பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஐ.பி.எல் இன்று
ஐபிஎல் 2023: சென்னையில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஐபிஎல் 2023: மும்பையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மும்பை – ராஜஸ்தான் அணிகள் மோதல்.
நீர் நிலவரம்
புழல் ஏரியில் நீர்இருப்பு 2,432 மில்லியன் கனஅடியாக உள்ளது; நீர்வரத்து 225 கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம். சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 778 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 471 மில்லியன் கனஅடியாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
சேலத்தில் ‘என் தமிழ்நாடு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி: “அப்போதும், இப்போதும் டெல்லி சொல்வதையே கேட்கிறது அ.தி.மு.க. அவசரநிலையின் போதுதான் அ.இ.அ.தி.மு.க என மாற்றப்பட்டது; அப்போதும் தி.மு.க தி.மு.க-வாகவே இருந்தது.” என்று கூறினார்.
திருவண்ணாமலையில், மீட்கப்பட்ட கோயில் நிலம் பக்தர்களுக்காக பயன்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வது குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வடக்கு கோபுரம் பகுதியில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே, இடிக்கப்பட்ட அம்மனி அம்மன் மடத்தை அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் எ.வ.வேலு பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்புள்ள இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு வேட்டை தொடரும் என்றும் தெரிவித்தார்.
தானியங்கி எந்திரத்தின் மூலம் மதுபானம் வகைகளை பெற முடியும் என்கிற ஒரு ஏற்பாட்டை அரசு செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், மதுவிலக்கை அமல்படுத்த முதல்வர் முன் வர வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையை பா.ஜ.க மே 1-ம் தேதி வெளியிடுகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் கரூர், தருமபுரி, திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார்: “நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது தொடர்பான பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிப்போம்; தற்போது தலைவர்கள் பலரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளனர்; தேர்தல் முடிந்ததும் கூட்டத்துக்கான இடத்தை முடிவு செய்வோம்; பாட்னாவில் நடந்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்” என்று கூறினார்.
இயக்குனர் மிஷ்கின்: “20 வருடம் ஆகியும் மாறாமல் அதே போல் இருக்கிறார் நடிகர் விஜய்; விஜய் – லோகேஷ் சேர்ந்தாலே பக்கா ஆக்ஷன் படமாக தான் இருக்கும். லியோ திரைப்படத்தில் நான் கூறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். இருந்தாலும், அது மிகவும் சிறப்பாக வரும்” என்று கூறினார்.
முதலமைச்சரின் கள ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு புதிய இயக்குநராக எஸ்.செல்வராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நாவலை படமாக்கும்போது கண்டிப்பா பலருக்கும் அதிருப்தி இருக்கத்தான் செய்யும் என ‘பொன்னியின் செல்வன் – 2’ படத்திற்கு எழும் விமர்சனங்கள் குறித்து நடிகர் பார்த்திபன் பதில் அளித்துள்ளார்
முதலமைச்சரின் கள ஆய்வுக்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு புதிய இயக்குநராக எஸ்.செல்வராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
சென்னை, சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டியை முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்து வருகிறார்
ராமநாதபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து சொகுசு கார் விபத்தில் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த யாருக்கும் எந்த விதமான காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
'தி கேரளா ஸ்டோரி’ படத்தின் ட்ரெய்லருக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். வகுப்புவாத பிரிவினை மற்றும் கேரளாவுக்கு எதிரான வெறுப்பை தூண்டுவதாக படத்தின் ட்ரெய்லர் உள்ளதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரியல் டவர் என்கிற கட்டிடத்தின் மொட்டை மாடியில் கரும்புகை சூழ தீ பற்றியது. மயிலாப்பூர், ராயப்பேட்டையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன
அ.தி.மு.க குறித்து கருத்து தெரிவிக்கும் பாஜகவினரை அண்ணாமலை கட்டுப்படுத்த வேண்டும். பாஜகவினரின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கத் தெரியும், வேண்டாம் என அடக்கி வைத்துள்ளோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை, சாந்தோம் பகுதியில் சிஎஸ்கே வீரர்களின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. சென்னையில், சற்று நேரத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க செல்ல முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர். கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள சிஎஸ்கே அணியின் பேருந்தை மீட்கும் பணியில் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ரவுடிகளை கொலை செய்ய முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது. கொலைசெய்ய முயன்ற 3 பேர் கொண்ட கும்பலை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த A+ சரித்திரப்பதிவேடு ரவுடி குள்ளகார்த்திக் என்பவர் முன்பகை காரணமாகத் தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (27), மற்றும் அவரது நண்பர் சந்தோஷ்-ஐ (24) தாக்க முயன்றுள்ளார்
ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச தடகள தொடரின், ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்திய வீரர் அப்துல்லா அபுபக்கர் 16.31 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார்
சென்னை குன்றத்தூர் அருகே வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து வண்டலூர் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்தது
மருத்துவக் கழிவுகளை முறையாக கையாளத தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை சித்திரை திருவிழாவையொட்டி 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்
சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் வரும் 3-ம் தேதி வரை கனமழை பெய்யும்
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
2024 தேர்தல் என்பது தேசிய ஜனநாயக கூட்டணிக்கான தேர்தல்
தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி, ஆனால் தேர்தலின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்”
எனக்கான பணியை பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் கூறி உள்ளனர்.
சென்னையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
சென்னை அடையாறில் நடைபெறும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு
நேரில் வந்து தனது வாக்கை செலுத்தினார் நடிகர் ரஜினிகாந்த்
நாளை தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா
தேரோட்டத்தையொட்டி பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம்
பிரதமர் மோடி உரையாற்றும் மனதின் குரல் 100வது நிகழ்ச்சியை ஐ.நா சபையில் திரையிட ஏற்பாடு
நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஒலிபரப்பவும் பா.ஜ.க நடவடிக்கை
22 இந்திய மொழிகள் உட்பட 63 மொழிகளில் திரையிடப்படுகிறது
பேனா நினைவு சின்னம் அமைந்தால், மெரினா என்ற அடையாளம் போய் பேனா கடற்கரை என மாறிவிடும்.
தானியங்கி எந்திரம் மூலம் மது வழங்கும் திட்டத்தை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
சென்னை ஓட்டேரியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள்
ஆண்களுக்கு இணையாக ஜல்லிக்கட்டு போட்டியில் வர்ணனையில் சக்கை போடு போட்ட அண்ணா பாரதி மற்றும்
மண்வாசம் லாவண்யா
“உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்”
மே தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
பஞ்சாப்: லூதியானாவின் கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயு கசிவு காரணமாக 9 பேர் உயிரிழப்பு
11 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஆய்வு
95% பணிகள் நிறைவடைந்துள்ள சென்னை கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் .
ஜூன் மாதம் கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தகவல்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; 8148 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் தற்போது 49,015 பேர் பாதிப்பில் உள்ளனர்/
திருவள்ளூர், மீஞ்சூர் அருகே கொதிக்கும் ரசத்தில் தவறி விழுந்து சதீஷ் என்ற இளைஞர் உயிரிழப்பு. திருமண மண்டபத்தில் உணவு பரிமாறிய போது விபரீதம்.
100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி
நாகை இந்திய கடற்படை அலுவலகத்தில் பரபரப்பு . வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இந்திய கடற்படை காவலர் ராஜேஷ் அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்பும், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்.