Advertisment

Tamil news today : 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News, Tamil News , Petrol price Today - 24 JUNE 2023- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil news today : 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் 399வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க பல்கலையில் தமிழ் இருக்கை

அமெரிக்காவின் ஹுஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு ஆய்வு இருக்கை அமைக்கப்படும். உலகின் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி புகழாரம்.

Advertisment
Advertisement

டி.என்.பி.எல் 2023

டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிகள் மோதல். இரவு 7.15 மணி போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


  • 23:19 (IST) 24 Jun 2023
    ஜூலை 1ல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

    ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்த மாநாடு குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் - ஓபிஎஸ்


  • 20:51 (IST) 24 Jun 2023
    மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு

    ரஷ்யாவின் வாக்னர் கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தலைமையில் ஆயுதப்படை தாக்குதலை தடுக்க அதிகாரிகள் முயன்றதால், மாஸ்கோவைச் சுற்றியுள்ள பல ரஷ்ய பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது. ரஷ்ய தலைநகரின் கூட்டாட்சிப் பகுதியின் எல்லையான கலுகா பகுதியின் ஆளுநர், சாலைகள் மற்றும் அருகிலுள்ள துலா, பிரையன்ஸ்க், ஓரியோல் மற்றும் ஸ்மோலென்ஸ்க் பகுதிகளின் எல்லைப் பகுதிகளில் பலத்த பாதுக்காப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


  • 20:48 (IST) 24 Jun 2023
    பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை

    பஹ்ரைன் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தீவு நாடு ரஷ்யாவின் முன்னேற்றங்களைத் தொடர்ந்து வருவதாகவும், "ஜனாதிபதி விளாடிமிர் புடினின் தலைமையின் கீழ்" நாட்டின் ஒற்றுமை தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாகவும் கூறியுள்ளது.


  • 20:04 (IST) 24 Jun 2023
    வாக்னர் படை உருவானது எப்படி?

    ரஷ்யாவில் தாக்குதல் நடத்தி வரும் பிஎம்சி (PMC) வாக்னர் என்று அழைக்கப்படும் இந்த கூலிப்படை அமைப்பு 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவை கிரிமியாவை இணைத்த போது உருவாக்கப்பட்டது. உக்ரைனைத் தவிர, அதன் செல்வாக்கு ஆப்பிரிக்க கண்டம் மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது, அங்கு அது பல்வேறு அரசாங்கங்களுக்கு கூலிப்படைகளை வழங்கியது மற்றும் சமூக ஊடக தவறான பிரச்சாரங்களை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது


  • 19:59 (IST) 24 Jun 2023
    வாக்னர் படைவீரர்கள் சரணடைந்தால் பொது மன்னிப்பு வழங்க ரஷ்யா முடிவு

    ரஷ்யாவில் தாக்குதல் நடத்தி வரும் வாக்னர் படை வீரர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டால், அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாக ரஷ்யா உறுதியளித்துள்ளது என்று டிஏஎஸ்எஸ் (TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


  • 19:50 (IST) 24 Jun 2023
    அதிகாரிகளுடன் சிதம்பரம் தீட்சிதர்கள் வாக்குவாதம்

    சிதம்பரம் நடராஜர் கோயில் திருவிழாவை ஒட்டி, கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்யக்கூடாது என வைக்கப்பட்ட அறிவிப்புப் பலகைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அறிவிப்புப் பலகையை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


  • 19:09 (IST) 24 Jun 2023
    முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் குடும்பதினருக்கு முதல்வர் ஆறுதல்

    மறைந்த முன்னாள் தலைமை செயலாளர் சபாநாயகம் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர், அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்


  • 18:23 (IST) 24 Jun 2023
    தனி அறைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜி

    அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, அமைச்சர் செந்தில்பாலாஜி தனி அறைக்கு மாற்றம் சென்னை காவேரி மருத்துவமனையில் 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றம் அறை எண் 435ல், அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை கண்காணிப்பில் உள்ளது


  • 18:13 (IST) 24 Jun 2023
    மின் கட்டணம் - வீட்டு நுகர்வோருக்கு பாதிப்பில்லை

    மின் கட்டணத்தில் மத்திய அரசு செய்துள்ள மாற்றத்தால் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தொடர்பாக தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு நிர்ணயம் செய்யப்படவில்லை என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம் அளித்துள்ளது


  • 17:23 (IST) 24 Jun 2023
    மனைவிக்கு சொத்தில் உரிமை இல்லையா? சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

    வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பியதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என கணவன் தொடர்ந்த வழக்கில், கணவனின் 8 மணி நேர உத்தியோகத்துடன் இல்லத்தரசியின் வேலையை ஒப்பிட முடியாது. குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


  • 17:00 (IST) 24 Jun 2023
    மணிப்பூர் வன்முறை: திரிணாமுல் காங்கிரஸ் வலியுறுத்தல்!

    மணிப்பூர் வன்முறை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடக்கிறது. இதில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ், “அடுத்த வாரம் அனைத்துக் கட்சிக் குழுவை மணிப்பூருக்கு அனுப்ப வேண்டும். மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் புறக்கணிப்பு நோக்கத்துடனே இருக்கிறது;

    ஒற்றுமையை வலியுறுத்தி, நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையாக அது மாற வேண்டும்” என்று கூறியுள்ளனர்.


  • 16:50 (IST) 24 Jun 2023
    “இல்லத்தரசியின் வேலையை ஒப்பிட முடியாது“: சென்னை ஐகோர்ட்!

    "கணவனின் 8 மணி நேர உத்தியோகத்துடன் இல்லத்தரசியின் வேலையை ஒப்பிட முடியாது. குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசி பார்க்கும் வேலை, 24 மணி நேர வேலை. சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என கணவன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பியதை பயன்படுத்தி வாங்கிய சொத்துக்களில் மனைவிக்கு உரிமையில்லை என்ற வழக்கையும் தள்ளுபடி செய்தது.


  • 16:43 (IST) 24 Jun 2023
    மணிப்பூர் கலவரம் - அனைத்துக் கட்சிக் கூட்டம்!

    டெல்லியில் மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டம் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை நடத்தினர். இதில், திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


  • 16:28 (IST) 24 Jun 2023
    'எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை': ரஷ்ய கிளர்ச்சியில் ஈடுபடும் வாக்னர் குழு தலைவர்!

    தனது படை வீரர்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி கொன்றதாக, ரஷ்யா அதிபர் புதினுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஸின் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும், 'நாங்கள் எங்கள் தாய்நாட்டின் தேசபக்தர்கள்' என்றும் அவரும் அவரது ஆட்களும் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.


  • 16:20 (IST) 24 Jun 2023
    தாமிரபரணி வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள்!

    தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி வடகால் வாய்க்காலில் கடந்த சில வருடங்களாக தண்ணீர் திறந்துவிடப்படாததால் மீன்கள் செத்து மிதக்கும் அவலம் ஏற்படுட்டுள்ளது.


  • 16:20 (IST) 24 Jun 2023
    செம்மரக்கட்டைகள் கடத்தல் - 9 பேர் கைது!

    ஆந்திரா, திருப்பதி அருகே ரூ.2 கோடி மதிப்பிலான 33 செம்மரக்கட்டைகள், 3 கார்கள் உள்ளிட்டைவை பறிமுதல்; பாக்கராபேட்டை அருகே உள்ள வனப்பகுதியில் 4 தமிழர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


  • 15:34 (IST) 24 Jun 2023
    எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதித்த தமிழ்ப்பெண்!

    7 கண்டங்களிலும் உள்ள சிகரங்களில் ஏறி சாதனை படைப்பதே தனது லட்சியம் என எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ் செல்வி தெரிவித்துள்ளார்.


  • 15:30 (IST) 24 Jun 2023
    அதிபுருஷ் திரைப்படம் - அமித்ஷாவிற்கு கடிதம்!

    ஆதிபுருஷ் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் மும்பை காவல்துறைக்கு அகில இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளனர்.


  • 15:07 (IST) 24 Jun 2023
    மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க ஆலோசனை!

    “சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையால் மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க, இணை ஆணையர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.


  • 14:54 (IST) 24 Jun 2023
    'இ.பி.எஸ் பிரதமர்': செல்லூர் ராஜூ பேச்சு

    "எடப்பாடி பழனிசாமியின் திறமையை பார்த்து கூட, தமிழர் ஒருவர் பிரதமராக வருவார் என அமித்ஷா கூறியிருக்கலாம்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.


  • 14:51 (IST) 24 Jun 2023
    எரிவாயு கிடங்கு-க்கு எதிராக வழக்கு!

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே அனுமதி இல்லாத கட்டிடத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் LPG எரிவாயு கிடங்கு செயல்படுவதை தடுக்கக் கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    எரிவாயு கிடங்கானது அங்கன்வாடி பள்ளி மற்றும் ஆரம்பப்பள்ளிக்கு அருகில் உள்ளதால் இங்கு பயிலும் மாணவர்களின் உயிருக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


  • 14:50 (IST) 24 Jun 2023
    20 நாட்களில் 2,000 மருத்துவர்களுக்கு பணியாணை!

    ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் தட்டுப்பாட்டை குறைக்க, இன்னும் 20 நாட்களில் 2000 மருத்துவர்களுக்கு பணியாணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 14:42 (IST) 24 Jun 2023
    அ.தி.மு.க-வில் புதிய கட்சிகள்: ஜி.கே.வாசன் பேச்சு!

    'அதிமுக கூட்டணியில் விரைவில் புதிய கட்சிகள் இணைய உள்ளன. திமுகவின் தவறான நடவடிக்கை காரணமாக அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என்று மதுரையில் தமிழ்மாநிலா காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.


  • 14:42 (IST) 24 Jun 2023
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


  • 14:00 (IST) 24 Jun 2023
    ஐ.டி. ரெய்டு நிறைவு

    கரூர்: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில், நேற்று காலையில் தொடங்கிய வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.


  • 13:59 (IST) 24 Jun 2023
    டிஜிபி-க்கு கடிதம்

    குண்டர் சட்டத்தை தேவையின்றி பயன்படுத்தக் கூடாது என டிஜிபி-க்கு தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.


  • 13:08 (IST) 24 Jun 2023
    அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    சாதி ரீதியாக ஏற்பட்ட பிரச்னையால் மூடப்பட்ட கோவில்களை மீண்டும் திறக்க, இணை ஆணையர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்தி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் -அமைச்சர் சேகர்பாபு பேட்டி


  • 12:38 (IST) 24 Jun 2023
    தலைக் கவசம் கட்டாயம்

    கோவையில் வரும் 26ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலைக் கவசம் கட்டாயம் என மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.


  • 11:32 (IST) 24 Jun 2023
    இரண்டாவது நாளாக ஐ.டி. ரெய்டு

    கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள், மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


  • 11:32 (IST) 24 Jun 2023
    அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியர்களின் பதவி உயர்வு நடைமுறையை விரைவுபடுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 950 பேருக்கு பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது நியாயமல்ல. பதவி உயர்வு வழங்காததால் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்தாகும் அபாயம் எழுந்துள்ளது


  • 10:48 (IST) 24 Jun 2023
    தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு

    சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ. 80 உயர்வு ஒரு கிராம் தங்கம் ரூ. 5,455க்கும், சவரன் ரூ. 43,640க்கும் விற்பனை


  • 10:45 (IST) 24 Jun 2023
    அந்தமான் செல்லும் விமானம் ரத்து

    அந்தமான் செல்லும் விமானம் ரத்து - பயணிகள் வாக்குவாதம்

    சென்னையில் இருந்து அந்தமான் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் ரத்தானதால் பயணிகள் வாக்குவாதம். 122 பயணிகளுடன் காலை 5 மணிக்கு புறப்படத் தயாராக இருந்த நிலையில் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டதால் அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்.


  • 10:42 (IST) 24 Jun 2023
    ரூ.6 கோடி லஞ்சம் - ஆய்வாளர், எஸ்.ஐ மீது வழக்கு

    நிதி மோசடி புகாரில் சிக்கிய ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் ரூ.6 கோடி லஞ்சம் கேட்ட புகரில் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு. இருவர் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க காவல் கண்காணிப்பாருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பரிந்துரை


  • 10:33 (IST) 24 Jun 2023
    மணிப்பூர் வன்முறை - இன்று அனைத்து கட்சி கூட்டம்

    டெல்லியில் இன்று மத்திய அரசு சார்பில் மணிப்பூர் நிலவரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடக்கும் கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் பங்கேற்கின்றன. திமுக சார்பில் திருச்சி சிவா எம்.பி பங்கேற்கிறார்.


  • 10:20 (IST) 24 Jun 2023
    கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் ஐ.டி ரெய்டு

    கரூரில் இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரி சோதனை

    அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு

    மாநகராட்சிக்குட்பட்ட ஜவகர் பஜார் பகுதியில் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆய்வு

    பழனி முருகன் நகைக்கடையில் இரண்டாவது நாளாக வருமான வரி சோதனை

    துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்


  • 09:00 (IST) 24 Jun 2023
    போஸ் வெங்கட்டின் அக்கா, அண்ணன் மரணம்

    ஒரே நாளில் சகோதரியையும், சகோதரனையும் இழந்த சின்னத்திரை நடிகர் போஸ் வெங்கட்

    சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார்

    வளர்மதியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சகோதரன் ரங்கநாதனும் மாரடைப்பால் மரணம்


  • 08:45 (IST) 24 Jun 2023
    ஐசியுவில் செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல்

    இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் உள்ளார்

    வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது - மருத்துவமனை நிர்வாகம்


  • 08:44 (IST) 24 Jun 2023
    சிறுவனை தாக்கிய சிறுத்தை சிக்கியது

    திருப்பதியில் அலிபிரியில் இருந்து கோயிலுக்கு மலை மீது பாத யாத்திரையாக சென்ற சிறுவனை தாக்கிய சிறுத்தை

    வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் நேற்று நள்ளிரவில் சிக்கியது


  • 08:09 (IST) 24 Jun 2023
    சிறப்பு மெகா மருத்துவ முகாம்

    தமிழ்நாட்டில் இன்று சிறப்பு மெகா மருத்துவ முகாம்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் இன்று 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெற உள்ளது.


  • 08:08 (IST) 24 Jun 2023
    மின்கட்டண முறையில் மாற்றம் கொண்டு வர முடிவு

    2024 ஏப்ரல் மாதம் முதல் மின்கட்டணத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு முடிவு. மின்தேவை அதிகமாக இருக்கும் நேரங்களில் 10 முதல் 20 வரை கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பு.

    சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு 10 முதல் 20 கட்டணத்தை குறைக்கவும் முடிவு. 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறைக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலாகிறது.


  • 08:03 (IST) 24 Jun 2023
    50க்கும் மேற்பட்ட துணிக்கடையில் தீ விபத்து

    திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடந்து வந்த 50க்கும் மேற்பட்ட துணி கடைகளில் திடீர் தீ விபத்து. 3 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர். இந்த தீ விபத்தில் ரூ.8 கோடி மதிப்பிலான ஆடைகள் எரிந்து நாசம். போலீசார் விசாரணை.


Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment