Advertisment

Tamil News Updates: செஸ் ஒலிம்பியாட்- தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் நிதி வழங்கினார் ஸ்டாலின்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chess prize

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 191-பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

ஏரிகளின் நீர் நிலவரம்  

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 31.23% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் - 30.18% ; புழல் - 65.51% ; பூண்டி - 2.01% ; சோழவரம் - 5.55% ; கண்ணன்கோட்டை - 59.4%

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Sep 24, 2024 22:44 IST
    சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்தில் புகை வந்ததால் அச்சம்

    சென்னையில் இருந்து 280 பயணிகளுடன் இரவு 9.40 மணிக்கு துபாய் செல்ல இருந்த விமானத்தில் புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகையைக் கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.



  • Sep 24, 2024 22:41 IST
    யூடியூபர் வாராகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

    சென்னையில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ள யூடியூபர் வாராகி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாப்பூரில் சார் பதிவாளரை மிரட்டியது உள்ளிட்ட பல வழக்குகள் உள்ள நிலையில், வாராகி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் வாராகி மீது புகார் அளித்துள்ளனர்.



  • Sep 24, 2024 21:52 IST
    லாபதா லேடீஸ் படத்தை ஆஸ்கருக்கு பரிந்துரைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாது - ஜெயக்குமார்

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கொட்டுக்காளி, தங்கலான், வாழை, மஹாராஜா, உள்ளிட்ட கதையும் கருத்தும் தாக்கமும் மிகுந்த தமிழ் படங்கள் ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரைப்பதற்கான பட்டியலில் இருந்தும் இந்தி திரைப்படம் என்ற ஒரே காரணத்திற்காக லாபதா லேடீஸ் திரைப்படத்தை தேர்வு செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. லாபதா லேடீஸ்  படம் பல்வேறு கருத்துகளை நகைச்சுவையோடு சொன்னாலும் உணர்வுப் பூர்வமாக இல்லை என்பதே உண்மை. என்ன மொழியில் படம் உள்ளது என்பதைப் பார்க்காமல் திரைமொழியில் மக்கள் வாழ்வியலுடன் உணர்ந்து பார்த்து படங்களை அங்கீகரிப்பதே ஆஸ்கருக்கு நாம் போடும் அடித்தளம். இந்தியாவில் மட்டும்தான் ஆஸ்கர் விருதிற்கான தேர்வின் விதத்தினால் திரைப்படம் இங்கேயே தோற்றுவிடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.



  • Sep 24, 2024 21:35 IST
    செஸ் ஒலிம்பியாட்- தமிழக வீரர்களுக்கு ரூ.90 லட்சம் நிதி வழங்கினார் ஸ்டாலின் 

    செஸ் ஒலிம்பியாட் தொட்ரில் தங்கம் வென்ற தமிழக வீரர் வீராங்கனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 90 லட்சம் வழங்கினார். குகேஷ், பிரக்ஞானந்தா, வைஷாலி ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். அணித் தலைவர் ஸ்ரீநாத் நாராயணனுக்கு ரூ. 15 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 



  • Sep 24, 2024 20:49 IST
    மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்

    நடிகர் ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி மீது அடையாறு துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் உள்ள தனது உடைமைகளை மீட்டுத் தரக்கோரி ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார். விவாகரத்து விவகாரம் சர்ச்சையான நிலையில், மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி புகார் அளித்துள்ளார்.



  • Sep 24, 2024 20:46 IST
    மக்களவைத் தேர்த்லில் தி.மு.க வெற்றிபெற மோடியும் காரணம் -  உதயநிதி 

    சென்னையில் தி.மு.க மூத்த முனோடிகள் 1,000 பேருக்கு பொற்கிழி வழங்கி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு: “கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மூன்று காரணங்களில் ஒன்று பிரதமர் மோடி; வெள்ளம் புயலுக்கு வராத மோடி தேர்தல் அறிவித்ததும் 8 முறை தமிழகத்திற்கு வந்தார். தி.மு.க அரசின் சாதனைகள், தி.மு.க முன்னோடிகளும் தேர்தல் வெற்றிக்கு காரணம்; வரும் 2026 தேர்தலில் தி.முக வெற்றி பெற நாம் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.



  • Sep 24, 2024 20:39 IST
    லெபனான் - இஸ்ரேல் எல்லையில் விரிவாக்கத்தை குறைக்க இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் அழைப்பு

     

    பிரிட்டிஷ் பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர் செவ்வாயன்று, லெபனான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான எல்லையில் கட்டுப்பாடு மற்றும் விரிவாக்கத்தைக் குறைக்க அழைப்பு விடுத்தார், இஸ்ரேல் லெபனான் தலைநகரின் ஹெஸ்பொல்லா கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தொடர்ந்து இரண்டாவது நாளாக தாக்கியது.

    "இன்று மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையில் கட்டுப்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு மீண்டும் அழைப்பு விடுக்கிறேன். அனைத்து தரப்பினரும் விளிம்பிலிருந்து பின்வாங்குமாறு நான் மீண்டும் அழைக்கிறேன்” என்று ஸ்டார்மர் வடமேற்கு இங்கிலாந்தின் லிவர்பூலில் தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் ஒரு உரையில் கூறினார்.



  • Sep 24, 2024 20:32 IST
    பெய்ரூட்டில் குறி வைத்து தாக்குதலை நடத்தியது இஸ்ரேலிய ராணுவம் 

    இஸ்ரேல்-ஹெஸ்பொல்லா போர்: லெபனானில் நூற்றுக்கணக்கான ஹெஸ்பொல்லா இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் தனது மிகப் பரவலான வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது, இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உட்பட 558 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,835 பேர் காயமடைந்தனர்.



  • Sep 24, 2024 19:44 IST
    இயக்குநர் மோகன் ஜி பிணையில் விடுவிப்பு 

    பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய இயக்குநர் மோகன் ஜி மீது இந்து அறநிலையத் துறை தொடர்ந்த வழக்கில், மோகன் ஜிக்கு திருச்சி நீதிமன்றம் பிணை வழங்கியது. மோகன் ஜி கைதுக்கு முகாந்திரம் உள்ளது. ஆனல், கைது செய்த விதம் சட்ட விரோதமானது என்று நீதிபதி தெரிவித்தார். நேரில் ஆஜராஜ நோட்டீஸ் அளித்த போலீஸ் அவகாசம் அளிக்காமல் முன் கூட்டியே கைது செய்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.



  • Sep 24, 2024 18:48 IST
    சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளையும் ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு 

    சென்னை திருநீர்மலை பகுதியில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளையும் ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருநீர்மலை பகுதியில் செயல்படும் அனைத்து கல் குவாரிகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



  • Sep 24, 2024 18:44 IST
    தமிழ்நாட்டில் செப்டம்பரிலும் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்!

    தமிழ்நாட்டில் செப்டம்பர் மாதத்திலும் 7 இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டைக் கடந்து பதிவாகியுள்ளது. மதுரை விமான நிலையம் - 105, மதுரை நகர்ப் பகுதி 104, திருச்சி 102, ஈரோடு 101, நாகப்பட்டினம் 101, கரூர் பரமத்தி - 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.



  • Sep 24, 2024 17:56 IST
    சேகூர் யானைகள் வழித்தட நில விவகாரம்: விசாரணைஅக்டோபர் ம் தேதிக்கு தள்ளிவைப்பு

    நீலகிரி மாவட்டம் சேகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள ரிசார்ட்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் நியமித்த நீதிபதி குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கைவன பாதுகாப்பு குறித்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவசேகூர் யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ள நிலங்களை தனியார் வனமாக அரசு அறிவித்தபின்அப்பகுதியில் நிலங்கள் வாங்கி இருந்தால் அது செல்லாது என நீதிபதி வெங்கட்ராமன் ஆணை பிறப்பித்துள்ளார். இவ்வழக்கு விசாரணைஅக்டோபர் ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



  • Sep 24, 2024 17:54 IST
    குட்கா புகையிலை பொருட்கள் கடத்திவர் சென்னையில் கைது

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் குட்கா புகையிலை பொருட்கள் கடத்தி வந்த தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நபர் சென்னை திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்நடைபெற்ற சோதனையில் கடத்தல்காரர்கள் பிடிபட்டனர்.



  • Sep 24, 2024 17:52 IST
    மாணவி புகைப்படத்தை மார்பிங் செய்த மாணவர்கள் மீது போக்சோ வழக்கு

    சென்னை திருவெற்றியூரில், தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளின் புகைப்படங்களை மார்பிங் செய்த 3 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் பேரில், பள்ளி நிர்வாகம் மீதும், மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 24, 2024 17:49 IST
    திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது 5 பிரிவுகளில் வழக்கு

    அவதூறு வழக்கில் கைதான திரைப்பட இயக்குநர் மோகன், திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 24, 2024 17:25 IST
    இளைஞரிடம் பூணூல் அறுக்கப்பட்டதாக புகார்: விசாரணை நடைபெறுவதாக தகவல்

    நெல்லையில் இளைஞரிடம் பூணூல் அறுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை தொடர்கிறதுநெல்லை மாநகர காவல்துறை அறிக்கை மூலம் தகவல்சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்தில்புகாரில் தெரிவிக்கப்பட்டதை போன்று எதுவும் நடைபெற்றதாக காட்சிகள் இல்லை. சிசிடிவியில்புகார்தாரர் பொறுமையாக நடந்து வந்துதனக்கு தெரிந்தவர்களிடம் பேசி விட்டு திரும்பி செல்லும் காட்சிகள் மட்டுமே பதிவாகியுள்ளதுஇளைஞரிடம் பூணூலை அறுத்து சென்றதாக காவல்துறை விசாரணையில் புலப்படவில்லை என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Sep 24, 2024 17:24 IST
    தமிழகத்தின் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

    தமிழகத்தின் 11 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. என்.ஐ.ஏ. சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தடை செய்யப்பட்ட அமைப்பிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹிஸ்புத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆட்கள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, சென்னை, குமரி உட்பட 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை  நடத்தியதில், ஹமீது ஹுசைன் என்பவர் முக்கிய புள்ளியாக செயல்பட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டங்களை நடத்தி தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.



  • Sep 24, 2024 17:21 IST
    திருப்பதி லட்டு விவகாரம்: பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதில்

    திருப்பதி லட்டு விவகாரத்தில் நான் கூறியதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டது ஆச்சரியமாக இருக்கிறது.நான் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கிறேன். திரும்பி வந்ததும் பதிலளிக்கிறேன். நான் திரும்புவதற்குள் எனது சமூக வலைதள பதிவைபுரிந்து கொள்ள முடிந்தால் மகிழ்ச்சி என்று லட்டு சர்ச்சை விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் பதில் அளித்துள்ளார்.



  • Sep 24, 2024 17:19 IST
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம்

    ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டு வாங்கியது எனக்கு தெரியாது. சம்போ செந்திலோடு தனக்கு நேரடி தொடர்பு இல்லை. சம்போ செந்தில் கூட்டாளிகள் மூலம் கே.கே.நகர் பகுதியில் உள்ள குடோனில் 6 நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தேன்.  விஜயகுமார், முகிலன் மூலம் ஹரிஹரன் மற்றும் மொட்டை கிருஷ்ணாவிடம் நாட்டு வெடிகுண்டுகள் ஒப்படைக்கப்பட்டது என ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.



  • Sep 24, 2024 16:51 IST
    சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை

    சென்னை புறநகர்ப் பகுதிகளான தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர், பூவிருந்தவல்லி, போரூர், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது!



  • Sep 24, 2024 16:08 IST
    வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன் நாடு திரும்புவாரா?

    முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனா கட்சியின் எம்.பி.யாக இருந்த கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல் ஹசன், வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் நிகழ்ந்தபோது, கனடாவில் இருந்த நிலையில், அதன்பிறகு வெளிநாடுகளில் விளையாடி வருகிறார். இதனிடையெ தற்போது அவர் நாடு திரும்பினால் எந்த துன்புறுத்தலும் இருக்காது என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது,



  • Sep 24, 2024 16:04 IST
    குஜராத்தில் ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த 3 இளைஞர்கள் கைது

    குஜராத்தில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக ரயிலை கவிழ்க்க முயற்சி செய்த 3 இளைஞர்களையும் கைது செய்தது போலீஸ். தண்டவாளத்தில் இருந்த நட் மற்றும் போல்ட்கள் கழற்றப்பட்டு இருப்பதை பார்த்த ரயில்வே அதிகாரி ஒருவர், எச்சரித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 24, 2024 16:00 IST
    சென்னை துறைமுகத்தில் கிரேன் விபத்து

    சென்னை துறைமுகத்தில் கப்பலில் கண்டெய்னர்களை ஏற்றும்போது, கண்டெய்னர் பாரம் தாங்காமல்  கிரேன் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள் நிலையில், போதிய அளவு அனுபவம் இல்லாத ஆட்களை வைத்து, கிரேன் இயக்கப்படுவதால் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது.



  • Sep 24, 2024 15:26 IST
    உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நீதிபதி எஸ்.அல்லி நியமனம்

    சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உயர் நீதிமன்ற தலைமை பதிவாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமை பதிவாளராக இருந்த ஜோதிராமன், உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.



  • Sep 24, 2024 14:56 IST
    சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை!

    சென்னை விமான நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் பயணிகளை வழியனுப்ப, வரவேற்க வந்தவர்களுக்கு பெரும் பாதிப்படைந்துள்ளனர். 

    அதிகாரப்பூர்வமாக எந்த உத்தரவும் வராத நிலையில், பார்கிங் மேலாண்மை செய்யும் நிறுவன ஊழியர்கள் இரு சக்கர வாகனங்களை உள்ளே வரக்கூடாது என தடுப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மெட்ரோ நிலையம் உள்ள பார்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு நடந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது



  • Sep 24, 2024 14:43 IST
    லட்டு குறித்த பேச்சு - பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி

    லட்டு குறித்த பேச்சுக்கு நடிகர் கார்த்தி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரினார். மெய்யழகன் தெலுங்கு வெர்ஷன் விழாவில் லட்டு வேண்டுமா என கேட்ட தொகுப்பாளரிடம், 'அது ரொம்ப சென்ஸிடிவ், எனக்கு வேண்டாம்' என்று கார்த்தி கூறினார். மோத்தி லட்டாவது வேண்டுமா என மீண்டும் கேட்ட தொகுப்பாளரிடம், லட்டே வேண்டாம் என கார்த்தி பதில் கூறினார். 

    லட்டு குறித்து கார்த்தி பதில் சொன்ன போது அரங்கம் அதிர்ந்த சிரிப்பலை அடங்க வெகு நேரமானது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் கார்த்தி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

     



  • Sep 24, 2024 14:29 IST
    'அமைச்சரவை மாற்றம் துரைமுருகனுக்குதான் ஏமாற்றம்' - தமிழிசை 

    "தமிழக அமைச்சரவை மாற்றம் அமைச்சர் உதயநிதிக்கு ஏற்றமாகவும், அமைச்சர் துரைமுருகனுக்கு ஏமாற்றமாகவும் இருக்கும்" என்று பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 



  • Sep 24, 2024 14:27 IST
    உலகை உலுக்கும் லெபனான் - இஸ்ரேல் மோதல்

    லெபனான் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்த நிலையில்,  500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1,700க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பிராந்திய போரை முன்னெடுக்க இஸ்ரேல் திட்டமிடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வருகிறது. 



  • Sep 24, 2024 13:51 IST
    நடிகர் சித்திக்கிற்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ்

    பாலியல் புகாரில் மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.  சித்திக் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்கும் வகையில் காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. 2016ல் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்நடிகை நடிகர் சித்திக் மீது புகார் தெரிவித்தார். விசாரணையில், நடிகையும், சித்திக்கும் ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், முன்ஜாமின் கோரியும் சித்திக் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 



  • Sep 24, 2024 13:50 IST
    7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

     



  • Sep 24, 2024 13:49 IST
    வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    வங்கக்கடலில்  காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தரைக்காற்று மணிக்கு 30 - 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

     



  • Sep 24, 2024 13:08 IST
    திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன் தர்ணா

    திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் மடாதிபதிகள் மற்றும் இந்து அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள். திருமலையை காப்பாற்றுங்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை காப்பாற்றுங்கள் என முழக்கமிட்டு வருகிறார்கள். லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்த நபர்கள் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

    தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 

     



  • Sep 24, 2024 12:22 IST
    77 கிலோ குட்கா பறிமுதல்!

    தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான ஆரம்பாக்கத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 77 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் தாமோதரன் (53) மற்றும் மாலதி (43) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



  • Sep 24, 2024 12:21 IST
    வைத்திலிங்கம் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு

    அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன் பிரபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது ரூ. 33 கோடி வருமானத்திற்கு அதிகமாக (1058% அதிகம்) சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பு அனுமதிக்கு ரூ. 28 கோடி லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. 



  • Sep 24, 2024 12:18 IST
    காவலரிடம் சாதி ரீதியாக செயல்பட்ட எஸ்.ஐ. சஸ்பெண்ட்!

     

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். 

    காவலரிடம் சாதி ரீதியாக செயல்பட்டது உள்பட பல புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்றவர் தாக்கப்பட்ட வழக்கில், ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 



  • Sep 24, 2024 12:14 IST
    குமரி மீனவர்கள் 5 பேர் கைது: சிங்களப் படையினரின் அட்டகாசத்தை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்ப்பதா? -  ராமதாஸ் கண்டனம்

    பா.ம.க.  நிறுவனத் தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக்கடலில் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் பழுதாகி நின்ற விசைப்படகில் இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்திருக்கின்றனர். அவர்களின் மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. படகு கோளாறால் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த  தமிழக மீனவர்களைக் கூட  சிங்களக் கடற்படை  அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது.

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஒருபோதும் இந்திய - இலங்கை கடல்பகுதியில் மீன்பிடிக்க மாட்டார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தைச்  சேர்ந்த 5 மீனவர்கள் தங்களின் படகில் ஆந்திராவுக்கு சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள்   ஆந்திர மீனவர்கள்  என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செல்லும் வழியில் நெடுந்தீவு அருகில்  அவர்களின் படகு பழுதடைந்தது.  பழுதடைந்த படகை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது தான் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றி உதவி செய்வது தான் கடற்படைகளின் வழக்கமாகும். ஆனால், தமிழர்கள் என்றாலே வெறுப்புடன் அணுகும் சிங்களப்படை கைது செய்திருக்கிறது. மீனவர்கள் எந்த ஊரைச் சார்ந்தவர்களாக இருந்தாலும்  அவர்கள் கைது செய்யப்பட்டது தவறு.

     இந்திய - இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்தவர்களை சிங்களப் படையினர் கைது செய்வதை   இந்திய இறையாண்மையின் மீது தொடுக்கப்பட்ட போராகக் கருதி மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.  தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது தான் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்ததற்கு காரணம் ஆகும்.

    மீனவர்கள்  விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் இனியும் அலட்சியம் காட்டக்கூடாது.  இந்த சிக்கலில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். 



  • Sep 24, 2024 12:12 IST
    மதுரை: ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு  காய்ச்சல் 

    மதுரை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 3 பேருக்கு டெங்கு உட்பட 107 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெங்கு பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டெங்கு பாதிப்புக்கு ஆளானோரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்புடன் 48 பேர் வெளி நோயாளிகளாகவும், 59 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



  • Sep 24, 2024 11:54 IST
    நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

    பாலியல் புகாரில் சிக்கிய மலையாள நடிகர் சித்திக்கின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு, 2016ல் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டலுக்கு வரவழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் நடிகை புகார் கூறியிருந்தார். 

    விசாரணையில், நடிகையும், சித்திக்கும் ஹோட்டலில் தங்கியதற்கான ஆதாரங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், முன்ஜாமீன் கோரியும் சித்திக் வழக்கு தொடர்ந்த நிலையில் மனுவை நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது. 



  • Sep 24, 2024 11:52 IST
    நடிகை திரிஷா வழக்கு முடித்துவைப்பு

    அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக, நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம், மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்சினையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து வழக்கை நீதிமன்றம் முடிவைத்தது. 



  • Sep 24, 2024 11:50 IST
    துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

    வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி டிஸ்சார்ஜ். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் - சி.எம்.சி மருத்துவமனை நிர்வாகம் தகவல் கூறியுள்ளது.

    முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கடந்த மார்ச் 14ஆம் தேதி வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 6 மாதங்களுக்கு மேலாக தொடர் சிகிச்சை பெற்று வந்த துரை தயாநிதி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்



  • Sep 24, 2024 11:21 IST
    உதயநிதிக்கு து. முதல்வர் பதவி பற்றிய கேள்விக்கு ஸ்டாலின் பதில்

    "ஏமாற்றம் இருக்காது; மாற்றம் இருக்கும்" - அமைச்சரவை மாற்றம் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி தருவது தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.



  • Sep 24, 2024 10:51 IST
    குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு உத்தரவு

    போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள்  மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து அரசாங்க நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க அறிவுற்ததல். அனைத்து மாவட்ட பதிவாளர்கள், சார் பதிவாளர்களுக்கு பதிவுத் துறை தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 

     



  • Sep 24, 2024 10:19 IST
    வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் ஒரு கிராம் ரூ.7,000 விற்பனை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் 20 ரூபாய் அதிகாரித்து 7 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Sep 24, 2024 09:46 IST
    சேலம் மாவட்ட ஆட்சியருக்கு பிடிவாரண்ட்

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத சேலம் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பிடிவாரண்ட் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 



  • Sep 24, 2024 08:37 IST
    பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பங்கேற்பேன்: பொன்முடி

    சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நானும் கலந்து கொள்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். 

     



  • Sep 24, 2024 07:57 IST
    12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

    சென்னை, புதுக்கோட்டை, குமரியில் என்ஐஏ சோதனை. சென்னை, தாம்பரம், புதுக்கோட்டை கன்னியாகுமரி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை. ஹிஷாப் உத் தஹீரிர் என்ற தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்த வழக்கில் என்ஐஏ தேடுதல் வேட்டை, இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் கூறப்படுகிறது. 



Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment