Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
முழு அடைப்பு போராட்டம்
என்.எல்.சி.யை கண்டித்து கடலூரில் பாமக சார்பாக முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று டீக்கடைகள், உணவகங்கள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பிற்காக 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூரில் அரசு பேருந்துகள்100%, தனியார் பேருந்துகள் 50% இயக்கப்படுகிறது. கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
WPL கிரிக்கெட் தொடர் : குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி அபார வெற்றி 106 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி 7.1 ஓவர்களில் எட்டி டெல்லி அணி வெற்றி
கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் இல்லத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் சிகிச்சையில் உள்ள கார்த்திக்கிடம் நலம் விசாரித்தார்
கடலூர், சிதம்பரத்தில் இரவு 7 மணியளவில் டாஸ்மாக் கடைகள் முன் அறிவிப்பின்றி திடீரென மூடப்பட்டதால் மது பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அசம்பாவிதங்களை தவிர்க்க டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு
அரசியல் கட்சி ஆரம்பிக்க நினைத்த நேரத்தில், மருத்துவர் பல நிபந்தனைகளை விதித்தார். மருத்துவர் ஆலோசனைப்படி , எனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தேன் மருத்துவர் சொன்னதால் தான் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை திமுக அரசு ஊக்குவித்து வருகிறது மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழும் மாநிலம் தான் தமிழ்நாடு. சிலர் தமிழ்நாட்டின் ஒற்றுமையை குலைக்க பார்க்கிறார்கள் இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
நெசவாளர்களின் துயர் துடைக்கும் கட்சி திமுக தான். கைத்தறி உடை அணிய வேண்டும் என்பதை இயக்கமாக மாற்றியது திமுக தான். 42 லட்சம் மாணவர்களுக்கு நெசவாளர்களிடம் இருந்து சீருடை வாங்கப்பட்டது என நெசவாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
சிவகங்கை, திருப்பத்தூர் மருதுபாண்டியர் நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி. நிகழ்ச்சியில் மருத சகோதரர்களின் வாரிசுகளை அனுமதிக்காததால் கைகலப்பு – மோதல் போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து சமாதானம்
சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற பெங்களூருவைச்சேர்ந்த ஞானகிறிஸ்டோபர், சின்னராஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.
இந்திய ரயில்வேக்கு சொந்தமான 24 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ₹1 கோடி, 1900 அமெரிக்க டாலர்கள், 540 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் 1.5 கிலோ தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்!
புதுச்சேரி : காரைக்காலில் நகைக்கடையில் 12 சவரன் போலி தங்க நகையை விற்க முயன்ற 2 இளைஞர்கள் கைது. 916 தங்கத்தின் உள்ளே செம்பு கம்பியை வைத்து நூதன முறையில் மோசடி – போலீசார் விசாரணை
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் அரசுப்பேருந்து – கார் நேருக்குநேர் மோதி விபத்தக்குள்ளானது. கார் மீது மோதிய பேருந்து, தேவாலயத்தின் சுற்றுச்சுவரிலும் மோதியதால் தேவாலயத்தின் நுழைவு வாயில் சரிந்து பேருந்தின் மீது விழுந்ததில் 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
சிவகங்கையில் ஈ.பி.எஸ் பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் பாதுகாத்துக் கோரி முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சிவகங்கை எஸ்.பி. பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ஈரோடு, பவானி அருகே இளைஞர் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு ஆபத்தான நிலையில் இளைஞர் மருத்துவமனையில் அனுமதி – போலீசார் விசாரணை
பார்டர் – கவாஸ்கர் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சுப்மன் கில் – 128 ரன்கள் சேர்த்துள்ளார். விராட் கோலி -59, ஜடேஜா -16 ரன்களுடன் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் இந்திய அணி 191 ரன்கள் பின்தங்கி உள்ளது
மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் நலசங்கம் நடத்திய பால் நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் வாபஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை முதல் வழக்கம்போல் பால் கொள்முதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சாதியை குறிப்பிட்டு பேசி, இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டுகிறார் என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மீது காவல் நிலையத்தில் புகாரளித்த பின், அ.தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்
பொதுத் தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் தண்டனை என்ன வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 15 வகையான குற்றங்களையும், தண்டனைகளையும் அறிவித்துள்ளது. ஆள்மாறட்ட செயலில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை, விடைத்தாள்களில் மதிப்பெண் வழங்கும் படி வேண்டுகோள் விடுத்தால் சம்பந்தப்பட்ட பாடத் தேர்வு ரத்து உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன
மதுரையில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யானை தந்தம் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அபாயகரமான 6 பூச்சிக்கொல்லிகளுக்கு நிரந்தரத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கால அவகாசத்தை மார்ச் 30ம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நான் பழகி இருந்தாலும் இந்த புகைப்பட கண்காட்சி எனக்குத் தெரியாத பல விஷயங்களை ஞாபகப்படுத்தியது என ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ புகைப்பட கண்காட்சியைப் பார்வையிட்ட பின் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் கூறினார்
சென்னை, ராமாபுரத்தில் இருந்து கிண்டி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மெட்ரோ 2ம் கட்ட பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுப்பாதை அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, 80-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அவர்கள் விரும்பினால் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதியை ஏற்படுத்தித் தர உள்ளோம் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்
அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில், மாநிலங்களில் அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை தயாராக வைத்திருக்கவும் கொரோனா பரவலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
மதுரையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து ராஜேஸ்வரன் என்ற இளைஞர் விமர்சனம் செய்துள்ளார். அந்த இளைஞரின் செல்போனை பறித்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், விசாரணைக்காக அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் இது அவருக்கு 2வது சதம் ஆகும்.
இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.
சிவகங்கையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இ.பி.எஸ்-ஸைக் கண்டித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்
நடத்தி வருகின்றனர். குழந்தை போல் சித்தரிக்கப்பட்ட அவரது படம் அடங்கிய பலூனை பறக்கவிட்டு, தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவ எடப்பாடி பழனிசாமியே காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சிவகங்கை நகர் முழுவதும் இபிஎஸ்ஸை கண்டித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
திருச்சி, முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கியதில் 10ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“மக்களின் எதிர்ப்பை மீறி விளை நிலங்களை கையகப்படுத்துவதை என்.எல்.சி நிர்வாகம் உடனே கைவிட வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் எந்த திட்டத்தையும் ஏற்று கொள்ள முடியாது” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பணியை இப்போதே தொடங்க வேண்டும். திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையேமிகப்பெரிய வெற்றிக்கு காரணம்.
2024 மக்களை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் மிகப் பெரிய வெற்றி பெறுவற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
கோவையில் மாற்று கட்சியினர் திமுக-வில் இணையும் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையும் மாற்றுக்கட்சியினர்
அதிமுக, தேமுதிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
மக்களை துன்புறுத்தி நிலம் கையகப்படுத்துகிறார்கள் – பா.ம.க தலைவர் அன்புமணி
என்எல்சி நிர்வாகத்திற்கு எதிரான முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெறுகிறது. மக்களை அவதிப்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை.
முழு அடைப்பு போராட்டத்தின் நோக்கத்தை வணிகர்கள், வியாபாரிகள் உணர்ந்துள்ளதால் எங்களுக்கு அதரவு.
இன்றைய கடையடைப்பு அடையாள போராட்டமே. இனி தீவிரமாக போராட்டங்களை முன்னெடுப்போம்.
கடலூரில் விவசாயிகள், மக்களை துன்புறுத்தி நிலம் கையகப்படுத்துகிறார்கள் – பா.ம.க தலைவர் அன்புமணி பேட்டி
எந்தவித காரணங்களுமின்றி சாதி சான்றிதழை நிராகரித்த திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கு அபராதம்
ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், மனுதாரருக்கு சாதி சான்றிதழ் வழங்கவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
என்.எல்.சி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க சார்பில் முழு அடைப்பு போராட்டம்
கடலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற பாமக-வைச் சேர்ந்த 40 பேர் கைது
முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மாவட்ட முழுவதும் பாமகவினர் 200 பேர் கைது
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
திருச்சி : முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்
சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் 3 மாணவர்களை கைது செய்தது காவல்துறை
முழு அடைப்பு காரணமாக கடலூர் மாவட்டத்தில் 40 சதவீத கடைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 100% அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்று தான். படிப்படியாக தனது வாழ்க்கையில் உயர்ந்து வந்தவர் ஸ்டாலின்- முதல்வர் புகைப்படக் கண்காட்சி பார்வையிட்ட பின் நடிகர் ரஜினி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் டிரோன்கள் பறக்க தடை விதித்து கோவை காவல்துறை அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் பாலசமுத்திரம் அரசுப் பள்ளியில் சிறப்பு பயிற்சி வகுப்பின் போது 10 ஆம் வகுப்பு மாணவன் மௌலீஸ்வரன் கொலை வழக்கில் தலைமையாசிரியர், 2 ஆசிரியர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 640 அதிகரித்து, ரூ. 42,160 ஆகவும், ஒரு கிராம் ரூ. 5,270க்கும் விற்பனையாகிறது.
தேசிய மனித உரிமைகள் ஆணைய பரிந்துரையை ஏற்று, காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 23ம் தேதியும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22ம் தேதியும் தேர்வுகள் தொடங்க உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
எம்.பி.ஏ, எம்.சி.ஏ மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு, இன்று ஹால்டிக்கெட் வெளியிடப்படும் என- அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.