Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu news update
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சிறை தண்டனை
தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்களைத் தடை செய்யும் அவசரச் சட்டத்தை அரசிதழில் வெளியிட்டது. அதன்படி ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத கால சிறை அல்லது ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம் அல்லது ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம் அல்லது நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் ரூ. 300 கோடி வசூல்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.75 கோடி வசூல் செய்திருந்தது இந்நிலையில் இத்திரைப்படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. 2022ஆம் ஆண்டு வெளிவந்த கே.ஜி.எஃப் 2 உலக அளவில் 1200 கோடியும், ஆர்ஆர்ஆர் படம் உலக அளவில் 1150 கோடியும், விக்ரம் திரைப்படம் உலக அளவில் 430 கோடியும் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வரிசையில் பொன்னியின் செல்வனும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புரோ கபடி லீக்.. டெல்லி அணி வெற்றி
புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் தபாங் டெல்லி மற்றும் யூ மும்பா அணிகள் மோதின. பெங்களூரிலுள்ள கண்டிவீரா ஸ்டேடியத்தில், இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான இப்போட்டியில், தொடக்கம் முதலே டெல்லி அணி புள்ளிகளைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முடிவில் 41- 27 என்ற கணக்கில் யூ மும்பா அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. தபாங் டெல்லி அணி கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:57 (IST) 08 Oct 2022சிவசேனா கட்சியின் சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் உத்தரவு
உத்தவ் தாக்கரே பிரிவினருக்கும் அதன் போட்டியாளரான ஏக்நாத் ஷிண்டே குழுவிற்கும் இடையேயான மோதலுக்கு மத்தியில், வரவிருக்கும் அந்தேரி கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சிவசேனா கட்சியின் தேர்தல் சின்னமான ‘வில் அம்பு’வை இந்திய தேர்தல் ஆணையம் சனிக்கிழமை முடக்கியது.
“சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்ட வில் மற்றும் அம்பு சின்னத்தை எந்த குழுக்களும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது” என்று தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
"இரு குழுக்களும் அந்தந்த குழுக்களுக்குத் தேர்ந்தெடுக்கும் பெயர்களால் அறியப்படும், அவர்கள் விரும்பினால், அவர்களின் தாய்க் கட்சியான "சிவசேனா" உடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம், மேலும் தற்போதைய இடைத்தேர்தலின் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட இலவச சின்னங்களின் பட்டியலில் இருந்து, இரு குழுக்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும்.” என்று தேர்தல் ஆணையம் கூறியது.
- 20:55 (IST) 08 Oct 2022அ.தி.மு.க 51வது ஆண்டு தொடக்க விழா; அக்டோபர் 17, 20, 26 தேதிகளில் நடைபெறும் என இ.பி.எஸ் அறிவிப்பு
அ.தி.மு.க பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அக்டோபர் 17, 20 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்
- 20:23 (IST) 08 Oct 2022திருக்குறள் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை பரப்புகிறார் – வைகோ
திருக்குறளைப் பற்றி ஆளுநர் தவறான தகவல்களைப் பரப்புகிறார். திருக்குறள் பற்றி ஆளுநனருக்கு ஆழ்ந்த ஞானம் இல்லை என வைகோ கூறியுள்ளார்
- 19:47 (IST) 08 Oct 2022நடிகர் அர்ணவ் மீது வழக்குப்பதிவு; மனைவி திவ்யா அளித்த புகாரில் நடவடிக்கை
சின்னத்திரை நடிகர் அர்ணவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்ப்பிணியான தன்னை தாக்கியதாக மனைவி திவ்யா அளித்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
- 19:31 (IST) 08 Oct 2022யுவன் இசை நிகழ்ச்சி - கூட்ட நெரிசலில் 6 பேர் காயம்
கோவை, சரவணம்பட்டியில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி எஸ்.எஸ்.ஐ மற்றும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
- 19:14 (IST) 08 Oct 2022மீண்டும் ஓ.பி.எஸ் அணியில் இணைந்தார் மைத்ரேயன்
அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த முன்னாள் எம்.பி மைத்ரேயன் மீண்டும் ஓ.பி.எஸ் அணியில் இணைந்துள்ளார்
- 18:51 (IST) 08 Oct 2022“கருணை இல்லாத ஆட்சி”- அர்ஜுன் சம்பத்
தமிழ்நாட்டில் கருணை இல்லாத திமுக ஆட்சி நடைபெறுகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசுகையில், “தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு என மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.
கவிஞர் வைரமுத்து மீதான வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டது ஆண்டாள் பக்தர்கள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.
- 18:46 (IST) 08 Oct 2022மழை காலம்.. அரசின் முன்னெச்சரிக்கை என்ன? கமல்ஹாசன் கேள்வி
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில், “ஒரு மணி நேர மழைக்கே சென்னை நிலை குலைந்துபோகிறது. பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் பல்லாயிரம் கோடி செலவழித்தும், பாதிப்புகளைத் தடுக்க முடியவில்லை. அரசுமுன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:28 (IST) 08 Oct 2022வைரலாகும் பாகிஸ்தான் சாலைகள்!
பாகிஸ்தான் சாலைகள் தொடர்பாக வைரலாகும் வீடியோ ஒன்றில், பாகிஸ்தான் சாலைகள் மின் கம்பங்களுக்கு மத்தியில் போடப்பட்டிருப்பது போல் பதிவாகியுள்ளன.
- 17:57 (IST) 08 Oct 2022கோவை: வீட்டுக்குள் நுழைய முயன்ற காட்டுயானை
கோவையில் காட்டு யானை ஒன்று வீட்டுக்குள் நுழைய முயலும் காணொலி காட்சிகள் வைரலாகிவருகின்றன.
- 17:30 (IST) 08 Oct 2022ஹெல்மெட் அணியாத போலீஸ்காரருக்கு ரூ.100 அபராதம்
சென்னை பாடி மேம்பாலத்தில் இருந்து அண்ணா நகர் நோக்கி சென்ற போலீஸ்காரர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற நிலையில் அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கான ரசீது சம்பந்தப்பட்ட காவலரிடம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இது தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
- 17:08 (IST) 08 Oct 2022ஆன்லைன் ரம்மிக்கு தடை ஓ.பி.எஸ்., வரவேற்பு
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த அவசர சட்டம் கொண்டுவந்த தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
- 17:00 (IST) 08 Oct 2022மகளிர் ஆசிய கோப்பை - இந்தியா வெற்றி
மகளிர் ஆசிய கோப்பை டி20 போட்டியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
- 16:59 (IST) 08 Oct 2022எஸ்எஸ்சி தேர்வு - நாளை பயிற்சி முகாம்
எஸ்எஸ்சி தேர்வு குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெறும் பயிற்சி முகாமில் நேரில் பங்கேற்கலாம் நேரில் வர இயலாதவர்கள் TN DIPR இணையதள பக்கத்திலும், அரசு கேபிள் டிவியிலும் நேரலையில் காணலாம்
- 16:58 (IST) 08 Oct 2022ஓயாமல் நடக்கும் தூர்வாரும் பணிகள் - முதல்வர் ஸ்டாலின் தகவல்
கடந்த ஆண்டுகளைப் போல் மழைவெள்ளப் பாதிப்பு இல்லாத நிலையை உறுதிசெய்ய மழைநீர் வடிகால், தூர்வாரும் பணிகள் ஓயாமல் நடந்து வருகின்றன வட சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்தும், தரத்தில் குறைவின்றியும் முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
- 16:17 (IST) 08 Oct 2022மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.502 கோடி மதிப்புள்ள கொக்கைன் பறிமுதல்
தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பைக்கு கண்டெய்னரில் கடத்தி வரப்பட்ட ரூ.502 கோடி மதிப்புள்ள 50.23 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்து மும்பை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- 16:16 (IST) 08 Oct 2022சாலை போடுவதில் கோடிக்கணக்கில் முறைகேடு - டிடிவி தினகரன்
கரூரில் சாலை போடாமலேயே கோடிக்கணக்கான பணம் முறைகேடு என புகார் எழுந்துள்ளதாகவும், இந்த புதிய ஆதாரங்கள் குறித்து முதலமைச்சரும், நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் உரிய விளக்கம் அளிப்பார்களா? முறைகேட்டில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு ரூ.100 கோடிக்கு மேல் டெண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளது எனஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
- 16:11 (IST) 08 Oct 2022விரைவில் நிலவில் குடியேறலாம் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதைபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும் திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
- 15:30 (IST) 08 Oct 2022தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியதை தொடர்ந்து அவருக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்
- 14:49 (IST) 08 Oct 2022மாணவிகளுக்கு ஹெலிகாப்டர் சவாரி!
12 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளை ஹெலிகாப்டர் சவாரிக்கு அழைத்து சென்று சத்தீஷ்கார் அரசு மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- 14:36 (IST) 08 Oct 2022சென்னை: மருத்துவமனை மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு!
சென்னையில் கே.கே.நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது. மேற்பகுதியில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அதிர்வில் பெயர்ந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 14:15 (IST) 08 Oct 2022பொய்ப்பிரச்சாரம் - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்!
"பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் புழக்கம் குறித்து கண்காணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விடுபட சிற்பி திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைக்கும் வரை மாணவர்களுக்கு பயிற்சி தொடரும். அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்படுகிறது என்பது பொய்ப்பிரச்சாரம்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
- 14:14 (IST) 08 Oct 2022மிலாது நபி - சசிகலா வாழ்த்து!
"அண்ணல் முகமது நபி அவர்களின் பிறந்தநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் மிலாது நபி வாழ்த்துக்கள்" என்று வி.கே.சசிகலா கூறியுள்ளார்.
- 14:13 (IST) 08 Oct 2022திமுகவுக்கு சீமான் கண்டனம்!
"அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கையில் திமுகவினரின் தலையீடு கண்டனத்திற்குறியது; அரசியல் செல்வாக்கையும்,அதிகார பலத்தையும் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இடங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
- 14:11 (IST) 08 Oct 2022பிரின்ஸ் பட டிரைலர் வெளியீடு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் டிரைலர் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகும் என படகுழு அறிவித்துள்ளது.
- 13:38 (IST) 08 Oct 2022அடுத்த 2 நாட்களுக்கு மேகமூட்டம் நிலவும் - வானிலை மையம்!
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 13:36 (IST) 08 Oct 2022காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசிதரூக்கு ஆதரவு - கார்த்தி சிதம்பரம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் சசிதரூரை ஆதரிக்கிறேன். அவரது நவீனத்துவமான அணுகுமுறை பிஜேபியின் பிரிவினைவாத அரசியலை எதிர்த்து போரிட உதவும். கட்சியை கடந்து மக்களிடமும் சென்றடைவோம். வழக்கமான நடைமுறை உதவாது. கட்சியின் செயல்பாடுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
- 13:33 (IST) 08 Oct 202215 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:32 (IST) 08 Oct 2022போலீஸ் நடத்திய 'மின்னல் ரவுடி வேட்டை' ஆபரேஷன்: 133 முக்கிய ரவுடிகள் கைது!
தமிழகம் முழுவதும் போலீசார் 'மின்னல் ரவுடி வேட்டை' என்ற ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேர வேட்டையில் 133 முக்கிய ரவுடிகள் பிடிபட்டனர் என்றும் பல ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்த 13 ’ஏ பிளஸ்’ ரவுடிகளும் சிக்கினர் என்றும் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
- 12:54 (IST) 08 Oct 2022மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது - ஸ்டாலின்
15 முதல் 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும்: மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி
மழைக்கால வெள்ள தடுப்பு பணிகள் திருப்திகரமாக உள்ளது.
- 12:35 (IST) 08 Oct 2022குழந்தைகள் காப்பகத்திற்கு சீல் வைப்பு
திருப்பூர், திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சீல் வைப்பு
கெட்டுப்போன உணவை உண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அதிகாரிகள் நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் வினீத் மற்றும் விசாரணை அதிகாரி மணிவாசன் முன்னிலையில் காப்பகத்துக்கு சீல்
- 12:34 (IST) 08 Oct 202214 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை
14 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை
திருக்குறள் குறித்து ஆளுநர் தவறான தகவல்களை கூறி வருகிறார் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
- 11:55 (IST) 08 Oct 2022அதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி - ஓபிஎஸ் ட்வீட்
ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டத்திற்கு ஓபிஎஸ் வரவேற்பு. அதிமுகவின் தொடர் வலியுறுத்தலுக்கு கிடைத்த வெற்றி - என ஓ.பன்னீர் செல்வம் ட்வீட்டர் பதிவு
- 11:23 (IST) 08 Oct 2022காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
செங்கல்பட்டு தென்மேல்பாக்கம் பகுதியில், போதைப்பொருட்கள் தீயிலிட்டு அழிப்பு
பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 800 கிலோ கஞ்சா, 14 கிலோ கேட்டமைன் உள்ளிட்ட பொருட்கள் அழிப்பு
சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் போதைப்பொருட்கள் அழிப்பு
- 11:21 (IST) 08 Oct 202290வது விமானப்படை தினம்
90வது விமானப்படை தினத்தை ஒட்டி, விமானங்களின் வான் சாகச நிகழ்ச்சி.
சண்டிகர் விமானப் படை தளத்தில் கண்கவர் சாகச நிகழ்ச்சி
பல வகையான விமானங்கள் வானில் அணிவகுத்து சாகசம்
- 10:54 (IST) 08 Oct 2022உலகத்தரமாக மாறும் எழும்பூர் ரயில் நிலையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு திட்டத்திற்கு, சென்னை ரயில்வே பிரிவு ரூ.734.90 கோடி ஒப்புதல் கடிதம் வழங்கியது. இந்த ரயில்நிலையம் 3 ஆண்டுகளில் உலகத்தரம் வாய்ந்த நிலையமாக மாறும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- 10:54 (IST) 08 Oct 2022சபரிமலை தரிசனம்.. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பக்தர்கள் http://sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
- 09:45 (IST) 08 Oct 2022தமிழகத்தில் 12ம் தேதி வரை கனமழை
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 12ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 08:56 (IST) 08 Oct 2022மகளிர் ஆசியக்கோப்பை டி 20 போட்டி
மகளிர் ஆசியக்கோப்பை டி-20 கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேச அணிகளும், மற்றொரு ஆட்டத்தில் இலங்கை - மலேசியா அணிகள் மோதுகின்றன.
- 08:56 (IST) 08 Oct 2022மகாராஷ்டிரா விபத்து
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே கண்டெய்னர் லாரி மீது மோதியதால் பேருந்து தீப்பிடித்து எரிந்து விபத்தில், 11 பேர் உயிரிழந்தனர்.
- 08:09 (IST) 08 Oct 2022பட்டாசுகள் கொண்டு செல்ல தடை
தீபாவளி பண்டிகையையொட்டி ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல தடை விதித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- 08:09 (IST) 08 Oct 2022காங்கிரஸ் மூத்த தலைவர் மரணம்
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான துப்டன் டெம்பா நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
- 08:08 (IST) 08 Oct 202221 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.