Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu news update
சரத் யாதவ் காலமானார்
முன்னாள் மத்திய அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவருமான சரத் யாதவ் காலமானார்.
முதல்வர் கடிதம்
ஆளுநரின் செயல்பாடுகள் நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு முழுவதும் மாறானதாக உள்ளது. தமிழ்நாட்டின் மரபுகளை மீறாமல், மக்களுக்கு ஏற்ற வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
வங்கி எழுத்தர்(Clerk) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகள், ஜனவரி 15 பொங்கல் பண்டிகை அன்று நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நியாயமற்றது. தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகை நாளில், இப்படியான தேர்வுகளை நடத்துவதன் மூலம் ஒரு மாநிலத்தின் பண்பாட்டு உரிமையோடு, தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புகளையும் பறித்திடும் செயல் இது. உடனடியாக, எஸ்.பி.ஐ நிர்வாகம் தேர்வு தேதியை மாற்றி, இந்நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் அரசியலமைப்பு சட்டம் அளித்திருக்கும் உரிமையை உறுதிசெய்திட வேண்டும் என திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் “என் தர்மத்தை நிலைநாட்டுவேன்.. விரைவில் களத்தில் சந்திப்போம்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சாமானிய மக்கள் அனுபவித்த வலிகளை கலை வடிவில் திராவிட இயக்கம் தான் பேசியது. “கலைகளை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் மலையிலேயே தங்கியுள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
“சாமானிய மக்கள் அனுபவித்த வலிகளை கலை வடிவில் திராவிட இயக்கம் தான் பேசியது. “கலைகளை அடித்தட்டு மக்களிடம் எடுத்துச் சென்ற இயக்கம் திராவிட இயக்கம்” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொங்கல் தினத்தில் நடைபெறவுள்ள எஸ்.பி.ஐ கிளார்க் தேர்வுகளை மாற்றி அமைக்கக் கோரி சென்னையில் உள்ள எஸ்பிஐ தலைமை பொதுமேலாளர் அறையில் சு. வெங்கடேசன் எம்.பி. உள்ளிருப்பு போராட்டம் நடத்திவருகிறார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
தாம்பரம் வரை வாகனங்கள் நத்தை போல் ஊர்ந்து செல்கின்றன.
இரத்தம் தோய்ந்த போரின் மையமான கிழக்கு உக்ரேனிய நகரமான சோலேடரை படைகள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா- உக்ரைன் போர் கடந்த 6 மாதத்துக்கு மேலாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ Q3 லாபம் ஆண்டுக்கு ஆண்டு 2.8 சதவீதம் உயர்ந்து ரூ.3,053 கோடி ஆக உள்ளது.
நிறுவனத்தின் வருவாய் 14 சதவீதம் அதிகரித்து ரூ.23,229 கோடியாக உள்ளது என நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
வால்பாறை மலைப்பாதையில் வரையாடுகளை துன்புறுத்திய கேரளாவைச் சேர்ந்த ஷெல்டன் ராஜா (49), ஜோபி ஆபிரகாம் (40) ஆகியோர் வன பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 5ம் தேதி இருவரும் வரையாடுகளின் கொம்புகளை பிடித்து துன்புறுத்தியது விசாரணையில் அம்பலமானது.
ரஜோரியில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல்களை விசாரிக்கும் பொறுப்பு என்ஐஏவுக்கு வழங்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்முவில் தெரிவித்துள்ளார்.
ரஜோரியில் சமீபத்தில் நடந்த தீவிரவாத தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் வொர்க் ஃப்ரம் ஹோமில் ஒதுக்கப்பட்ட பணி நேரத்தில் பணி செய்யாமல் நேரத்தை வீணடித்த குற்றத்துக்கு இளம் பெண் ஒருவருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
விசாரணையில் இந்தப் பெண் சுமார் 50 மணி நேரம் வரை பணி செய்யாதது தெரியவந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊருக்கு செல்வதால் மதுரவாயல், போருர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
கோயம்பேட்டில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல காத்திருக்கின்றனர். ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் துணிவு. இந்தப் படத்தில் இயக்குனர் ஹெச். வினோத், சபரிமலைக்கு இருமுடிகட்டு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.
அவர் தொடர்பான படங்கள், காணொலிகள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. நடிகர் அஜித் குமாரை வைத்து நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு என 3 படங்களை இயக்குனர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் அருகே கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
பால்வளத்துறை அமைச்சர் நாசர்: ஆவின் சார்பில் புதிதாக குளிர்பானம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் விளம்பரங்கள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
ஜனவரி 16-ம் தேதி நியாயவிலைக் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27-ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16-ம் தேதிக்கு மாற்றியமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி: “அரசியல் காரணத்திற்காக சேது சமுத்திரத் திட்டம் நிறுத்தப்பட்டதாக முதலமைச்சர் கூறுவது தவறானது; சேது சமுத்திரத் திட்டம் 4 ஏ என்றால் அதை பாஜக கடுமையாக எதிர்க்கும். காவல்துறையை எனது கட்டுப்பாட்டில் கொடுத்தால் ஏழு நாட்களுக்குள் சுபஸ்ரீ கொலையா? தற்கொலையா? என்பதை சொல்லிவிடுவேன்; புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன்” என்று கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவையல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், 85 நபர்களிடம் வாக்கு மூலம் பெற்று வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளின்
ஜல்லிக்கட்டு நேரம் குறைக்கப்படவில்லை; ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கமான கால அளவில் நடைபெறும் என்று கால்நடை பராமரிப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னையில் ஆளுநர் மாளிகையை தடையை மீறி முற்றுகையிடச் சென்ற போது கைது செய்யப்பட்ட விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகளை காவல்துறை விடுவித்தது.
திருப்பதி கோயிலில் லட்டுக்காக மேலும் 30 கவுன்ட்டர்கள் அமைக்கப்படும் என தேவஸ்தான நிர்வாக தர்மா ரெட்டி அறிவித்துள்ளார். தற்போது 50 கவுண்ட்டர்கள் மூலம் லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
வி.சி.க தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோருக்கு எதிரான கொலை முயற்சி வழக்கின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
மின்சார வாகனங்களுக்கு 2025-ம் ஆண்டு வரை 100% வரி விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்படுள்ளது. மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை தடையை மீறி சின்னமலை பகுதியில் விசிகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு . அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையிலான சமாதான கூட்டத்தில் முடிவு
தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக, இன்று ரேஷன் கடைகள் திறப்பு…அதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு அனைத்து சமுதாய பிரதிநிதிகளை உள்ளடக்கிய 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை ஆட்சியர் தலைமையிலான சமாதான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
“சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம்” “அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும்” “ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே இருந்தபடி காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை நடைபெற வேண்டும்”
ரேஷன் கடைகளுக்கு 16ம் தேதி விடுமுறை . பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ஏதுவாக, இன்று ரேஷன் கடைகள் திறப்பு. அதற்கு ஈடாக 16ம் தேதி விடுமுறை
மூத்த தலைவர் சரத் யாதவ் உடலுக்கு ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
“பொங்கல் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரட்டும். உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்” என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு ஏற்கனவே Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதுகாப்பு அதிகரிப்பு . Z பிரிவில் 28 முதல் 33 CRPF வீரர்கள் இருப்பார்கள்
சொன்னதை மட்டுமின்றி சொல்லாததையும் செய்வோம் என்பதே நமது முழுக்கம். 86% அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் ரூ.2.33 கோடி லட்சம் முதலீடுகள் ஈக்கப்பட்டுள்ளன. தொழில் தொடங்க சிறந்த மாநிலம் என்ற பட்டியலில் தமிழம் 3-ம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 9.22% தமிழ்நாட்டின் பங்கு – ஸ்டாலின்
சமூக வளர்ச்சி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்படுள்ளது. கடந்த 15 மாதங்களில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எளிய மக்களின் பாராட்டுகள் என்னை ஊக்கமடைய செய்கின்றன : ஆளுநர் உரைக்கு நன்றி தெரித்த தீன்மானத்தின் மீது ஸ்டாலின் பதில்
2022ம் ஆண்டில் மட்டும், 655 நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன் . 10 ஆண்டுகளாக தேங்கி கிடந்த தமிழ்நாட்டை ஓட வைத்திருக்கிறோம் . மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் . மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்கவும் ஆட்சியின் வலிமையை உணர்த்தவும் எனது சக்தியை மீறி செயல்படுவேன் 2,892 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்தது சாதாரண விஷயமல்ல – ஸ்டாலின்
சமூக நீதி தத்துவமே திராவிட இயக்கத்தின் அடைப்படை: பெரியார், காமராஜர், அண்ணா, கருணாநிதி கொள்கைகளை செயல்படுத்துவதே திரவிட மாடல் : ஸ்டாலின்
ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி போராட்டம் தமிழ்நாடு பெயர் விவகாரம், சட்டப்பேரவையில் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் .
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 1.39 கோடி பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது” – சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மக்களின் நலன் மட்டுமே நமது சிந்தனையில் நின்றது, அதுவே மக்கள் மனதை வேன்றது; காலம் குறைவு ஆனால், ஆற்றியுள்ள பணிகள் அதிகம்- முதலவர் ஸ்டாலின்
சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது. ஸ்டாலின்
சென்னை விமான நிலையம் வரை மெட்ரோவில் பயணித்த தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
மகாராஷ்டிரா, நாசிக்-ஷீரடி நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து மும்பையில் இருந்து ஷீரடிக்கு சென்ற 7 பெண்கள் உட்பட 10 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு . விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
ஒசூரில் வர்த்தக மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
கோவையில் உள்ள அனைத்து சாலைகளையும் புதுப்பிக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு- சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவ் உடலுக்கு, அமித்ஷா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.8 கோடிக்கு ஆடு விற்பனை நடந்தது.
பொங்கல் பண்டிகையையொட்டி, கன்னியாகுமரி, தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது, மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500, பிச்சிப்பூ கிலோ ரூ.1,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்னாள் எம்.பி. மஸ்தான் கொலையில், ஏற்கெனவே 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சகோதரர் ஆதம் பாஷாவை போலீசார் கைது செய்தனர். ரூ. 5 லட்சம் கடனை திருப்பிக் கேட்டதால் கொலை செய்ததாக வாக்குமூலம்.