Advertisment

Tamil News Today Live: செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

Tamil News Today Updates- 27 February 2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
 Senthil balaji case Enforcement Directorate to not grant bail and urge to order speedy trial Madras High Court Tamil News

Tamil News Live Update

 Tamilnadu: பெட்ரோல்,  டீசல் விலை

Advertisment

சென்னையில் 647-வது நாளாக பெட்ரோல்,  டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம் 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 77.37% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 84.06% நீர் இருப்பு உள்ளது. புழல் - 70.24%, பூண்டி - 77.13%,  சோழவரம் - 69.38%, கண்ணன்கோட்டை - 94.4%

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

  • Feb 27, 2024 23:05 IST
    'லோக்பால்' அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கன்வில்கர் நியமனம்

    ஊழல் தடுப்பு ஆணையமான 'லோக்பால்' அமைப்பின் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கன்வில்கரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் நீதிபதிகள் லிங்கப்ப சுவாமி, சஞ்சய் யாதவ், ரிது ராஜ் அவாஸ்தி ஆகியோர் நீதிக்குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, குஜராத் முன்னாள் தலைமைச் செயலாளர் பங்கஜ் குமார், அஜர் திர்கே ஆகியோர் நீதிக்குழு சாரா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 27, 2024 23:04 IST
    10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுமார் ₹10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்  

    ரூ7300.54 கோடி செலவில் நிறுவப்பட்டுள்ள 20 புதிய துணை மின் நிலையங்கள், ரூ209 கோடி செலவில் 67 துணை மின் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட 69 மின் மாற்றிகளை தொடங்கி வைத்தார் .

     சென்னை சென்ட்ரல் பகுதியில் மத்திய சதுக்கத் திட்டத்தில் அரசு பொதுமருத்துவமனை அருகே ரூ9.75 கோடி செலவில் கட்டப்பட்ட சுரங்க நடைபாதையை திறந்து வைத்தார் .

    வருவாய்த்துறை சார்பில் ரூ12.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு அலுவலக கட்டடங்களை திறந்து வைத்தார் .

    மேலும், மருத்துவத்துறை, உயர்கல்வித்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளின் கீழ் புதிய கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்



  • Feb 27, 2024 21:37 IST
    சி.பி.எம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்

    தமிழ்நாட்டில் ஒருபோதும் ஆட்சியில் இல்லை என்றாலும் பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு இருக்கிறது என பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆனால், புயல் வெள்ளம் என தமிழ்நாடு இயற்கை இடர்பாடுகளால் தவித்தபோது இதயத்தில் இரக்கமே இல்லாமல் நடந்துகொண்ட ஆட்சிதான் மோடி ஆட்சி என்பதை தமிழ்நாட்டு மக்கள் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்..



  • Feb 27, 2024 21:32 IST
    மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்

    சிவகங்கை எஸ்.பி. ஆக டோங்கரே பிரவீன் உமேஷ், மதுரை எஸ்.பி.யாக அர்விந்த், சென்னை பெருநகர காவல் அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்துறை உத்தரவு



  • Feb 27, 2024 21:31 IST
    ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்தவர்களுக்கு வெகுமதி

    ரயிலை நிறுத்தி பெரும் விபத்தை தவிர்த்த புளியரையைச் சேர்ந்த சண்முகையா-வடக்குத்தியாள் தம்பதியை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி அறக்கட்டளை சார்பில் ₹1 லட்சம் வெகுமதி வழங்கினார்



  • Feb 27, 2024 20:29 IST
    செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

    சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.  முதலில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 2வது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்  செந்தில் பாலாஜி. இந்த ஜாமின் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.



  • Feb 27, 2024 19:57 IST
    போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் : அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

    சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் தேர்வு காலமாக இருப்பதால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைவதை கருத்தில் கொண்டு, பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



  • Feb 27, 2024 19:55 IST
    ஈ.பி.எஸ் உடன் நடிகை கஸ்தூரி சந்திப்பு

    சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், நடிகை கஸ்தூரி சந்திப்பு.  இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்தியன் உடன் இருந்தனர்



  • Feb 27, 2024 18:54 IST
    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே - செல்வபெருந்தகை சந்திப்பு

    டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், தேர்தல் பணி ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்



  • Feb 27, 2024 18:18 IST
    ரஜினியுடன் கைகோர்க்கும் பாலிவுட் தயாரிப்பாளர் கிக்

    ரஜினியுடன் கைகோர்க்கும் பாலிவுட் தயாரிப்பாளர் கிக் ,பாகி, ஹவுஸ்புல்,படங்களை தயாரித்த சஜித் நதியத்வாலா தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்



  • Feb 27, 2024 17:32 IST
    தமிழ்நாட்டுக்காக ஒரு ரூபாயாவது கொடுத்தாரா பிரதமர் மோடி? தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

    சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய தயாநிதி மாறன் எம்.பி. "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்காக ஒரு ரூபாயாவது கொடுத்தாரா பிரதமர் மோடி?" என கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Feb 27, 2024 16:57 IST
    மதுரையில் பலத்த பாதுகாப்பு 

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பிரதமர் மோடி இன்றிரவு சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதுடன், அப்பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன

     



  • Feb 27, 2024 16:44 IST
    ரூ. 7.80 கோடி மதிப்புள்ள நிலம் மீட்பு 

    நெல்லை சந்திப்பு கைலாசநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 7.80 கோடி மதிப்புள்ள நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர் கொக்கிரகுளம் பகுதியில் 78 செண்ட் நிலத்தில் பாலையா என்பவர் பயன்படுத்தி வந்த நிலையில், அவர் பல ஆண்டுகளாக உபயோக வரியை செலுத்தாமல் இருந்துள்ளார். இதனை அடுத்து, விசாரணை நடத்திய அதிகாரிகள் நீதிமன்றம் மூலம் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்தனர்



  • Feb 27, 2024 16:43 IST
    சுகாதார ஆய்வாளாருக்கு  3 ஆண்டு சிறை 

    தஞ்சாவூர் மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக இருந்த தாமஸ் பெர்னாட்ஷா கடந்த 2016ம் ஆண்டு இறப்பு சான்றிதழ் வழங்க ரூ. 2000 லஞ்சம் பெற்ற வழக்கில் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3000 அபராதம் விதித்து கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 



  • Feb 27, 2024 16:00 IST
    அண்ணாமலையின் கடை போனியாகவில்லை - ஜெயக்குமார்

    "பா.ஜ.க-வில் மாற்று கட்சியினரை சேர்க்க நேற்று அண்ணாமலை கடை விரித்தார், அதில் போனியே ஆகவில்லை.  எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் வருகின்றனர். அண்ணாமலையைப் போல ஆள் பிடிக்கும் வேலையை அ.தி.மு.க செய்யாது" என்று முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 



  • Feb 27, 2024 15:52 IST
    தமிழருவி மணியன் அறிவிப்பு

    “தமிழ்நாட்டில் பாஜக எங்கே இருக்கிறது என்ற நிலை மாறி எங்கும் இருக்கிறது என்ற நிலை உள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக,  ஒழுக்கமும் நேர்மையும் உண்மையும் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்டுள்ள காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்” என்று பல்லடம் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார். 



  • Feb 27, 2024 15:22 IST
    ரூ. 32 லட்சம் அபராதம் ஐகோர்ட் உத்தரவு 

     

    சென்னை மாநகராட்சி, சி.எம்.டி.ஏ., மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆழ்வார்ப்பேட்டை தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு என மொத்தமாக ரூ. 32 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    சென்னை ஆழ்வார்பேட்டையில் திட்ட அனுமதி விண்ணப்பம் நிலுவையில் உள்ள நிலையில், இரவு நேரங்களில் ஒலி மாசு ஏற்படும் வகையில் கட்டுமானப்பணிகள்  மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உத்தரவிட்டுள்ளது. 

    சென்னை மாநகராட்சிக்கு ரூ.5 லட்சமும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு ரூ. 5 லட்சமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரூ. 2 லட்சமும், தனியார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் அபாரம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்



  • Feb 27, 2024 15:12 IST
    'எதிர்க்கட்சிகளின் குறிக்கோள் என்னை குறித்து அவதூறு பரப்புவது தான்' - கேரளாவில் மோடி பேச்சு

    கேரளா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, "2024-ல் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி, இதை எதிர்க்கட்சிகளே ஏற்றுக் கொண்டுள்ளன; எதிர்க்கட்சிகளின் குறிக்கோள்  என்னை குறித்து அவதூறு பரப்புவது தான். கேரள மக்கள் எனக்கு கொடுக்கும் அன்பைத் திருப்பித் தருவதற்கு கடினமாக முயற்சி செய்கிறேன். 

    வரும் மக்களவைத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதே பாஜக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியின் முழக்கம். கேரள மாநிலத்தை மத்திய பாஜக அரசு ஒருபோதும் புறக்கணிக்காது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு இணையாக கேரளா மாநில அரசும் உள்ளன" என்று கூறியுள்ளார். 



  • Feb 27, 2024 15:05 IST
    இ.பி.எஸ் ருசிகர பதில் 

     

    பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இரண்டு பேர் இன்று அ.தி.மு.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு, “நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. இதை யார் கூறினார்?” என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். 

    கோவையில் அ.தி.மு.க எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜுனன் இன்று பேட்டியளித்துள்ளதாக செய்தியாளர்கள் கூற, “வந்தால் சந்தோஷம்தான். அவ்வாறு வருவதாக இருந்தால் சொல்லி அனுப்புகிறேன்” என பதிலளித்தார். 



  • Feb 27, 2024 14:55 IST
    ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய ஸ்டாலின் தம்பதிக்கு வெகுமதி அறிவிப்பு

    ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி அறிவித்துள்ளார். “தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 27, 2024 14:55 IST
    ரயில் விபத்தை தடுத்து நிறுத்திய ஸ்டாலின் தம்பதிக்கு வெகுமதி அறிவிப்பு

    ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெகுமதி அறிவித்துள்ளார். “தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று ரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினருக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்கப்படும்” என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 



  • Feb 27, 2024 14:30 IST
    பால் ஊற்றிக் கழுவிய காங்கிரஸ் 

    திருப்பூர் பாத யாத்திரை நடத்திய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்துச் சென்ற விடுதலைப் போராட்ட வீரர் திருப்பூர் குமரன் சிலையை, இளைஞர் காங்கிரசார் பால் ஊற்றிக் கழுவினர். மேலும், பிரதமர் மோடியின் இன்றைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 



  • Feb 27, 2024 14:24 IST
    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

    "உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது, இம்மாதிரியான செயலை மேற்கொள்ள கூடாது" என பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். 

     



  • Feb 27, 2024 14:01 IST
    தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

    சென்னை தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளராக வீ.ஜெகதீசன் ஆகியோரை நியமித்து அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்



  • Feb 27, 2024 13:45 IST
    சிதம்பரத்தில் தான் போட்டியிடுவேன் - திருமாவளவன் உறுதி

    என் சொந்த தொகுதியான சிதம்பரத்தில்தான் போட்டியிடுவேன். சந்தேகமே வேண்டாம் என வி.சி.க தலைவர் திருமாவளவன் உறுதியாக தெரிவித்துள்ளார்



  • Feb 27, 2024 13:32 IST
    பதவி ஆசையில் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார் விஜயதரணி: விஜய் வசந்த்

    விஜயதரணி பதவி ஆசையில் பா.ஜ.க.,வில் இணைந்துள்ளார் என காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்



  • Feb 27, 2024 12:58 IST
    பா.ஜ.க தானாக யாரையும் அழைக்கவில்லை – அண்ணாமலை

    பா.ஜ.க தானாக யாரையும் அழைக்கவில்லை. காலையில் இருந்து பா.ஜ.க.,வை பற்றி தான் பேசி வருகிறார்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Feb 27, 2024 12:26 IST
    2 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.,வில் இணைய உள்ளனர்; அ.தி.மு.க எம்.எல்.ஏ பரபரப்பு தகவல்

    பா.ஜ.க.,வில் இருந்து 2 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு இணைய உள்ளனர் என அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்



  • Feb 27, 2024 12:15 IST
    விண்வெளி செல்லும் வீரர்கள் யார்? அறிவிக்கிறார் மோடி

    ககன்யான் திட்டத்திற்காக தேர்வான விண்வெளி வீரர்களுக்கு பிரதமர் மோடி பேட்ஜ்கள் வழங்குகிறார். 4 பேரும் இந்திய விமானப்படையின் விமானிகள், அதில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் ஆவர். திருவனந்தபுரத்தில் உள்ள வி.எஸ்.எஸ்.சி.,யில் ககன்யான் திட்டத்தின் முன்னேற்றத்தை பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார்.



  • Feb 27, 2024 11:55 IST
    திருவாரூர் ஆழித் தேரோட்ட விழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

    திருவாரூர் தியாகராஜர் கோவிலின் ஆழித் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கொடி மரத்திற்கு பால், மஞ்சள், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பஞ்சவாத்தியம் இசைக்க கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. மார்ச் 21ஆம் தேதி ஆயில்யம் நட்சத்திர தினத்தில் ஆழித் தேரோட்டம் நடைபெற உள்ளது



  • Feb 27, 2024 11:45 IST
    ரயில் முன் பாய்ந்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை

    ராணிப்பேட்டை, வாலாஜா ரயில் நிலையத்தில் தனது இரு குழந்தைகளுடன் வெண்ணிலா(35) என்ற பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார். குடும்ப தகராறு காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.



  • Feb 27, 2024 11:32 IST
    என் மண் என் மக்கள் நிறைவு யாத்திரையை தொடங்கிய அண்ணாமலை

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நிறைவு யாத்திரையை தொடங்கியுள்ளார். 233வது தொகுதியாக திருப்பூரில் யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது. இன்றைய யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்



  • Feb 27, 2024 11:16 IST
    சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடா ராஜினாமா

    சமாஜ்வாதி கட்சியின் தலைமைக் கொறடாவான மனோஜ் பாண்டே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.



  • Feb 27, 2024 10:58 IST
    பா.ஜ.க- தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி

    மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்

    பல்லடத்தில் இன்று நடைபெற உள்ள பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார் அக்கட்சித் தலைவர் ஜான் பாண்டியன்.  அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்தது தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்



  • Feb 27, 2024 10:57 IST
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவனுக்கு ₹40 அதிகரித்து, ₹46,52-க்கும், ஒரு கிராம் தங்கம் ₹5815-க்கும் விற்பனை!



  • Feb 27, 2024 10:27 IST
    அ.தி.மு.க- தே.மு.தி.க பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி

    ராஜ்யசபா சீட் கேட்டு உறுதியாக நிற்கும் தேமுதிக. அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையில் தொடரும் இழுபறி. தேமுதிகவுக்கு ராஜ்யசபா பதவி வழங்க முடியாது - அதிமுக தரப்பு திட்டவட்டம்



  • Feb 27, 2024 10:26 IST
    மாநிலங்களவை தேர்தல்: கர்நாடகா, உ.பி-ல் வாக்குப் பதிவு தொடக்கம்

    நாடாளுமன்ற மாநிலங்களவையில் காலியாக உள்ள 56 எம்.பி. பதவிகள்

    சோனியா காந்தி, ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வு

    கர்நாடகா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 15 இடங்களுக்கு இன்று தேர்தல்

    உத்தர பிரதேசத்தில் 10 எம்.பி. இடங்கள் காலியாக உள்ள நிலையில் 11 பேர் போட்டி

    கர்நாடகாவில் 4 எம்.பி. இடங்கள் காலியான நிலையில் 5 பேர் போட்டி =வாக்குப்பதிவு தொடக்கம்

    போட்டி காரணமாக உ.பி., கர்நாடகாவில் இன்று மாநிலங்களவை எம்.பி தேர்தல்



  • Feb 27, 2024 10:21 IST
    ஜாபர் சாதிக் விவகாரம்: அ.தி.மு.க  போராட்டம் அறிவிப்பு

    மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - அதிமுக

    திமுக அரசைக் கண்டித்து மார்ச் 4-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்.  அ.தி.மு.க மாவட்ட மாணவர் அணி, மகளிர் அணி சார்பில் போராட்டம் 

    போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிக்-ஐ போலீசார் தேடும் செய்தி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது - ஈபிஎஸ்



  • Feb 27, 2024 09:46 IST
    ஏகனாபுரம் மக்களை கைது செய்தது பயங்கரவாதம்: சீமான்

    பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராடியவர்களை கைது செய்திருப்பது பயங்கரவாதம். கைதான ஏகனாபுரம் மக்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும்- நா.த.க சீமான்



  • Feb 27, 2024 08:58 IST
    56 இடங்களுக்கு இன்று மாநிலங்களவைத் தேர்தல்

    56 இடங்களுக்கு இன்று மாநிலங்களவைத் தேர்தல். பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் மற்றும் காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தேர்தல் 



  • Feb 27, 2024 08:26 IST
    பரந்தூர் போராட்டம்: 137 பேர் மீது வழக்குப் பதிவு

    பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு

    போராட்டக்குழு மற்றும் ஏகனாபுரம் கிராம மக்கள் என 137 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்தது காவல்துறை



  • Feb 27, 2024 07:56 IST
    பிரதமம் மோடி இன்று தமிழகம் வருகை

    இன்று தமிழகம் வருகிறார், பிரதமர் மோடி, மதுரையில் வாகன உற்பத்தி துறையில் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் இயக்க நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' இறுதி யாத்திரையில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி. 



  • Feb 27, 2024 07:55 IST
    ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் ஸ்டாலின்

    தமிழகத்தில் ரூ.10,417 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 

    ரூ.8,801 கோடியே 93 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

    ரூ.615 கோடியே 29 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment