அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது, அவர் காரில் மயங்கி நிலையில் இருந்ததால், ஸ்ட்ரெச்சர் மூலம் அமைச்சரை, திமுக தொண்டர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 02:17 (IST) 14 Jun 202317 மணி நேர ரெய்டு: செந்தில் பாலாஜி கைது?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலக அறையில் அமலாக்கத் துறையினர் கடந்த 17 மணி நேரமாக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனைக்கு பின்னர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
- 02:17 (IST) 14 Jun 202317 மணி நேர ரெய்டு: செந்தில் பாலாஜி கைது?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமை செயலக அறையில் அமலாக்கத் துறையினர் கடந்த 17 மணி நேரமாக அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இந்தச் சோதனைக்கு பின்னர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அவரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
- 00:12 (IST) 14 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நிறைவு
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு.
காலை 8 மணி முதல், சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நிறைவு.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டிலும் சோதனை நிறைவு.
சென்னையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் 15 மணி நேரத்திற்கும் மேலாக தொடரும் சோதனை
- 22:09 (IST) 13 Jun 2023சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி.
மல்லிகார்ஜூன கார்கே, சரத்பவார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலமைச்சர் நன்றி.
பாஜகவின் அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் எதிர்க்கட்சிகளான நாங்கள் தயக்கமின்றி, தயங்காமல் இருக்கிறோம் - முதல்வர் ஸ்டாலின்
- 22:08 (IST) 13 Jun 2023நீட் தேர்வு - தமிழக மாணவன் சாதனை
இளநிலை மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது - தேசிய தேர்வு முகமை தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்பவர் அகில இந்திய அளவில் முதலிடம்
- 21:54 (IST) 13 Jun 2023நீட் தேர்வு முடிவு : வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து
இன்று வெளியான நீட் தேர்வின் முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ படிப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய திமுகவிற்கு இன்று வெளியான தேர்வு முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம்!
- 20:19 (IST) 13 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : கார்கே கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிவிடலாம் என்று ஒன்றிய பாஜக அரசு நினைக்கிறது என கூறியுள்ளார்
- 19:33 (IST) 13 Jun 2023கஜகஸ்தான் காட்டுத்தீ : 14 வனத்துறை ஊழியர்கள் பலி
கஜகஸ்தான் கட்டுத்தீயில் சிக்கி 14 வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு நாடு முழுவதும் தேசிய கொடியை அரைகம்பத்தில் பறக்கவிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் ஊழியவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
- 19:17 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் நீக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் நீக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.
— K.Annamalai (@annamalai_k) June 13, 2023
தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்! pic.twitter.com/GyQeKv3Edw - 19:17 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் நீக்க அண்ணாமலை வலியுறுத்தல்!
செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் நீக்க அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்களின் நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறியது.
— K.Annamalai (@annamalai_k) June 13, 2023
தொடர் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திரு செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்! pic.twitter.com/GyQeKv3Edw - 18:57 (IST) 13 Jun 2023சி.வி. சண்முகம் பேச்சை ஒரு பொருட்டாக எடுப்பதில்லை: கரு. நாகராஜன்
சி.வி.சண்முகத்தை நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை; சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் மனம்போன போக்கில் பேசுகின்றனர்.
மாநிலத்தலைவர் அண்ணாமலையில் கருத்தும், தமிழ்நாடு பாஜகவின் கருத்தும் வேறு வேறு இல்லை என கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
- 18:36 (IST) 13 Jun 2023தற்கால வெற்றிக்கு தமிழகத்தின் எதிர்காலத்தை அடகுவைக்க விரும்பவில்லை: கு. அண்ணாமலை
தற்கால வெற்றிக்கு தமிழகத்தின் எதிர்காலத்தை அடகுவைக்க விரும்பவில்லை என தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “கூட்டணி கட்சி விரும்புவதை எல்லாம் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருத்தமற்றது.
அதிமுகவினரை போல் தரம் தாழ்ந்து விமர்சனங்களை முன் வைக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
- 18:24 (IST) 13 Jun 2023ஒருவாரம் நடந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்
7 நாட்களாக நடைபெற்று வந்த கீழ்பவானி விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்; அமைச்சர் முத்துசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
கீழ்பவானி கால்வாயில் ₹710 கோடி மதிப்பில் நடைபெறும், கான்கிரீட் திட்ட சீரமைப்பு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 7ம் தேதி முதல் விவசாயிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 18:07 (IST) 13 Jun 2023இதுதான் அரசியல் மாண்பா? மு.க ஸ்டாலின் கேள்வி
ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது; அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 18:05 (IST) 13 Jun 2023திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சோதனை: ஆர்.எஸ் பாரதி
திமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
- 18:02 (IST) 13 Jun 2023இதுதான் அரசியல் மாண்பா? மு.க ஸ்டாலின் கேள்வி
ஒரு மாநில அரசின் மாண்பு காக்கும் தலைமைச் செயலகத்துக்குள் மத்திய காவல் படையை அழைத்து வந்து அதிகாரிகள் சோதனை நடத்துவதுதான் அரசியல்சட்ட மாண்பைக் காப்பதா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கேள்வியெழுப்பி உள்ளார்.
தொடர்ந்து, “அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை, புறவாசல் வழியாக அச்சுறுத்தப் பார்க்கும் பா.ஜ.க.வின் அரசியல் செல்லுபடியாகாது; அதனை அவர்களே உணரும் காலம் நெருங்கிக் கொண்டு இருக்கிறது” என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 18:00 (IST) 13 Jun 2023அதிமுக பாடம் எடுக்க தேவை இல்லை: அண்ணாமலை
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, அவர்கள் விரும்புவதை மட்டுமே பேச முடியாது. கூட்டணி தர்மம் பற்றி எனக்கு பாடம் நடத்தத் தேவையில்லை என பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 17:08 (IST) 13 Jun 2023போக்சோ வழக்கு கையாளுதல் குறித்து ஆலோசனை: உதயநிதி ட்வீட்
“போக்சோ வழக்குகளை கையாளுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓர் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள்” என உதயநிதி ட்விட்டரில் கூறியுள்ளார்.
#POCSO வழக்குகளை கையாளுவது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஓர் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள்.
— Udhay (@Udhaystalin) June 13, 2023
நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை சார்பில் தலைமைச்… pic.twitter.com/7Pr0KYjl1D - 17:07 (IST) 13 Jun 2023போக்சோ வழக்கு கையாளுதல் குறித்து ஆலோசனை: உதயநிதி ட்வீட்
“போக்சோ வழக்குகளை கையாளுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஓர் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள்” என உதயநிதி ட்விட்டரில் கூறியுள்ளார்.
#POCSO வழக்குகளை கையாளுவது தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஓர் உயர்நிலைக் கூட்டத்தை நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியிருந்தார்கள்.
— Udhay (@Udhaystalin) June 13, 2023
நம் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை சார்பில் தலைமைச்… pic.twitter.com/7Pr0KYjl1D - 16:59 (IST) 13 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் சோதனை நிறைவு
சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்த நிலையில், தற்போது அறையில் இருந்து வெளியேறினர்
- 16:42 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை - திமுக புகார்
செந்தில் பாலாஜியை சந்திக்க அமலாக்கத் துறை அனுமதிக்கவில்லை. அதிகாரிகள் ஒரு மணி நேரமாக எந்த பதிலையும் தரவில்லை. அதிமுக - பாஜக இடையே மோதலை திசை திருப்பும் வகையில் சோதனை நடத்தப்படுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்
- 16:28 (IST) 13 Jun 2023மது குடித்து இருவர் பலி - உறவினர்கள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே டாஸ்மாக்கில் மதுபானம் அருந்திய இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு விஷம் கலந்துள்ளதாக தடயவியல் அறிக்கையில் தெரியவந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் மாவட்ட ஆட்சியர் பொய் சொல்வதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
- 16:15 (IST) 13 Jun 2023தலைமைச் செயலகத்தில் சோதனை – சி.ஐ.எஸ்.எப் காவலர்கள் தடுத்து நிறுத்தம்
சென்னை, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையினருடன் பாதுகாப்புக்கு வந்த சிஐஎஸ்எப் காவலர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். சிஐஎஸ்எப் காவலர்களை, 6வது நுழைவாயிலில் தமிழக காவல்துறை தடுத்து நிறுத்தியது
- 15:57 (IST) 13 Jun 2023சீரியல் நடிகை திவ்யா வீட்டிற்கு, பவுன்சர்கள், வழக்கறிஞர்களுடன் சென்ற நடிகர் அர்ணவ்
சீரியல் நடிகை திவ்யா தங்கியுள்ள வீட்டிற்கு, பவுன்சர்கள், வழக்கறிஞர்களுடன் நடிகர் அர்ணவ் சென்றுள்ளார். ஆனால் கதவை பூட்டிக்கொண்ட திவ்யா உள்ளே அர்ணவை அனுமதிக்கவில்லை. அப்போது செய்தியாளர்களிடம் தனது வீட்டிற்கு தான் வந்துள்ளதாக அர்ணவ் விளக்கம் அளித்தார்
- 15:48 (IST) 13 Jun 2023மகாராஷ்டிராவில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து - 4 பேர் மரணம்
மகாராஷ்டிரா, மும்பை - புனே விரைவு சாலையில் கண்டலா காட்டில் உள்ள குனே பாலத்தில் ரசாயன டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
- 15:31 (IST) 13 Jun 2023அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம்- கரு.நாகராஜன்
அதிமுக 66 இடங்களில் வெற்றி பெற பாஜகதான் காரணம். அப்போது சி.வி சண்முகம் கூட வெற்றி பெறவில்லை என பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் கூறியுள்ளார்
- 15:16 (IST) 13 Jun 2023அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதி அ.தி.மு.க.,வில் யாருக்கும் இல்லை; கரு நாகராஜன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது என சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேட்டி அளித்துள்ளார்
- 15:14 (IST) 13 Jun 2023அண்ணாமலையை விமர்சிக்கும் அ.தி.மு.க.,வில் தகுதி யாருக்கும் இல்லை; கரு நாகராஜன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது என சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேட்டி அளித்துள்ளார்
- 15:11 (IST) 13 Jun 2023அண்ணாமலையை விமர்சிக்கும் தகுதி அ.தி.மு.க.,வில் யாருக்கும் இல்லை; கரு நாகராஜன்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசவோ எதிர்க்கவோ அதிமுகவில் யாருக்கும் தகுதி இல்லை. அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பது கண்டனத்துக்குரியது என சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன் பேட்டி அளித்துள்ளார்
- 14:11 (IST) 13 Jun 2023சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை சோதனை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தலைமைச் செயலக அறையில் சோதனை
- 14:09 (IST) 13 Jun 2023அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை
அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு மேலும் 10 துணை ராணுவ படையினர் வருகை. அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் வீரர்கள் வருகை ஏற்கனவே வங்கி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் கூடுதல் வீரர்கள் வருகை
- 14:02 (IST) 13 Jun 2023அண்ணாமலையை கண்டித்து அதிமுக தீர்மானம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- 13:29 (IST) 13 Jun 2023மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு
"மொழி விவகாரத்தில் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம்" நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ட்வீட் "பிராந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை மதிக்கும் பணி சூழல் மீதே நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" அலுவல் பணிகளை இந்தி மொழியில் மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியிருந்த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் சுற்றறிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
- 13:27 (IST) 13 Jun 2023NEXT என்ற தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்
NEXT என்ற தேசிய மருத்துவ தகுதி தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும்" பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் "மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது" "NEXT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" NEXT தேர்வு முறையை கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தல்
- 12:48 (IST) 13 Jun 2023வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த நபர் மர்ம மரணம்
நேற்று மாலை 5.50 மணியளவில் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்
அலுவலகத்துக்குள் புகுந்தவரை அங்கிருந்தவர்கள் பிடித்து வெளியே தள்ளினர்
வெளியேற்றப்பட்ட நபர் அடுத்த சில மணி நேரத்தில் சாலையோரம் சடலமாக மீட்பு
- 12:36 (IST) 13 Jun 2023சயனைடு கலந்த மது குடித்து இருவர் பலி
மயிலாடுதுறையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழப்பு
நேற்று இருவர் உயிரிழந்த நிலையில், அவர்கள் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருந்தது கண்டுபிடிப்பு
இருவர் உயிரிழந்த விவகாரத்தில் மூடப்பட்டிருந்த மதுபாட்டிலில் சயனைடு கலந்திருப்பது உறுதி - மாவட்ட ஆட்சியர் மகாபாரதி
- 12:36 (IST) 13 Jun 2023அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்
அதிமுக, பாஜக கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கும் நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை
- 12:35 (IST) 13 Jun 2023மருத்துவ பொதுக் கலந்தாய்வுக்கு அ.தி.மு.க எதிர்ப்பு
மருத்துவ படிப்புக்கு அகில இந்திய அளவில் பொதுக் கலந்தாய்வு நடத்துவதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு
மறுபரிசீலனை செய்து தற்போதைய நடைமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
தமிழகத்தின் உரிமையை பறிக்கும் எந்த சட்டத்தையும் அதிமுக ஆதரிக்காது.
பொது கலந்தாய்வு தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல - ஈபிஎஸ்
- 12:34 (IST) 13 Jun 2023தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்
தமிழக அரசின் தலைமை தகவல் ஆணையராக ஷகில் அக்தர் நியமனம்
முன்னாள் ஏடிஜிபி தாமரை கண்ணன் உள்பட 3 பேர் ஆணையர்களாக நியமனம்
- 12:16 (IST) 13 Jun 2023பாஜக மாநில தலைமை கட்டுக்கோப்பு இல்லாமல் உள்ளது
பாஜக மாநில தலைமை கட்டுக்கோப்பு இல்லாமல் உள்ளது. பாஜகவில் அகில இந்திய தலைமைக்கு தான் அதிகாரம் உள்ளது.
அண்ணாமலையின் பேச்சு குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.
ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியவர்களை சும்மா விடமாட்டோம் -அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
- 12:14 (IST) 13 Jun 2023மரம் முறிந்து விழுந்து கர்ப்பிணி பெண் காவலர் காயம்
சென்னை எழும்பூரில் மரம் முறிந்து விழுந்து, கர்ப்பிணி பெண் காவலர் காயம்
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது
பெண் காவலரின் கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மரம் முறிந்து விபத்து
- 12:00 (IST) 13 Jun 2023சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலைக்கு ஸ்டாலின் அடிக்கல்
ஓசூரில் எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலைக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
- 11:15 (IST) 13 Jun 2023அ.தி.மு.க கூட்டணியை விட்டு பா.ஜ.க வெளியேறலாம்
பாஜக கட்சி என்பது வேறு, அண்ணாமலை என்பவர் வேறு, அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம். ஆளுமைமிக்க ஜெயலலிதாவைப் பற்றி கருத்துச் சொல் அண்ணாமலைக்கு தகுதி இல்லை. கவுன்சிலாரக் கூட அண்ணாமலை இருந்ததில்லை - முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்
- 10:48 (IST) 13 Jun 2023சி.வி.சண்முகம் பேட்டி
திமுகவின் ‘B’ டீமாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை. கவுன்சிலராகக்கூட அண்ணாமலை இருந்ததில்லை- சென்னையில் அதிமுக எம்.பி., சி.வி.சண்முகம் பேட்டி
- 10:46 (IST) 13 Jun 2023'பிபோர்ஜோய்' புயல் எதிரொலி
'பிபோர்ஜோய்' புயல் எதிரொலியாக, மும்பை பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
- 10:36 (IST) 13 Jun 2023டிடிவி தினகரன் பேட்டி
பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அரசியலுக்கு புதியவர் என்று மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்; தமிழ்நாட்டின் அரசியல் வரலாறு, ஜெயலலிதாவின் ஆளுமை குறித்து எதுவும் தெரியாமல் அண்ணாமலை பேசி வருகிறார்; தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற முதன்முதலில் பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா தான்- தஞ்சையில் டிடிவி தினகரன் பேட்டி
- 10:13 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி பேட்டி
தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி
- 10:11 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி பேட்டி
தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி
- 10:08 (IST) 13 Jun 2023எந்த இடங்களில் சோதனை நடைபெறுகிறது?
சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லம்,,கரூர் இல்லம் உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- 10:04 (IST) 13 Jun 2023தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 அதிகரித்து, ரூ.44,720-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ,5,590-க்கும் விற்பனையாகிறது.
- 10:03 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி பேட்டி
தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி
- 10:00 (IST) 13 Jun 2023அமலாக்கத்துறையின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன்
அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி தகவல் அளிக்க வேண்டும் என்பது இல்லை, அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஆவணங்கள் கைப்பற்றப்பட்டாலும் அதற்கு விளக்கம் அளிக்க தயார். வருமானவரித்துறை சோதனையில் பறிமுதல் செய்த விவரங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த பின்னர் முழு விவரங்கள் தெரியவரும்
- தனது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி
- 09:35 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கில், சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
- 09:33 (IST) 13 Jun 2023செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக வழக்கில், சென்னை, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை அபிராமிபுரத்தில் உள்ள அவரது சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
- 09:21 (IST) 13 Jun 2023டிஎன்பிஎல் இன்று
டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் இன்று இரவு 7 மணிக்கு மோதுகின்றன.
- 09:20 (IST) 13 Jun 2023சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராமலிங்கம், கல்வராயன் மலையில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர்.
- 09:19 (IST) 13 Jun 2023சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்
சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ராமலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி. மோகன்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராமலிங்கம், கல்வராயன் மலையில் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர்.
- 08:10 (IST) 13 Jun 202370 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள்
மத்திய, மாநில அரசு துறைகளில் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
- 08:10 (IST) 13 Jun 2023மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.
- 08:09 (IST) 13 Jun 2023ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்
சென்னையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர் இன்று தொடங்கவுள்ளது. வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் 8 நாடுகளைச் சேர்ந்த 32 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
- 08:09 (IST) 13 Jun 2023இந்திய அணி சுற்றுப்பயணம்
ஜூன் 12 முதல் ஆகஸ்ட் 13 வரை மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
- 08:08 (IST) 13 Jun 2023வலுவிழந்த பிபர்ஜாய் புயல்
அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த அதி தீவிர புயலான பிபர்ஜாய், மிக தீவிர புயலாக வலுவிழந்தது; வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து, அதன் பின் வடக்கு-வடகிழக்கில் நகர்ந்து செல்லும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் புயல் ஜூன் 15-ஆம் தேதி கரையை கடக்க கூடும் என்பதால், கட்ச் கடற்கரைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 16-ஆம் தேதி வரை பள்ளிகளையும் மூட மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- 08:08 (IST) 13 Jun 2023டிஎன்பிஎல் - கோவை அணி வெற்றி
திருப்பூர் அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை அணி வெற்றி பெற்றது.
முதலில் ஆடிய கோவை அணி 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. 180 ரன்கள் இலக்குடன் ஆடிய திருப்பூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதிகபட்சமாக கோவை அணியில் சாய் சுதர்சன் 86(45) ரன்களும், திருப்பூர் அணியில் விஜய் சங்கர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.