Tamil News Highlights: அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங்; மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 19-07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 19-07- 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
NEET exam students

நீட் தேர்வு

Petrol and Diesel Price:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

பொன்முடியிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை

Advertisment

அமைச்சர் பொன்முடியிடம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அமலாக்கத்துறை விசாரணை நிறைவு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடியிடம் ஆம், இல்லை என்ற அடிப்படையில் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்.

பிரதமர் மோடியைப் பொறுத்தவரை நியாயமானது

பாஜக கூட்டணியில் இருப்பர்கள் மீதான வழக்குகளை அமலாக்கத்துறை கண்டும் காணாமல் இருப்பதுதான் பிரதமர் மோடியைப் பொறுத்தவரை நியாயமானது. செய்தியாளர் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


Advertisment
Advertisements
  • 22:47 (IST) 19 Jul 2023
    அகில இந்திய ஒதுக்கீட்டு கவுன்சிலிங்; மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை

    அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நாளை தொடங்க உள்ள நிலையில், மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்பணத் தொகை திருப்பித் தரப்பட மாட்டாது என்பது வழக்கமான நடைமுறையாக உள்ள நிலையில், தற்போது கூடுதலாக நீட் தேர்வெழுத ஓராண்டு தடையும் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


  • 22:10 (IST) 19 Jul 2023
    ‘எல்.ஜி.எம்’ திரைப்படம், ஜூலை 28ம் தேதி திரைக்கு வருகிறது - படக்குழு

    எம்.எஸ்.தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘எல்.ஜி.எம்’ திரைப்படம், ஜூலை 28ம் தேதி திரைக்கு வருகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது


  • 21:55 (IST) 19 Jul 2023
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

    ரயிலில் பழ வியாபாரம் செய்து வரும் ராஜேஸ்வரி என்ற பெண்ணை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அதே ரயிலில் இறங்கிய நபர் ஒருவர், கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு மீண்டும் அதே ரயிலில் தப்பிச் சென்றுள்ளார்


  • 21:00 (IST) 19 Jul 2023
    பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இந்தியா A அணி அபார வெற்றி

    தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் சாய் சுதர்சனின் அதிரடி சதத்தால், பாகிஸ்தான் A அணியை வீழ்த்தி இந்தியா A அணி அபார வெற்றி பெற்றது.


  • 20:18 (IST) 19 Jul 2023
    கர்நாடகாவில் 10 பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

    கர்நாடகாவில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் மீது பேப்பரைக் கிழித்து எறிந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்


  • 19:56 (IST) 19 Jul 2023
    அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க மக்களவை தலைவராக கலந்து கொண்டேன் - ஓ.பி.ரவீந்திரநாத்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க மக்களவை தலைவராக நான் கலந்து கொண்டு சிறப்பித்தேன் என ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்


  • 19:34 (IST) 19 Jul 2023
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான கால அட்டவணை வெளியானது. செப்டம்பர் 2ம் தேதி பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொள்கிறது.


  • 19:19 (IST) 19 Jul 2023
    நாமக்கல்லில் முட்டை விலை சரிவு

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிந்து ரூ. 4.45-க்கு விற்பனையாகிறது. ஆடி மாதம் தொடங்கியதால், முட்டை நுகர்வு குறைந்திருப்பதாக கூறப்படுகிறது


  • 19:00 (IST) 19 Jul 2023
    கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா

    கர்நாடகாவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை தொடங்கி வைத்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா


  • 19:00 (IST) 19 Jul 2023
    தக்காளியை ₨70-க்கு விற்க உத்தரவு

    தக்காளி சில்லறை விற்பனை நாளை முதல் ₨70-க்கு விற்க வேண்டும் NCCF மற்றும் NAFED-க்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை உத்தரவு தக்காளி விலை குறைவதை கருத்தில் கொண்டு நடவடிக்கை


  • 18:30 (IST) 19 Jul 2023
    இந்தியா என்ற சொல் பாஜகவினருக்கு பிடிக்காமல் ஆகிவிட்டது : மு.க.ஸ்டாலின்

    அமலாக்கத்துறையை பாஜக அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்தி வருகிறது" "இந்தியா என்ற சொல் பாஜகவினருக்கு பிடிக்காமல் ஆகிவிட்டது" 'I.N.D.I.A.'வில் உள்ள யாரும் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சப்போவதில்லை - முதலமைச்சர் ஸ்டாலின்


  • 18:04 (IST) 19 Jul 2023
    ஆளுநர் டிஸ்மிஸ் குறித்து விவாதிக்க நோட்டீஸ் - திமுக எம்.பி டி.ஆர் பாலு தகவல்

    தமிழக ஆளுநரை திரும்பப் பெறும் விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளோம். பொது சிவில் சட்டம், ஒடிசா ரயில் விபத்து, மணிப்பூர் கலவரம் குறித்து விவாதிக்கவும் கோரிக்கை. விலைவாசி உயர்வு தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். மேலும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பயன்படுத்துவது குறித்து விவாதிக்கவும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.


  • 17:33 (IST) 19 Jul 2023
    கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக அமளி

    கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக கடும் அமளி.

    மாநில அரசுக்கு எதிராக முழக்கம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது ஐஏஎஸ் அதிகாரிகளை பணியமர்த்தியது

    தொடர்பாக வலுத்த பிரச்சினை சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


  • 17:29 (IST) 19 Jul 2023
    அரசின் திட்டங்களை செயல்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு நியமனம்

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் திருப்பத்தூருக்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம்


  • 17:28 (IST) 19 Jul 2023
    கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.-க்கள் சஸ்பெண்ட்

    கர்நாடக பாஜக எம்.எல்.ஏ.-க்கள் 10 பேர் பணியிடை நீக்கம் - சபாநாயகர் உத்தரவு துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் நடவடிக்கை


  • 17:09 (IST) 19 Jul 2023
    2002 குஜராத் கலவர வழக்கு: ஐகோர்ட் உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்; டீஸ்டா செடல்வாடுக்கு ஜாமீன்

    2002-ம் ஆண்டு கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான ஆதாரங்களை தயாரித்ததாகக் கூறப்படும் குஜராத் காவல்துறை வழக்கில், சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாடுக்கு உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

    நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, டீஸ்டா செடல்வாடுக்கு ஜாமீனை மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் ஜூலை 1-ம் தேதி உத்தரவை ரத்து செய்தனர். உயர் நீதிமன்றத்தின் விசாரணை வக்கிரமானவை , முரண்பாடானவை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது என்று LiveLaw தெரிவித்துள்ளது.


  • 17:03 (IST) 19 Jul 2023
    பழங்கள் சாப்பிட செந்தில்பாலாஜிக்கு மருத்துவர்கள் அறிவுரை

    அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பழங்கள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவ அடிப்படையில் பழங்கள் சாப்பிட மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  • 17:01 (IST) 19 Jul 2023
    மதுபானங்கள் விலை உயர்வு: எனக்கு என்ன தெரியும், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது - இ.பி.எஸ்

    டாஸ்மாக்கில் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “எனக்கு என்ன தெரியும், எனக்கு குடிக்கிற பழக்கம் கிடையாது” என்று கூறினார்.


  • 16:58 (IST) 19 Jul 2023
    உத்தரகாண்ட்டில் மின்சாரம் தாக்கி 15 பேர் உயிரிழப்பு

    உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டம் அலக்நந்தா நதிக்கரையில், மின்சார டிரான்ஸ்ஃபார்மர் திடீரென வெடித்ததில் மின்சாரம் தாக்கி 4 காவலர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.


  • 16:56 (IST) 19 Jul 2023
    சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் சிவகாசியில் நின்று செல்லும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

    சென்னை எழும்பூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் (16101) சிவகாசியில் நின்று செல்லும்; சோதனை அடிப்படையில் வரும் ஜூலை 27-ம் தேதி முதல் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில் அறிவித்துள்ளது.


  • 16:54 (IST) 19 Jul 2023
    வேங்கைவயல் வழக்கு: 4 சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை ரத்த மாதிரி பரிசோதனை

    வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு ஜூலை 21-ம் தேதி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி டி.என்.ஏ தொடர்பான ரத்த மாதிரி பரிசோதனை 4 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட உள்ளது.


  • 16:50 (IST) 19 Jul 2023
    கர்நாடக சட்டப்பேரவையில் பா.ஜ.க அமளி

    கர்நாடக சட்டப்பேரவையில் பா.ஜ.க உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு மாநில அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

    எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியமர்த்தியது தொடர்பாக பிரச்னை வலுத்தது. சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்தெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


  • 16:08 (IST) 19 Jul 2023
    டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானம் கொள்முதல் விவரங்கள்; 2 வாரங்களில் வழங்க ஐகோர்ட் உத்தரவு

    மதுபானம் கொள்முதல் விவரங்களை வழங்க விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் ஆர்.டி.ஐ.-யில் தகவல்களை வழங்க முடியாது என டாஸ்மாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை வழங்குவதில் எப்படி விலக்கு கோர முடியும்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

    மேலும், மதுபானம் கொள்முதலுக்கு எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை எப்படி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், எந்த அடிப்படையில், விலக்கு பெற்றது என்பதை இரண்டு வாரங்களில் தெரிவிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


  • 15:37 (IST) 19 Jul 2023
    டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடக்கம்; டி.ஆர். பாலு, தம்பிதுரை, ரவீந்திரநாத் பங்கேற்பு

    டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது; தி.மு.க மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை பங்கேற்றனர். ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, ஓ.பி. ரவீந்திரநாத் எம்.பி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


  • 15:32 (IST) 19 Jul 2023
    டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை வழக்கு; 2வது நாளாக விசாரணை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை வழக்கில், சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தவர்களிடம் உதவி ஆணையர் கரிகால் பாரி சங்கர் 2வது நாளாக விசாரணை நடத்தினார்.


  • 15:29 (IST) 19 Jul 2023
    ‘அதிமுக மக்களவை தலைவர்’ என குறிப்பிட்டு NDA எம்.பி-க்கள் கூட்டத்திற்கு ஓ.பி.எஸ். மகனுக்கு அழைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ம் தேதி கூட உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க தேனி எம்.பி. ஓ.பி. ரவீந்திரநாத்-க்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மேல்முறையீட்டுக்காக தீர்ப்பு நிறுத்தி வைக்கபப்ட்டுள்ளது.


  • 15:01 (IST) 19 Jul 2023
    உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் ராகுல்காந்தி

    மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியின் இறுதி சடங்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொள்வார் என அறிவிப்பு.

    பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள உம்மன்சாண்டியின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


  • 14:47 (IST) 19 Jul 2023
    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

    தமிழகத்தில் பருத்தி நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி வரி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். பருத்தி மீதான 11% இறக்குமதி வரியைத் திரும்பப்பெற வேண்டும் . வரியைத் திரும்பப் பெறுவதன் மூலம் உற்பத்தி செலவை கணிசமாக குறைக்கலாம்- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


  • 14:15 (IST) 19 Jul 2023
    மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு

    வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மதுபானம், பீர், ஒயின் விலையை உயர்த்தியது டாஸ்மாக் நிர்வாகம்;

    குவாட்டருக்கு ரூ.10 முதல் முழு பாட்டிலுக்கு ரூ.320 வரை உயர்வு;

    மதுபானங்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு


  • 13:42 (IST) 19 Jul 2023
    இன்று கனமழைக்கு வாய்ப்பு

    நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


  • 13:42 (IST) 19 Jul 2023
    மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூலை 25ம் தேதி வரை, இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்


  • 13:30 (IST) 19 Jul 2023
    மின்மாற்றி வெடித்து விபத்து

    உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அலகண்டா ஆற்றுப் பகுதியில் மின்மாற்றி வெடித்து விபத்து; 10 பேர் உயிரிழந்தனர்.


  • 13:30 (IST) 19 Jul 2023
    அமலாக்கத்துறை மனு - வழக்கு ஒத்திவைப்பு

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளதால் அமலாக்கத்துறையை சேர்த்துக்கொள்ள முடியாது - லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தகவல்

    வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும் என தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, வழக்கை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

    2001-06 அதிமுக ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்திருந்தது


  • 13:29 (IST) 19 Jul 2023
    5 தீவிரவாதிகள் கைது

    தீவிரவாத தாக்குதலில் ஈடுபட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகளை பெங்களூருவில் கைது செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்தது.

    அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள், 45 தோட்டாக்கள், 19 கைபேசிகள் மற்றும் வாக்கி டாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


  • 13:29 (IST) 19 Jul 2023
    ஆலோசனை வழங்க உள்ளேன்- ஓ.பி.ரவீந்திரநாத்

    நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக டெல்லியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறேன்; ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழைப்பு விடுத்ததன் பேரில் கலந்துக்கொள்கிறேன். அதிமுக மக்களவை தலைவராக கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளேன்- ஓ.பி.ரவீந்திரநாத் டுவிட்டரில் பதிவு


  • 12:58 (IST) 19 Jul 2023
    அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பி.ரவீந்திரநாத்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று மாலை நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கிறேன்.

    நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் அழைப்பின் பேரில் கூட்டத்தில் பங்கேற்பதாக ஓ.பி.ரவீந்திரநாத் தகவல்.

    முன்னதாக தேனி எம்.பியாக ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.


  • 12:50 (IST) 19 Jul 2023
    ரயிலில் ரகளையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

    சென்னையில் மின்சார ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்

    வேளச்சேரி பறக்கும் ரயிலில் அட்டகாசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள்

    சேப்பாக்கம் ரயில் நிலையம் முதல், கடற்கரை ரயில் நிலையம் வரை மாணவர்கள் ரகளை

    பட்டாக்கத்தி மற்றும் பைப்களுடன் அட்டகாசத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

    அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் சுமார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில்

    நேற்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு


  • 12:16 (IST) 19 Jul 2023
    சிப்காட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலைக்கு ஸ்டாலின் அடிக்கல்

    ராணிப்பேட்டை சிப்காட்டில் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல்

    தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல்

    திரவ மருத்துவ மற்றும் தொழில் ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள அதிநவீன ஆலை

    திரவ நைட்ரஜன் மற்றும் திரவ ஆர்கான் உற்பத்தியை மேற்கொள்ளவும் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை


  • 11:48 (IST) 19 Jul 2023
    ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் ஆர்ப்பாட்டம்

    சென்னையில் ஊராட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

    சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

    ஆர்ப்பாட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

    10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு மாதாந்திர மதிப்பூதியம் ரூ.3000 வழங்க கோரிக்கை

    பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்


  • 11:47 (IST) 19 Jul 2023
    மகளிர் உரிமை தொகை: சென்னையில் நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

    சென்னையில் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படவுள்ளது.

    முதல் கட்டமாக 98 வார்டுகளிலும், இரண்டாம் கட்டமாக 102 வார்டுகளிலும் முகாம் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் நடைபெறும்.

    வீடு தேடி வந்து விண்ணப்பம், டோக்கன் வழங்கப்படும்.

    அனைத்து ரேஷன் கடைகளிலும், முகாம் குறித்த அறிவிப்பு ஒட்டப்படும்.

    வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கவும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்


  • 11:45 (IST) 19 Jul 2023
    பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி? - 5 பேர் கைது

    பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாக 5 பேர் கைது

    தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை கைது செய்த பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார்

    கைதான 5 பேரும் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் என தகவல்

    கைதானவர்கள் கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் என போலீசார் தகவல்

    கைதான 5 பேரிடம் இருந்தும், வெடி பொருட்கள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் பறிமுதல்


  • 11:18 (IST) 19 Jul 2023
    சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை - ஒருவர் கைது

    தர்மபுரியில் 6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம்

    சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக உறவினர் பிரகாஷ்(18) என்பவர் கைது

    செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பம்

    சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் போராட்டம்


  • 11:10 (IST) 19 Jul 2023
    மதுபானங்களுக்கு கூடுதலாக ரூ.10 வாங்கினால் சஸ்பெண்ட்

    டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கினால் சஸ்பெண்ட். அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி டாஸ்மாக் நிர்வாகம் எச்சரிக்கை


  • 10:26 (IST) 19 Jul 2023
    குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்

    தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் நீர்வரத்து சீராக இருப்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி குற்றாலத்தில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி குளிர்ந்த காற்று வீசுவதோடு, இதமான வெயிலும் அடிப்பதால் களைகட்டிய குற்றால சீசன்


  • 10:03 (IST) 19 Jul 2023
    காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு

    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறைக் காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு . ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்க ரூ. 3.24 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் அறிவித்த நிலையில் நடவடிக்கை


  • 09:36 (IST) 19 Jul 2023
    முதலமைச்சர் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு

    சென்னை, ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் உடன் அமைச்சர் பொன்முடி சந்திப்பு. அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 7 இடங்களில் ED சோதனை நடைபெற்றது. முதல்வர் பெங்களூருவில் இருந்தபோது தொலைபேசியில் பேசிய நிலையில் தற்போது நேரில் சந்திப்பு


  • 09:07 (IST) 19 Jul 2023
    மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம்

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது . நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமான முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் . நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது


  • 09:06 (IST) 19 Jul 2023
    கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தது, காங்கிரஸ் ஆட்சி

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே கனிமொழி, ஆ.ராசா கைது செய்யப்பட்டனர். கனிமொழி, ஆ.ராசா இருவரையும் 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தது, காங்கிரஸ் ஆட்சி.


  • 09:05 (IST) 19 Jul 2023
    பாகுபாடு இல்லாமல் பாஜக அணியில் உரிய மரியாதை உண்டு

    சிறிய கட்சி, பெரிய கட்சி பாகுபாடு இல்லாமல் பாஜக அணியில் உரிய மரியாதை உண்டு . பாஜக கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துகளுடன் இருக்கின்றன" டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


  • 09:05 (IST) 19 Jul 2023
    9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி

    9 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


  • 09:04 (IST) 19 Jul 2023
    அதிமுக சிறப்பான ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் தற்போது இருக்கிறது

    அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சி அதிமுக. அதிமுக சிறப்பான ஆட்சியை தரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடம் தற்போது இருக்கிறது டெல்லியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி


Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: