Advertisment

Tamil news Highlights: நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது – இ.பி.எஸ்

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 29 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
EPS protest announced, edappadi k palaniswami, electricity tariff high, aiadmk protest on july 25th,

எடப்பாடி பழனிசாமி

பெட்ரோல்டீசல் விலை

Advertisment

சென்னையில் 131வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63க்கும், டீசல் ரூ. 94.24க்கும் விற்பனை.

திடீர் குண்டுவெடிப்பு

ஜம்மு-காஷ்மிர், உதம்பூர் அருகே நின்று கொண்டிருந்த ஆளில்லா பேருந்தில் திடீர் குண்டு வெடிப்பால் பரபரப்பு . படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதி. இதுதொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடுதல் பேருந்துகள்

ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்.  30 மற்றும் 1ஆம் தேதிகளில் கூடுதலாக 1,300 பேருந்துகள் இயக்கப்படும்  என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 22:09 (IST) 29 Sep 2022
    நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது – இ.பி.எஸ்

    நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது என மதுரை பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்


  • 20:14 (IST) 29 Sep 2022
    சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க தடை

    கடலூர் மத்திய சிறையில் உள்ள சவுக்கு சங்கரை பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் செப்டம்பர் 16ம் தேதி முதல் சவுக்கு சங்கர் சிறையில் உள்ளார்


  • 18:32 (IST) 29 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன? அண்ணாமலை கேள்வி

    பாஜக மாநில தலைவர் அண்ணாமல: இந்தியா முழுவதும் நடைபெறும் பாரம்பரிய ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை தமிழகத்தில் மட்டும் தடுக்க காரணம் என்ன? தமிழகத்தில் மாற்று கட்சியினருக்கும், எதிர்க்கட்சியினரும் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல உரிமை மறுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


  • 17:50 (IST) 29 Sep 2022
    குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 தேர்வு முடிவுகள் எப்போது? - டி.என்.பி.எஸ்.சி புதிய அறிவிப்பு

    குரூப் 2, 233 4 தேர்வு முடிவுகள் அக்டோபரிலும், குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்திலும் வெளியாகும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.


  • 17:27 (IST) 29 Sep 2022
    செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கக்கோரி போலீசார் மனு

    வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விரிவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை சுட்டிக்காட்டி, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


  • 16:50 (IST) 29 Sep 2022
    நடிகை குஷ்பு பிறந்தநாள் - பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

    தனது கணவர் சுந்தர். சி மற்றும் குழந்தைகளுடன் பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை குஷ்புவுக்கு திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். hbdkhushbu என்ற ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.


  • 16:48 (IST) 29 Sep 2022
    ஜஸ்பிரீத் பும்ரா விலகல் - சிராஜ் சேர்ப்பு!

    இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜஸ்பிரீத் பும்ரா விலகியதையடுத்து, முகமது சிராஜ் இந்திய அணியில் இணைந்துள்ளர்.


  • 16:46 (IST) 29 Sep 2022
    பொன்னியின் செல்வன் - 1: இணையதளங்களில் வெளியிட தடை!

    பொன்னியின் செல்வன் - 1 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.


  • 16:42 (IST) 29 Sep 2022
    பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர் சந்திப்பு!

    ”படம் ரிலீசுக்கு முன்பு எப்போதும் படபடப்பு இருக்காது. ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு படபடப்பு இருக்கிறது.

    இதுவரை நான் நடித்த படங்களில் எதற்குமே இந்த அளவிற்கு ப்ரமோஷனுக்காக சென்றதில்லை. PS-1 படத்திற்காக நீங்கள் அனைவரும் பெருமைப்படுவீர்கள். வட இந்தியாவிற்கு சென்றாலும் தமிழ் படம் குறித்து அதிகமாக பேசுகிறார்கள், வரவேற்றார்கள்" - என்று நடிகை திரிஷா கூறியுள்ளார்


  • 16:38 (IST) 29 Sep 2022
    பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர் சந்திப்பு!

    "இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது. இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது. எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

    ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும்” என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.


  • 16:37 (IST) 29 Sep 2022
    குரூப் 2 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

    அக்டோபர் மாதம் குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியாகிறது, குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


  • 16:36 (IST) 29 Sep 2022
    ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை - சீமான் வரவேற்பு!

    "மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழ்நாடு அரசின் முடிவை வரவேற்கின்றேன். இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதிசெய்ய, வலிமையான சட்டப்போராட்டம் செய்ய வேண்டும்; இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


  • 16:18 (IST) 29 Sep 2022
    பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர் சந்திப்பு!

    சென்னையில் பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து வரும் நிலையில், அப்போது பேசிய நடிகர் விக்ரம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை படம் பார்க்க வர நினைப்பது மிக்க மகிழ்ச்சி. கனவு கதாபாத்திரத்தில் நடித்ததை பெருமையாக கருதுகிறேன்" என்று கூறியுள்ளார்.


  • 16:17 (IST) 29 Sep 2022
    பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர் சந்திப்பு!

    சென்னையில் பொன்னியின் செல்வன் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து வரும் நிலையில், அப்போது பேசிய நடிகர் ஜெயம் ரவி "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களும் எனக்கு பிடித்தவை தான். மணிரத்னத்தின் கனவு இன்று நனவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


  • 16:01 (IST) 29 Sep 2022
    பாரதிராஜாவை நலம் விசாரித்த ஓ.பி.எஸ்!

    தற்போது நலம் பெற்று வீடு திரும்பியிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

    பாரதிராஜாவின் சிஷ்யர் கே. பாக்யராஜ் சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


  • 16:01 (IST) 29 Sep 2022
    பாரதிராஜாவை நலம் விசாரித்த ஓ.பி.எஸ்!

    தற்போது நலம் பெற்று வீடு திரும்பியிருக்கும் இயக்குநர் பாரதிராஜாவை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

    பாரதிராஜாவின் சிஷ்யர் கே. பாக்யராஜ் சமீபத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது


  • 15:26 (IST) 29 Sep 2022
    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்: பின்வாங்கிய அசோக் கெலாட்!

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கினார் அசோக் கெலாட். "ராஜஸ்தான் முதல்வராக நான் தொடர்வதா? இல்லையா? என்பதை சோனியா காந்தி முடிவு செய்வார்" என்று கூறிய அவர் உட்கட்சி பூசல் குறித்து சோனியா காந்தியிடம் மன்னிப்பு கோரினார்.


  • 14:30 (IST) 29 Sep 2022
    செப்.30, அக்.1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

    ஆயுத பூஜையை முன்னிட்டு, கோயம்பேட்டில் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம், பூவிருந்தவல்லி பகுதிகளில் இருந்து செப்.30, அக்.1 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை ஏற்பாடு செய்துள்ளது.


  • 14:19 (IST) 29 Sep 2022
    அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு

    கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற அண்ணா பல்கலை. இளங்கலை மற்றும் முதுகலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது


  • 14:10 (IST) 29 Sep 2022
    சோனியா இல்லத்திற்கு அசோக் கெலாட் வருகை

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட அசோக் கெலாட் முடிவெடுத்துள்ள நிலையில், சோனியாகாந்தி இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.


  • 13:41 (IST) 29 Sep 2022
    11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் இன்று வானிலை ஆய்வு மையம் தகவல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 13:15 (IST) 29 Sep 2022
    தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும்?

    நவீன இயந்திரங்களைக் கொண்டு மனித கழிவுகளை அகற்ற கோரிய வழக்கில், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை தடுக்காதது அவலம். அலட்சியம் காட்டும் ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய நேரிடும். தூய்மை பணியாளர்களுக்கு விடிவு காலம் எப்போது பிறக்கும் என வேதனை தெரிவித்த நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.


  • 13:00 (IST) 29 Sep 2022
    சிபிசிஐடியிடம் ஆவணங்களை ஒப்படைத்தது கனியாமூர் பள்ளி நிர்வாகம்

    மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிபிசிஐடி வசம் ஆவணங்களை ஒப்படைத்தது கனியாமூர் பள்ளி நிர்வாகம்


  • 12:25 (IST) 29 Sep 2022
    கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய மனு தள்ளுபடி

    கலவரத்துக்குள்ளான கள்ளக்குறிச்சி பள்ளியை அரசே ஏற்று நடத்த கோரிய வழக்கு தள்ளுபடி

    பள்ளி விடுதி அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவதால் அரசே ஏற்று நடத்த மனுவில் கோரிக்கை

    மனுவில் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லை என கூறி உயர் நீதிமன்றம் தள்ளுபடி


  • 12:24 (IST) 29 Sep 2022
    சூரத்தில் ரூ. 3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

    குஜராத் சூரத்தில் ரூ. 3,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்


  • 12:06 (IST) 29 Sep 2022
    அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

    எச்1என்1 வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்.


  • 12:05 (IST) 29 Sep 2022
    விருதுநகரில் இபிஎஸ் தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம்

    விருதுநகரில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்கூட்டம். மின் கட்டண உயர்வுக்கு திமுக அரசை கண்டித்து பொதுக்கூட்டம்

    முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ அடித்தளம் போட்டது அதிமுக. திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான் - பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு


  • 12:03 (IST) 29 Sep 2022
    கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் ஆஜர்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்

    விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் பள்ளி நிர்வாகிகள் உள்பட 5 பேர் ஆஜர்


  • 12:03 (IST) 29 Sep 2022
    செம்மஞ்சேரியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    தென் சென்னையில் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

    செம்மஞ்சேரியில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார்


  • 11:28 (IST) 29 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வி.சி.க பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுப்பு

    ஆர்எஸ்எஸ் பேரணியை தொடர்ந்து வி.சி.க பேரணிக்கும் காவல்துறை அனுமதி மறுப்பு

    அக். 2ல் விசிக சார்பில் நடைபெற இருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கும் அனுமதி மறுப்பு

    காந்தி ஜெயந்தியன்று அனைத்து பேரணிகளுக்கும் காவல்துறை அனுமதி மறுப்பு

    சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி அனுமதி மறுப்பு


  • 11:23 (IST) 29 Sep 2022
    ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

    தமிழகத்தில் அக்.2ம் தேதி நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு

    சட்டம், ஒழுங்கு பிரச்சினை காரணமாக அனுமதி அளிக்க முடியாது என காவல்துறை தரப்பில் விளக்கம்

    50 இடங்களில் ஊர்வலத்துக்கு அனுமதி கோரியிருந்த நிலையில், அந்தந்த மாவட்ட காவல்துறை அனுமதி மறுப்பு

    ஊர்வலம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்த நிலையில், காவல்துறை தரப்பில் அனுமதி மறுப்பு


  • 10:17 (IST) 29 Sep 2022
    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கம்

    பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் ட்விட்டர் பக்கமும் நீக்கம். மத்திய அரசின் தடையை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை


  • 09:19 (IST) 29 Sep 2022
    16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும்

    பொள்ளாச்சியில் 16 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்படும் என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்திற்கு மர்மநபர்கள் மிரட்டல் கடிதம் .


  • 09:19 (IST) 29 Sep 2022
    4 மணி நேர இலவச இணைய சேவை

    சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை. தமிழக சுற்றுலா துறையுடன் இணைந்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி திட்டம்


  • 09:18 (IST) 29 Sep 2022
    எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

    மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு . இன்று விருதுநகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார் இபிஎஸ்


  • 09:18 (IST) 29 Sep 2022
    கோயில்களில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்ற வசதி

    தமிழக கோயில்களில் டிஜிட்டல் முறையில் பண பரிமாற்ற வசதி அறிமுகம். இன்று காலை திட்டத்தை துவக்கி வைக்கிறார், அமைச்சர் சேகர்பாபு


  • 09:17 (IST) 29 Sep 2022
    பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை

    தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்து அரசாணை வெளியீடு . நாடு முழுவதும் பிஃஎப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அரசாணை


Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment