/tamil-ie/media/media_files/uploads/2022/10/icc-releases-standing-tickets-for-india-pakistan-mens-t20-world-cup-clash.jpg)
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu news update
மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்திய கடற்படையால் சுடப்பட்ட தமிழ்நாட்டு மீனவர் வீரவேலுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், உரிய சிகிச்சை அளிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், இந்திய கடற்படையின் இதுபோன்ற செயல்களால் மீனவர்கள் இடையே நம்பிக்கையின்மை ஏற்படுகிறது. கடற்படையினருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 21:13 (IST) 22 Oct 2022தீபாவளி பட்டாசு கழிவுகளை உடனடியாக அகற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
தீபாவளி பண்டியை முன்னிட்டு சேகாரமாகும் பட்டாசு கழிவுகளை தனியாக சேகரித்து அன்றைய தினமே அகற்ற சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் பட்டாசு கழிவுகளை சேகரிக்கும் பணிக்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் 2 கனரக வாகனங்களை ஒதுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- 21:10 (IST) 22 Oct 2022புனித் ராஜ்குமார் நினைவு மருத்துவமனைக் ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர்கள்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக இயங்கி வரும் மருத்துவமனைக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் சிரஞ்சீவி இருவரும் ஆம்புலன்ஸ் வழங்கியுள்ளனர்.
- 21:08 (IST) 22 Oct 2022டி20 உலகக்கோப்பை : ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இங்கிலாந்து
டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. இதில் 113 ரன்கள் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலககோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
- 21:05 (IST) 22 Oct 2022கேரளாவில் ராணுவ வீரர்கள் - காவலர்கள் இடையே தகராறு
கேரளா மாநிலம் கிளிக்கொல்லூர் காவல்நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருப்பதாக கூறி 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இவர்களை பார்ப்பதற்காக இராணுவத்தில் பணிபுரியும் சகோதரர்களான விக்னேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் காவல்நிலையத்திற்கு வந்துள்ளனர்.
வரும் வழியில் மஃப்டியில் இருந்த காவலர் சந்திரனுடன் இவர்களுக்கு தகராறு ஏற்பட்டதில், சந்திரன் இவர்களை கன்னத்தில் அறைந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்தில் காவலர் சந்திரனை கண்டதும், அவரை பற்றி எஸ்ஐ பிரகாஷிடம் ராணுவ வீரர்கள் புகாரளித்துள்ளனர்.
ஆனால் புகாரை ஏற்க மறுத்த எஸ்.ஐ. பிராகாஷிற்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒருவரை ஒருவரை தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் போலீசார் சந்திரன், பிரகாஷ் மற்றும் சில காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
- 18:54 (IST) 22 Oct 2022சதுரகிரி செல்ல அக்.22 முதல் 25வரை தடை
மழைப் பொழிவு மற்றும் வெள்ளம் காரணமாக சதுரகிரி செல்ல அக்.22ஆம் தேதி முதல் அக்.25ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 18:52 (IST) 22 Oct 2022சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்
பாதுகாப்பு காரணங்களுக்காக சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- 18:49 (IST) 22 Oct 2022கனடாவில் கைத் துப்பாக்கிக்கு தடை
கனடாவில் துப்பாக்கிக் கலாசாரத்தை கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், கைத்துப்பாக்கிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 18:48 (IST) 22 Oct 2022மீண்டும் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் பிரதமராக மீண்டும் போரிஸ் ஜான்சன் போட்டியிடவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- 18:26 (IST) 22 Oct 2022தீபாவளி: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளியை முன்னிட்டு மக்கள் தென்மாவட்டங்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் போக்குவரத்து நெரிசல் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரை நீள்கிறது.
மக்கள் அவசரத் தேவைக்கு கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
- 18:17 (IST) 22 Oct 2022தீபாவளிக்கு மறுநாள் பள்ளிக்கு விடுமுறையா? அமைச்சர் பதில்
தீபாவளிக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்தார்.
அதில், “இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முடிவெடுப்பார்” எனக் கூறினார்.
- 18:03 (IST) 22 Oct 2022தீபாவளி.. பேருந்துகளில் 2.45 லட்சம் பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2.45 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 17:41 (IST) 22 Oct 2022நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட் திறப்பு
தூத்துக்குடியில் உள்ள ஜெயராஜ் சாலையில் நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்ட்-ஐ எம்.பி., கனிமொழி திறந்துவைத்தார்.
- 17:26 (IST) 22 Oct 2022ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்த வழிகாட்டுதல்களை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்
- 16:59 (IST) 22 Oct 2022ஆளுநருக்கு முரசொலி எச்சரிக்கை..!
ஆளுங்கட்சியான திமுகவின் நாளேடான முரசொலியில், “ஆளுநருக்கு எதிரான எதிர்ப்பு இன்று சிறிய தீப்பொறியாக இருந்தாலும், அடுத்து மிகப்பெரிய அளவில் இருக்கும்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
- 16:50 (IST) 22 Oct 2022வைகை அணை மீண்டும் நிரம்பியது; 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
வைகை அணை ஆறாவது முறையாக நிரம்பியுள்ளது. இதனை அடுத்து மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
- 16:32 (IST) 22 Oct 2022டி20 உலகக்கோப்பை: டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றின் 2வது போட்டியில் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது
- 16:14 (IST) 22 Oct 2022தமிழக துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
அந்தமான் தீவுகளுக்கு மேற்கே நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
- 15:44 (IST) 22 Oct 2022நளினிக்கு 10வது முறையாக பரோல் நீட்டிப்பு
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினிக்கு 10வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நளினியின் தாயார் அளித்த மனுவை ஏற்று பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது
- 15:30 (IST) 22 Oct 2022மதுரை எய்ம்ஸ்: புதிய தலைவர் நியமனம்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக நாகராஜன் வெங்கட்ராமனை நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜிப்மர் மருத்துவமனையைச் சேர்ந்த வி எம் கடோச் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய தலைவராக நாகராஜன் வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- 15:25 (IST) 22 Oct 2022அதிரடி காட்டிய கான்வே... ஆஸி,.-க்கு 201 ரன்கள் இலக்கு!
டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்றில் ஆஸ்திரேலிய அணிக்கு 201 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் சேர்துள்ளது. அந்த அணியில் தொடக்க வீரர் கான்வே 58 பந்துகளில் 92 ரன்கள் எடுத்து மிரட்டினார்.
- 15:16 (IST) 22 Oct 20222 பெண்கள் வெட்டிக்கொலை!
அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் அருகே பெரியவளையம் பகுதியில் 2 பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். காளான் பறிக்க சென்ற இருவரையும் கொன்று கழுத்தில் இருந்த நகைகள் கொள்ளை செய்யப்பட்டுள்ளது. இது நகைக்காக நடந்த கொலையா? என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- 14:54 (IST) 22 Oct 2022ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கையா? - அண்ணாமலை கேள்வி!
ஜெயலலிதா மரண விவகாரத்தில் முன்னாள் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கையா? என்று சென்னை, அயனாவரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ராதாகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
- 14:52 (IST) 22 Oct 2022வங்கக்கடலில் காற்றழுத்தம்!
தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 13:42 (IST) 22 Oct 2022தாய் மொழியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது
தமிழ் மொழியை திமுக அரசு வளர்க்கவில்லை. தாய் மொழியை வைத்து திமுக அரசியல் செய்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியில்தான் இந்தி திணிப்பு நடைபெற்றது
சென்னை, அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
- 13:42 (IST) 22 Oct 2022ரஜினி குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய கருத்தை பா.ஜ.க கண்டிக்கிறது - அண்ணாமலை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு யார் காரணம் என ஆணைய அறிக்கையில் தெளிவாக இல்லை
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை பாஜக ஏற்காது - அண்ணாமலை
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தூண்டிவிட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து நடிகர் ரஜினி கூறிய கருத்தில் தவறு இல்லை. ரஜினி குறித்த அருணா ஜெகதீசன் ஆணைய கருத்தை பா.ஜ.க கண்டிக்கிறது - அண்ணாமலை
- 12:55 (IST) 22 Oct 2022சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ள போலீசார்
ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை
- 12:31 (IST) 22 Oct 2022கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: 5 பேர் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் ஜாமினில் வெளிவந்த பள்ளி தாளாளர் உட்பட 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்
- 12:30 (IST) 22 Oct 2022நாடு முழுவதும் 115 இடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம்
நாடு முழுவதும் 115 இடங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம்
டெல்லியில் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
முதற்கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது
- 12:29 (IST) 22 Oct 2022ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை
ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை
அளித்த சிகிச்சை குறித்தும் அறிவிக்கப்படவில்லை; அறுவை சிகிச்சை செய்திருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம்
சென்னை, சேப்பாக்கத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் பேட்டி
- 12:28 (IST) 22 Oct 2022ராமஜெயம் கொலை வழக்கு - 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை
ராமஜெயம் கொலை வழக்கில் 20 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது - டிஜிபி ஷகில் அக்தர்
- 12:27 (IST) 22 Oct 2022மாநில அரசு தொலைக்காட்சி ஒளிபரப்ப மத்திய அரசு த
மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்பவும், சேவை விநியோகத்துக்கும் மத்திய அரசு தடை
கல்வி சேனல்களை பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டின் கீழ் ஒளிபரப்ப அனுமதி
தமிழக அரசின் கல்வி டிவி இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வர வாய்ப்பு
- 11:41 (IST) 22 Oct 202210 லட்சம் பேருக்கு அரசு வேலை - பிரதமர் தொடக்கி வைக்கிறார்
நாடு முழுவதும் பல்வேறு மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை காணொலியில் தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
முதல் கட்டமாக 75,000 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
சென்னை, அயனாவரத்தில் 250 பேருக்கு பணி ஆணைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்குகிறார்.
- 11:39 (IST) 22 Oct 20223 ஐ.பி.எஸ் அதிகாரிகளிடம் உள்துறை விளக்கம் கேட்க முடிவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் தமிழக உள்துறை விளக்கம் கேட்க முடிவு
- 11:17 (IST) 22 Oct 2022ஆவடியில் விசாரணை கைதி தற்கொலை
திருவள்ளூர்: ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் உள்ள மத்திய போதை தடுப்பு அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை
தெலுங்கானாவை சேர்ந்த ராயப்ப ராஜு என்பவர் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை
48 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளுடன் நேற்று கைதான நிலையில் தற்கொலை
தான் கைதானது குடும்பத்தினருக்கு தெரிந்துவிடும் எனும் அச்சத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல்
- 10:50 (IST) 22 Oct 2022தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்வு
சென்னையில் இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து, 37,920 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.4740க்கு விற்பனையாகிறது.
- 09:50 (IST) 22 Oct 2022தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து
சென்னை என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில், கணினிகள், ஆவணங்கள் தீயில் கருகியது.
- 09:48 (IST) 22 Oct 2022முதல்வர் முடிவெடுப்பார்.. கனிமொழி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமியை விசாரிப்பது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
- 09:32 (IST) 22 Oct 2022இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- 08:43 (IST) 22 Oct 2022சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது ஜிம்பாப்வே
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றுக்கு கடைசி அணியாக ஜிம்பாப்வே முன்னேறி உள்ளது. முதல் சுற்றில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் ஜிம்பாப்வேவும், ஸ்காட்லாந்து அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 18. 3 ஓவரில் 5 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை எட்டியது. தோல்வி அடைந்த ஸ்காட்லாந்து தொடரில் இருந்து வெளியேறியது.
- 08:42 (IST) 22 Oct 2022இங்கிலாந்து – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்கும் நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- 08:24 (IST) 22 Oct 2022சூப்பர்-12 சுற்று இன்று தொடக்கம்
டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகின்றன. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.