பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள் கொண்டாடிய பொங்கல் திருநாள்
தமிழ்நாடு முழுவதும் இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து மக்களும் பொங்கல் பானையுடன், சூரியன் உதயமானதும், பொங்கல் விட்டு கொண்டாடினர்.
போலிசார் துப்பாக்கிச் சூடு
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை, கத்தியை காட்டி மிரட்டி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிகள் நாகராஜ், பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறும் 'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் 3வது நாளில், கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்தார்
சென்னை மெரினா கடற்கரையில் பொங்கல் திருநாளையொட்டி பொதுமக்கள் குடும்பங்களாக குவிந்து வருகின்றனர்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், சிறந்த காளைக்கான முதல் பரிசை காத்தனேந்தலை சேர்ந்த காமேஷ் என்பவரின் காளை தட்டிச்சென்றது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 28 காளைகளை அடக்கிய மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய்-க்கு முதலமைச்சர் வழங்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது
மதுரை, அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது
சென்னை சங்கமம் கலை நிகழ்வுகளில் பங்கேற்கும் கலைஞர்களுடன் தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி பொங்கல் கொண்டாடினார். சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் கலைஞர்கள் இசை முழங்க பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி: “என்னுடைய பொங்கல் வாழ்த்து அட்டையில் தமிழ்நாடு என்ற கோலமிட்டதை எல்லோருக்கும் அனுப்பி இருந்தேன். அதனைப் பார்த்து பதிவு செய்திருந்தனர். தமிழர்களை சீண்டிப் பார்த்தால், உள்ளே இருக்கும் தமிழ் உணர்வு, சுயமரியாதை எதையும் தணித்துவிட முடியாது என்பதை தெளிவாக காட்டக்கூடியதாக இருக்கும். அதனால்தான், எப்போதுமே அமைதியாக பேசும் முதலமைச்சர் கூட ரொம்ப கறாராக பதில் சொல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தியா என்பது ஒரே அடையாளமாக ஒன்றாக கரைந்துபோக வேண்டுமென நினைப்பவர்கள் தனித்த அடையாளங்கள் கரைந்துபோக வேண்டுமென நினைப்பார்கள்.
நம் நன்மைக்கு எதிராய் நிற்ப்பவர்கள் எதிர்கட்சி என்று ஆகிட முடியாது எனவும் குறிப்பிட்ட அவர், இந்த பொங்கலில் தமிழர்களின் சுயமரியாதை உணர்வுகளை முன்னுக்கு கொண்டு வந்து நிறுத்தி, தமிழ்நாடு என்று பெருமையோடு சொல்லக்கூடிய திராவிட மாடல் அரசு என்பதை சொல்வதற்கு சில பேருக்கு பயமா இருக்கலாம்” என்று கூறினார்.
சென்னை புறநகர் ரயில் சேவை, பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜனவரி மட்டும் 16) ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 45 பேர் காயம் 20 பேர் படுகாயமும் 25 பேர் சிறுகாயமும் அடைந்துள்ள நிலையில் 14 பேர் மேல் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவையைத் காணொலி வழியாக தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி: “வந்தே பாரத் ரயில் எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது; இந்த சேவை இந்தியாவின் அடையாளம்; அனைத்து குடிமக்கள்க்கும் சிறந்த வசதிகளை வழங்கும்” என்று கூறினார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக்கின் 53வது ஆண்டு விழாவில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யும் என்று கூறினார்.
எல்லைப் பிரச்சினைகளில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இந்தியா அளித்த பதிலடி இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாது என்பதைக் காட்டியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சனிக்கிழமை தெரிவித்தார்.
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின், தனது தந்தை கருணாநிதி திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில், வி.சி.க தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளை வெற்றி பெற்றது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த 12 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 5-வது சுற்று முடிவில் 23 காளைகளை அடக்கி ஜெய்ஹித் புரத்தைச் சேர்ந்த விஜய் முதலிடம் பிடித்தார். 12 காளைகளை அடக்கிய அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் 2-ம் இடத்திலும் 23 காளைகளை அடக்கிய பாலாஜி 3-ம் இடத்திலும் உள்ளனர். 5-வது சுற்றின் முடிவில் இதுவரை 390 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன.
செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலியில் தொடங்கி வைத்தார்.
விமானப் பணியாளர்கள் 4 பேர் உள்பட 72 பேர் பயணம் செய்த எட்டி ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான ஏடிஆர் 72 விமானம் நேபாளத்தின் பொக்காராவில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 16 பேர் உயிரிழந்ததாக நேபாள ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, 68 பயணிகளுடன் இருந்த விமானம், காத்மாண்டுவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காராவுக்கு புறப்பட்ட சுமார் 20 நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. யுபராஜ் கிமிரே காத்மாண்டுவில் இருந்து தெரிவித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடினார்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை லகூன் அலையாத்தி காடுகள் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 15 முதல் ஜனவரி 17-ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 4வது சுற்றில் மட்டும் கலந்துகொண்ட மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பாலாஜி என்ற மாடுபிடி வீரர் ஒரே சுற்றில் 13 காளைகளை அடக்கி அசத்தல்; காளை அடங்கியபோது காலில் குத்தியதில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 4-ம் சுற்று நிறைவடைந்தது. 5-வது சுற்று தொடங்கியது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்ரா சென்ற 72 இருக்கைகள் கொண்ட பயணிகள் விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது; மீட்பு பண்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காத்திருக்கும் பரிசுகள். முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 பைக்குகள் பரிசு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 2 சுற்றுகள் நிறைவில் 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – இதுவரை 7 மாடுபிடி வீரர்கள் தகுதிநீக்கம். மது அருந்திவிட்டு போட்டியில் பங்கேற்ற 4 பேர் தகுதிநீக்கம்
செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம் . 8வது வந்தே பாரத் ரயில் சேவையை காணொலியில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
அண்ணா அறிவாலயத்தில் 'தமிழ்நாடு வாழ்க…' எனும் பெயர்ப்பலகை வைக்கப்பட்டது
பொங்கல் திருநாள் – முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் “தமிழ்நாடு வாழ்க” என வீட்டு வாசல்களில் கோலம்
வனியாபுரம் ஜல்லிக்கட்டு – போட்டி தொடங்குவதற்கு முன்பே காளைகள் முட்டி இதுவரை 3 பேர் காயம் . காளை உரிமையாளர்கள் 3 பேர் காயம் – மருத்துவமனையில் அனுமதி
அவன்யாபுரம் ஜல்லிகட்டு போட்டியை அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் கொடியசைத்து தொங்கி வைத்தனர்.