Advertisment

Tamil news today: மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடிப்பு: சென்னையில் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனை

Tamil Nadu News, Tamil News, Kashi Tamil sangamam, Varanasi, Chennai rains- 19 November 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news today: மங்களூருவில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடிப்பு: சென்னையில் நள்ளிரவில் போலீசார் தீவிர வாகன சோதனை

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news update

காசி தமிழ் சங்கமம்

உத்தரபிரதேசத்தின் காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதன் தொடக்க விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

&t=13s

கால அவகாசம் நீட்டிப்பு

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவ.21ஆம் தேதி வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. நவ.21-க்குள் பயிரை காப்பீடு செய்ய, விவசாயிகளுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 21:45 (IST) 19 Nov 2022
  திருச்சியில் பராமரிப்பு பணிக்காக மூடப்படும் காவேரி பாலம்

  திருச்சி, காவேரி பாலம் நாளை நள்ளிரவு முதல், பராமரிப்பு பணிக்காக முழுவதும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார் • 20:36 (IST) 19 Nov 2022
  இந்திய தேர்தல் ஆணையராக அருண் கோயல் நியமனம்

  தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் சனிக்கிழமை நியமிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

  “திரு அருண் கோயல், ஐஏஎஸ் (ஓய்வு) (பிபி: 1985) தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையராக அவர் பதவி ஏற்கும் தேதியிலிருந்து அமலுக்கு வருவதைக் குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சியடைகிறார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  1985 பேட்ச்சைச் சேர்ந்த பஞ்சாப் கேடர் அதிகாரியான கோயல், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோருடன் தேர்தல் குழுவில் இணைவார்.

  இந்த ஆண்டு மே மாதம் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திரா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ராஜீவ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். • 20:07 (IST) 19 Nov 2022
  நாளை முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா

  கோவாவில் நாளை முதல் இந்திய சர்வதேச திரைப்பட விழா 53வது திரைப்பட விழா தொடங்குகிறது. நாளை முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது • 19:34 (IST) 19 Nov 2022
  சபரிமலை கோயிலில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்

  சபரிமலை கோயிலில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது • 18:59 (IST) 19 Nov 2022
  கிருஷ்ணகிரி அரசுப் பள்ளியில் மாணவர்கள் இடையே தகராறு - மாணவன் மரணம்

  கிருஷ்ணகிரி, பர்கூர் அருகே கப்பல்வாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் 12ம் வகுப்பு மாணவன் கோபிநாத் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் • 18:44 (IST) 19 Nov 2022
  நெல்லை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து ஏலம்

  நெல்லை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டது. முதல் நாளில் 1.40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இரண்டாவது நாளாக நடைபெற்ற ஏலத்துக்கு மாட்டின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர் • 18:22 (IST) 19 Nov 2022
  ரசிகர்களை சந்திக்கும் நடிகர் விஜய்; 3 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு

  சென்னை, பனையூரில் உள்ள அலுவலகத்தில் நாளை ரசிகர்களுடன் நடிகர் விஜய் சந்தித்து பேச உள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தின் 3 மாவட்ட நிர்வாகிகளுடன் சந்தித்து பேசுகிறார் • 18:08 (IST) 19 Nov 2022
  11 மாதங்களில் 255 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

  தமிழ்நாட்டில் கடந்த 11 மாதங்களில் குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன • 17:19 (IST) 19 Nov 2022
  உலக கோப்பை கால்பந்து... சட்டவிரோதமாக வெளியிட தடை

  உலக கோப்பை கால்பந்து போட்டியை பதிவு செய்து சட்டவிரோதமாக வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. • 17:10 (IST) 19 Nov 2022
  ரிஷப் பண்ட் ஓப்பனராக வாய்ப்பளிக்க வேண்டும்.. தினேஷ் கார்த்திக்

  டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் ஓப்பனராக வாய்ப்பளிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். • 16:47 (IST) 19 Nov 2022
  தமிழின் பெருமையை வளர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

  உலகிலேயே பழமையான மொழியான தமிழின் பெருமையை நாம் வளர்க்க வேண்டும். நாட்டின் 130 கோடி மக்களும் தமிழ் மொழியை காண வேண்டும், அதை பாதுகாக்க வேண்டும். காசி தமிழ் சங்கமம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் • 16:45 (IST) 19 Nov 2022
  உலககோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்ப தடை

  கத்தாரில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்ட விரோதமாக பதிவு செய்து இணையதளத்தில் ஒளிபரப்ப தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்றுள்ள VIACOM 18 MEDIA நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது • 15:52 (IST) 19 Nov 2022
  "காசியில் தமிழ் சங்கமம் நினைத்து வியக்கிறேன் - இளையராஜா

  தமிழ் சங்கமத்தை காசியில் நடத்தும் எண்ணம் பிரதமருக்கு வந்தது குறித்து வியக்கிறேன் முத்துச்சாமி தீட்சிதருக்கு இங்கு கிடைத்த வீணை இன்னும் உள்ளது என்று இசையமைப்பாளர் இளையராஜா பெருமிதம் தெரிவித்துள்ளார். • 15:46 (IST) 19 Nov 2022
  வணக்கம் காசி - வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

  காசியில் தமிழ்ச்சஙக நிழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே என்று கூறியுள்ளார் • 15:46 (IST) 19 Nov 2022
  வணக்கம் காசி - வணக்கம் தமிழ்நாடு என தமிழில் கூறி உரையை தொடங்கிய பிரதமர் மோடி

  காசியில் தமிழ்ச்சஙக நிழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றின் சங்கமமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்த சங்கமமே என்று கூறியுள்ளார் • 14:55 (IST) 19 Nov 2022
  காசி தமிழ் சங்கமம்: பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய இளையராஜா!

  வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா எம்.பி., "பெருமைமிகு இந்த காசி நகரிலே, காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடிக்கு எப்படி தோன்றியது என்பதை பார்த்து வியந்து வியந்து வியந்து வியந்து கொண்டிருக்கிறேன்" என்று கூறியுள்ளார். • 14:27 (IST) 19 Nov 2022
  காசி தமிழ் சங்கமம்: தமிழ் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி!

  காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். • 14:26 (IST) 19 Nov 2022
  கடலூர்: கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை; சடலமாக மீட்பு!

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மூன்று வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் களமிறங்கினர்.

  சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தாய் பணிக்கு சென்றிருந்த நிலையில், வயலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்ததாக தகவல். • 14:17 (IST) 19 Nov 2022
  கடலூர்: கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை; சடலமாக மீட்பு!

  கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மூன்று வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் களமிறங்கினர்.

  சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு 3 வயது குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தாய் பணிக்கு சென்றிருந்த நிலையில், வயலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறி கிணற்றில் விழுந்ததாக தகவல். • 14:15 (IST) 19 Nov 2022
  தமிழகத்தில் நவம்பர் 21, 22 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழ்நாட்டில் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • 13:23 (IST) 19 Nov 2022
  திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணியில் தாமதம்!

  தொடர் மழை காரணமாக குமரிக் கடலில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் டிசம்பர் இறுதிக்குள் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காகித கூழ் ஒட்டும் பணி தாமதம் குறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விளக்கம் தெரிவித்துள்ளனர். • 12:46 (IST) 19 Nov 2022
  டிப்பர் லாரி மோதி பள்ளி மாணவன் உயிரிழப்பு

  அரியலூர் அருகே டிப்பர் லாரி மோதி 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

  பைக்கில் தந்தையுடன் பள்ளிக்கு சென்ற போது, விபத்தில் சிறுவன் உயிரிழந்த சோகம்

  பலத்த காயம் அடைந்த மாணவனின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி • 12:45 (IST) 19 Nov 2022
  மிஸஸ் உலக அழகிப்போட்டி - சென்னை சேர்ந்தவர் வெற்றி

  அமெரிக்காவில் நடைபெற்ற மிஸஸ் உலக அழகிப்போட்டி

  சென்னை மனநல சிகிச்சை நிபுணர் பட்டம் வென்று அசத்தல்

  அடுத்தாண்டும் பங்கேற்க உள்ளதாக தகவல் • 12:43 (IST) 19 Nov 2022
  15 டிசைன்களில் அரசின் இலவச வேட்டி, சேலை

  பொங்கலுக்கு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை

  10 வருடங்களுக்கு பிறகு பொங்கலுக்கு புதிய டிசைனில் அரசின் இலவச வேட்டி, சேலை வழங்க முடிவு

  பல நிறங்களில் 15 டிசைன்களில் சேலை, 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டி • 12:01 (IST) 19 Nov 2022
  ராமஜெயம் கொலை வழக்கு - மேலும் 5 பேருக்கு உடல் பரிசோதனை

  திருச்சி அரசு மருத்துவமனையில் 2வது நாளாக உடல் பரிசோதனை

  நேற்று 6 பேருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், மீதம் 5 பேர் வருகை

  உண்மை கண்டறியும் சோதனைக்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது • 12:00 (IST) 19 Nov 2022
  திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு

  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு உடல் நலக்குறைவு

  நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் • 12:00 (IST) 19 Nov 2022
  இலவச வேட்டி, சேலை - முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  பொங்கல் பண்டிகைக்கான இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

  அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு • 11:59 (IST) 19 Nov 2022
  பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணி நீக்கம்

  சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் பணி நீக்கம்

  தொலைதூர கல்வி இயக்ககத்தில் முறைகேடு செய்ததாக புகார்

  தொகுப்பூதிய பணியாளரும் நீக்கம் - பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை • 11:20 (IST) 19 Nov 2022
  பத்தனம்திட்டாவில் பேருந்து விபத்து - 18 பேர் காயம்

  ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு 44 ஐயப்ப பக்தர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து.

