Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
குஜராத் தேர்தல்
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 93 தொகுதிகளுக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1 ஆம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 61 கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
FIFA கால்பந்து உலகக்கோப்பை
FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடரின் கால் இறுதி சுற்றுக்கு பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் முன்னேறியது. ROUND OF 16 சுற்றில் போலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தியது.
அதே சுற்றில் செனகல் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
இந்தியாவில் நடைபெற உள்ள ஜி20 கருத்தரங்குக்கு தமிழ்நாடு முழு ஆதரவளிக்கும். உலக அளவில் இந்தியா அளித்த உத்தரவாதங்களை காக்க தமிழகம் உறுதுணையாக இருக்கும். ஜி20 நாடுகள் மட்டுமின்றி உலக நாடுகளே இந்தியாவை உற்றுநோக்குகின்றன. அகிம்சை, சமத்துவம், நல்லிணக்கம், சமத்துவம் உள்ளிட்டவைகளை உலக அளவில் கொண்டு செல்ல இந்த வாய்ப்பை பிரதமர் பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். இந்தியாவின் பெருமையை உலகிற்கு பறைசாற்றுவோம். என ஜி20 தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ரத்தம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
துணிவு படத்தின் முதல் பாடல் டிராக் டிச.9ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட் ஒன்றில் அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில், இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் இன்றைய வர்த்தகத்தில் 47 பைசா சரிந்து வணிகமானது.
காரைக்கால் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் இந்தப் பேருந்துகளில் உற்சாகமாக பயணம் செய்தனர்.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து 67 லட்சத்து 23 ஆயிரத்து 682 பேர் காத்திருக்கின்றனர்.
இவர்களில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 882 பேர் பெண்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 268 பேர் உள்ளனர். 31 லட்சத்து 40 ஆயிரத்து 532 பேர் ஆண்கள் ஆவார்கள்.
இவர்களில் 18 லட்சத்து 30 ஆயிரம் பேர் 31-45 வயதினர் ஆவார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன் பந்தல் வீரசோழன் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டதால், அரசு மேல்நிலைப்பள்ளியில் நீர் புகுந்தது.
பள்ளி வளாகம் முழுவதிலும் ஆற்றுநீர் புகுந்து காணப்பட்ட நிலையில், பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பாரதிய ஜனதா பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படத்தின் முதல் பாடல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படுகிறது.
இந்நிலையில், சில்லா சில்லா என்ற பாடலின் பெயரை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.
டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மாநகராட்சியில் 141 வார்டுகளுக்கும் மேல் ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு 61 வார்டுகளுக்கு மேல் கிடைக்கும் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
திருவண்ணாமலை தீபத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து திருவண்ணாமலைக்கு டிச.6,7ஆம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
குன்னூரில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவையில் நடந்த விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் ஜி20 ஆலோசனைக் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை மாலை 5 மணியோடு நிறைவு பெற்றது.
பா.ஜ.க-வை சேர்ந்த அஸ்வினி உபாத்தியா தாக்கல் செய்த மனுவில் உச்சநீதிமன்றம், பணம், பரிசுப் பொருட்களை வழங்கி மதமாற்றம் செய்வது அரசமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது. மாநிலங்களிடம் விளக்கம் பெற்று மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மதமாற்றம் தான் அறப்பணியின் நோக்கமா என்று உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
ஒடிசா அருகே வங்கக் கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் இது 5.1 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி பற்றிய புத்தகத்தை படித்துவிட்டு, இணையத்தில் நாகரீகமாக விமர்சிக்க வேண்டும். பெஸ்ட் புதுச்சேரி என பிரதமர் சொல்வதை சிலர் டெஸ்ட் புதுச்சேரி என விமர்சனம் செய்கிறார்கள் என்று ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை என்ற வழக்கில் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், வளாகம் கட்டுவதற்கான திட்டம், மதிப்பீடுகள் குறித்து நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளோம் என தமிழக அரசு கூறியுள்ளது.
திருவள்ளூர் அருகே அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியை சாதிய பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பழங்குடியின மாணவர்கள் ஒருவாரமாக பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ள நிலையில்,கல்வித்துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் நேரில் விசாரணை செய்து வருகின்றனர்.
10% இடஒதுக்கீடு வழக்கில் 10% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சாஸ்திரி நகர் பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கட்டடம் தானாக இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனையில் பங்கேற்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை, அவரை வரவேற்றார்.
தேசிய மாநாட்டு கட்சியின் தலைவராக மீண்டும் பரூக் அப்துல்லா நியமனம். தலைவர் பதவியைவிட்டு விலகுவதாக அறிவித்த நிலையில் மீண்டும் தேர்வானார்
சென்னை உள்பட 13 மாவட்டங்களில் வரும் 8ம் தேதி அதி கனமழைக்கு வாய்ப்பு . சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் பெண் ‘சோப்தாராக” லலிதா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பெண் நீதிபதிகளுக்கான ‘சோப்தாராக’ (செங்கோல் ஏந்தி செல்பவர்) செயல்படுவார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாள் சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா மரியாதை
ஜி20 ஆலோசனையில் பங்கேற்க டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின் விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, ஆகியோர் வரவேற்பு
குஜராத், காந்திநகரில் தனது வாக்கை செலுத்தினார், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி
தமிழகத்தில் அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது” போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி
ஜி20 ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்பதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறேன் ஜி20 மாநாடு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் சூழலை உருவாக்கிய பிரதமருக்கு நன்றி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தொண்டர்களை ஒன்றிணைப்போம்: அதிமுகவை வெற்றியடைய செய்வோம் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு ஓபிஎஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற நிலையை மீண்டும் உருவாக்க ஓபிஎஸ் தரப்பு சூளுரை
ஜி20 மாநாடு ஆலோசனை கூட்டத்திற்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் ஈபிஎஸுக்கு தான் அழைப்பு வந்துள்ளது, ஓபிஎஸுக்கு இல்லை என்று சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் ஜெயக்குமார் கூறினார்.
குஜராத் 2ம் கட்ட தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 4.75% வாக்குகள் பதிவாகி உள்ளது.
ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தொடர்ந்து மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும். வரும் 8ஆம் தேதி தமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியை புயல் நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வரும் 7ம் தேதி முதல் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில், அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு பேரணியாக சென்று இன்று காலை 10.30 மணிக்கு ஓ.பி.எஸ். மரியாதை செலுத்துகிறார். எடப்பாடி பழனிச்சாமியும் நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
145 நாட்களுக்கு பிறகு, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி இன்று திறக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மூன்றாவது மாடிக்கு மட்டும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் ROUND OF 16 சுற்றின் இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் – தென் கொரியா அணிகள் மோதுகின்றன.
அத்போல் இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஜப்பான் – குரோஷியா அணிகள் மோதுகின்றன.