளிர் காவலர் பொன்விழா - பாய்மரப் படகு பயணம்

  மகளிர் காவலர் பொன்விழாவை முன்னிட்டு, பாய்மரப் படகு பயணம்

  பாய்மரப் படகு பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

  கடல் பயணம் தொடங்குவதற்கு முன், படகுகளில் சாகசம் செய்த மகளிர் காவலர்கள்

  பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை 1000 கி.மீ தூரம் பாய்மரப் படகு பயணம் • 11:37 (IST) 10 Jun 2023
  திமுக புதுப்பிக்கப்பட்ட இணையதளம் தொடங்கி வைப்பு

  திமுக கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  புதிய இணையதளத்தை கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பகுதியாக தொடங்கி வைப்பு

  இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், சாதனை ஆகியவை இணையதளத்தில் நிறைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் • 11:34 (IST) 10 Jun 2023
  மகாஜனம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை - மக்கள் மகிழ்ச்சி

  முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆலங்குடி, மகாஜனம் வழித்தடத்தில் புதிய பேருந்து சேவை

  புதிய பேருந்தில் ஏறி பயணம் செய்த பெண்கள், மாணவர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம்

  பேருந்துக்கு தேங்காய், வாழைப்பழம் வைத்து பூஜை செய்து பொதுமக்கள் வழிபாடு

  கோரிக்கை வைத்த உடனே பேருந்து சேவை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு ஊர்மக்கள் நன்றி • 11:01 (IST) 10 Jun 2023
  ஹனிமூன் சென்ற புதுமணத் தம்பதி கடலில் மூழ்கி உயிரிழப்பு

  இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு தேனிலவு சென்ற புதுமண தம்பதி, கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  முழுச் செய்தியும் படிக்க

  https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-newly-married-doctor-couple-dies-in-indonesia-692154/ • 10:45 (IST) 10 Jun 2023
  சனிக்கிழமைகளில் வகுப்புகள்

  கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் • 10:31 (IST) 10 Jun 2023
  அன்பில் மகேஸ் விளக்கம்

  தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்; போட்டி குறித்த முறையான தகவல் வரவில்லை; 9-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

  கவனக்குறைவாக இருந்த அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது- தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்க முடியாமல் போனது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் • 10:23 (IST) 10 Jun 2023
  தங்கம் விலை

  சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ. 44,720க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ. 5,560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. • 09:23 (IST) 10 Jun 2023
  ‘நான் முதல்வன்’ திட்டம்

  ‘நான் முதல்வன்’ திட்டத்தில் திறன் பயிற்சி பெற்ற 1.43 லட்சம் மாணவ, மாணவிகள் பணி ஆணை பெற்றுள்ளதாக நான் முதல்வன் திட்டக்குழு தெரிவித்துள்ளது. • 08:20 (IST) 10 Jun 2023
  குழந்தைகள் பத்திரமாக மீட்பு

  கொலம்பியா, அமேசான் காடுகளில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து காணாமல் போன 4 குழந்தைகள் 40 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். • 08:09 (IST) 10 Jun 2023
  ஸ்குவாஷ் உலக கோப்பை

  12 ஆண்டுகளுக்கு பின், சென்னையில் வரும் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை நடைபெற உள்ள ஸ்குவாஷ் உலக கோப்பை தொடரில் 8 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றனர். • 08:08 (IST) 10 Jun 2023
  முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்

  தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் கலந்து கொள்வது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை மீது, முறையாக நடவடிக்கை எடுக்காத முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்து, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். • 08:08 (IST) 10 Jun 2023
  மீண்டும் பாஜகவில் இணைந்த மைத்ரேயன்

  அதிமுகவின் முன்னாள் எம்.பி மைத்ரேயன் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்தார்.

  டெல்லியில் பாஜாகவின் தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் மற்றும் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் மைத்ரேயன் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை சந்தித்து மைத்ரேயன் வாழ்த்து பெற்றார். • 08:08 (IST) 10 Jun 2023
  பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர்

  பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் மற்றும் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர். • 08:07 (IST) 10 Jun 2023
  அதிமுக பொதுக்குழு வழக்கு

  அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை வரும் 12ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது. • 08:07 (IST) 10 Jun 2023
  மாநில காங்கிரஸ் தலைவர்கள் நியமனம்

  புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவராக, வைத்திலிங்கம் எம்பி நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்துள்ளார். குஜராத்துக்கு சக்திசிங் கோகில், மும்பைக்கு வர்ஷா கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment