Advertisment

Tamil News Update: ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவு

Tamil Nadu News, Tamil News , Erode by elections, TNPSC, Mk Stalin– 25 February 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news

Tamil news updates

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

தாம்பரத்தில் நின்று செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ்

சென்னையிலிருந்து மதுரை நோக்கி செல்லும் தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில், வரும் 26 ஆம் தேதி முதல் அடுத்த ஆறு மாத காலத்திற்கு பரிசோதனை  முறையில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

&t=42s

திருச்செந்தூர் திருக்கோயில் மாசித்திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா மொத்தம் 12 நாட்கள் நடைபெறுகிறது. 6 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டமும், 7 ஆம் தேதி தெப்பத் திருவிழாவும் நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஓ.பி.எஸ். தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:38 (IST) 25 Feb 2023
    ஓபிஎஸ் தாயாரின் உடல் தகனம்

    தேனி : பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் நல்லமுறையில் தகனம்


  • 20:51 (IST) 25 Feb 2023
    விதிகளை மீறி நம்பர் பிளேட் - அபராதம்

    விதிகளை மீறி நம்பர் பிளேட் பொருத்திய 3,232 வாகனங்களுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை அபாராதம் விதித்துள்ளது.


  • 20:50 (IST) 25 Feb 2023
    ஜப்பானில் திடீர் நிலநடுக்கம்

    ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஜப்பானின் ஹொக்கைடோ பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு


  • 20:11 (IST) 25 Feb 2023
    நான் தோல்வியடைந்த கேப்டனாகவே கருதப்பட்டேன் - விராட்கோலி

    நான் கேப்டனாக இருந்த போது 2017-ம் ஆண்டு சாம்பியன் டிராபி இறுதிப்போட்டிக்கும், 2019-ம் ஆண்டு உலககோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021-ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றோம் ஆனாலும் நான் தோல்வியடைந்த கேப்டனாகவே கருதப்பட்டேன் என விராட்கோலி கூறியுள்ளார்.


  • 20:07 (IST) 25 Feb 2023
    புவிசார் குறியீடு பெற்ற முள்ளு கத்தரிக்காய் மற்றும் குண்டு மிளகாய்

    வேலூர் முள்ளு கத்தரிக்காய் மற்றும் ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஆகிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது!


  • 20:07 (IST) 25 Feb 2023
    ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு

    திருப்பதி ஏழுமலையான கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு எடுத்துச்செல்ல ஓலைப்பெட்டிகளை விற்பனை செய்ய திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்த பெட்டிகள் 10, 15,20 ஆகிய 3 அளவுகளில் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  • 20:02 (IST) 25 Feb 2023
    ஓபிஎஸ் தாயார் மரணம் - ஈபிஎஸ் இரங்கல்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்


  • 19:21 (IST) 25 Feb 2023
    ஈரோட்டில் ஓய்ந்தது பிரசாரம்

    ஈரோடு கிழக்கில் நடைபெற்ற அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது நாளை மறுநாள் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல். மாலை 6 மணிக்கு மேல் தொகுதிக்கு தொடர்பில்லாதவர்கள் அனைவரும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.


  • 19:20 (IST) 25 Feb 2023
    குரூப் 2 முதன்மைத்தேர்வு நிறைவு

    குரூப் 2, குரூப் 2ஏ பணிகளுக்கான முதன்மைத்தேர்வு நிறைவு 186 மையங்களில் நடைபெற்ற தேர்வு மாலை 5.30 மணியுடன் நிறைவு


  • 19:19 (IST) 25 Feb 2023
    ஓபிஎஸ் தாயார் மறைவு - முதல்வர் இரங்கல்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்


  • 18:59 (IST) 25 Feb 2023
    வாரிசு அரசியல்வாதிகள் ஏமாற்றம்.. முக்தார் அப்பாஸ் நக்வி

    பாரதிய ஜனதா தலைமையிலான ஜனநாயக அரசு கடந்த ஒன்பது ஆண்டுகளில் வம்ச ஆணவத்தை அழித்துவிட்டது. இதனால்தான் அவர்கள் (காங்கிரஸ்) ஏமாற்றம் அடைந்துள்ளனர்” என்று முக்தார் அப்பாஸ் நக்வி கூறினார்.


  • 18:56 (IST) 25 Feb 2023
    நிதிஷ்-லாலு புனிதம் இல்லாத கூட்டணி.. அமித் ஷா விமர்சனம்

    நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா இடையே புனிதம் இல்லாத கூட்டணி நிலவுகிறது.

    அது தண்ணீர், எண்ணெய் இடையிலான கூட்டணி போன்றது என அமித் ஷா விமர்சித்துள்ளார்.


  • 18:55 (IST) 25 Feb 2023
    டெல்லி மேயர் முடிவுக்கு நீதிமன்றம் தடை

    ஆறு உறுப்பினர்களை நிலைக்குழுவைத் தேர்ந்தெடுப்பதற்காக எம்சிடி மேயர் ஷெல்லி ஓபராய் வழங்கிய மறுதேர்தல் அறிவிப்பை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.


  • 18:30 (IST) 25 Feb 2023
    நிதிஷ்-லாலு புனிதம் இல்லாத கூட்டணி.. அமித் ஷா விமர்சனம்

    நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா இடையே புனிதம் இல்லாத கூட்டணி நிலவுகிறது.

    அது தண்ணீர், எண்ணெய் இடையிலான கூட்டணி போன்றது என அமித் ஷா விமர்சித்துள்ளார்.


  • 18:18 (IST) 25 Feb 2023
    ஈரோடு இடைத் தேர்தல்.. குழந்தைக்கு கருணாநிதி பெயர் சூட்டிய ஸ்டாலின்

    ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பிப்.27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் பரப்புரை இன்று (பிப்.25) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் குழந்தை ஒன்று கருணாநிதி எனப் பெயர் சூட்டினார்.


  • 18:17 (IST) 25 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; பரப்புரை நிறைவு

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது.

    பரப்புரையின் இறுதி நாளான இன்று மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குப் பதிவு பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. களத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), தென்னரசு (அ.தி.மு.க.) இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.


  • 18:15 (IST) 25 Feb 2023
    100 தொகுதிக்குள் பா.ஜ.க.வை அடக்கலாம்.. நிதிஷ் குமார் யோசனை

    காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து 2024 மக்களவை தேர்தலை சந்தித்தால், பாரதிய ஜனதா கட்சியை 100 தொகுதிக்குள் அடக்கி விடலாம் என பீகார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது


  • 17:58 (IST) 25 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; பரப்புரை நிறைவு

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது.

    பரப்புரையின் இறுதி நாளான இன்று மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அருகருகே பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    வாக்குப் பதிவு பிப்.27ஆம் தேதி நடைபெறுகிறது. களத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), தென்னரசு (அ.தி.மு.க.) இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.


  • 17:46 (IST) 25 Feb 2023
    பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.. மு.க. ஸ்டாலின் பரப்புரை

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு முனிசிபல் காலனியில் மு.க. ஸ்டாலின் தீவிர ஓட்டு வேட்டை நடத்தினார்.

    அப்போது, “அவர் பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான் கலைஞரின் மகன்.

    அவர் மகன் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்” என்றார்.


  • 17:31 (IST) 25 Feb 2023
    ஆளுனர் ஆர்.என். ரவிக்கு மார்க்ஸ் புத்தகம்.. கே. பாலகிருஷ்ணன் அறிவிப்பு

    ‘இளையோருக்கு மார்க்ஸ் கதை' என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்க உள்ளோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.


  • 17:12 (IST) 25 Feb 2023
    ரூ.1000 வழங்குவோம் என்பது தேர்தல் விதிமீறலா? மு.க. ஸ்டாலின் விளக்கம்

    மகளிருக்கு ₹1,000 உரிமைத் தொகை என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். அது பற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று கூறுவது தேர்தல் விதிமீறல் இல்லை என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.


  • 17:00 (IST) 25 Feb 2023
    ஈரோடு இடைத் தேர்தல்.. குழந்தைக்கு கருணாநிதி பெயர் சூட்டிய ஸ்டாலின்

    ஈரோடு இடைத் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. பிப்.27ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் பரப்புரை இன்று (பிப்.25) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

    இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் குழந்தை ஒன்று கருணாநிதி எனப் பெயர் சூட்டினார்.


  • 16:47 (IST) 25 Feb 2023
    சென்னையில் பூனை கறி பிரியாணி

    சென்னையில் உள்ள சில பிரியாணி கடைகளில் ஆட்டிறைச்சியுடன் சேர்த்து பூனை கறி பிரியாணி செய்து விற்பதாக சமூக நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பூனை கறி பிரியாணி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.

    சம்பந்தப்பட்ட இடங்களில் பூனைகளையும் விலங்குகள் நல ஆர்வலர்கள் பிடித்துள்ளனர்.

    பூனையின் எடைக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


  • 16:32 (IST) 25 Feb 2023
    8 நாள்களில் ரூ.80 கோடியை நெருங்கும் வாத்தி

    நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வாத்தி. இந்தப் படம் கடந்த 8 நாள்களில் ரூ.75 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி தெரிவித்துள்ளார்.

    தொடர்ந்து, “விழாவுக்கு தயாரிப்பாளர் வராததற்கு இதுதான் காரணம். அவர் படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருக்கிறார்” எனக் கூறினார்.

    மேலும் படத்துக்கு உழைத்த அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


  • 16:15 (IST) 25 Feb 2023
    காங்கிரஸ் கூட்டணிக்கு விரும்புகிறது.. மல்லிகார்ஜூன கார்கே

    ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைப்பதை காங்கிரஸ் விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

    மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


  • 16:05 (IST) 25 Feb 2023
    நல்லாசிரியர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட்.. கல்வி அலுவலர் நடவடிக்கை

    தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த கீழாம்பல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரனை மதுரை சிபிஐ போலீசார் கைது செய்தனர்.

    அவர் மீது வருமான வரி தாக்கல் செய்ததில் திரும்பப் பெறும் தொகையில் முறைகேடு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது.

    இந்நிலையில், அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.


  • 15:47 (IST) 25 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்; பரப்புரை 1 மணி நேரம் நீட்டிப்பு

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பரப்புரை மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக மாலை 5 மணியுடன் பரப்புரையை நிறுத்த வேண்டும் என்று அறிவித்த நிலையில் 6 மணிக்கு பரப்புரை ஓயும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


  • 15:31 (IST) 25 Feb 2023
    உக்ரைனில் அமைதி சூழல்.. இந்தியா அழுத்தம் கொடுக்கும்.. பிரதமர் நரேந்திர மோடி

    உக்ரைனில் அமைதியான சூழல் திரும்ப ஜி-20 உச்சி மாநாட்டில் அழுத்தம் கொடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    ரஷ்யா-உக்ரைன் சண்டை ஓராண்டை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 15:23 (IST) 25 Feb 2023
    மு.க. ஸ்டாலின் பரப்புரையில் விதிமீறல்; அ.தி.மு.க. புகார்

    ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் விதியை மீறி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் என அ.தி.மு.க. சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


  • 15:02 (IST) 25 Feb 2023
    ஏப்ரலுக்குள் மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வரும் - சென்னை மாநகராட்சி!

    "சென்னையில், கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் ஏப்ரல் மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும். திரு.வி.க. நகர், அண்ணா நகர், கோடம்பாக்கத்தில் உள்ள மேம்பாலங்கள் பயன்பாட்டிற்கு வரும" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


  • 15:01 (IST) 25 Feb 2023
    தீ விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

    கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் தீ விபத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தார். வீடு தீப்பிடித்து எரிந்ததில் தூங்கிக்கொண்டிருந்த பெண் குழந்தை உடல்கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  • 14:33 (IST) 25 Feb 2023
    காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாட்டில், சோனியா காந்தி குற்றச்சாட்டு!

    காங்கிரஸ் கட்சியின் 85வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடக்கிறது. இதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் எம்.பியுமான சோனியா காந்தி பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் இது சவாலான நேரம்; நாட்டின் அனைத்து நிறுவனங்களையும், பாஜக, ஆர்.எஸ்.எஸ் கைப்பற்றி நாசமாக்கியுள்ளது. ஒருசில தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருப்பதால் பொருளாதாரம் சீரழிந்துள்ளது. ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்." என்று கூறியுள்ளார்,


  • 14:30 (IST) 25 Feb 2023
    கருப்புக்கொடி போராட்டம் உறுதி: சிபிஎம் மாநில செயலாளர் பேச்சு!

    கார்ல் மார்க்ஸ் குறித்த அளுநரின் பேச்சை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில்," ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும், அவரை எதிர்த்து இடதுசாரிகள் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவார்கள்.” என்று கூறியுள்ளார்.


  • 14:12 (IST) 25 Feb 2023
    சபாநாயகர் அப்பாவு பேட்டி!

    "நான் அரசியல்வாதி அல்ல: எல்லோருக்கும் பொதுவானவன். சட்டமன்றத்தில் யாருக்கு எங்கு இருக்கை கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய முழு உரிமை" என்று தென்காசியில் சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.


  • 13:48 (IST) 25 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!

    ஈரோடு கிழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய ஸ்டாலின், "சொல்வதை செய்வது கருணாநிதி பாலிசி, சொல்லாததையும் செய்வது ஸ்டாலின் பாலிசி. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை விரைவில் வெளிவரும்.

    மறைந்த திருமகன் ஈவெரா தொகுதி வளர்ச்சிக்காக சிறப்பாக பணியாற்றினார். திருமகன் ஈவெரா மறைவு பெற்றோருக்கு மட்டுமின்றி, தொகுதிக்கே பேரிழப்பு." என்று கூறினார்.


  • 13:46 (IST) 25 Feb 2023
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை!

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட்டார். இன்று இறுதிநாள் பொதுக்கூட்டத்தில் மாலை 6 மணி வரை சீமான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.


  • 13:29 (IST) 25 Feb 2023
    வானிலை அறிவிப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு!

    தமிழகத்தில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தென்தமிழகம், டெல்டாவில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.


  • 12:56 (IST) 25 Feb 2023
    கிருஷ்ணகிரி பாஜக மாவட்ட செயலாளர் கைது

    கிருஷ்ணகிரி பெரியசெட்பள்ளம் கிராமத்தில் பெண்ணை தாக்கிய புகாரில் பா.ஜ.க நிர்வாகி கைது. மேனகா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மன்னன் சிவா-வை போலீசார் கைது செய்தனர்.


  • 12:50 (IST) 25 Feb 2023
    முதன்மைத் தேர்வு நேரம் மாற்றம்

    பிற்பகல் நடைபெறவிருந்த முதன்மைத் தேர்வு நேரம் மாற்றம்

    பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி 5.30 மணி

    வரை தேர்வு நடைபெறும் - டிஎன்பிஎஸ்சி

    காலைத் தேர்வு தாமதமாக தொடங்கியதால், பிற்பகல் தேர்வு அரை மணி நேரம் தாமதம்


  • 12:46 (IST) 25 Feb 2023
    அன்புஜோதி ஆசிரம வழக்கு- 8 பேருக்கு சிபிசிஐடி காவல்

    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - கைதான 8 பேருக்கும் சிபிசிஐடி காவல்

    3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி

    விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு


  • 12:13 (IST) 25 Feb 2023
    தேர்வு தாமதம் - கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிப்பு

    தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் சில இடங்களில் தாமதம்

    கூடுதல் நேரம் வழங்கப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


  • 11:33 (IST) 25 Feb 2023
    வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம் - ஸ்டாலின்

    திமுக அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

    சட்டமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறோம் - முதல்வர் ஸ்டாலின்


  • 11:33 (IST) 25 Feb 2023
    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே லட்சியம்

    நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே எனது லட்சியம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை


  • 11:19 (IST) 25 Feb 2023
    திமுகவின் அடித்தளமே ஈரோடு தான் - ஸ்டாலின் பிரசாரம்

    திமுகவின் அடித்தளமே ஈரோடு தான்: மகனின் கடமையை செய்து முடிக்க தந்தை வந்துள்ளார்

    ஈ.வி.கே சம்பத்தின் மகனுக்காக கருணாநிதியின் மகன் வாக்குகேட்டு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்


  • 11:18 (IST) 25 Feb 2023
    பட்ஜெட்டில் ரூ. 1000 உரிமைத்தொகை திட்டம் அறிவிக்கப்படும்

    குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

    இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு


  • 10:58 (IST) 25 Feb 2023
    தங்கம் விலை

    சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 41,680 ஆகவும், ஒரு கிராம் தங்கம் 5,210 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


  • 10:57 (IST) 25 Feb 2023
    ரூ. 1000 உரிமைத்தொகை

    குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000 உரிமைத்தொகை பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


  • 10:19 (IST) 25 Feb 2023
    சசிகலா இரங்கல்

    தனது தாயாரை இழந்து வாடும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்- வி.கே.சசிகலா


  • 10:18 (IST) 25 Feb 2023
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

    ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். சாலையில் நடந்துசென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.


  • 09:38 (IST) 25 Feb 2023
    டிடிவி தினகரன் இரங்கல்

    ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்!


  • 08:39 (IST) 25 Feb 2023
    50 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

    துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.


  • 08:29 (IST) 25 Feb 2023
    மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், காங். வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம் செய்கிறார். இன்று மாலையுடன், பிரசாரம் ஓய்கிறது, மாலை 5 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தமற்றவர்கள் வெளியேறவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


  • 08:29 (IST) 25 Feb 2023
    ஹால்டிக்கெட்

    11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28 ஆம் தேதி வெளியாகிறது. http://dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.


  • 08:28 (IST) 25 Feb 2023
    இன்று முதன்மை தேர்வு

    டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகளுக்கு இன்று முதன்மை தேர்வு நடைபெறுகிறது. 5 ஆயிரத்து 446 காலி பணியிடங்களுக்கு 55 ஆயிரம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment