Advertisment

Tamil News Today : சென்னையில் அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் மழை

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 22 -08-2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rain in Tamilnadu

Rain in Tamilnadu

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விரைவு ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

செங்கோட்டையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற விரைவு ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம். அறந்தாங்கி ரயில் நிலையத்தில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த ரயில். எம் 5 பெட்டியில் குளிர்சாதன வசதி வேலை செய்யாததால், ஆத்திரம் அடைந்த பயணிகள். குளிர்சாதன வசதி இல்லாததால், பயணிகள் சிலர் வாந்தி எடுத்து அவதிப்பட்டதாக தகவல். அதிகாரிகளின் பதில் திருப்தி அளிக்காததால், பயணிகள் கடும் வாக்குவாதம் .

நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1930 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றம். 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 110 மில்லியன் கன அடியாக உள்ளது; 20 கன அடி நீர் வெளியேற்றம். 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை -தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 346 மில்லியன் கன அடியாக உள்ளது; 11 கன அடி நீர் வெளியேற்றம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 23:18 (IST) 22 Aug 2023
    சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள 2.36 ஏக்கர் நிலம் அரசுக்கே சொந்தம் என தீர்ப்பு

    மீன்வளத்துறை அலுவலகம் மற்றும் தொல்காப்பியர் பூங்கா அமைந்துள்ள சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள 2.36 ஏக்கர் நிலம் சிவகிரி ஜமீனால் கொடுக்கப்பட்டது எனக்கூறி சரோஜா என்பவர் தொடர்ந்த வழக்கில் அந்த நிலம் அரசுக்கே சொந்தம் என சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது.



  • 23:16 (IST) 22 Aug 2023
    ஆளுனர் குறித்து நாஞ்சில் சம்பத் கருத்து

    ”சைலேந்திரபாபுவை டி.என்.பி.எஸ்.சி. தலைவராக அரசு நியமித்து இருப்பதை ஏற்காததற்கு ஆளுநர் மனதில் மண்டிக்கிடக்கும் மனுதர்மமும், சனாதன வெறியும்தான் காரணம்”- நாஞ்சில் சம்பத்



  • 23:15 (IST) 22 Aug 2023
    பெண் கொலை வழக்கில் காவலருக்கு பிடிவாரண்ட்

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் 2017ம் ஆண்டு பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கு; விசாரணை அதிகாரியான எஸ்.ஐ. செந்தூர் பாண்டியன், வழக்கு விசாரணைக்காக 8 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் தற்போது காவல் ஆய்வாளராக உள்ள அவருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து மாவட்ட விரைவு நீதிமன்றம் உத்தரவு



  • 23:15 (IST) 22 Aug 2023
    பிரக்ஞானந்தாவுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து!

    செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் பிரக்ஞானந்தாவுக்கு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி வாழ்த்து!



  • 21:07 (IST) 22 Aug 2023
    தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் கடிதம்

    இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்



  • 20:32 (IST) 22 Aug 2023
    செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டி : முதல் சுற்று சமன்

    பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் மோதிய செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் முதல் சுற்று சமனில் முடிந்தது நாளை நடைபெறும் 2-வது சுற்றில் வெற்றி பெறுபவர் சாம்பியன்



  • 20:28 (IST) 22 Aug 2023
    திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை

    திருப்பூர் மாவட்டத்திற்கு வரும் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை ஓணம் பண்டிகையை ஒட்டி மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவிப்பு விடுமுறையை ஈடுசெய்ய செப்.9ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு



  • 19:43 (IST) 22 Aug 2023
    உதயநிதி இதை செய்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்: கு. அண்ணாமலை

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, “உதயநிதி ஸ்டாலின், எம்.எல்.ஏ. பதவியை துறந்துவிட்டு யு.பி.எஸ்.சி. முதன்மை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.

    உதயநிதி ஸ்டாலின் சாதாரண டி.என்.பி.எஸ்.சி. அல்லது சிவில் சர்வீஸ் தேர்வு, இல்லை எனில் குரூப் 4 தேர்விலாவது தேர்ச்சி பெற்றுவிட்டு பேசட்டும்” என்றார்.



  • 19:32 (IST) 22 Aug 2023
    இந்திய தேர்தல் ஆணையத்தின் அடையாளம் சச்சின் தெண்டுல்கர்!

    லோக்சபா தேர்தலின் போது, எம்.எஸ். தோனி, அமீர் கான் மற்றும் மேரி கோம் போன்றவர்கள் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளங்களாக இருந்தனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை (ஆக.23) அன்று டெண்டுல்கருக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே கையெழுத்தாகிறது.



  • 19:15 (IST) 22 Aug 2023
    வெற்றியை பற்றி பேச முடியாததால், புளியோதரையை பற்றி பேசுகிறார்கள்: ஆர்.பி. உதயகுமார்

    ஆர்.பி. உதயகுமார், “அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. அதில் கொஞ்சம் புளியோதரை சிந்திக் கிடந்ததை பெரிதுப்படுத்தி பேசுகிறார்கள். மாநாட்டின் வெற்றியை யாரும் குறை சொல்ல முடியாததால், புளியோதரையின் தோல்வியைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.



  • 19:01 (IST) 22 Aug 2023
    தமிழக மீனவர்கள் மீது கொள்ளையர் தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்க மரு. ராமதாஸ் வலியுறுத்தல்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களை, கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • 18:35 (IST) 22 Aug 2023
    காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை அறிவித்தது சுப்ரீம் கோர்ட்

    காவிரி வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட புதிய அமர்வை உச்சநீதிமன்றம் அறிவித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நரசிம்மா,பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய புதிய அமர்வு, காவிரி தொடர்பான வழக்கை ஆகஸ்ட் 25-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கும்.



  • 18:10 (IST) 22 Aug 2023
    அ.தி.மு.க எங்கள் பங்காளி... நாங்கள் எல்லாம் ஒரே பிராண்டு - ஆர்.எஸ்.பாரதி

    அ.தி.மு.க-வை எதிர்க்க எந்த கட்சியாலும், நபராலும் முடியாது என எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பான கருத்துக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியதாவது: “அ.தி.மு.க-வை அழிக்க நாங்க நினைக்கவில்லை. அவங்க எங்கள் பங்காளி, நாங்கள் எல்லாம் ஒரே பிராண்டு. பா.ஜ.க மற்றும் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி சொல்லியிருப்பார். டெல்லியில் இருந்து அடித்துக்கொண்டே இருந்தால், எவ்வளவுதான் தாங்குவார்.” என்று கூறினார்.



  • 18:05 (IST) 22 Aug 2023
    TNPSC தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பரிந்துரை; ஆளுநர் கிடப்பில் போட காரணம் என்ன - ஆர்.எஸ். பாரதி

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: “டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். காரணம் என்ன? என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • 18:02 (IST) 22 Aug 2023
    TNPSC தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பரிந்துரை; ஆளுநர் கிடப்பில் போட காரணம் என்ன - ஆர்.எஸ். பாரதி

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: “டி.என்.பி.எஸ்.சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். காரணம் என்ன? என்பதை ஆளுநர் விளக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.



  • 17:50 (IST) 22 Aug 2023
    மருத்துவமனை சுகாதாரம்: ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை

    மருத்துவமனைகளில் உள்ள வார்டுகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டுமென, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங்பேடி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.



  • 17:10 (IST) 22 Aug 2023
    காலை உணவுத் திட்டம் தொடங்க அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஸ்டாலின் அழைப்பு

    அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    அனைத்து கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவரவர் தொகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

    545 பள்ளிகளில் அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக தொடக்க பள்ளிகளுக்கும் திட்டம் விரிவுபடுத்தபடுகிறது.

    வரும் 25-ம் தேதி திருக்குவளையில் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.



  • 16:49 (IST) 22 Aug 2023
    வாட்ஸ் அப் குழுவில் போலீஸ் உயர் அதிகாரிகள்: டிஜிபி அதிரடி

    Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் டி.ஜி.பி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னையை பொறுத்தவரையில், இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து, அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் whatsapp குரூப்பில் இணைக்க வேண்டும்.

    ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கடைசி காவலர்கள் வரை குரூப்பில் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மற்ற நகரங்களை பொருத்தவரை, துணை ஆணையர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட்டு உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் பதிவிடப்படும் காவலர் நலன் சார்ந்த பதிவுகள் உடனடியாக 30 நிமிடத்தில் அடுத்தடுத்த வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பப்பட வேண்டும் - 4 மணி நேரத்திற்குள் அனைத்து காவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் வாட்ஸ் அப் குரூப்களில் அது சென்றடைய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



  • 16:11 (IST) 22 Aug 2023
    மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1500 - மல்லிகார்ஜுன கார்கே

    மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1500 வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்



  • 15:55 (IST) 22 Aug 2023
    சசிகலா மேல்முறையீட்டு மனு; விசாரணைக்கு ஏற்றது சென்னை ஐகோர்ட்

    அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் வரும் 30ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ளது



  • 15:52 (IST) 22 Aug 2023
    வெளிநாட்டில் பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களுக்கு நிதியுதவி

    வெளிநாட்டில் பணியின்போது இறந்த குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களுக்கு நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு ரூ.20 ஆயிரமும், கல்வி உதவித் தொகையாக ரூ.12 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்



  • 15:38 (IST) 22 Aug 2023
    சந்திரயான் - 3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய வீடியோ வெளியீடு

    சந்திரயான் - 3 லேண்டர் மூலம் எடுக்கப்பட்ட நிலவின் புதிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. நிலவுக்கு 70 கி.மீ. தொலைவில் உள்ள சந்திரயான் - 3 லேண்டர் மூலம் கடந்த 20ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.



  • 15:29 (IST) 22 Aug 2023
    தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர்

    சச்சின் டெண்டுல்கர் தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமானார். தேர்தல் ஆணையத்திற்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையே நாளை புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெறுகிறது



  • 15:14 (IST) 22 Aug 2023
    திருப்பதி கோயிலுக்கு ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் பைக்கள் நன்கொடை

    திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.1.18 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரிக் பைக்கை குவாண்டம் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.சக்கரவர்த்தி வழங்கினார். கோயில் வளாகத்தில் வாகனத்திற்கு சிறப்பு பூஜை செய்து, சாவியை திருப்பதி தேவஸ்தான டிரைவிங் இன்ஸ்பெக்டர் ஜானகிராம் ரெட்டியிடம் சி.சக்கரவர்த்தி வழங்கினார்



  • 14:35 (IST) 22 Aug 2023
    லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீதான கொலை வழக்கு!

    லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் மீதான கொலை வழக்கில், அவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்திவைத்து கேரள உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது

    கொலை வழக்கில் முகமது ஃபைசல் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டுகள் தண்டனை விதித்திருந்தது கீழமை நீதிமன்றம். கேரள உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தபோதும், முகமது பைசல் எம்.பி.யாக தொடரலாம் என்றும், 6 மாதத்திற்குள் மீண்டும் விசாரணை நடத்தி புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு, கேரள உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • 14:15 (IST) 22 Aug 2023
    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

    சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி, திண்டுக்கல், மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • 14:14 (IST) 22 Aug 2023
    சந்திரமுகி 2 - 2வது பாடல் இன்று மாலை வெளியீடு!

    சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது. பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. ஆஸ்கர் விருது புகழ் கீரவாணி இசையில் படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது பாடலின் புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.



  • 14:06 (IST) 22 Aug 2023
    மாரடைப்பால் இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

    ராஜஸ்தான் மாநிலம் கஜுராஹோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த, இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு கழிவறையிலேயே உயிரிழந்தார். அவர் அடுத்த மாதம் மருத்துவ படிப்புக்காக செர்பியா செல்லவிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



  • 13:51 (IST) 22 Aug 2023
    உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற அமெரிக்க வீராங்கனை!

    ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடந்து வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீராங்கனை ஷா காரி தங்கம் வென்று அசத்தியுள்ளார்.



  • 13:05 (IST) 22 Aug 2023
    சந்திரயான் 3 திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் - இஸ்ரோ

    சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறக்கப்படும் - இஸ்ரோ

    சந்திரயான் 3 விண்கலம் செயல்பாடு மிகவும் திருப்திகரமாக உள்ளது எனவும் விளக்கம்

    நிலவை நெருங்கும் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு லேண்டரை நிலவில் தரையிறக்க ஏற்பாடு.

    சந்திரயான் 3 விண்கலம் நிலவில் தரையிறக்கப்படும் நிகழ்வை நாளை மாலை 5.20 மணி முதல் நேரலையில் பார்க்கலாம்- இஸ்ரோ

    நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய உள்ளது சந்திரயான் 3 விண்கலம்



  • 12:59 (IST) 22 Aug 2023
    போலீஸிடம் கத்தியை காட்டி மிரட்டிய போதை கும்பல்

    வழிப்பறி புகார் குறித்து விசாரிக்க வந்த போலீஸை கத்தியை காட்டி மிரட்டிய போதை கும்பல்

    சென்னை பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

    கையில் தடி இருந்தும் கஞ்சா போதை ஆசாமிகளிடம் இருந்து தப்பித்து ஓடிய போலீசார்

    காட்டுப்பாக்கத்தில் கோயில் திருவிழாவிற்கு வந்தவரை தாக்கி பணம் வழிப்பறி செய்த கும்பல்

    பாதிக்கப்பட்ட நபர் பூந்தமல்லி ரோந்து போலீஸ் சரவணனிடம் புகார் அளித்தார்



  • 12:58 (IST) 22 Aug 2023
    சிவகங்கை கல்லூரியில் சாதி பாகுபாடு: 2 பேராசிரியர்கள் இடமாற்றம்

    சிவகங்கை அரசு கல்லூரியில் சாதி பாகுபாடு பிரச்சினை தொடர்பான வீடியோ வெளியீடு- இரண்டு பேராசிரியர்கள் பணி இட மாற்றம்

    பொருளியல் துறையின் தலைவர் பேராசிரியர் கிருஷ்ணன் கூடலூர் அரசு கல்லூரிக்கு மாற்றம்

    பொருளியல் துறையின் பேராசிரியர் சுப்ராம் மயிலாடுதுறை அரசு கல்லூரிக்கு மாற்றம்

    அரசு கல்லூரி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர்



  • 12:54 (IST) 22 Aug 2023
    ஜெய்பீம் படம் - சூர்யாவுக்கு நோட்டீஸ்

    ஜெய்பீம் படத்தில் நாடோடி பழங்குடியின​ சமூகத்தாரை இழிவுபடுத்தியதாக கூறி தொடரப்பட்ட வழக்கு

    நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    நாடோடி பழங்குடியினர் நல்வாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் முருகேசன் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

    நாடோடி பழங்குடியினர் சமூகத்தை தவறாக சித்தரிக்கும் நோக்கில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது- மனுதாரர்

    நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க மனுவில் வலியுறுத்தல்



  • 12:40 (IST) 22 Aug 2023
    கைத்தறி துறை சார்பில் புதிய கட்டடங்கள் திறப்பு

    கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள்

    நெல்லையில் கட்டப்பட்டுள்ள கோ- ஆப்டெக்ஸின் வணிக வளாகம் திறப்பு

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸின் விற்பனை நிலையம்

    கைத்தறி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்



  • 12:35 (IST) 22 Aug 2023
    18 மாணவர்கள் டிஸ்மிஸ்

    சென்னை வேளச்சேரி தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் பட்டாசு வீசப்பட்ட விவகாரம்

    பட்டாசு வெடி வீசிய வழக்கில் 10 மாணவர்களை கைது செய்தது காவல்துறை

    2 ஆம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக தகராறு

    தகராறு காரணமாக ஒரு பிரிவு மாணவர்கள் பட்டாசு வீசியதாக விசாரணையில் தகவல்

    இந்த விவகாரம் தொடர்பாக 18 மாணவர்களை டிஸ்மிஸ் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவு

    மோதல், பட்டாசு வீசியது குறித்து கைதான 10 மாணவர்களிடம் போலீசார் விசாரணை



  • 12:31 (IST) 22 Aug 2023
    பொதுக்கூட்டம் வெற்றி; புளியோதரை தோல்வி- ஆர்.பி.உதயகுமார்

    பொதுக்கூட்டம் வெற்றி பெற்றதால் புளியோதரை தோல்வியை பெரிதுப்படுத்துகின்றனர்.

    மாநாடு வெற்றியை நாங்கள் பேசுகிறோம். புளியோதரை வேகவில்லை என நீங்கள் பேசுகிறீர்கள்.

    பாத்திரம் எடுத்துச் சென்றவர்கள் மீதமிருந்த உணவை கீழே போட்டுவிட்டு சென்றனர் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்



  • 11:56 (IST) 22 Aug 2023
    10 மாணவர்கள் கைது

    சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த மோதல் தொடர்பாக 10 மாணவர்கள் கைது. திருவிழாவில் வெடிக்கும் வெடியை வீசி இருதரப்பு மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 10 மாணவர்கள் கைது



  • 11:39 (IST) 22 Aug 2023
    சென்னை: செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை சோதனை

    சென்னை கடற்கரை சாலையில் உள்ள செல்போன் கடையில் மத்திய உளவுத்துறை சோதனை

    பெங்களுருவில் இலங்கையை சேர்ந்த நபரை கைது செய்த உளவுத்துறை அதிகாரிகள்

    கைதான நபர் அளித்த தகவலின் அடிப்படையில் செல்போன் கடையில் அதிகாரிகள் ஆய்வு

    ராயபுரத்தை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் மன்சூரிடம் அதிகாரிகள் விசாரணை



  • 11:12 (IST) 22 Aug 2023
    சென்னையில் திடீர் மழை

    எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை



  • 10:31 (IST) 22 Aug 2023
    புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

    சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, அக்கம் பக்கம் புகைப்படக் கண்காட்சி . புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார் சென்னையின் புகழ்பெற்ற இடங்கள், நிகழ்வுகள் பற்றிய புகைப்படம் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன



  • 10:04 (IST) 22 Aug 2023
    தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை -ஆர்.என்.ரவி

    தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டத்தை பின்பற்ற தேவையில்லை என பல்கலைக்கழங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம். யுஜிசி, தன்னாட்சி அதிகாரம் வழங்கியுள்ள நிலையில் பொதுப் பாடத்திட்டத்தை மாநில அரசு கொண்டுவர முடியாது என கடிதம்



  • 09:51 (IST) 22 Aug 2023
    உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    உலகக் கோப்பை செஸ் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து.



  • 09:51 (IST) 22 Aug 2023
    அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, அரியலூர், திண்டுக்கல், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.



  • 09:44 (IST) 22 Aug 2023
    தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

    டெல்லியில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி . இன்று முதல் 24ம் தேதி வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்



  • 08:28 (IST) 22 Aug 2023
    மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் கொலை வெறி தாக்குதல்

    வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர் கொலை வெறி தாக்குதல். ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து இலங்கை கடல் கொள்ளையர் அட்டகாசம். 8 மீனவர்களை தாக்கி 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள் கொள்ளை



  • 08:24 (IST) 22 Aug 2023
    3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி

    3 நாள் பயணமாக தென் ஆப்ரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்க் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment