Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil news update
தமிழகம் வரும் அமித்ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அகவிலைப்படி உயர்வு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, அகவிலைப்படி 31%-ல் இருந்து 34%- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குனர் அட்லி மீது புகார்
ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கி வரும் ஜவான் திரைப்படத்தின் கதை 2006-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்து வெளியான பேரரசு படத்தின் கதை என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
44 இடங்களில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ்-க்கு அனுமதி
தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், நாங்குநேரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அருமனை ஆகிய 6 இடங்களை தவிர மற்ற இடங்களில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை பின்பற்றி ஊர்வலமாகவோ, உள்ளரங்க கூட்டமாகவோ நடத்தாலம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக இதுவரை ₨1.41 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி கடந்த 10 நாட்களில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாத 5,096 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் 32 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ஜெய் நாராயண் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கில் நவ.7ஆம் தேதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
நவம்பர் 8ஆம் தேதி சந்திர கிரகணம் தொடர்பாக பழனி கோவில் காலை மூடப்படும்.
சந்திர கிரகணம் நிறைவுற்ற பின்னர் மாலை 7 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸை் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் வீடுகள் 4 மாடுகள் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியது.
நாடார் மகாஜன சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் ஜனவரி முதல் போட்டிகள் நடைபெறும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அசோக் சிகாமணி கூறினார்.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது
டாஸ்மாக் கடைகளில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க வேண்டும் என அரசு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட பொதுநல வழக்கில், டாஸ்மாக் நிர்வாகம் இவ்வாறு கூறியுள்ளது.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை சீரமைக்கவும், தூய்மைப் பணி செய்யவும், வடிகால் அடைப்பு பணியை சீர் செய்யவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது
மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்துள்ளார்
மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்
பொய்யான வாக்குறுதி அளிப்பதும், பொய்யான உத்தரவாதம் அளிப்பதும் காங்கிரஸின் பழைய தந்திரம் என ஹிமாச்சல பிரதேச தேர்தல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார். மேலும், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பா.ஜ.க நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் எப்போதும் ஹிமாச்சலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்
டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து வெற்றி பெற 142 ரன்களை இலங்கை இலக்காக நிர்ணயித்துள்ளது. இலங்கை 20 ஓவர் முடிவில் இலங்கை 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்களில் பென் டிரைவ்-ல் ஐ.எஸ் அமைப்பு தொடர்பான 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பென்டிரைவில் உள்ள காட்சிகள் அனைத்தும் 2019ம் ஆண்டுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது. அவை புதிய வீடியோக்கள் அல்ல என கூறப்படுகிறது. இதனிடையே ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட நபர்களை தொடர்ந்து கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் அனைவரும் கண்காணிப்பு வளையத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை பிரபு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் அசோக் சிகாமணி அமைச்சர் பொன்முடியின் மகன் ஆவார்.
அதேநேரம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஒற்றுமை பேரணியில் கேஜிஎஃப் திரைப்பட பாடல் பயன்படுத்திய விவகாரம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு
எம்ஆர்டி இசை நிறுவனம் புகார் அளித்த நிலையில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை
கேஜிஎஃப் பாடல்களுக்கு உரிமம் பெற்ற இசை நிறுவனம் பெங்களூரு போலீஸில் புகார்
மக்களிடையே வேறு விதமான புரிதலை உண்டாக்கி ஆதாயம் பெற முயற்சி- எம்ஆர்டி இசை நிறுவனம்
பரமக்குடி அருகே கால்வாயில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி பெண் பலி
கீழப்பெருங்கரை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த பைக் 15 அடி ஆழமான கால்வாயில் இருந்து கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்பு
சிதம்பரத்தில் பேருந்துநிறுத்தத்தில் மாணவிக்கு மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய விவகாரம்
மாணவி அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி
மாணவன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசாரின் செயலுக்கும் உயர்நீதிமன்றம் கண்டனம்
மகளை மீட்டு தரக் கோரி பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி
அரசு காப்பகத்தில் உள்ள மாணவியை உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அவசர கதியில் மாணவியை தங்க வைத்த குழந்தைகள் நலக்குழு அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
மாணவனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
அறிக்கை தாக்கல் செய்ய சிதம்பரம் நகர போலீசாருக்கு உத்தரவு
விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்
சேலம் அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று அழகான பெண் குழந்தைகள்
பராமரிக்க இயலாத காரணத்தால் மருத்துவமனையிலேயே குழந்தைகளை விட்டுச் சென்ற பெற்றோர்
எடை குறைவாக பிறந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்
மனம் மாறி பெற்றோர் கேட்டால் குழந்தைகளை திரும்ப ஒப்படைக்கவும் திட்டம்
“பெற்றோர் வரவில்லை என்றால் குழந்தைகளை தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ஹிமான்ஷு வியாஸ் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். வியாஸ் குஜராத் மாநில செயலாளராக இருந்தார்.
21 நாள் சிசுவின் வயிற்றில் இருந்த வளர்ச்சி அடையாத எட்டு கருக்கள அறுவை சிகிச்சை மூலம் கருக்களை அகற்றிய ஜார்கண்ட் மருத்துவர்கள்
சிசு வயிற்றில் 8 கருக்கள் கண்டறியப்பட்டது உலகிலேயே இதுவே முதல்முறை
அரிதினும் அரிதாக 10 லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தகவல்
ஜார்க்கண்ட் ராம்கர் மாவட்டத்தில் கடந்த 10ஆம் தேதி பிறந்த குழந்தை
சிடி ஸ்கேன் செய்த போது, குழந்தை வயிற்றில் கட்டி இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள்
சிசு வயிற்றில் இருந்து உடனே கட்டிகளை அகற்ற பரிந்துரைத்த மருத்துவர்கள்
மேல் சிகிச்சைக்காக ராஞ்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கட்டி அல்ல கரு என்பது கண்டுபிடிப்பு
ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலை,. இளங்கலை படிப்புகளுக்கான இறுதி செமஸ்டர் மறுத்தேர்வு முடிவுகள் வெளியானது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளும் வெளியானது.
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி, ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.424 உயர்ந்து, 38,160 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் தங்கம் 53 ரூபாய் உயர்ந்து 4,770 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்த வழக்கில், கைதான சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் பேரணியை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது.
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப்-1 பிரிவு புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, அயர்லாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
குரூப்-2 பிரிவில் 6 புள்ளிகளுடன் இந்தியா முதலிடம் வகிக்கிறது. தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.
செம்பரபாக்கம் ஏரியிலிருந்து இன்று காலை 10 மணிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட உள்ளது. கரையோர மக்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பால் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என, பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.