Advertisment

Tamil News highlights :சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் தொடங்கியது

Tamil News Live Updates-24-08.2024- இன்று நடைபெறும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
saeasa

பெட்ரோல், டீசல் விலை: சென்னையில் 160-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.75 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.34 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

சென்னை அணி தோல்வி

சென்னையில் நடைபெற்று வரும் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில், பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 11-4 என்ற புள்ளி கணக்கில் சென்னை அணி தோல்வி. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Aug 24, 2024 20:26 IST
    பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது: ரஜினிகாந்த்

    எந்த விதமான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு கையாண்டவர் கலைஞர். தற்போது சிலர் விமர்சனம் செய்கின்றனர். அந்த விமர்சனங்கள் பிறர் மனதை நோகடிக்கும் வகையில் உள்ளது. பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது என்று கலைஞர் என்னும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.



  • Aug 24, 2024 19:31 IST
    திருப்பதி கோவிலில் நடிகர் நானி சாமி தரிசனம்

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன். இருவரும் நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ படம் வருகிற 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.



  • Aug 24, 2024 19:20 IST
    ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

    சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.



  • Aug 24, 2024 17:53 IST
    நாமக்கல் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே சக மாணவர் அடித்ததில் பள்ளி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில், மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது 



  • Aug 24, 2024 17:39 IST
    திருவண்ணாமலையில் தனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் மரணம்

    திருவண்ணாமலை மாவட்டம் திருப்பனமூர் பகுதியில் தனியார் பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Aug 24, 2024 17:16 IST
    கள்ளர் பள்ளிகள் இணைப்பு விவகாரம்; அ.தி.மு.க.,வின் போராட்டங்கள் தொடரும் – இ.பி.எஸ்

    மிகவும் பிற்படுத்தப்பட்ட சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தின் வரலாற்று ரீதியான கல்வி அடையாளமான கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் கொண்டுவருவதற்கான எண்ணத்தை முழுவதுமாக கைவிடுமாறு தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்; கள்ளர் சீரமைப்பு விடுதிகளை இணை இயக்குநரின் (கள்ளர் சீரமைப்பு) நிர்வாகத்திலிருந்து விடுவித்து தி.மு.க அரசு வெளியிட்டுள்ள அரசாணை எண்: 40-ஐ ரத்து செய்யும் வரை, பொதுமக்களுடன் இணைந்து நடத்தப்படும் அ.தி.மு.க.,வின் போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Aug 24, 2024 16:38 IST
    மும்பையில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்; கேப்டன் காயம்

    மும்பையில் இருந்து ஐதராபாத் நோக்கி சென்ற தனியார் ஹெலிகாப்டர் மோசமான வானிலையால் மகாராஷ்டிரா, புனே மாவட்டத்தின் பாட் கிராமத்தில் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரில், கேப்டனுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்



  • Aug 24, 2024 16:16 IST
    ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை - அமைச்சர் சக்கரபாணி

    மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்



  • Aug 24, 2024 15:52 IST
    பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த எஸ்.ஐ.டி

    பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வுக் குழு தாக்கல் செய்துள்ளது 



  • Aug 24, 2024 15:25 IST
    தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் கைது; அன்புமணி கடும் கண்டனம்

    தமிழ்நாடு மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Aug 24, 2024 15:22 IST
    விதிமீறல் இல்லை; நாகார்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு

    4 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட கன்வென்ஷன் சென்டர் இடிக்கப்பட்டது மன வலியை தருகிறது. அந்தக் கட்டடத்தில் ஒரு அங்குலம் கூட விதிமீறி கட்டப்படவில்லை என நடிகர் நாகார்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்



  • Aug 24, 2024 15:08 IST
    சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

    சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • Aug 24, 2024 15:05 IST
    விஜய்க்காக பேச அண்ணன் நான் இருக்கேன். எனக்கு பேசத்தான் யாரும் இல்லை - சீமான்

    விஜய்க்காக பேச அண்ணன் நான் இருக்கேன். எனக்கு பேசத்தான் யாரும் இல்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்



  • Aug 24, 2024 14:51 IST
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

    கிருஷ்ணகிரி போலி என்.சி.சி. முகாமில் மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும்

    - சென்னை உயர்நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் N.S.ரேவதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்



  • Aug 24, 2024 14:37 IST
    தேவநாதனுக்கு தொடர்புடைய மேலும் 2 கட்டடங்களுக்கு சீல் வைப்பு

    மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான தேவநாதனுக்கு தொடர்புடைய மேலும் 2 கட்டடங்களுக்கு சீல் வைப்பு.

    இதுவரை 8 கட்டடங்களுக்கு சீல் வைத்துள்ளது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்.



  • Aug 24, 2024 13:55 IST
    ஸ்டாலின் கடிதம்

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், விசைப்படகுகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நாகை மீனவர்கள் 11 பேர் விசைப்படகுடன் இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டது மிகுந்த கவலையளிக்கிறது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை வலியுறுத்தி ஸ்டாலின் கடிதம்



  • Aug 24, 2024 13:13 IST
    தாயகம் திரும்பினார் மோடி

    3 நாள் போலந்து மற்றும் உக்ரைன் நாட்டு பயணங்களை முடித்து டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார் பிரதமர் மோடி



  • Aug 24, 2024 13:13 IST
    ஃபார்முலா 4 கார் பந்தயம்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

    வரும் 31, செப்.1 தேதிகளில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சனிக்கிழமை காலை நடைபெறும் போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக பார்க்கலாம்.

    இரவு 10.30 மணி வரை போட்டிகள் நடைபெறும். போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இருக்காது

    - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்



  • Aug 24, 2024 13:08 IST
    நெல்சன் மறுப்பு

    ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. காவல்துறையில் இருந்து எந்தவொரு சம்மனும் அனுப்பப்படவில்லை. என்னிடம் எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை.

    இயக்குனர் நெல்சன்



  • Aug 24, 2024 12:42 IST
    பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

    விஜய் மட்டுமல்ல 'கோட்' படக்குழுவினர் அனைவரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். கோட் படத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் விஜயகாந்த் தோன்றுவதாக வெங்கட்பிரபு கூறி இருந்தார்.  கோட் படத்தை குடும்பத்துடன் பார்க்க வருமாறு விஜய் எங்களை அழைத்தார்.

    கடவுள் இல்லை என்று இவர்களாகத்தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள். சர்ச்சையாக பேசிவிட்டு இப்போது முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்

    பிரேமலதா விஜயகாந்த்



  • Aug 24, 2024 12:18 IST
    எங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல: பிரேமலதா விஜயகாந்த்

    த.வெ.க. கொடியை வெளியிட்ட விஜய்-க்கு மனமார்ந்த வாழ்த்து. பல சர்ச்சைகள், சவால்களை சந்திக்க வேண்டியது தான் அரசியல். ஒவ்வொரு அடியையும் விஜய் யோசித்து வைக்க வேண்டும். சாலி கிராமத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்தவர் தான், விஜய்

    எங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல. விஜய பிரபாகரனுக்கு நடிகர் விஜய் நல்ல நண்பர்.

    பிரேமலதா விஜயகாந்த்



  • Aug 24, 2024 11:58 IST
    நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு

    ஐதராபாத்தில் ஏரி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த நடிகர் நாகார்ஜுனாவின் கட்டடம் இடிப்பு- ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

    நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டடங்களை இடிக்கும் பணி கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. 

    தம்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் கன்வென்ஷன் சென்டர் கட்டிய நாகார்ஜுனா

    கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கட்டடத்தை ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரைமட்டம் ஆக்கினர்



  • Aug 24, 2024 11:40 IST
    நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குனர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை

    சென்னை அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்று மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக 1 மணிநேரம் விசாரணை 



  • Aug 24, 2024 11:07 IST
    முருகன் மாநாட்டில் ஸ்டாலின் ஏன் கலந்துகொள்ளவில்லை -தமிழிசை

    முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் கலந்துகொள்ளவில்லை?

    உலக அளவிலான முருகன் மாநாட்டில் முதலமைச்சர் நேரில் கலந்து கொண்டிருக்க வேண்டும்

    மற்ற மத நிகழ்வுகளில் நேரில் கலந்து கொள்ளும் முதல்வர் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் முருகன் மாநாட்டிற்கு செல்லவில்லை- தமிழிசை



  • Aug 24, 2024 11:06 IST
    முத்தமிழ் முருகன் மாநாடு- ஸ்டாலின் வாழ்த்து

    முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் - அமைச்சர் சேகர்பாபுவுக்கு வாழ்த்துகள்

    கோயிலிலேயே குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்திருக்கிறார்.

    அறநிலையத்துறை சார்பில் ஏராளமான திட்டம் நிறைவேற்றம் - நானும் பலவற்றில் பங்கேற்றுள்ளேன்

    முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியின் திட்டங்களை கிருபானந்த வாரியார் பாராட்டி உள்ளார்

    முருகன் கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன

    பக்தர்கள் நலனை மனதில் வைத்து கோயில் வளர்ச்சி பணிகளை தொடங்கி உள்ளோம். திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை - அதற்கு திராவிட மாடல் தடையாக இருந்ததில்லை.

    எல்லோருக்கும் எல்லாமும் என்பதே திராவிட மாடல் அரசு

    அறநிலையத்துறையையும் அரசு சிறப்பாக நடத்தி வருகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் 



  • Aug 24, 2024 11:04 IST
    குடியிருப்பு பகுதியில் இடிந்த பாலம்

    தாம்பரம் அருகேயுள்ள இந்திரா நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் இடிந்த பாலம்

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணியின் போது மண்ணுக்குள் இறங்கிய பாலம். குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிப்பு



  • Aug 24, 2024 10:40 IST
    சம்போ செந்தில் முன்னாள் மனைவியிடம் விசாரணை

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் தற்போதைய புகைப்படம் போலீசாரிடம் சிக்கியது

    சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்திய போலீசார்

    முன்னாள் மனைவியிடம் இருந்து சம்போ செந்திலின் தற்போதைய உருவத்துடன் கூடிய புகைப்படத்தை பெற்றுள்ள போலீசார் 



  • Aug 24, 2024 09:56 IST
    15 ஆண்டு அரியர் மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு

    கடந்த 2001, 2002 ஆண்டுகளில் பட்டப் படிப்புகளில் சேர்ந்து தற்போதும் அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு

    வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறக்கூடிய தேர்வுகளில் மாணவர்கள் பங்கேற்று அரியர் தேர்வுகளை எழுதலாம். தேர்வை நடத்தக்கூடிய அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு



  • Aug 24, 2024 09:42 IST
    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடக்கம்

    அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த குன்றக்குடி மற்றும் பேரூர் ஆதீனங்கள்

    மாநாட்டின் பிரமாண்ட நுழைவுவாயிலை திறந்து வைத்த அமைச்சர்கள் 



  • Aug 24, 2024 08:37 IST
    ஷிகர் தவான் ஓய்வு அறிவிப்பு

    சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஷிகர் தவான் ஓய்வு

    மறக்க முடியாத எண்ணிலடங்கா நினைவுகளுடன் விடைபெறுகிறேன்

    எனக்கு ஆதரவளித்து உடன் பயணித்த சக வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி  - ஷிகர் தவான்

    எண்ணிலடங்கா நினைவுகள், நன்றி உணர்வுடன் எனது கிரிக்கெட் பயணத்தின் அத்தியாயத்தை முடித்துக் கொள்கிறேன்

    பக்கபலமாக இருந்த ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரது அன்பிற்கும் நன்றி

     34 டெஸ்ட், 167 ஒருநாள் கிரிக்கெட், 68 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஷிகர் தவான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 24 சதங்களை விளாசியுள்ளார் ஷிகர் தவான்



  • Aug 24, 2024 08:20 IST
    காவிரியில் நீர்வரத்து சரிவு 

    தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு 8000 கன அடியாக இருந்த நிலையில், இன்று 7000 கன அடியாக சரிவு 



  • Aug 24, 2024 07:57 IST
    'அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு' இன்று தொடக்கம்

    திண்டுக்கல், பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு நிகழ்ச்சியைக் காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்

    பழனியாண்டவர் கலை கல்லூரியில் இன்று மற்றும் நாளை நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இலவசம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு



Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment