scorecardresearch

Tamil News Update: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்பி வருகின்றனர்

Tamil Nadu News, Tamil News T20 World Cup 2022, Rishi sunak, Virat kohli, Pro Kabaddi 2022- 25 October 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil News Update: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை திரும்பி வருகின்றனர்

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Tamil Nadu news update

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமராக, பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவுடன் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக நின்ற பென்னி மார்டண்ட் போட்டியில் இருந்து விலகினார்.

42 வயதாகும் ரிஷி சுனக் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகன். வெள்ளையர் இல்லாத ஒருவர் இங்கிலாந்தில் பிரதமர் ஆவது இதுவே முதல் முறை.

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று..

டி20 உலகக்கோப்பை சூப்பர்-12 சுற்று, குரூப்-2 பிரிவில் ஹோபர்ட் நகரில் நடைபெற்ற நெதர்லாந்து- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம், சூப்பர்-12 சுற்றில் முதல் முறையாக வங்கதேசம் வெற்றியைப் பதிவு செய்தது. 4 விக்கெட் வீழ்த்திய , வங்கதேச பவுலர் தஷ்கின் அஹமது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

அதேபோல், ஹோபர்ட்டில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஜிம்பாப்வே – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை குறுக்கிட்டதால், போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்து. இருப்பினும் மழை காரணமாக, போட்டி பாதியில் நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
23:10 (IST) 25 Oct 2022
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதல் அபராதம்

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் நாளை முதலே அபராதம் வசூலிக்கப்படும். வரும் 28ஆம் தேதி முதல் அபராத தொகை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், நாளை முதலே வசூல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ₨1000-ல் இருந்து ₨10,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

20:22 (IST) 25 Oct 2022
இயக்குனர் பேரரசுவுக்கு விருது வழங்கிய நித்தியானந்தா

இயக்குனர் பேரரசுவுக்கு 'கைலாசா தர்ம ரட்சகர்’ விருது ஆன்மீக பணியை பாராட்டி விருது வழங்கினார் நித்தியானந்தா

19:04 (IST) 25 Oct 2022
டி20 உலககோப்பை தொடர் : ஆஸ்திரேலி அணிக்கு 158 ரன்கள் இலக்கு

டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இலங்கை ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 157 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் நிஷாங்கா 45 பந்தில் 40 ரன்கள், அசலங்கா 25 பந்தில் 38 ரன்கள் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா வெற்றி பெற 158 ரன்கள் இலக்கு நிர்ணையித்துள்ளது.

17:43 (IST) 25 Oct 2022
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது சூரிய கிரகணம்

சூரியனுக்கும், பூமிக்கும் இடையே நிலவு வரும் சூரிய கிரகணம் நிகழ்வு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது. தமிழகத்தில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும் என்றும் தமிழகத்தில் 8% வரை கிரகணம் தெரிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17:41 (IST) 25 Oct 2022
டென்னிஸில் இருந்து ஓய்வு இல்லை – செரீனா வில்லியமஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியுடன் சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுத்த முன்னணி டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தற்போது தான் டென்னிஸ் போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறவில்லை மீண்டும் திரும்புவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்று கூறியுள்ளார்.

17:06 (IST) 25 Oct 2022
முதல்வர் அமைதி காப்பது ஏன்? – வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்

16:12 (IST) 25 Oct 2022
பழவேற்காடு ஏரியில் குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி மரணம்

பழவேற்காடு ஏரியில், தடையை மீறி படகு சவாரி சென்று குளித்த 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

15:43 (IST) 25 Oct 2022
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் – கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டு சதி, 120பி, 153ஏ மற்றும் உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களில் ஒரு சிலரை, என்.ஐ.ஏ விசாரித்துள்ளது. புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

15:22 (IST) 25 Oct 2022
இங்கிலாந்து மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன் – லிஸ் டிரஸ்

இங்கிலாந்து மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றுவேன். ராணி எலிசபெத்தின் மறைவின்போது பிரதமராக பணியாற்றியதில் பெருமை அடைகிறேன். போரில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது. அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பணி பாதுகாப்பை வழங்க உறுதி கொள்ள வேண்டும் என பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய லிஸ் டிரஸ் கூறியுள்ளார்

15:04 (IST) 25 Oct 2022
மீண்டும் செயல்பட தொடங்கியது வாட்ஸ் அப்

உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியது. சுமார் 2 மணி நேரமாக முடங்கிய வாட்ஸ் அப் சேவை தற்போது சீராகி உள்ளது

14:33 (IST) 25 Oct 2022
மதக் கலவரங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயற்சி- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதில்

தமிழ்நாட்டில் மதக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைத்துவிடாதா என சிலர் நினைக்கின்றனர். சிலரின் எண்ணம் சமத்துவம் மிளிரும் தமிழ் மண்ணில் ஒரு போதும் நிறைவேறாது. தீபாவளி கொண்டாட்டத்தில் சிறு தொய்வும் ஏற்பட்டுவிடாமல் அரசும், காவல்துறையும் சிறப்பாகச் செயல்பட்டன அரசு நிறுவனங்கள் மீது அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்

14:13 (IST) 25 Oct 2022
தீபாவளிக்காக சென்னை மெட்ரோ ரயிலில் 5.12 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயிலில் அக்டோபர் 20 மற்றும் 21ம் தேதிகளில் 5.12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். தீபாவளிக்காக இயக்கப்பட்ட 5 நிமிட இடைவெளியில் 5.12 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

13:57 (IST) 25 Oct 2022
அருணாச்சல பிரதேசம் – சந்தையில் பயங்கர தீ விபத்து

அருணாச்சல பிரதேசம் நஹர்லாகுன் நகரில் உள்ள சந்தையில் பயங்கர தீ விபத்து

அதிகாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் சுமார் 700 கடைகள் தீயில் எரிந்து சேதம்

அருகேயே தீயணைப்பு நிலையம் இருந்தும், பணியில் தொய்வு என அப்பகுதியினர் குற்றச்சாட்டு

13:56 (IST) 25 Oct 2022
வாட்ஸ் அப் சேவை முடக்கம் – விரைவில் சரி செய்யப்படும் என மெட்டா அறிவிப்பு

விரைவில் வாட்ஸ் அப் சரி செய்யப்படும் என மெட்டா நிறுவனம் அறிவிப்பு

சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் தகவல்

இந்தியா உட்பட பல நாடுகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கிய நிலையில் விளக்கம்

13:29 (IST) 25 Oct 2022
வாட்ஸ் அப் முடக்கம்

உலகம் முழுவதும் கடந்த சில நிமிடங்களாக வாட்ஸ் அப் செயலி இயங்கவில்லை

தகவல்களை பகிர முடியாமல் பயனாளிகள் கடும் அவதி

ட்விட்டரில் டிரென்டாகும் #whatsappdown என்ற ஹேஷ்டேக்

13:28 (IST) 25 Oct 2022
ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை? – அண்ணாமலை

“கோவையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை”

“கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை?”

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

13:02 (IST) 25 Oct 2022
நாளை மாலை அறிக்கை – மா.சுப்பிரமணியன்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இரட்டை குழந்தை விவகாரம் – நாளை மாலை அறிக்கை வெளியிடப்படும் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

13:00 (IST) 25 Oct 2022
கோவை கார் வெடி விபத்து சம்பவம் – அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளோம்.

என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம்.

தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டுள்ளார்.

சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

12:18 (IST) 25 Oct 2022
ஆந்திர மாநில வாகனத்தை சிறைபிடித்து நதக ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்: வாணியம்பாடி சுங்கச்சாவடியில் ஆந்திர மாநில வாகனத்தை சிறைபிடித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் – போக்குவரத்து பாதிப்பு

12:17 (IST) 25 Oct 2022
திருப்பதி கோயில் நடை காலை அடைக்கப்பட்டது

திருப்பதி, ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம் காரணமாக இன்று காலை நடை அடைக்கப்பட்டது

இரவு 8 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

12:16 (IST) 25 Oct 2022
மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

சூரிய கிரகணத்தையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை சாத்தப்பட்டது

காலை 11 மணிக்கு நடை சாத்தப்பட்ட நிலையில், இரவு 7 மணிக்கு திறக்கப்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் மாலை 5.14க்கு தொடங்கி சுமார் 30 நிமிடங்கள் சூரிய கிரகணம் தெரியும் என தகவல்

11:19 (IST) 25 Oct 2022
தீபாவளி – 163 வழக்குகள் பதிவு

சென்னையில் நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு – காவல்துறை தகவல்

10:45 (IST) 25 Oct 2022
25 ஆண்டுகளுக்கு பிறகு

25 ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டையிலிருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத தினசரி ரயில் சேவை தொடங்கியது.

10:22 (IST) 25 Oct 2022
தீபாவளி விபத்துகள்

தமிழகம் முழுவதும் தீபாவளி அன்று 280 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 180 தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளது. தீ விபத்துகளில் யாரும் பலியாகவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

09:04 (IST) 25 Oct 2022
3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனை

தமிழகத்தில் தீபாவளி தினமான நேற்று ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த 3 தினங்களில் மட்டும் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.139 கோடி, கோவையில் ரூ.133 கோடிக்கு மது விற்பனையானது.

08:16 (IST) 25 Oct 2022
ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இன்று மோதல்

ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பெர்த்தில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா – இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

08:16 (IST) 25 Oct 2022
கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது.

08:15 (IST) 25 Oct 2022
இன்று பகுதி சூரிய கிரகணம்

இந்தியா முழுவதும் இன்று பகுதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. தமிழகத்தில் மாலை 5.14 மணிக்கு தொடங்கி, சுமார் 45 நிமிடங்களுக்கு சூரிய கிரகணம் தெரியும்.

Web Title: Tamil news today live petrol price today t20 world cup 2022 rishi sunak virat kohli pro kabaddi 2022

Best of Express