Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
3 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக பாதுகாப்பு இயக்குநர் வளர்மதி ஐஏஎஸ், ராணிப்பேட்டை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷாவா இட மாற்றம் செய்யப்பட்டு, சமூக பாதுகாப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு
தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட துறைகளில் இருக்கும் பணி மேற்பார்வையாளர் இளநிலை வரை தொழில் அலுவலர், உள்ளிட்ட 1083 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என டி.என்.பி.எஸ்.சி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு ஆகியவை 27.05.2023ம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
பிரபல பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகி திருமதி.வாணி ஜெயராம் அவர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும்,மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தனது இனிமையான குரல் வளத்தால் அனைவரும் மனதிலும் இடம் பிடித்த வாணி ஜெயராம் அவர்களுக்கு அண்மையில் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்து கௌரவித்தது.
அவரது இழப்பு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சௌந்திரராஜன் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
“வாணி ஜெயராம் மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன் என இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ பதிவில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
படைப்பாற்றல் உலகிற்கு வாணி ஜெயராமின் மறைவு மிகப் பெரும் இழப்பு. பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் பல்வேறு மொழி பாடல்களில் உணர்வுகளை பிரதிபலிக்கும் வாணி ஜெயராமின் குரல் நினைவு கூரப்படும் – பிரதமர் மோடி
பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல். இசை உலகில் வாணி ஜெயராமின் பாரம்பரியம் என்றென்றும் நிலைத்திருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனை நிறைவடைந்து மருத்துவமனையில் இருந்து சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் நாளை வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது
மதுரை, மீனாட்சி அம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலம் தெப்பத்திருவிழாவை காண லட்சக்கணக்கில் மதுரையை சூழ்ந்த மக்கள். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி சுந்தரேஸ்வரருடன் பக்தர்களுக்கு காட்சியளித்த மீனாட்சி அம்மன்
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக சேலத்தில் எடப்பாடி கே பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஓ. பன்னீர் செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதையடுத்து பங்கஜ் மிதால், சஞ்சய் கரோல், அஸானுதீன் அமானுல்லா, சஞ்சய் குமார், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் நீதிபதிகளாக நியமிக்கப்பட உள்ளனர்.
உலகின் மிகச்சிறப்பாக செயல்படும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத ஆதரவுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
68 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரலடோர் உள்ளார்.
பணத்தையும், புகழையும் நாடாதவர் வாணி ஜெயராம் என ஒய்.ஜி. மகேந்திரன் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சந்தேக மரணம் என, ஐபிசி பிரிவு 174-ன் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தடயவியல் அதிகாரிகள் அவரது வீட்டில் அய்வு நடத்திவருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டது ஏழை-எளிய மக்களை பட்டினிப் போட்டு கொல்வதற்கு சமம் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ரூ.89 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூரில் இலவச புடவை வாங்கச் சென்ற போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் காயமுற்றனர்.
இதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமுற்ற 12 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி கோட்டாட்சியர் பிரேமலதா விசாரணை நடத்திவருகிறார்.
பின்னணிப் பாடகி வாணி ஜெயராமின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “கலைவாணி வாணி ஜெயராமின் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். வாணி ஜெயராமின் உயிரிழப்பு, இசையுலகில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
பத்ம பூஷன் விருதை பெறும் முன்னரே வாணி ஜெயராம் மறைந்திருப்பது, பெரும் துயரம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக அமைப்புச் செயலாளராக செந்தில் முருகனை நியமித்து ஓபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்து, வாபஸ் பெற்றவர் செந்தில் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர், வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலவச சேலைகள் தருவதாக அறிவித்திருந்ததால், கூட்டம் கூடி பலர் மயக்கமடைந்த நிலையில், 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் வேட்பாளரை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்திற்கு முறைப்படி தெரிவிக்க பொதுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இரட்டை இலை சின்னம் கோரும் விண்ணப்பத்தில் கைழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு பொதுக்குழு அதிகாரம் வழங்கி தீர்மானம் செய்துள்ளது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு சந்தேக மரணம் என, ஐபிசி பிரிவு 174-ன் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல் புகாரில் 4 காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மனித உரிமை ஆணைய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. காவல் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான 5ம் நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து. இன்று மட்டும் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை 46 பேர் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) இன்று அவரது வீட்டில் காலமானார். அவரது மறைவிற்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், “சீமானுக்கு வேங்கைவயல் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதைவிட, பெரியார் எதிர்ப்பு திராவிட எதிர்ப்புத்தான் மேலோங்கியுள்ளது, அவர் என்னை விமர்சனம் செய்துள்ளது என் மீதான காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
அசாமில், குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் இன்று காலை வரையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்
மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் வாணி ஜெயராம் பாடல்களை பாடியுள்ளார்.
அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் சட்டம் ஒழுங்கை பேணி காக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்
இரட்டை இலை சின்னத்தில் நிற்பவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிப்போம் என ஓ.பி.எஸ் தரப்பு அறிவித்துள்ளது
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடலில் பேனா நினைவு சின்னம் அமைப்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்
வேட்பாளர் தேர்வு படிவம் – அ.தி.மு.க அவைத்தலைவர் அறிவிப்பு
பொது வேட்பாளர் தேர்வுக்கான ஒப்புதல் படிவத்தை நாளை இரவு 7 மணிக்குள் அனுப்ப வேண்டும் – பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவிப்பு
அதிமுகவின் 2ஆம் கட்ட தலைவர்களின் கருத்து தமக்கு பயத்தை அளிக்கிறது.
இன்னொரு கட்சியின் பலவீனத்தை வைத்து
வளர நினைத்தால் அது நிலைக்காது – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
இ.பி.எஸ் அறிவித்த வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓ.பி.எஸ் இடம் வலியுறுத்தினோம்.
வேட்பாளரை ஆதரிக்க ஓபிஎஸ் சில கோரிக்கைகளை முன் வைத்தார். வேட்பாளர் தேர்வில் ஓபிஎஸ் நல்ல முடிவை எடுப்பார், இன்று மாலைக்குள் நல்ல முடிவு கிடைக்கும் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
உட்கட்சி பிரச்சினையில் தலையிட மாட்டோம்
அதிமுக உட்கட்சி பிரச்சினையில் தலையிடக் கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்
வேட்பாளர் கே.எஸ்.தென்னரசை ஆதரிக்க வேண்டும் என ஓபிஎஸ் இடம் வலியுறுத்தினோம் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
இ.பி.எஸ் வேட்பாளர் தென்னரசை ஆதரிக்க ஓ.பி.எஸ் இடம் வலியுறுத்தினோம் – அண்ணாமலை
அ.தி.மு.க வேட்பாளர் ஒப்புதல் படிவம் வெளியானது – தென்னரசுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் கோரிக்கை
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவு அளிக்க படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு கோரியும் ஒப்புதல் படிவம்
88 கோயில்களின் பராமரிப்புக்கு மானியம்
தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்தில் உள்ள 88 கோயில் பராமரிப்புக்கு அரசு மானியம்
தலைமை செயலகத்தில் மானியத்திற்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்
மதுரை கோயிலில் தெப்பத்திருவிழா
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா தொடங்கியது
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது
விழுப்புரத்தில், எரிந்த நிலையில் கல்லூரி மாணவியின் உடல் மீட்பு. தீ வைத்து எரித்து கொலையா? தற்கொலையா? என போலீசார் தீவிர விசாரணை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம்
சேலத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
சென்னையில், ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியே ஆலோசனை
அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் தேர்வுக்கு ஒப்புதல் படிவம் வழங்கப்பட உள்ள நிலையில் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து வீடு வீடாகச் சென்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்து, ரூ. 42,680க்கு விற்பனையாகிறது.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயம் ஆக்கி, புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் யாரேனும் இறக்க நேரிட்டால் இறுதி சடங்குகளில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் கலந்து இறுதி மரியாதைகளை செய்ய வேண்டுமென தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இதுவரை 36 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.