Advertisment

Tamil News Updates: சேலத்தில் இன்று காலை தொடங்குகிறது திமுக இளைஞரணியின் 2வது மாநில மாநாடு

Tamil Nadu News, Tamil News LIVE, PM Modi Tamil Nadu visit, Khelo India Youth Games 2024,–Tamil Nadu Rains Today- 20 January 2024- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சசா

Tamil News

Tamil Nadu Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பெட்ரோல் குண்டுவீச்சு - குற்றப்பத்திரிகை தாக்கல்        

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் 680 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.

ஆளுநரை தாக்க முயற்சித்தல் என்ற பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

  • Jan 20, 2024 23:11 IST
    சேலம் திமுக மாநாடு : கலை நிகழ்ச்சியில் உதயநிதி மகன்

    சேலம் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி!



  • Jan 20, 2024 21:16 IST
    தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

    வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம்

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்

    நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம்

    மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம்

    சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்



  • Jan 20, 2024 19:16 IST
    தி.மு.க இளைஞரணி மாநாடு; டிரோன் காட்சியால் வானில் ஜொலிக்கும் தலைவர்கள்

    தி.மு.க இளைஞரணி மாநாட்டுத் திடலில், டிரோன் காட்சியால் வானில் திராவிட இயக்கத் தலைவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், அம்பேத்கர், உதயநிதி ஸ்டாலின் காட்சிப்படுத்தப்பட்டனர்



  • Jan 20, 2024 18:55 IST
    இளைஞரணி மாநாட்டு சுடர்; ஸ்டாலினிடம் ஒப்படைத்த உதயநிதி

    சேலத்தில் இளைஞரணி மாநாட்டு சுடரினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார்.



  • Jan 20, 2024 18:30 IST
    கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும்; ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

    மெட்ரோ மற்றும் புறநகர் ரயில் நிலையம் வரும் வரை கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பேருந்துகள் செல்லும். கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கான இடம் இன்னும் தயாராகவில்லை என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது



  • Jan 20, 2024 18:18 IST
    22 தீர்த்தங்களில் நீராடிய மோடி

    ராமநாதசுவாமி கோவிலில் தரிசனம் செய்த மோடி 22 தீர்த்தங்களில் நீராடினார்



  • Jan 20, 2024 17:40 IST
    இயக்குநர் பார்த்திபனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு

    இயக்குநர் பார்த்திபனின் புதிய படத்திற்கு ‘TEENZ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.



  • Jan 20, 2024 17:28 IST
    சேலம் சென்றடைந்தார் மு.க.ஸ்டாலின்

    தி.மு.க இளைஞரணி மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றடைந்தார். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் தி.மு.க இளைஞரணியின் 2வது மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ளது



  • Jan 20, 2024 17:07 IST
    வேதா இல்லம் வழக்கு முடித்து வைப்பு

    ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த செலுத்திய இழப்பீட்டு தொகையிலிருந்து வருமான வரி பாக்கி செலுத்த தடை கோரிய வழக்கு செல்லத்தக்கதல்ல எனக் கூறி ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவு ரத்து செய்யப்பட்டதால் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்ட இழப்பீட்டு தொகை வட்டியுடன் 70.40 கோடி அரசுக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, அதை அரசுடமையாக்கி கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, அதற்காக ரூ.69 கோடி சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தியது குறிப்பிடத்தக்கது



  • Jan 20, 2024 16:35 IST
    சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் அதிகரிப்பு!

    சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகர விளக்குப் பூஜையில் ரூ375 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட. 10.57 கோடி கூடுதல் வருவாய் பெறப்பட்டுள்ளதற்காகக் கோயில் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 



  • Jan 20, 2024 16:34 IST
    ராமேஸ்வரத்தில் புனித நீராடும் மோடி

    ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இதன்பிறகு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. 

    பிரதமர் மோடி கோவிலுக்குள் வந்ததும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினார். 



  • Jan 20, 2024 16:02 IST
    ஸ்டாலின் வேண்டுகோள் 

    "பொதுமக்கள் தங்கள் வீட்டின் சொந்த வாகனங்களில் பயணிப்பதைப் போன்று பொதுப் போக்குவரத்துகளைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 



  • Jan 20, 2024 15:47 IST
    தி.மு.க எம்.எல்.ஏ-வின் மகன் தலைமறைவு?

    தி.மு.க எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் தங்கியிருந்த திருவான்மியூர் வீடு பூட்டப்பட்டிருப்பதாகவும், செல்போன் எண்ணை வைத்து, அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 



  • Jan 20, 2024 14:54 IST
    மோடி ராமேஸ்வரம் வருகை

    ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடி ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். அவருக்கு தொண்டர்கள் சாலையெங்கும் பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். 



  • Jan 20, 2024 14:53 IST
    ராமேஸ்வரம் சென்றடைந்த மோடி

    காலை ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்த நிலையில், ராமேஸ்வரம் வருகை வந்தார். திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி ராமேஸ்வரம் வந்திறங்கினார்.



  • Jan 20, 2024 14:49 IST
    நெல்லையில் பூக்கள் வரலாறு காணாத உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் பூக்களின் விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடு உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 6000 ரூபாயாக உயர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

    மல்லிகை பூ கிலோ 6000 ரூபாய்க்கும், பிச்சிப்பூ கிலோ 2500 ரூபாய்க்கும் விற்பனை. ரோஜா, முல்லை, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் கடுமையாக உயர்ந்தது. தொடர் கனமழை, வெள்ள பாதிப்புகளால் விளைச்சலில் கடும் சரிவு ஏற்பட்டதால் பூக்களின் விலை உயர்ந்ததாகவும், நாளை தை மாதத்தின் முதல் முகூர்த்தம் என்பதால் பூக்கள் விலை உயர்வை கண்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 



  • Jan 20, 2024 13:58 IST
    ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி

    ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி

    திருச்சி, ஸ்ரீரங்கத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டார் பிரதமர் மோடி



  • Jan 20, 2024 13:57 IST
    ராமேஸ்வரம்: ராஜஸ்தான் பக்தர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள்

    ராமேஸ்வரத்தில் சிக்கி அவதியடைந்த ராஜஸ்தான் மாநில பக்தர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார். ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த 1200 பேர் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்தவர்களை பேருந்துகள் மூலம் மதுரை அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை 



  • Jan 20, 2024 13:57 IST
    ராமேஸ்வரம்: ராஜஸ்தான் பக்தர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள்

    ராமேஸ்வரத்தில் சிக்கி அவதியடைந்த ராஜஸ்தான் மாநில பக்தர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார். ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த 1200 பேர் வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்தவர்களை பேருந்துகள் மூலம் மதுரை அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை 



  • Jan 20, 2024 13:51 IST
    கேலோ இந்தியா: முதல் தங்க பதக்கம் வென்றது தமிழ்நாடு

    கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்க பதக்கத்தை வென்றது தமிழ்நாடு

    கேலோ இந்தியா போட்டியில் முதல் தங்க பதக்கத்தை வென்று தமிழ்நாட்டை சேர்ந்த சர்வேஷ் மற்றும் தேவேஷ் அசத்தல். யோகா போட்டியின் இரட்டையர் பிரிவில் 127.89 புள்ளிகள் பெற்று முதலிடம் 



  • Jan 20, 2024 13:24 IST
    ராமேஸ்வரம் செல்லும் மோடி

    ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் பிரதமர் மோடி. திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்பட்டு செல்கிறார்



  • Jan 20, 2024 13:05 IST
    ஸ்ரீரங்கத்தில் வழிபாட்டை முடித்த பிரதமர் மோடி

    ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தார் பிரதமர் மோடி.  ஸ்ரீரங்கம் கோயிலில்  வழிபாடு நடத்தி முடித்த பிரதமர் மோடி அடுத்தாக ராமேஸ்வரம் செல்கிறார்.  



  • Jan 20, 2024 13:00 IST
    ராமேஸ்வரத்தில் பேருந்து சேவை நிறுத்தம்: பக்தர்கள் அவதி

    பிரதமர் மோடி வருகையை ஒட்டி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதசுவாமி கோயில் வரை செல்லும் பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதி. சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுமார் 3 கி.மீ தூரம் வரை பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 



  • Jan 20, 2024 12:57 IST
    கம்ப ராமாயண பாடல் கேட்ட மோடி

    கம்ப ராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்ப ராமாயணத்தை மனமுருகி கேட்டு ரசித்த பிரதமர் மோடி



  • Jan 20, 2024 12:15 IST
    அரங்கநாத சுவாமியை தரிசித்த பிரதமர் மோடி

    அரங்கநாத சுவாமியை தரிசித்த பிரதமர் மோடி. ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவரை தரிசனம் செய்யும் பிரதமர் மோடி கருடாழ்வார் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர் சன்னதிகளிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்



  • Jan 20, 2024 12:01 IST
    கோயில் யானையிடம் ஆசிபெற்றார் பிரதமர்

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் யானையிடம் ஆசிபெற்றார் பிரதமர் நரேந்திர மோடி

     



  • Jan 20, 2024 11:38 IST
    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சென்றடைந்தார் பிரதமர் மோடி

    தெற்கு கோபுர வாயில் வழியாக நுழையும் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை

    கருடாழ்வார், மூலவர், தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம்

    சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர், கோதண்டராமர், ராமானுஜர் சன்னதிகளிலும் சாமி தரிசனம்

    கம்பராமாயண அரங்கேற்ற மண்டபத்தில் கம்பராமாயண பாராயணத்தை கேட்க உள்ளார்

    மேள தாளங்கள் முழங்க பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு



  • Jan 20, 2024 11:15 IST
    திருச்சி வந்தடைந்தார் மோடி

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாலை மார்க்கமாக  பிரதமர் மோடி பயணம்

    காரில் நின்றபடி வழிநெடுகிலும் காத்திருக்கும் பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்து உற்சாகம்



  • Jan 20, 2024 10:42 IST
    40 தமிழக மீனவர்களை விடுதலை

    பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்திற்கு வருவதை ஒட்டி தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவு;

    நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறைகளில் உள்ள 40 தமிழக மீனவர்களை விடுதலை



  • Jan 20, 2024 10:15 IST
    திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி

    சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி சென்றடைந்தார் பிரதமர் மோடி

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் செல்ல உள்ளார்



  • Jan 20, 2024 09:52 IST
    மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

    சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் இயக்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் மெட்ரோ ரயில்கள் தாமதமாக செல்வதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு



  • Jan 20, 2024 09:52 IST
    2-வது நாளாக தொடர் சோதனை

    சென்னை: கட்டுமான நிறுவன அதிபர் எஸ்.கே பீட்டரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்;

    சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை நடந்து வருகிறது

     



  • Jan 20, 2024 09:22 IST
    ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டார் ;

    சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சிக்கு சென்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார் பிரதமர் மோடி



  • Jan 20, 2024 09:22 IST
    தொகுதி உடன்பாடு- மதிமுக சார்பில் குழு

    நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ம.தி.மு.க சார்பில் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு

    வைகோ அறிவிப்பு



  • Jan 20, 2024 09:22 IST
    ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

    கேரளா: கண்ணூர் ரயில் நிலையத்தில் கண்ணூர்-ஆலப்புழா விரைவு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்து;

    பயணிகள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது



  • Jan 20, 2024 09:21 IST
    சேலம் மேட்டூர் அணை நீர்நிலவரம்;

    நீர்வரத்து - 150 கனஅடி

    நீர்மட்டம் - 70.74 அடி.

    நீர் இருப்பு - 33.33 டி.எம்.சி.

     நீர் வெளியேற்றம் - 600 கனஅடி              



  • Jan 20, 2024 09:20 IST
    பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை

    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய உள்ள நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை



  • Jan 20, 2024 08:44 IST
    நெல்லையின் பல பகுதிகளில் மழை

    அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட நெல்லையின் பல சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது



  • Jan 20, 2024 07:54 IST
    தடுப்பு சுவரில் வேன் மோதி 4 பேர் உயிரிழப்பு

    தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே தடுப்பு சுவர் மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    தூத்துக்குடியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற வேன் சாலையோர தடுப்புச்சுவரில் மோதி கோர விபத்து

    வேனில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு - 7 பேர் படுகாயம்

    காயமடைந்த 7 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைப்பு



  • Jan 20, 2024 07:53 IST
    மு.க. ஸ்டாலின் இன்று சேலத்திற்கு பயணம்

    சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மு.க. ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம்;

    மாநாட்டு பந்தலுக்கு சென்று இருசக்கர வாகன பேரணியையும், ட்ரோன் ஒளிக் காட்சியையும் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார்



  • Jan 20, 2024 07:41 IST
    5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    அடுத்த 3 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம்



  • Jan 20, 2024 07:38 IST
    நிலவில் கால்பதித்த ஜப்பான்

    நிலவில் 5வது நாடாக கால்பதித்தது ஜப்பான்

    வெற்றிகரமாக தரையிறங்கியது ஜப்பானின் ஸ்லிம் விண்கலம்



  • Jan 20, 2024 07:38 IST
    ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடிதம்

    பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஜன.22 முதல் ஜன.24ம் தேதி வரை ஆசிரியர்‌, அரசு ஊழியர்‌ தொடர் போராட்ட பிரச்சார இயக்கம் நடத்த முடிவு‌;

    பிப். 15ம் தேதி முதல் ஒரு நாள் அடையாள போராட்டம் நடத்தப்போவதாகவும், பிப். 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என மு.க.ஸ்டாலினுக்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடிதம்



  • Jan 20, 2024 07:36 IST
    பிரதமர் மோடி இன்று திருச்சி பயணம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி பயணம்

    கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு – 3,700 போலீசார் கண்காணிப்பு

    திருச்சி பயணத்தை தொடர்ந்து இன்று ராமேஸ்வரம் செல்கிறார் பிரதமர் மோடி



Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment