Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ரஷ்ய அதிபர் புதின் மீது பிடிவாரண்ட்
உக்ரைன் குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக ரஷ்ய அதிபர் புதின் மற்றும் ரஷ்ய குழந்தைகள் உரிமை ஆணையரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட இன்று முதல் நாளை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அதிமுக தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
WPL கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு 189 ரன்களை குஜராத் அணி இலக்காக நிர்ணயித்தது. முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது
இ.பி.எஸ்-ஐ அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் என தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என தஞ்சையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம் கூறியுள்ளார்
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது. அ.தி.மு.க தேர்தல் நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கடிதம் எழுதியுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் மின்னல் தாக்கியதில், உண்ணாமலை என்பவரின் வீட்டில் தீப்பற்றியது. இதில் ரூ2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது
திருப்பூர், பல்லடத்தில் உள்ள பேக்கரியில் கெட்டுப்போன கேக்குகள் விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. கெட்டுப்போன கேக்குகளை சாப்பிட்டதாக 2 சிறுவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பேக்கரியில் உணவு பாதுகாப்புத் துறையினர், போலீசார் ஆய்வு நடத்தினர்
திருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் 9 ஆவது நாளாக பற்றி எரியும் தீயால் கடும் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது. தீயினை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்
WPL கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ் உடன் 4 மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து வருகின்றனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இ.பி.எஸ் உடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்
கோவை மாவட்டம் காரமடை அருகே வாயில் காயத்துடன் சுற்றிய காட்டு யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தற்போது யானைக்கு, டாப்சிலிப் அடுத்த வரகளியாறு முகாமில் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்
தமிழகம், ஆந்திரா, கேரளா, வடக்கு உள் கர்நாடகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குவங்கம், உத்தரகாண்ட், குஜராத், மத்திய மகாராஷ்டிரா,ராஜஸ்தான் பகுதிகளில் இடியுடன் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
திருச்சியில், மாநகராட்சி அனுமதியில்லாமல் கட்டிய வீடுகளை ஜூன் 1-க்குள் சீல் வைக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வீட்டை காலி செய்ய திருச்சி மாநகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மயிலாடிக்காடு கிராமத்தில் இளம்பெண்ணை கொன்று துரைக்கண்ணு என்ற இளைஞர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காதலை ஏற்க மறுத்ததால், மகள் முறையுடைய பெண் கழுத்தறுத்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்
அ.தி.மு.க. அலுவலகத்தை சிலர் தாக்க உள்ளதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த முறை தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன” எனத் தெரிவித்தார்.
நாமக்கல்லில் பணியிட மாறுதல் பெற்ற செவிலியர்களை விடுவிக்க கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, நாமக்கல் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் செவிலியர்களை பணியில் இருந்து விடுவிக்க ரூ.35 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றிய சிறை நன்னடத்தை அதிகாரி மற்றும் அவரது பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவர்களுக்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
திருச்சியில் 12 வயது சிறுமியை வடமாநில கும்பல் தாக்கி கடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பகுதியில் 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இது தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலிஸ்தான் இயக்க ஆதரவாளர் அம்ரித்பால் சிங்-ஐ கைது செய்ய பஞ்சாப் போலீசார் தீவிரம் காட்டிவருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப்பில் நாளை மதியம் 12 மணி வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் நடைபெறவிருக்கும் இந்திய- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
காலை 11 மணிக்கு விற்க தொடங்கியது, 3,000 டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது.
தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது, பீகாரில் உள்ள ஜகதீஷப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் ஓபிஎஸ் தரப்பினர்.
பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி விவகாரம் குறித்து பல்வேறு முரண்பட்ட செய்திகள் வெளியான நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி விவகாரத்தில் தேசிய தலைமையை சந்திக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் 26ம் தேதி பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், அதிமுக – பாஜக கூட்டணி குழப்பம் குறித்து தேசிய தலைமையிடம் எடுத்துரைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு தொடர்பாக இ.பி.எஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். அவரது இல்லத்தில் நடைபெறும் ஆலோசனையில் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அதிமுக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி. குட்ட குட்ட குனியும் கட்சி அதிமுக அல்ல, எங்களை யாரும் குட்ட முடியாது, நாங்கள் குனியவும் மாட்டோம். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அதிமுக முடிவெடுக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சர்வாதிகாரமானது. தமிழகத்தில் எங்கு சென்றாலும் இ.பி.எஸ்-க்கு எதிர்ப்பலை பாயும். ஏப்ரல் 2வது வாரத்தில் திருச்சியில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். மாநாடு நடத்திய பிறகு மாவட்டந்தோறும் தொண்டர்களை சந்திக்க உள்ளோம். அதிமுக பொதுக்குழுவுக்கு பிறகு தண்ணீர் பாட்டிலை பார்த்தால் அலர்ஜியாக உள்ளது.
பிட்பாக்கெட் அடித்து செல்வது போன்று பொதுச்செயலாளர் தேர்தல் உள்ளது. அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே அதிமுக தலைமை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்” என்று பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
மாவட்டந்தோறும் அதிமுக தொண்டர்களை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. தேர்தல் என்றால் முறையான உரிய கால அவகாசத்துடன் நடைபெற வேண்டும். அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கு என சட்ட விதிகள் உள்ளன. விருப்பத்திற்கு ஏற்ப தேர்தல் நடத்துவது, சட்ட விதிகளை மாற்றுவது மாபெரும் இயக்கத்தை கொச்சைப்படுத்தும் செயல்.” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. தேர்தல் கூட்டணி குறித்து பாஜகவின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். தமிழகத்தில் இதுவரை யாரும் தனித்துப் போட்டியிட்டது இல்லை: தனித்துப் போட்டியிடுவதாகவும் அறிவிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, பாஜக தனித்துபோட்டியிட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் 75 சதவீதம் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறையே அமலில் உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டிக்கான நேரடி டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது.
அதிமுகவின் தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே பொதுதேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்று பரவும் செய்தி தவறானது; 75% பள்ளிக்கு வந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதி- தஞ்சாவூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேஜர் ஜெயந்த் உடலுக்கு, சொந்த ஊரான தேனியில் ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.44,480-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 110 அதிகரித்து, 5,560 ரூபாயாக உள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்தார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு 2வது முறையாக தமிழகம் வந்தார்.
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன் – சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு
மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று காலை 10.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
புதன்கிழமை சென்னையில் நடைபெறும் இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு, இன்று காலை 11 மணிக்கு நேரடி டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, கோவை, நீலகிரி, ஈரோடு, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் முதல் பாடல் 'அக நக' மார்ச் 20 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 189 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 39.5 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
கட்டட தொழிலாளர்கள் விபத்தின் போது உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ஒரு லட்சத்திலிருந்து ரூ2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது