Advertisment

Tamil News Updates: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Tamil Nadu News, Tamil News LIVE, PM Modi Tamil Nadu visit, Khelo India Youth Games 2024, Vadodara Gujarat boat accident – 19 January 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu rains

Tamil News Today

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamil news updates

பிரதமர் மோடி இன்று திருச்சி பயணம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி பயணம்

கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு – 3,700 போலீசார் கண்காணிப்பு

திருச்சி பயணத்தை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் செல்கிறார் பிரதமர் மோடி

 • Jan 20, 2024 07:42 IST
  5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

  அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்



 • Jan 20, 2024 01:13 IST
  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

  ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 680 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.  இதில்  ஆளுநரை தாக்க முயற்சித்தல் என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



 • Jan 19, 2024 21:11 IST
  விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி

  தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெறும் நிகழ்வில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் பங்கேற்பு



 • Jan 19, 2024 21:10 IST
  பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  கேலோ இந்தியா தொடக்க விழாவுக்கு பின் பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.  நேரு விளையாட்டு அரங்கில் சுமார் அரை மணி நேரமாக சந்திப்பு நீடித்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், வெள்ள நிவாரணம் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்துவதாக தகவல்.



 • Jan 19, 2024 21:07 IST
  ஒலிம்பிக் ஆக்கி போட்டியில் பங்கேற்றும் வாய்ப்பை இழந்தது இந்திய மகளிர் அணி

  பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக ஹாக்கி தகுதிச்சுற்று போட்டியில், 3-வது இடத்திற்கான ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய மகளிர் ஆக்கி அணி, ஜப்பான் அணியிடம் தோல்வியடைந்ததால், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்தது



 • Jan 19, 2024 20:36 IST
  பொங்கல் தொகுப்பை பெறாத 25 சதவீத குடும்பங்கள்; எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

   

  “2024ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் தொகுப்பை சுமார் 25% குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத நிலையில், 5 நாட்களிலே நிறுத்திய தமிழ்நாடு அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்;
  மேலும், அறிவிக்கப்பட்ட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பொங்கல் பரிசுப் பணம் மற்றும் பொங்கல் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளும்வரை தொடர்ந்து வழங்க தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



 • Jan 19, 2024 20:21 IST
  தமிழக அரசுக்கு இலங்கை ஆளுநர் பாராட்டு

  தமிழ்நாட்டு மக்கள் பெறும் அனைத்து நலத்திட்டங்களையும் இலங்கை தமிழர்களும் பெறுகிறார்கள் என இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறினார்.



 • Jan 19, 2024 19:56 IST
  மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி; மு.க. ஸ்டாலின்

   

  மணிப்பூர் வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுத்தது திராவிட மாடல் அரசு என கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



 • Jan 19, 2024 19:53 IST
  டிடி தமிழ் தொலைக்காட்சி தொடக்கம்


  புத்தம் புதிய நவீன வசதிகளுடன் மாற்றியமைக்கப்பட்ட டிடி பொதிகை தொலைக்காட்சி டிடி தமிழ் என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.



 • Jan 19, 2024 19:23 IST
  திருவள்ளூவர், வேலு நாச்சியாரை உதாரணம் காட்டிய மோடி

  பிரதமர் நரேந்திர மோடி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கிவைத்தார்.
  அப்போது உரையாற்றிய அவர், திருவள்ளூவர், வேலு நாச்சியாரை உதாரணம் காட்டிப் பேசினார்.



 • Jan 19, 2024 19:21 IST
  ராமர் கோவில் திறப்பு; புதுச்சேரியில் அரை நாள் விடுமுறை

   

  அயோத்தி ராமர் கோயில் ஜன.22ஆம் தேதி திறக்கப்படும் நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



 • Jan 19, 2024 19:02 IST
  வணக்கம் சென்னை... தமிழில் உரையைத் தொடங்கிய மோடி

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி வணக்கம் சென்னை... தமிழில் உரையைத் தொடங்கினார்.



 • Jan 19, 2024 18:56 IST
  கேலோ இந்தியா ஜோதியை ஏற்றி வைத்தார் மோடி

  விளையாட்டு வீரர்கள் வழங்கிய கேலோ இந்தியா ஜோதியை ஏற்றி வைத்தார் பிரதமர் மோடி



 • Jan 19, 2024 18:53 IST
  ஒளிபரப்புத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

   

   

   

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடங்க விழாவில், பிரதமர் மோடி ஒளிபரப்புத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீரில் 4 தூர்தர்ஷன் ஒளிபரப்ப்பு கோபுரங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 12 மாநிலங்களில் 26 பண்பலை கோபுரக்களுக்கு அடிக்கல் நாட்டினார். பொதிகைத் தமிழ் டிடி தமிழ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.



 • Jan 19, 2024 18:48 IST
  அன்பு பாதையையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வலிமை விளையாட்டுக்கு உண்டு - ஸ்டாலின் பேச்சு

   

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு: “எல்லாருக்கும் எல்லாம் என்பதை உள்ளடக்கமாகக் கொண்டது திராவிட மாடல் அரசு. இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உயர்த்துவதே தமிழக அரசின் குறிக்கோள். அனைத்து துறைகளிலும் முதன்மை இடம் பெற உழைத்துக்கொண்டிருக்கிறோம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நமது இலக்கு. இந்த விழாவைப் பொறுப்பேற்று நடத்தும் அமைச்சர் உதயநிதியைப் பாராடுகிறேன். 

  மணிப்பூர் விளையாட்டு வீரர்களை அழைத்து தமிழ்நாட்டில் பயிற்சி கொடுத்தோம். அவர்களில் சிலர் இந்த கேலோ இந்தியா போட்டியில் பங்கேற்றுள்ளனர். கேலோ இந்தியா விளையாட்டு லோகோவில் திருவள்ளுவர், வேலு நாச்சியார் படங்கள் இடம்பெற்றுள்ளன. அன்பு பாதையையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்கும் வலிமை விளையாட்டுக்கு உண்டு. ” என்று கூறினார்.



 • Jan 19, 2024 18:39 IST
  தமிழ்நாடு மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளை திறமையாக நடத்தியுள்ளது - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பேச்சு: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 40-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளது. விளையாட்டில் இந்தியாவை தலைசிறந்த நாடாக உருவாக்க உழைத்து வருகிறோம். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் இந்திய விளையாட்டுத்துறை வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழ்நாடு மிகப் பெரிய விளையாட்டுப் போட்டிகளை திறமையாக நடத்தியுள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட போட்டிகளை நடத்தியுள்ளது. ஆசியப் போட்டி வெற்றிகளுக்கு கேலோ இந்தியாவே அடித்தளம். திறமையை வளர்கக்வே கேலோ இந்தியா நடத்தப்படுகிறது. பதக்கங்களுக்காக அல்ல என்று பேசினார்



 • Jan 19, 2024 18:29 IST
  பாரதத்தின் தங்கங்களே விளையாட்டுச் சிங்கங்களே - கலைகட்டிய கலைநிகழ்ச்சி

   


  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா கலைநிகழ்ச்சிகளுடன் கலைகட்டியது. பாரதத்தின் தங்கங்களே விளையாட்டுச் சிங்கங்களே என்ற பாடல் பாடப்பட்டது. தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் இருந்தது.



 • Jan 19, 2024 18:21 IST
  விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது - உதயநிதி ஸ்டாலின்

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முன்னேறியுள்ளது என்று கூறினார்.



 • Jan 19, 2024 18:17 IST
  உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை

  நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.



 • Jan 19, 2024 18:14 IST
  மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்டாலின்

  பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.



 • Jan 19, 2024 18:11 IST
  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா ஆரம்பம்

  நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.



 • Jan 19, 2024 18:07 IST
  கரம்கோர்த்து மேடைக்கு வந்த ஸ்டாலின் - மோடி 

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க நேரு விளையாட்டு அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு பிரதமர் மோடி - முதல்வர் மு.க. ஸ்டாலின் இருவரும் கரம் கோர்த்துக்கொண்டு வந்தனர்.



 • Jan 19, 2024 17:55 IST
  நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார் மோடி

  பிரதமர் நரேந்திர மோடி, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக அடையாறு ஐ.என்.எஸ்-ல் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தார்.



 • Jan 19, 2024 17:52 IST
  நேரு ஸ்டேடியம் வந்தடைந்தார் மோடி

  பிரதமர் நரேந்திர மோடி அடையாறு ஐ.என்.எஸ்-ல் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தார்.



 • Jan 19, 2024 17:47 IST
  வழிநெடுக கலைநிகழ்ச்சிகளை ரசித்தபடி வரவேற்பைப் பெற்ற மோடி

   

  அடையாறு ஐ.என்.எஸ்-ல் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சாலை மார்க்கமாகப் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு, வழிநெடுக பா.ஜ.க-வினர் கலைநிகழ்ச்சி நிகழ்த்தி, மலர்தூவி வரவேற்பு அளித்தனர்.



 • Jan 19, 2024 17:36 IST
  பிரதமர் மோடிக்கு மக்கள் வழிநெடுக மலர் தூவி வரவேற்பு

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஐ.என்.எஸ் அடையாறில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு வாகனத்தில் செல்லும் பிரதமர் மோடிக்கு வழிநெடுக மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.



 • Jan 19, 2024 17:34 IST
  ஐ.என்.எஸ் அடையாறில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு புறப்பட்டார் மோடி

  கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைக்க ஐ.என்.எஸ் அடையாறில் இருந்து நேரு ஸ்டேடியத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.



 • Jan 19, 2024 17:29 IST
  மு.க. ஸ்டாலின் வாகன அணிவகுப்பு நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தடைந்தது

  நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மு.க. ஸ்டாலின் வாகன அணிவகுப்பு நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்தடைந்தது.



 • Jan 19, 2024 17:26 IST
  அடையாறு ஐ.என்.எஸ்-ல் பிரதமர் மோடிக்கு வரவேற்பு

  அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு தமிழக அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி, டி.ஜி.பி சங்கர் ஜிவால், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் வரவேற்பு அளிக்கின்றனர்.



 • Jan 19, 2024 17:21 IST
  அடையாறு ஐ.என்.எஸ் வந்தடைந்தார் பிரதமர் மோடி

  சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்குப் பிரதமர் மோடி வந்தடைந்தார்.



 • Jan 19, 2024 16:47 IST
   சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி

   

  பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டார் பிரதமர் மோடி. சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கிறார். 



 • Jan 19, 2024 16:36 IST
  அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு

  அமைச்சர் பெரியகருப்பன் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கை நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குக்கு 4 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



 • Jan 19, 2024 16:11 IST
  நடிகர் விஷால் குற்றச்சாட்டு

  "கடனை திரும்ப செலுத்தவில்லை என தனக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது" என்றும், தனக்கான பட வாய்ப்புகளை லைகா தடுக்க நினைப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷால் குற்றம் சாட்டியுள்ளார். 



 • Jan 19, 2024 16:06 IST
  பிப்.7ல் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை - போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தகவல்

  'போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடந்த முத்தரப்புப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 7ம் தேதிக்கு தள்ளிவைப்பு. நீதிமன்ற வழிகாட்டுதல்படி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது. அப்படி இருந்தாலும் அது கைவிடப்படும் என இன்றைய கூட்டத்தில் முடிவு. 

  பிப்ரவரி 6ம் தேதி வரவுள்ள இறுதி தீர்ப்பின் அடிப்படையில், அடுத்தகட்ட நகர்வு என அதிகாரிகள் உத்தரவாதம். தற்போதைய நிலையில் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை' என தொழிற்சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 



 • Jan 19, 2024 15:46 IST
  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விலகல் 

  அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் தாக்கல் செய்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு

  முதலமைச்சர் குறித்து வாட்ஸ்அப் குழுவில் அவதூறு பரப்பியதாக நடராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதற்கு எதிராக நடராஜ் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஏற்கனவே நடராஜ் மீது விசாரணை நடத்த நீதிபதி ஜெயச்சந்திரன் தடை விதித்திருந்தார்.



 • Jan 19, 2024 15:45 IST
  தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை 

  தியாகராஜர் ஆராதனை விழாவை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 



 • Jan 19, 2024 15:12 IST
  அ.தி.மு.க அலுவலகத்தில் லட்டு வழங்கி கொண்டாட்டம்

  அ.தி.மு.க பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

  இந்நிலையில், அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் லட்டு வழங்கி கொண்டாட்டப்பட்டு வருகிறது. 



 • Jan 19, 2024 15:10 IST
  சிவகங்கை கண்டிபட்டி மஞ்சுவிரட்டில் ஒருவர்பலி 

   

  சிவகங்கை மாவட்டம் கண்டிபட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் மஞ்சுவிரட்டில் கோவினிப்பட்டடி கிராமத்தை சேர்ந்த பார்வையாளர் பூமிநாதன்(56) மாடு முட்டி பரிதமாக உயிரிழந்தார். 



 • Jan 19, 2024 15:10 IST
  புதுச்சேரியில் பொது விடுமுறை

  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வரும் 22ஆம் தேதி பொது விடுமுறை என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 

  ஏற்கனவே மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய தொழில்துறை நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



 • Jan 19, 2024 14:48 IST
  தொடங்கியது தேர்தல் பணி - ஸ்டாலின் பதிவு!

  "பணி முடிப்போம்! வெற்றி வாகை சூடுவோம்!" என நாடாளுமன்ற தேர்தல் பணி தொடங்கியதாக முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

  INDIA வெல்லும் என்ற ஹேஸ்டேக்குடன் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் விவரங்களை சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின்  பகிர்ந்து பதிவிட்டுள்ளார். 



 • Jan 19, 2024 13:56 IST
  மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம்

  மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி விளக்கம் என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார் - எம்.எல்.ஏ கருணாநிதி அங்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியாது - எம்.எல்.ஏ கருணாநிதி இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது - எம்.எல்.ஏ கருணாநிதி மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவர்கள் அதை எடுப்பார்கள் - எம்.எல்.ஏ கருணாநிதி



 • Jan 19, 2024 13:55 IST
  அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம்

  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராம் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அதிமுகவில் இணைந்தார் என் குடும்பத்தினர் எப்போதும் அதிமுகவினர் தான், நன்றியை மறக்க கூடாது என்பதற்காக அதிமுகவில் இணைந்துள்ளேன் - காயத்ரி ரகுராம் என் தந்தை அதிமுகவில் பயணித்துள்ளார் - காயத்ரி ரகுராம்



 • Jan 19, 2024 13:34 IST
  ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர்

  ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் செல்வது போன்ற ஒத்திகை நிகழ்ச்சி பிரதமர் வருகையையொட்டி, ஸ்ரீரங்கத்தில் 3,700 போலீசார் பாதுகாப்பு ஸ்ரீரங்கத்தில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை பிரதமர் வருகையையொட்டி, கோவில் பட்டாச்சாரியார்கள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை



 • Jan 19, 2024 13:13 IST
  ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் : அடிக்கல் நாட்டினார் சசிகலா

  கொடநாடு எஸ்டேட்டில், ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டினார், சசிகலா



 • Jan 19, 2024 12:51 IST
  அம்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்

  சென்னை அம்பத்தூரில் போக்குவரத்து ஊழியர்களின் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம் தொழிலாளர் நலத்துறை தனி இணை ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தை



 • Jan 19, 2024 12:50 IST
  முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

  ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், ஜனவரி 23ல் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்



 • Jan 19, 2024 12:50 IST
  அதிமுக பொதுச்செயலாளர்ஒபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

  அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவு தனக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கிற்கு தடை கோரி எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு



 • Jan 19, 2024 12:34 IST
  தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு: வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வ

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி 5 வயது சிறுமி உயிரிழப்பு பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய போது, சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார் மாணவி அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார் வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்



 • Jan 19, 2024 12:12 IST
  மன்சூர் அலிகானுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்

  மானநஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த அவரது கோரிக்கையை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கியது உயர் நீதிமன்றம்



 • Jan 19, 2024 12:10 IST
  சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை

  "சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை." வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம் .ஆவணங்களை சரிபார்த்ததில் ஜெகநாதனின் நடவடிக்கைகளில் குற்ற நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - உயர் நீதிமன்றம் .வழக்கை ரத்து செய்ய கோரிய ஜெகநாதன் மனு மீதான விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைப்பு தடையை நீக்க வேண்டும் என்றால் தனி மனு தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment