பெட்ரோல், டீசல் விலை: 116-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டல் பெட்ரோல் விலை ரூ.100.75 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.34 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஏரிகளின் நீர் நிலவரம்
புழல் ஏரிக்கு நீர்வரத்து 551 கனஅடியாக அதிகரிப்பு. நீர்இருப்பு 2713 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 130 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 15 கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 300 மில்லியன் கனஅடியாக உள்ளது. நீர்வரத்து 50 கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Jul 11, 2024 21:03 ISTநீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் ஜம்மு காஷ்மீர் தலைமை நீதிபதி கோட்டீஸ்வர் சிங்கையும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
-
Jul 11, 2024 21:02 ISTதிக தலைவர் கி.வீரமணி அறிக்கை
'அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதிக்காகப் போராடிய புரட்சித் துறவி, குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை வரும் ஆகஸ்ட் மாதம் காரைக்குடியில் திராவிடர் கழகம் நன்றிப் பெருவிழாவாக நடத்தும் என திக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Jul 11, 2024 20:59 ISTஅமலாக்கத்துறைக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு : உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு
டெல்லி மதுபானக்கொள்ளை ஊழல் தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் நாளை (ஜூலை 12) உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
-
Jul 11, 2024 20:57 ISTஇந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் இலங்கை சுற்றுப்பயணம் குறித்து கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு, இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்
-
Jul 11, 2024 20:24 ISTகிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை நடவடிக்கை
கோவை தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து, வனத்துறையினர் கேமராக்களை பொறுத்தியுள்ளனர் இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டம் கண்டுபிடிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்
-
Jul 11, 2024 20:23 ISTநீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
-
Jul 11, 2024 20:19 ISTடிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க திட்டம்
திருப்பதியில் சாமி கும்பிடுவதற்காக காத்திருந்த பக்தர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் பிராங்க் வீடியோ எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க திட்டம். இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை
-
Jul 11, 2024 20:00 ISTபிரபல ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன?
புதுக்கோட்டையில் பிரபல ரவுடி துரைசாமி என்கவுன்ட்டர் செய்யப்பட்ட சம்பவத்தில் நடந்தது என்ன? திருச்சி எம்.ஜி.நகர் பகுதியை சேர்ந்த துரைசாமி மீது 5 கொலை வழக்கு உட்பட 74 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2022 டிசம்பரில் இளவரசன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், துரைசாமி முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது
-
Jul 11, 2024 18:47 IST'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்; சாட்டை துரைமுருகன் கைதுக்கு இ.பி.எஸ் கண்டனம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது நடவடிக்கைக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எடப்படி பழனிசாமி தனது எக்ஸ் பக்கதில் குறிப்பிட்டிருப்பதாவது: “கடந்த மூன்றாண்டு விடியா திமுக ஆட்சியில் கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கடத்தல்காரர்கள், பாலியல் வன்கொடுமையாளர்கள் போன்றோர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில், ஆட்சியாளர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் சமூக செயல்பாட்டாளர்கள் மீதும், அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் மீதும் சர்வாதிகார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.
தன் கையில் இருக்கும் அதிகாரம், நிரந்தரமானது என்ற இருமாப்போடு, 'இம்' என்றால் சிறைவாசம் 'உம்' என்றால் வனவாசம்..... என்ற ரீதியில் வழக்குகள் போட்டு கைது செய்யும் அராஜகம் நாள்தோறும் அரங்கேறி வருகிறது.
நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான திருச்சி சாட்டை துரைமுருகன் அவர்களை, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தெரிவித்த ஒரு சில கருத்துகளுக்காக பொய் வழக்கு புனைந்து இந்த அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று, அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று காவல்துறை கையில் வைத்திருக்கும் விடியா திமுக முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2024 18:30 ISTபுதுக்கோட்டையில் ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரையை புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் போலீசார் பிடிக்க சென்றபோது, போலீசாரை தாக்கியதால் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்தார்.
-
Jul 11, 2024 17:45 ISTதமிழக மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 25 வரை நீதிமன்றக் காவல் - இலங்கை நீதிமன்றம் உத்தரவு
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 12 மீனவர்களையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஊக்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேருக்கு ஜூலை 25-ம் தேதி வரை நீதிமன்றக்காவலில் வைக்க இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Jul 11, 2024 17:41 ISTசெல்வப்பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சித்ததை கண்டித்து காங்கிரசார் போராட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பா.ஜ.க அண்ணாமலை விமர்சித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் அண்ணாமலையைக் கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கபட்டனர்.
-
Jul 11, 2024 17:33 ISTவிடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் - தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: “கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ. 1,000 பெறும் நிலையில், இத்திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
-
Jul 11, 2024 17:27 ISTஆனி கடைசி முகூர்த்தம்: சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் - பத்திரப்பதிவுத்துறை
ஆனி கடைசி முகூர்த்த தினத்தையொட்டி, சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை ஜூலை 12-ம் தேதி கூடுதல் டோக்கன் வழங்கப்படும், ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதில் 150 டோக்கன்களும் 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது.
-
Jul 11, 2024 17:00 ISTபாகிஸ்தானில் தரையிறங்கும் போது தீப்பிடித்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம்
பாகிஸ்தானில் தரையிறங்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் 297 பயணிகள் இருந்த நிலையில், 10 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விரைந்து தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
-
Jul 11, 2024 16:38 ISTமதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட 14 வயது சிறுவன் மீட்பு
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட, 14 வயது சிறுவனை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டனர். எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கி தனிப்படை போலீசார் சிறுவனை தேடி வந்தனர். போலீசார் நெருங்கி வருவதை அறிந்து, சிறுவன் மற்றும் ஆட்டோ டிரைவரை நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு கடத்தல் கும்பல் தப்பியோடியது. சிறுவனை மீட்ட போலீசார் தப்பியோடிய கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர்
-
Jul 11, 2024 16:18 ISTகள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகள் வியாழன் அன்று விசாரிக்கப்படும் - சென்னை ஐகோர்ட்
கள்ளக்குறிச்சி விஷச் சாராய வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய அனைத்து வழக்குகளும் அடுத்த வியாழன் அன்று விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது
-
Jul 11, 2024 15:55 ISTஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல்
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
-
Jul 11, 2024 15:38 ISTஅ.தி.மு.க தொண்டர்கள் திமுகவிற்கு வர வேண்டும் - அமைச்சர் ரகுபதி
அ.தி.மு.க ஆபத்தான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது; அக்கட்சித் தொண்டர்கள் தி.மு.க.,விற்கு வர வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தில் இருந்தும் டெல்டா பகுதியில் இருந்தும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்
-
Jul 11, 2024 15:16 ISTடாஸ்மாக் கடைகளை குறைப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது: அமைச்சர் முத்துசாமி
டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது. அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை தயார் செய்ய வேண்டும். மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும். கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
-
Jul 11, 2024 14:35 IST'ஆம் ஆத்மி மதுபான ஊழல்களில் காங்கிரஸ் சேர்ந்துள்ளது'- அஸ்வினி வைஸ்ணவ்
“ஆம் ஆத்மி கட்சியும், அரவிந்த் கெஜ்ரிவாலும் தங்களின் நேர்மையின்மையால் டெல்லியில் அராஜகத்தை பரப்பிய விதம், ஒவ்வொரு டெல்லிவாசிக்கும் சலிப்பாக இருக்கிறது. அவர்கள் பல வாக்குறுதிகளை அளித்தனர், ஆனால் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. அவர்கள் எப்போதும் மதுவின் மீது கவனம் செலுத்தினர். மதுபான ஊழலில் கெஜ்ரிவால் ஆற்றிய பங்கு, அவரது முழு அரசியல் வாழ்க்கை மற்றும் சித்தாந்தத்தின் மீது ஒரு கேள்வியை எழுப்புகிறது. அவர் செய்த ஊழல்களில் இப்போது அந்த ஊழலில் காங்கிரஸும் சேர்ந்துள்ளது... இது 'மகாதக்பந்தன்' ஆகிவிட்டது” என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் கூறினார்.
-
Jul 11, 2024 14:23 ISTநீட் இளங்கலை முறைகேடு வழக்கு ஒத்திவைப்பு
நீட் இளங்கலை தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
-
Jul 11, 2024 14:11 ISTமத்திய பட்ஜெட்; பொருளாதார நிபுணர்களுடன் மோடி ஆலோசனை
மத்திய பட்ஜெட் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி பொருளாதார நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார்.
-
Jul 11, 2024 14:02 ISTரப்தி ஆற்றில் தத்தளித்த 11 பேர் மீட்பு; யோகி ஆதித்யநாத்
“ஜூலை முதல் வாரத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் போன்ற சூழல் உருவானது. இதனால் ஆயத்த பணிகளிலும், ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அப்போதும் மக்கள் மனம் தளராமல் நிதானமாக சரியான முடிவுகளை எடுத்தனர். ரப்தி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 11 பேர் கொண்ட குழு சிக்கித் தவித்தனர். 118-க்கு போன் செய்த போலீசார், உடனடியாக அவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தனர். அவர்களின் துணிச்சலுக்காக நாங்கள் அவர்களை கவுரவித்துள்ளோம்” என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
-
Jul 11, 2024 13:48 ISTசென்னை: அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னையில் அண்ணாமலைக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு செல்வப்பெருந்தகை MLA அவர்களை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் திரு ஷிப்பிங் J டில்லிபாபு அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. pic.twitter.com/BK0AjX9bcE
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) July 11, 2024 -
Jul 11, 2024 13:30 ISTபீரங்கி நெஞ்சை பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றவர் அழகுமுத்து கோன்; மு.க. ஸ்டாலின்
பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை" எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் #அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று. அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்” என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்."பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை" எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் #அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) July 11, 2024
அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான்… pic.twitter.com/2Eg8kCWuAW -
Jul 11, 2024 13:16 ISTமாமன்னர் அழகுமுத்துகோனுக்கு மு.க. ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் இரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோன் உருவப் படத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
-
Jul 11, 2024 12:56 ISTநாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சி
ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் நாளை திரைக்கு வர உள்ள 'இந்தியன் 2' திரைப்படத்திற்கு நாளை ஒரு நாள் (12.07.2024) மட்டும் சிறப்பு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
Jul 11, 2024 12:37 ISTஒருங்கிணைப்பு இல்லை: ஜெயக்குமார் விமர்சனம்
கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட தினகரன், ஓ.பி.எஸ், சசிகலா தொண்டர்களின் ரத்தம் உறிஞ்சிய அட்டை. ஒருங்கிணைப்பு என்ற மாயையை திரைக்கதை எழுதி, வசனமும் சேர்த்து யாரோ சிலர் பரப்புகின்றனர்.
சேலம் சந்திப்பு பற்றி இதுவரை அதிமுக தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வெளியாகாத நிலையில் ஜெயக்குமார் விமர்சனம்
-
Jul 11, 2024 12:28 ISTஎதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? சீமான்
திமுகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? கலைஞரைப் பற்றி தவறாக பாடியதால் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள்.
நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்
- சீமான்
-
Jul 11, 2024 12:28 ISTஇன்னும் ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை: ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என உறுதியளித்தோம். சாத்தியமுள்ள அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றியுள்ளோம்.
தமிழ்நாட்டில் தோல்வியைத் தழுவினாலும் இன்னும் ஒன்றிய அரசு பாடம் கற்கவில்லை.
- தருமபுரியில் ஊரக பகுதிகளுக்கான ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தொடங்கி வைத்து மு.க.ஸ்டாலின் உரை
-
Jul 11, 2024 11:50 ISTதருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்
அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
₹51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ₹31 கோடியில் மேம்படுத்தப்படும்.
பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ₹50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.
அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சாமை, ராகி ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுசெயலாக்க மையம் அமைக்கப்படும்.
தீர்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்கம் அமைக்கப்படும்.
பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.
-
Jul 11, 2024 11:36 ISTதமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மதியம் 1 மணிவரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 11, 2024 11:22 ISTகள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது. இருவரும் சின்னதுரையிடம் இருந்து கள்ளச்சாராயம் வாங்கி விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது
இதன்மூலம் கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது.
-
Jul 11, 2024 11:17 ISTஎஸ்.ஆர்.சேகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜரானார்.
கடந்த ஏப்ரல் 6ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. ஏற்கனவே கோவையில் உள்ள இவரது வீட்டில் சிபிசிஐடி சோதனை நடைபெற்றது.
-
Jul 11, 2024 10:52 ISTஇ.பி.எஸ் 2-வது நாளாக ஆலோசனை
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2வது நாளாக ஆலோசனை
2வது நாளில் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை
நாடாளுமன்ற தேர்தல் தோல்வி உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனை நடத்தும் இபிஎஸ்
அ.தி.மு.கவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தல்
சிவகங்கையை தொடர்ந்து வேலூர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் ஈபிஎஸ்
-
Jul 11, 2024 10:40 ISTதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு
ஒரு கிராம் தங்கம் ரூ.6,785க்கும், சவரன் ரூ.54,280க்கும் விற்பனை
-
Jul 11, 2024 10:28 ISTசாட்டை துரைமுருகன் கைது
கருணாநிதி, தமிழக அரசு பற்றி அவதூறு கருத்து - நா.த.கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது
திருச்சி மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்தனர். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருணாநிதி, தமிழக அரசு பற்றி அவதூறாக பேசியதாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் கைது
-
Jul 11, 2024 09:38 ISTஅழகு முத்துக்கோன் பிறந்த நாள்- ஸ்டாலின் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் 314-வது பிறந்த நாள். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருவச்சிலை
திருவுருவச்சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின் உருவப்படம்.
மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
-
Jul 11, 2024 08:54 ISTநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா
பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா
100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேர்
தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தரும் நடராஜ பெருமான்
நான்கு மாட வீதிகளில் வீதி உலா வரும் சுவாமிகள்
-
Jul 11, 2024 08:52 ISTஅடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
-
Jul 11, 2024 08:38 ISTஎம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் விசாரணை.
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டும் நிலையில், கரூர் ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சி அம்மன் நகரில் உள்ள அதிமுக தொழில்நுட்ப அணியின் நிர்வாகி கவின் வீட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
Jul 11, 2024 08:08 IST4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
-
Jul 11, 2024 08:07 IST13 தமிழக மீனவர்கள் கைது
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 தமிழக மீனவர்கள் கைது.
3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது இலங்கை கடற்படை. விசாரணைக்காக காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து செல்வதாக தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.