  கேரளா, பத்தனம்திட்டா அருகே லாஹா என்ற பகுதியில் வளைவில் திரும்பும்போது பேருந்து விபத்தில் சிக்கியது.

  விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில், ஒரு சிறுவனின் நிலை கவலைக்கிடம் • 11:00 (IST) 19 Nov 2022
  கட்டணமின்றி பார்வையிடலாம்

  உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று ஒரு நாள் கட்டணமின்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. • 11:00 (IST) 19 Nov 2022
  புதிய பசுமை விமான நிலையம் திறப்பு

  அருணாச்சல் பிரதேசம் இட்டா நகரில் பிரதமர் மோடி புதிய பசுமை விமான நிலையத்தை திறந்து வைத்தார். • 10:59 (IST) 19 Nov 2022
  பேருந்து விபத்து

  ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு 44 ஐயப்ப பக்தர்களுடன் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பத்தனம்திட்டா அருகே லாஹா என்ற பகுதியில் வளைவில் திரும்பும்போது பேருந்து விபத்தில் சிக்கியது. • 10:35 (IST) 19 Nov 2022
  ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் விபத்து

  நீலகிரி மாவட்டம் அருவங்காடு பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் காயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். • 10:34 (IST) 19 Nov 2022
  தமிழக அரசு அறிவுறுத்தல்

  நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. • 10:34 (IST) 19 Nov 2022
  5 நாட்களுக்கு கனமழைக்கு

  தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் தமிழக கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. • 10:34 (IST) 19 Nov 2022
  குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது

  தமிழகத்தில் குரூப்-1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 92 காலிப்பணியிடங்களுக்கு 3.22 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். • 09:38 (IST) 19 Nov 2022
  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

  தென்கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். • 09:26 (IST) 19 Nov 2022
  டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  டாஸ்மாக் கடைகளில் கட்டாய வசூல் செய்வதை கண்டித்து, சேலத்தில் டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன், கரூர் கம்பெனி என்ற பெயரில் டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்வதை தடுக்க, முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். • 09:08 (IST) 19 Nov 2022
  4 பேர் கைது

  சென்னை, கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் படுகொலையில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இரட்டை கொலைக்கு பழி தீர்க்க கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. • 09:07 (IST) 19 Nov 2022
  சென்னையில் சோதனை

  கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் 3வது முறையாக ஓட்டேரி எஸ்.எஸ் புரம், வேப்பேரி நெடுஞ்சாலை, ஏழு கிணறு பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். • 08:13 (IST) 19 Nov 2022
  தனிப்படை அமைப்பு

  கால்பந்து வீராங்கனை பிரியா மரண வழக்கில் தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க கொளத்தூர் காவல் துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. • 08:07 (IST) 19 Nov 2022
  பிசிசிஐ அறிவிப்பு

  உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்வியை அடுத்து சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவில் உள்ள அனைவரும் நீக்கம் செய்து பிசிசிஐ அறிவித்துள்ளது. • 08:06 (IST) 19 Nov 2022
  திருமலை நாயக்கர் மஹாலை கட்டணமின்றி பார்வையிடலாம்

  உலக மரபு தினத்தை முன்னிட்டு இன்று முதல் நவ.25ம் தேதி வரை மதுரை, திருமலை நாயக்கர் மஹாலை கட்டணமின்றி பார்வையிடலாம் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. • 08:06 (IST) 19 Nov 2022
  குரூப்-1 பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு

  இன்று தமிழக அரசின் குரூப்-1 பணிகளுக்கான முதல் நிலைத்தேர்வு இன்று நடைபெறுகிறது. துணை ஆட்சியர், துணை பதிவாளர் உள்ளிட்ட 92 பணியிடங்களுக்கு, 3.22 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர். • 08:06 (IST) 19 Nov 2022
  தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம்

  உலக பாரம்பரிய வாரத்தை முன்னிட்டு இன்று ஒருநாள் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்குள் நுழைய அனுமதி இலவசம் என்று இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment