Tamil News Today Updates :சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், வாழ்வாதாரம் இழந்துள்ள தங்களை சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நிதி மன்றம் தமிழகஅரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வேகமாக மீண்டு வருகிறார்கள். ஒரே நாளில் 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் தொடர்ந்து 4000-க்கு மேல் புதிய கொரோனா தொற்றுகள் தினமும் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கட்டுக்குள் நீடிக்கும் சமயத்தில், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 2 மாவட்ட ஆட்சியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை ஆட்சியர் ராசாமணி, காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்து கடவுள்களை அவமதித்த புகாரில் கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை சேர்ந்த செந்தில் வாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக-வின் கொள்கை யாரையும் புண்படுத்துவதில்லை என, கட்சியின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil nadu news today updates : சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85 புள்ளி 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னையில் உள்ள 32 மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்து 248 பேர் தேர்வு எழுதினர். இதில் மூவாயிரத்து 988 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிணி மற்றும் அறிவியல் பாடத்தில் 6 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 219 மாணவ, மாணவிகள் 450 மதிப்பெண்னுக்கு மேல் பெற்று உள்ளனர். மேற்கு மாம்பலம் மேல்நிலை பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
விழுப்புரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
சாலை விபத்துகளில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க உத்தரவு
சிவகங்கை - 83
தேனி-78
க.குறிச்சி-71
சேலம் -70
காஞ்சிபுரம் - 67
கோவை - 52
புதுக்கோட்டை-50
நீலகிரி-44
திருப்பூர்-39
தர்மபுரி - 27
திருப்பத்தூர் - 27
தஞ்சை-25
கடலூர்-22
கிருஷ்ணகிரி-21
தென்காசி - 20
திருவாரூர் -20
நாமக்கல் - 18
அரியலூர்-12
பெரம்பலூர் - 10
ஈரோடு - 8
நாகை - 8
கரூர்- 7
கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு தேவையில்லை என்றும் தேவை ஏற்படும் பட்சத்தில் மருத்துவக்குழுவினர் ஆய்வுக்கு பின் முடிவு எடுக்கப்படும் என்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஊரடங்கால் வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்கள், சென்னையை விட்டு சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கக் கோரி, வழக்கறிஞர் சேசுபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.மனுவில் நவம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டி, சொந்த ஊர் திரும்ப விரும்புபவர்களுக்கு இ- பாஸ் வழங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவி்ட்டது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் மூன்று நாட்களாக நிறுத்தி வைத்திருந்த கடன்களை மீண்டும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகைக்கடன், விவசாய கடன், மகளிர் சுய உதவிக் கடன், மத்திய கால கடன் உள்ளிட்ட எந்த கடன்களையும் வழங்கக்கூடாது என கடந்த 14ம் தேதி அனைத்து கூட்டுறவு வங்கிகளுக்கும் வாய்மொழியாக உத்தரவிடப்பட்டிருந்தது.
புதுக்கோட்டையில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரம்
* மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட்
* மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அதிரடி உத்தரவு
திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் - பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு
* திருக்குறள் உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும் - பிரதமர் மோடி.
The Tirukkural is extremely inspiring. It is a treasure of rich thoughts, noble ideals and great motivation.
The words of respected Thiruvalluvar have the power to spread hope and brightness.
I hope more youngsters across India read it! pic.twitter.com/Fxi8ROkp0t
— Narendra Modi (@narendramodi) July 16, 2020
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைதான சயான், மனோஜ் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இருவரின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை மனுவை மனுதாரர் தரப்புக்கு வழங்குமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி அவதூறு பரப்பி வருவதாக சூர்யாதேவி என்ற பெண் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பீட்டர்பால் என்பவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்தது குறித்து சூர்யா தேவி, யூ ட்யூபில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னை பற்றி அவர் அவதூறு பரப்புவதாக வனிதா விஜயகுமார் போரூர் காவல் நிலையத்தில் 2 முறை புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் வனிதா விஜயகுமார் மீது சூர்யாதேவி புகார் அளித்துள்ளார். தன்னைப் பற்றி வனிதா பல்வேறு அவதூறுகளை பரப்பி வருவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று 131 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 229 ஆக உயர்ந்தது. இதில் ஆயிரத்து 250 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 968 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 10 நாட்களில் மட்டும் ஆயிரத்து 188 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, எட்டாயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் புதிதாக 112 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இரண்டாயிரத்து 269 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆறாயிரத்து 299 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில், இதுவரை 172 பேர் உயிரிழந்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார். கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை நல்ல பலனளிப்பதாக கூறிய அவர், நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மதுரை, விருதுநகர் உள்பட தென் மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரிக்கிறது. அதனால், மதுரை, விருதுநகரில் நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
சாத்தான்குளம் அருகே 8 வயது சிறுமி கொலை வழக்கில், நிவாரணம் வழங்க வலியுறுத்தி, உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுமி கொலை வழக்கில் முத்தீஸ்வரன், நித்தீஷ் ஆகிய 2 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்கள் மாற்று வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்று ஆட்சியர் பிரவீன் நாயர் பரிந்துரைத்துள்ளார்.
நாகையில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் நடந்துவரும் சூழலில் நாகை ஆட்சியர் பிரவீன் நாயர் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்புர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பாமக நிறுவப்பட்டு 32 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் பழனிசாமி பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவப்பட்டு இன்று (16.7.2020) 32-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, பாமக நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன். pic.twitter.com/Cl7dRWWVOz
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) July 16, 2020
திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 475 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,048ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு வந்தது என்பதை 8 வாரத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்காக யார் யார் நிதி தந்தனர்? மற்றும்
எவ்வளவு நிதி வந்தது? என்ற விவரத்தை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், காணொலி வாயிலாக நடைபெற்ற 'திமுக மாவட்ட செயலாளர்கள் - நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்' நிறைவேற்றியுள்ள தீர்மானங்கள் விவரம்:
Link: https://t.co/mTv2dwE8dX#DMK #MKStalin pic.twitter.com/wKfk7b00cC
— DMK (@arivalayam) July 16, 2020
சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா பரிசோதனையை, ஒரு வாரத்தில் நடத்தி முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாடு அனைத்து வித மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வழக்குப் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கேரள முதல்வரின் தனிச்செயலராக இருந்த சிவசங்கரன் மீது அடுக்கடுக்காக விழும் குற்றச்சாட்டு. கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஷம்ஜூவை கைது சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், கோட்டக்கல் பகுதியை சேர்ந்த அம்து என்பவர் தலைமறைவாகியிருக்கிறார். தலைமைச் செயலாளர் மற்றும் நிதிச்செயலாளரின் விசாரணை அறிக்கையை இன்று கேரள முதல்வரிடம் தாக்கல் செய்கிறார்கள். அறிக்கையின் அடிப்படையில் சிவசங்கரன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights