/tamil-ie/media/media_files/uploads/2023/01/New-Project36.jpg)
Temple
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news updates
ரூ. 3,233 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்கள் கையெழுத்து
சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளின் 9 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.
ரூ. 3,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டமிட்டோம்; ஆனால் ரூ.3,233 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்- முதல்வர் ஸ்டாலின்
வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் விலை குறைவு
இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ. 84 குறைந்து ரூ. 1,937க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ. 1,118.50க்கு விற்பனையாகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
- 23:42 (IST) 01 Jun 2023தோனிக்கு அறுவை சிகிச்சை: ஓரிரு நாள்களில் வீடு திரும்புகிறார்
மகேந்திர சிங் தோனி முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தற்போது தோனி நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு நாள்களில் அவர் வீடு திரும்புவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
- 22:20 (IST) 01 Jun 2023மாமன்னன் படத்திலும் ஒரு முக்கியமான அரசியல்தான் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ் - இயக்குநர் பா.ரஞ்சித்
மாமன்னன் படத்திலும் ஒரு முக்கியமான அரசியல்தான் பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசினார்.
தொடர்ந்து தங்கலான் படம் குறித்த அப்டேட் ஒன்றையும் அவர் வழங்கினார்.
- 21:30 (IST) 01 Jun 2023இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி கூடாது: டிஜிபி அதிரடி உத்தரவு
இரவு 10 மணிக்கு மேல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நீடிக்க கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளில், “கோயில்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்குவது குறித்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிகள் கவனிக்க வேண்டும்.
பெண் கலைஞர்களை ஆபாச ஆடையில் சித்தரிக்கவோ, வேறு ஏதும் இன்னல்களை ஏற்படுத்த கூடாது. இரட்டை அர்த்த பாடல் நிகழ்ச்சியில் இடம்பெற கூடாது. அனுமதி கோரிய மனுவின் மீதான முடிவினை 7 நாள்களுக்குள் விழா குழுவுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு 7 நாள்களுக்குள் தெரிவிக்கவில்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி நிகழ்ச்சியை நடத்தி கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
- 21:26 (IST) 01 Jun 2023மருத்துவ உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு
சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை உபகரணங்கள் வாங்க ரூ.146 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு ரூ.230 கோடியில் இருந்து ரூ.240 கோடியாக உயர்த்தி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
- 21:21 (IST) 01 Jun 2023கால்நடை வாகன ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும்: திமுக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
கால்நடை வாகன ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என திமுக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள்.
கால்நடைகள் நோய் பாதிப்பினாலும், எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளாலும், கன்று ஈனுவதிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அவற்றுக்கான உடனடி மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசுடனும் இணைந்து, 1962 என்ற அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது.
இதன் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும், லட்சக்கணக்கான கால்நடைகள் உடனடி மருத்துவ உதவி மூலம் பலன் பெற்று வருகின்றன. தமிழகத்திலும், கடந்த ஆண்டு வரை சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகள் பயன்பெற்றுள்ளன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியில் வாங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
@narendramodi அவர்களின் புகைப்படம் உள்ளது எனும் காரணத்துக்காக, திறனற்ற திமுக அரசு முடக்கி வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலம், கால்நடைகளுக்கான அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
உடனடியாக, அனைத்து கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அற்ப அரசியலை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் காட்ட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- 21:20 (IST) 01 Jun 2023கால்நடை வாகன ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும்: திமுக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
கால்நடை வாகன ஆம்புலன்ஸ்களை இயக்க வேண்டும் என திமுக அரசுக்கு அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில், “கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள்.
கால்நடைகள் நோய் பாதிப்பினாலும், எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளாலும், கன்று ஈனுவதிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அவற்றுக்கான உடனடி மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசுடனும் இணைந்து, 1962 என்ற அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது.
இதன் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும், லட்சக்கணக்கான கால்நடைகள் உடனடி மருத்துவ உதவி மூலம் பலன் பெற்று வருகின்றன. தமிழகத்திலும், கடந்த ஆண்டு வரை சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகள் பயன்பெற்றுள்ளன.
இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியில் வாங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு
@narendramodi அவர்களின் புகைப்படம் உள்ளது எனும் காரணத்துக்காக, திறனற்ற திமுக அரசு முடக்கி வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலம், கால்நடைகளுக்கான அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.
உடனடியாக, அனைத்து கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அற்ப அரசியலை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் காட்ட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
- 19:50 (IST) 01 Jun 2023ராகுல் காந்தி பொய்களின் சந்தை; ரவிசங்கர் பிரசாத்
ராகுல் காந்தி ஒரு பொய்களின் சந்தை என்பதை நாட்டில் ஜிடிபி புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன என முன்னாள் மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
- 19:38 (IST) 01 Jun 2023சேலம் வெடி விபத்து; நிவாரணம் அறிவிப்பு
சேலம் மாவட்டம் எஸ் கொல்லப்பட்டியில் உள்ள பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் மூன்று லட்சமும், காயமுற்ற ஆறு பேருக்கு தலா ரூபாய் 50,000 நிவாரணமாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
- 19:33 (IST) 01 Jun 2023போலி ஆசிரியருக்கு கடும் தண்டனை
உத்தர பிரதேச மாநிலத்தில் போலி சான்றிதழ் மூலம் வேலைக்குச் சேர்ந்த ஜஹிந்தர் சர்மா என்பவர் தான் பெற்ற 28 ஆண்டுகால சம்பளத்தை திருப்பி அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- 19:17 (IST) 01 Jun 2023ஜெய்லர் படப்பிடிப்பு நிறைவு.. ரஜினிகாந்த் உடன் படக்குழு புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெய்லர். இந்தப் படத்தில் கன்னட நடிகர் ராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
- 19:02 (IST) 01 Jun 2023ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம்; அரவிந்த் கெஜ்ரிவால்
தேர்தலுக்காக மட்டுமல்ல ஜனநாயகத்தை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவசியம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். சென்னையில் முதல்வர் மு க ஸ்டாலினை சந்தித்த பின்னர், அரவிந்த் கெஜ்ரால் இதனைக் கூறியுள்ளார்.
- 18:46 (IST) 01 Jun 2023சடலத்துடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல: கர்நாடக உயர் நீதிமன்றம்
சடலத்துடன் ஒருவர் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தொடர்ந்து, இந்த வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு 10 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவரின் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
- 18:30 (IST) 01 Jun 2023ஆவினில் புதிய திட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் -அமைச்சர் மனோ தங்கராஜ்
ஆவினில் புதிய திட்டங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
அந்த வகையில், ஆவின் குடிநீர் பாட்டில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரியவருகிறது.
- 18:22 (IST) 01 Jun 2023திருப்பத்தூரில் சூறைக்காற்று: முறிந்து விழுந்த மரங்கள்
திருப்பத்தூர், ஆம்பூர் அருகே சூறைக்காற்று வீசியதால் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் கம்பங்களும் உடைந்து விழுந்துள்ள நிலையில், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
- 17:59 (IST) 01 Jun 202320 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் மழை நீர் வடிகால் பணி மேற்கொள்ளும் போது வீடுகளை இழந்த 20 பேருக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வழங்கினார்.
வீடுகளை பெற்றவர்கள் அமைச்சர் உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- 17:40 (IST) 01 Jun 2023சேலம் அருகே வெடிவிபத்து: 3 பேர் உயிரிழப்பு
சேலம் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
- 17:26 (IST) 01 Jun 2023மு.க. ஸ்டாலின், கெஜ்ரிவால் சந்திப்பு
சென்னை வந்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.
அப்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடனிருந்தார்.
- 17:12 (IST) 01 Jun 2023திறப்பு விழாவுக்கு தயாராகும் மதுரை நூலகம்
மதுரையில் ₹114 கோடியில் உலகத்தரத்தில் கட்டப்பட்டுள்ள மதுரை நூலகம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது; நூலகத்தில் புத்தகங்கள் அடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
- 16:59 (IST) 01 Jun 2023குடிநீர் திட்டப்பணிகள் - அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டம்
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் ஆய்வுக்கூட்டம் நடத்தினர். இதில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
- 16:47 (IST) 01 Jun 2023ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்பு
ராமநாதபுரம், ராமேஸ்வரம் அருகே இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 32 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. கடலில் வீசப்பட்ட 12 கிலோவும், மண்டபம் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ தங்கமும் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைதான 5 பேரை விசாரித்த பின், கடலோர காவல்படையினர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்
- 16:24 (IST) 01 Jun 2023ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமில்லை - அசோக் கெலாட் அறிவிப்பு
ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமில்லை. 200 யூனிட் வரை நிலையான கட்டணம் மற்றும் தாமதக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
- 16:08 (IST) 01 Jun 2023தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும் - டி.கே.சிவக்குமார்
தண்ணீருக்காக நாங்கள் பாதயாத்திரை மேற்கொண்டிருந்தோம். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாடு இந்த விவகாரத்தை சகோதரத்துவத்துடன் அணுக வேண்டும் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்
- 15:46 (IST) 01 Jun 2023பயோமெட்ரிக் முறையில் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல்; தமிழக அரசு உத்தரவு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோமெட்ரிக் முறையில் மட்டுமே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளுக்கு உடனடியாக பண விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை தெரிவித்துள்ளது
- 15:29 (IST) 01 Jun 2023ஹாரிஸ் ஜெயராஜ் சொகுசு கார் வழக்கு; அபராதத்துக்கு ஐகோர்ட் இடைக்கால தடை
இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாத விவகாரத்தில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு, இறக்குமதி செய்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் அபராதம் விதித்து தனிநீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து ரூ.11.50 லட்சம் நுழைவு வரி, அபராதம் செலுத்துமாறு ஹாரிஸ் ஜெயராஜுக்கு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. நுழைவு வரி செலுத்திய நிலையில், தனக்கு மட்டும் அபராதம் விதித்தது அரசியல் சட்டத்தின் சமத்துவ உரிமைக்கு எதிரானது என ஹாரிஸ் தரப்பு வாதிட்ட நிலையில் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது
- 15:07 (IST) 01 Jun 2023மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உத்தரவுகளை பின்பற்றுவதில்லை - ஐகோர்ட் மதுரை கிளை
மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவதில்லை. ஆனால், தடை உத்தரவில் உடனடியாக மேல்முறையீட்டிற்கு வருகிறீர்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்
- 14:57 (IST) 01 Jun 2023தப்பி ஓடிய விசாரணை கைதி; மடக்கி பிடித்த போலீசார்
பல்லடம் பேருந்து நிலையம் அருகே போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிய விசாரணை கைதி எதிரே வந்த மினி வேனில் மோதி கீழே விழுந்த நிலையில், போலீசார் கைதியை மடக்கி பிடித்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.
- 14:36 (IST) 01 Jun 2023முதல்வரின் வெளிநாடு பயணம் வரவேற்கத்தக்கது - அண்ணாமலை
முதல்வரின் வெளிநாடு பயணம் வரவேற்கத்தக்கது. முதல்வர் கண்டிப்பாக வெளிநாடு செல்ல வேண்டும் அப்போது தான் முதலீடுகள் பெருகும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- 14:29 (IST) 01 Jun 2023ராமேஸ்வரம் கடல் பகுதியில் 5 கிலோ எடை கொண்ட பார்சல் மீட்பு
ராமேஸ்வரம், மண்டபம் அருகே தோவாளை கடல் பகுதியில் 5 கிலோ எடை கொண்ட பார்சல் மீட்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் பார்சல்கள் கடலில் வீசப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தேடுதல் பணி தொடங்கப்பட்டது. ஸ்கூபா வீரர்களை கொண்டு தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில் தற்போது பார்சல் மீட்கப்பட்டுள்ளது
- 14:20 (IST) 01 Jun 2023மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் - அண்ணாமலை
கர்நாடகாவுக்கு சென்றே மேகதாது அணைக்கு எதிராக நான் பேசினேன். மேகதாது அணை கட்டுவது உறுதி என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு தமிழக காங்கிரஸிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. மேகதாது அணை கட்டப்படுவதை எங்களால் தடுத்து நிறுத்த முடியும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்
- 14:12 (IST) 01 Jun 2023கர்நாடகவில் பயிற்சி விமானம் விபத்து
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அருகே இந்திய விமானப் படையின் பயிற்சி விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர்
- 13:48 (IST) 01 Jun 2023மணிப்பூரில் உள்ள பள்ளிகள் ஜூன் 15ம் தேதி வரை மூடப்படும்
மணிப்பூரில் உள்ள பள்ளிகள் ஜூன் 15ம் தேதி வரை மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மணிப்பூரில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக அறிவிப்பு
- 13:46 (IST) 01 Jun 2023சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம்
சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை விளக்கம் "டுவிட்டர் கணக்கை முடக்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை" "இந்த விவகாரத்தில் சென்னை பெருநகர காவல் துறையை தொடர்புப்படுத்தி தவறான செய்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும்" "தவறான தகவல் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"
- 13:22 (IST) 01 Jun 2023மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு
மணிப்பூர் வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு; வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும்" - மத்திய அமைச்சர் அமித்ஷா
- 12:57 (IST) 01 Jun 2023மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம்
மல்யுத்த வீரர்கள் போராட்ட விவகாரத்தை உணர்வுப்பூர்வமாக கையாளுகிறோம். டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி. சட்டம் அனைவருக்கும் சமம், எல்லா வீரர்களும் எங்களுக்கு முக்கியம் வீரர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றுவோம் - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
- 12:32 (IST) 01 Jun 2023பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மருத்துவர் சஸ்பெண்ட் மருத்துவர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாகம் உத்தரவு நேற்று பயிற்சி மருத்துவர்கள் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நடவடிக்கை
- 12:13 (IST) 01 Jun 2023ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
"மணிப்பூரில் ஆயுதம் வைத்திருப்பவர்கள் அவற்றை ஒப்படைத்துவிட்டு சரணடைய வேண்டும். ஆயுதங்களை ஒப்படைக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்தவித பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். மணிப்பூர் கலவரம் தொடர்பான சில வழக்குகளை சிபிஐ விசாரிக்கும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை
- 12:12 (IST) 01 Jun 2023அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான் தான்
"அவதூறு வழக்கிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட முதல் நபர் நான் தான்" "2004ல் அரசியலில் நுழைந்தபோது இதுபோன்று நடக்கும் என நினைத்ததில்லை" . அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி பேச்சு
- 11:45 (IST) 01 Jun 2023கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் இ.பி.எஸ் குற்றச்சாட்டு. திட்டங்களை செயல்படுத்த கீழ்ப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என காவேரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளது. பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956ம் படி நதிநீரை தடுப்பதற்கோ, திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது - ஈபிஎஸ்
- 11:43 (IST) 01 Jun 2023அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும்
அமமுக செயற்குழு கூட்டம் ஜூன் 20ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு. ஜூன் 7 ஆம் தேதி செயற்குழு கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் தேதி மாற்றப்பட்டுள்ளது
- 11:34 (IST) 01 Jun 2023கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சோதனை மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- 11:33 (IST) 01 Jun 2023மே மாதம் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணம்
சென்னை, மெட்ரோ ரயில்களில் மே மாதம் 72.68 லட்சம் பேர் பயணம் கடந்த 4 மாதங்களை விட மே மாதம் 5.82 லட்சம் பயணிகள் அதிகம் பயணம் - மெட்ரோ நிர்வாகம்
- 11:32 (IST) 01 Jun 2023கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சோதனை மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
- 10:45 (IST) 01 Jun 2023மதுரை எய்ம்ஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம்
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு பதிவாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வரவேற்கபடுகிறது, தகுதி உள்ளவர்கள் ஜூலை 24ம் தேதி மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
- 10:44 (IST) 01 Jun 2023தங்கம் விலை குறைவு
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது, ஒரு கிராம் தங்கம் ரூ. 5,620க்கும், சவரன் ரூ. 44,960க்கும் விற்பனையாகிறது.
- 10:41 (IST) 01 Jun 2023திமுக அரசுக்கும் எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு கண்டனம்; இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசுக்கும் கண்டனம்- எடப்பாடி பழனிசாமி
- 09:44 (IST) 01 Jun 2023ட்விட்டர் கணக்குகள் முடக்கம்: மு.க.ஸ்டாலின் ட்வீட்
சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது - மு.க.ஸ்டாலின் ட்வீட்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.… - 09:11 (IST) 01 Jun 2023தக்காளி விலை உயர்வு
சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை உயர்ந்து கிலோ ரூ.40க்கும், வரி கத்திரிக்காய் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது. திடீர் வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 08:59 (IST) 01 Jun 2023மின்சார ரயில்கள் ரத்து
ஜூலை 1ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி வரை (7 மாதங்கள்) சென்னை கடற்கரையில் இருந்து சேப்பாக்கம் வரை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது!
- 08:34 (IST) 01 Jun 2023பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று காலை தொடங்கியது. ஆன்லைனில் தொடங்கிய முதல் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி வரை நடைபெறும்.
- 08:31 (IST) 01 Jun 2023தமிழ்நாடு அரசு உறுதி
நேற்று ஜப்பானில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவிரி ஆற்றில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளதாக கூறினார்.
- 08:25 (IST) 01 Jun 2023சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்து இருப்பதால், டெல்லி இந்தியா கேட் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியா கேட் பகுதியில் டெல்லி போலீசார், சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- 08:15 (IST) 01 Jun 2023டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் இன்று தமிழகம் வருகை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் ஆகியோர் இன்று தமிழகம் வர உள்ளனர். சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர்
- 08:14 (IST) 01 Jun 2023முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட உத்தரவு
கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 200 கனஅடி வீதமும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி நீர் என, மொத்தம் 300 கன அடி தண்ணீர் இன்று (ஜூன்1) முதல்120 நாட்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 08:14 (IST) 01 Jun 2023சீமான் ட்விட்டர் கணக்குக்கு தடை
மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சிலரின் ட்விட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- 08:13 (IST) 01 Jun 2023ராஜஸ்தானில் 100 யூனிட் இலவச மின்சாரம்
ராஜஸ்தானில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் இன்று முதல் மின்நுகர்வோருக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
- 08:13 (IST) 01 Jun 2023பாரபட்சமற்ற விசாரணை தேவை
மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையினரால் நடத்தப்பட்ட விதம் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை தேவை என இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வலியுறுத்தி உள்ளது.
- 08:13 (IST) 01 Jun 2023குடிநீர் லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
சென்னையில் மெட்ரோ குடிநீர் லாரிகள் அறிவித்திருந்த வேலை நிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது, இன்று வழக்கம் போல் குடிநீர் லாரிகள் இயக்கும் என தண்ணீர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.