Tamil News Updates : செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு

Tamil News Live Updates- 11 April 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil News Live Updates- 11 April 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasasa

Tamil news live

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 26-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 காசுகளாவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

 சுட்டெரிக்கும் வெயில்

இந்தியாவில் இன்று அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் 108.32 டிகிரி பாரன்ஹீட் (42.4° செல்சியஸ்) வெயில் சுட்டெரித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

  • Apr 11, 2024 23:12 IST

    ஆளுனராக இருந்தபோது கிடைத்த வசதிகளை விட்டு வந்துள்ளேன் : தமிழிசை சௌந்திரராஜன்

    தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களை ஆட்டம் காண வைப்பதற்காகவே ஆட்டோவில சென்று பிரச்சாரம் செய்வதாக கூறியுள்ள தென்சென்னை பா.ஜ.க வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன், ஆளுனராக இருந்தபோது கிடைத்த வசதிகளை விட்டு வந்துள்ளேன். மக்களோடு இருப்பது தான் எனக்கு வசதி என்று கூறியுள்ளார்.



  • Apr 11, 2024 23:10 IST

    பிரதமர் மோடி நமக்கு வேட்டு வைக்கிறார்" : பிரேமலதா

    மாநில உரிமைகளை பறித்துக்கொண்டு பிரதமர் மோடி நமக்கு வேட்டு வைக்கிறார். இந்தியாவை காப்பாற்ற அழைக்கும் ஸ்டாலின் முதலில் தமிழகத்திற்கு தந்ந வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டும் என்று நெல்லை பிரச்சாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.



  • Apr 11, 2024 23:08 IST

    அண்ணாமலை படித்து பாஸ் பண்ணாரா? : செல்லூர் ராஜூ கேள்வி

    அழகிரியை எதிர்த்து அரசியல் செய்த எனக்கு அண்ணாமலை எம்மாத்திரம். அதிமுக மற்றும் அதன் தலைவர்கள் பற்றி பேச அண்ணாமலைக்கு அருகதை இல்லை. கவுன்சிலராக கூட வெற்றி பெறாத அண்ணாமலை படித்து பாஸ் பண்ணாரா? இல்லை பிட் அடித்து பாஸ் பண்ணாரா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Apr 11, 2024 23:05 IST

    தாமரை வணக்கம் என்று சொல்லுங்கள் : அண்ணாமலை வலிறுத்தல்

    தமிழக அரசியல் மாற்றத்திற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில் கோவை இருக்க வேண்டும். தி.மு.க மொத்த சொத்தையும் எடுத்து வந்தாலும் கோவை மக்கள் நேர்மையின் பக்கம் நிற்பார்கள். அலைபேசியில் ஹலோ சொல்வதற்கு பதிலாக தாமரை வணக்கம் என் அடுத்த 7 நாட்கள் சொல்லுங்கள் என பா.ஜ.க தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை கூறியுள்ளார்.



  • Apr 11, 2024 20:33 IST

    இலங்கை; சட்டவிரோதமாக குடியேறிய இருவருக்கு 7 மாத சிறை

    இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக இந்தியா வந்த 2 பேருக்கு 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இலங்கை,  யாழ்பாணத்தைச் சேர்ந்த சீலன் (27), அருள் தாஸ் (34) இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சட்ட விரோதமாக படகில் வந்திறங்கினர்.

    இவ்வழக்கு திருவாடானை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இன்று இருவருக்கும் 7 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.



  • Apr 11, 2024 19:41 IST

    மோடி மீண்டும் பிரதமரானால் ரேஷன் கடைகள் இருக்காது; தொல். திருமாவளவன்


    மோடி மீண்டும் பிரதமரானால் ரேஷன் கடைகள் இருக்காது. இடஒதக்கீடு ரத்து செய்யப்படும் என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்



  • Apr 11, 2024 19:38 IST

    தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில்

    தமிழ்நாட்டில் இன்று 11 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. அந்த இடங்கள், திருப்பத்தூர் (106.88), ஈரோடு (104), சேலம் (103.28), கரூர் பரமத்தி (102.56), தருமபுரி மற்றும் நாமக்கல்  (தலா 102.2), மதுரை விமான நிலையம்  (101.12), திருத்தணி (100.94), வேலூர் (100.76), திருச்சி (100.58), மதுரை நகரம் (100.4) ஆகும்.



  • Apr 11, 2024 18:47 IST

    அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி - ஜெயக்குமார் கடும் தாக்கு

    தமிழக பா.ஜ.க தலைவரும், கோவை தொகுதி பா.ஜ.க வேட்பாளருமான அண்ணாமலை, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நரி எனக் கூறிய நிலையில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அண்ணாமலை ஒரு வால் அறுந்த நரி என்று அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.



  • Apr 11, 2024 18:17 IST

    நாகையில் பா.ஜ.க வேட்பாளர்  எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க பட்டாசு வெடிப்பு; 2 குடிசை வீடுகள் தீக்கிரை

    நாகையில் பா.ஜ.க வேட்பாளர்  எஸ்.ஜி.எம். ரமேஷை வரவேற்க வைத்த பட்டாசுகள் வெடித்ததில் 2 குடிசை வீடுகள் தீக்கிரையானது. இதில், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது. நாகப்பட்டினம் தொகுதி, புதிய நம்பியார் நகர் மீனவ கிராமத்திற்கு தேர்தல் பிரசாரத்திற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்தில் ஆய்வு செய்த வருவாய் அலுவலர், வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டனர். 



  • Apr 11, 2024 18:13 IST

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு மோடி குறைந்தபட்ச ஆதரவு விலை தரவில்லை - ராகுல் காந்தி

    ராஜஸ்தானில் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியதாவது: “நாட்டில் வேலையின்மை, பணவீக்கம் ஆகிய 2 முக்கிய பிரச்னைகள் உள்ளன. விலைவாசி உயர்வில் இருந்து நிவாரணம் தேவை; விவசாயிகளின் விளைபொருட்களுக்கு பிரதமர் மோடி குறைந்தபட்ச ஆதரவு விலை தரவில்லை” என்று  விமர்சித்தார்.



  • Apr 11, 2024 18:08 IST

    விருதுநகர் தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர் விபரங்கள், சின்னங்கள் ஒட்டும் பணி தீவிரம்

    விருதுநகர் மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் விபரங்கள், சின்னங்கள் ஒட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • Apr 11, 2024 17:26 IST

    விவசாயிகளுக்கு வரி; தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது பா.ஜ.க - ராகுல் விமர்சனம்

    ராஜஸ்தானில் பரப்புரையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “70 கோடி மக்களிடம் இருக்க வேண்டிய பணத்தின் அளவு 22 பணக்காரர்களிடம் உள்ளது. விவசாயிகள் வரி செலுத்துகிறார்கள், ஆனால், தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறி பா.ஜ.க-வை கடுமையாகச் சாடினார்.



  • Apr 11, 2024 16:58 IST

    கூடலூரில் வருமானவரி சோதனை நிறைவு

    தமிழ்நாடு வணிகர் சங்க கூட்டமைப்புகளின் மாநில துணைத்தலைவர் தாமஸ் என்பவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. 

    நேற்று காலை 11 மணியிலிருந்து சுமார் 29 மணி நேரமாக நடந்த சோதனையில் சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 



  • Apr 11, 2024 16:26 IST

    ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை 

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 



  • Apr 11, 2024 16:07 IST

    ரம்ஜான் பண்டிகை: இந்தியா கூட்டணி வெற்றி பெற வழிபாடு

    கோவையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி,  கோட்டைமேடு ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபியா ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி, இனிப்புகளை ஊட்டிவிட்டு கோலாகலமாக கொண்டாடினர். உலக மக்களின் அமைதி வேண்டியும், இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியும் வழிபாடு நடத்தினர்.



  • Apr 11, 2024 16:05 IST

    தர்மபுரியில் சிறுவன் கொலை - ஒருவர் கைது

    தர்மபுரி, முண்டாசு புறவடை பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை கொலை செய்ததாக வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Apr 11, 2024 14:32 IST

    டெல்லி மதுபான கொள்கை வழக்கு; கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ

    டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் மகளும் பி.ஆர்.எஸ். எம்.எல்.சி.யுமான கவிதாவை சி.பி.ஐ.,யும் கைது செய்துள்ளது



  • Apr 11, 2024 14:12 IST

    வெறிநாய் கடித்ததில் 11 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் வெறிநாய் கடித்ததில் 11 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Apr 11, 2024 13:51 IST

    தமிழகத்தில் 16-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று முதல் 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Apr 11, 2024 13:35 IST

    விஜய்யின் கோட் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

    நடிகர் விஜய்யின் GOAT திரைப்படம் உலகம் முழுவதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் GOAT திரைப்படம் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை நடிகர் விஜய் ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் மூலம் அறிவித்தார். தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற பெயரில் விஜய் நடித்து வரும் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்



  • Apr 11, 2024 13:09 IST

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.13 லட்சம் நூதன கொள்ளை

    ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை பஜாரில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.13 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க முடியாத படி நம்பர் லாக் செய்து நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது



  • Apr 11, 2024 12:57 IST

    திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க முன்னாள் செயலாளர் கைது

    காலை உணவுத் திட்ட பெண் பணியாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் செயலாளர் மகுடீஸ்வரன் கைதானார்.



  • Apr 11, 2024 12:50 IST

    தமிழ்நாடு எதிலும் முதலிடம்- திமுக அறிக்கை

    பொதுவான ஏற்றுமதிகள், பொறியியல் சார்ந்த ஏற்றுமதிகள், கர்ப்பிணிகள், சுகாதாரம், மகப்பேறுக்கு பின் கவனிப்பு, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கணினி பொருள்களின் ஏற்றுமதி ஆகிய பிரிவின் கீழ் ஆய்வுகள் குறித்த மத்திய அரசின் அறிக்கைகள் அனைத்திலும் தமிழ்நாடே முதலிடம்

    திமுக அறிக்கை



  • Apr 11, 2024 12:47 IST

    தமிழச்சி தங்கபாண்டியனுக்கு சாக்லேட் மாலை



  • Apr 11, 2024 12:23 IST

    சிக்கிம் மாநிலத்தில் அம்மா உணவகம் தொடங்கப்படும்

    மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலையும் சந்திக்கும் சிக்கிம் மாநிலம்

    சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்  பெண்களால் நடத்தப்படும் 'அம்மா கேன்டீன்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும்.

    சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும்

    - பாஜக வாக்குறுதி                              



  • Apr 11, 2024 12:20 IST

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு தாமதித்து வருவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

    சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு    



  • Apr 11, 2024 11:59 IST

    அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

    மக்களை தரிசிப்பதற்காகவே பாஜக தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். பாஜக தலைவர்கள் செய்வது ரோடு ஷோ அல்ல - மக்கள் தரிசன யாத்திரை.

    தமிழகத்தில் பிரிவினை சக்திகள் ஒடுக்கப்படுவார்கள் என்பது மோடியின் உத்தரவாதம். பாஜக மீது கடந்த 50 ஆண்டுகளாக போலியான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக மீது உருவாக்கப்பட்ட பிம்பம் 2024 தேர்தலுக்கு பின் சுக்குநூறாக உடைந்துபோகும்.

    -அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு



  • Apr 11, 2024 11:47 IST

    ஜாபர் சாதிக்கோடு நேரடி தொடர்பு இல்லை

    போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கோடு நேரடி தொடர்பு இல்லை. இயக்குனர் அமீர் மூலமாகவே ஜாபர் சாதிக் உடன் அறிமுகமானது.

    2 நிகழ்ச்சிகளில் ஜாபரை சந்தித்தேன்.

    அமீர், ஜாபர் என அனைவரும் எடுத்துக்கொண்ட படத்தை நாங்கள் இருவர் மட்டும் இருப்பது போல பரப்பி வருகிறார்கள். காங்கிரஸில் இருப்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி

    என்.சி.பி. சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ராஜேந்திர விளக்கம்



  • Apr 11, 2024 11:11 IST

    அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து

    காரைக்குடியில் நாளை நடைபெற இருந்த அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.



  • Apr 11, 2024 11:11 IST

    நெல்லையில் ரூ.17.80 லட்சம் பறிமுதல்

    மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய  சோதனையில் திருநெல்வேலியில் இதுவரை ரூ.17,80,000 மற்றும் 2,250 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Apr 11, 2024 10:44 IST

    எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால், நாய்யை போல் வேலை வாங்கலாம்

    எனக்கு ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தால் நாயைக் கட்டி வேலை வாங்குவது போல் வேலை வாங்கலாம் - மன்சூர் அலிகான் தேர்தல் பரப்புரை 



  • Apr 11, 2024 10:13 IST

    கோவையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்படும்: அண்ணாமலை

    கோவையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம் திறக்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதி. வாக்கு எண்ணிக்கை முடிந்து 100 நாளில், கோவையில் என்.சி.பி அலுவலகம் திறக்கப்படும் - அண்ணாமலை



  • Apr 11, 2024 09:25 IST

    பாம்பன் பகுதியில் 200 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல்நீர்

     கடல்நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும் நாட்டுப்படகுகள் .  காலநிலை மாற்றத்தால் கடல் நீர் உள்வாங்கியது - மத்திய கடல் மீன்வளம் ஆராய்ச்சியாளர்கள் . சிறிது நேரத்தில் இயல்பு நிலை திரும்பும் - மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் 



  • Apr 11, 2024 08:52 IST

    சென்னை: 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்றனர்

    சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் ரம்ஜான்  தொழுகை நடைபெற்றது. 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் பங்கேற்றனர். அவர்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.



  • Apr 11, 2024 08:21 IST

    தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு

    நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை வாக்கு பதிவு இயந்திரத்தில் பொருத்தாமல் வேறு மைக் சின்னத்தை பொருத்தியிருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள மைக் சின்னத்துக்குப் பதிலாக வேறு மைக் சின்னம் பொருத்தப்பட்டுள்ளது என்பது அவர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவின் மாநில செயலாளர் சங்கர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார்.



  • Apr 11, 2024 08:03 IST

    நெல்லையில் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

    நெல்லையில் தேர்தலை நிறுத்தி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தன் மீதான வழக்குகள் மற்றும் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும், இதனை முறையாக விசாரிக்காமல், தேர்தல் அதிகாரி அவரது வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சட்டவிரோதமாக வேட்பு மனு ஏற்கப்பட்டதால், தேர்தலை நிறுத்தி வைக்குமாறு மனுதாரர் முறையிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.



  • Apr 11, 2024 08:02 IST

    வெப்ப அலை வீசும்: வழிமுறைகளை வெளியிட்டது, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை

    தமிழகத்தில் அடுத்து வரும் நாட்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. நண்பகல் வேளைகளில் வெளியே வர வேண்டாம் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை வெளியிட்டது, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை



  • Apr 11, 2024 08:01 IST

    பிரதமர் ரோடு ஷோவில் விதிமீறல் - வழக்கு

    மேற்கு மாம்பலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் விதிமீறல் தேர்தல் விதிமுறைகளை மீறி சாலையில் விளம்பர பதாகைகள் வைத்ததாக மாம்பலம் மற்றும் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.



Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: