பெட்ரோல்- டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63, ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாறும்பெறும் திருவிழாவாக மாறிய இசை வெளியீடு விழா
பொன்னியின் செல்வன் பாகம் 1, பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. நடிகர்கள் ரஜினி, கமல் என்று முன்னனி நடிகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாதுமே, இணையத்தில் வைரலாக பரவியது. மேலும் நடிகை த்ரிஷாவின், புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
மழை நிலவரம்
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தனுஷ் செல்வராகவன் கூட்டணியில் தயாராகி வரும் நானே வருவேன்' திரைப்படத்தின் முதல் பாடல் 'வீரா சூரா' தற்போது வெளியிடப்பட்டள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக 2 பேர், போலீசார் வாகனத்தின் மீது கற்களை வீசியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“பாஜகவிற்கு வர முக்கிய காரணம் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் தான்” என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
வரலாற்றில் மிக மோசமான பொருளாதார சிக்கலை இந்தியா சந்தித்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளிகள், ஏழைகளை திட்டமிட்டு வஞ்சிக்கிறது பாஜக அரசு” என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 23 மீனவர்களையும், 95 படகுகளையும் விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கோயம்பேடு, தரமணி, மதுரவாயல், வானகரம், நெற்குன்றம், வளசரவாக்கம், ராமாபுரம், போரூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி: “இந்திய மக்களை மோதவிட்டு லாபம் பார்த்த ஆங்கிலேயர் ஆட்சியைப் போலவே மோடி ஆட்சியும் நடக்கிறது. ஏழை மக்களைப் பற்றி மோடி அரசு சிறிதும் கவலைப்படுவதில்லை” என்று விமர்சித்துப் பேசினார்.
கன்னியாகுமரியில் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி உரை: “தேசிய கொடி நாட்டின் அனைத்து மொழிகள், மாநிலங்களை பிரதிபலிக்கிறது.. தேசிய கொடி என்பது நமது அடையாளம். தேசிய கொடி எந்த ஒரு தனிப்பட்ட மதத்தை சார்ந்தது அல்ல, அனைவருக்கும் சொந்தமானது.” என்று கூறினார்.
கன்னியாகுமரியில் ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி: “அழகான தமிழ்நாட்டுக்கு வருவது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. 3 சமுத்திரமும் சங்கமிக்கும் இவ்விடத்தில் நாட்டுக்கான ஒற்றுமை பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சி.” என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரை வெற்றி பெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுலின் பாதயாத்திரை இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்; மருத்துவ பரிசோதனையில் இருப்பதால் யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை. அனைவருடனும் நேரில் இருக்க இயலாமைக்கு வருந்துகிறேன் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: அதிமுகவின் 50எம்எல்ஏக்கள், 2 எம்பிக்கள், 30 மாவட்டச் செயலாளர்கள் எங்களுடன் பேசுகிறார்கள். திமுக எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை இ.பி.எஸ் வெளியிட்டால் நானும் பட்டியலை வெளியிடுகிறேன். திமுகதான் திராவிட இயக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா தமிழர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால், அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
08.09.2022 அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் சில மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறையானது செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் மேற்படி தினத்தன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் (பள்ளி மற்றும் கல்லூரிகள்) வழக்கம் போல செயல்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்படுகிறது என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அறிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி: “திமுகதான் திராவிட இயக்கம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எல்லா தமிழர்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால், அதிமுகவில் உள்ள அனைவரும் திமுகவில் இணைந்து பயணிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்
தேசியக்கொடியை ராகுல் காந்தியிடம் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணமாக செல்லும் ராகுல் காந்திக்கு மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை வழங்கினார்.
கன்னியாகுமரியில் ராகுல் காந்தியை, கட்டியணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
கன்னியாகுமரியில் இன்று ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கும் நிலையில், கன்னியாகுமரி நோக்கி ரயிலில் சென்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை இன்று தொடங்கவுள்ள நிலையில், “பாகிஸ்தான், வங்கசேத்தை இந்தியவுடன் இணைத்து அகண்ட பாரதம் அமைக்க முயற்சிக்கலாம் என அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மக்கள் அனைவரும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைந்து கொண்டாடி, ஒற்றுமையின் சிறப்பை உணர்த்தும் சமூக நல்லிணக்க விழாவான ஓணம் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது அறிக்கையில், “நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும் வரலாற்றிலும் மக்கள் மனதிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை காட்டுவது ஓணம் திருவிழா” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா நகரில் பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்
அதிமுக அலுவலக மோதல் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் இன்றைய விசாரணை நிறைவு. சிபிசிஐடி டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையிலான காவல்துறையினர் அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்
தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவத்தில், மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண்ணின் வீடு மர்ம நபர்களால் சூறையாடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
படிப்பில் மகளுக்கு போட்டியாக இருந்ததால் மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மாணவன் கொலை செய்யப்பட்டார்
ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்கி வைக்க கன்னியாகுமரி வந்தடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்குவதற்கு முன், ராகுல் காந்தி திருவள்ளுவர், விவேகானந்தர் மற்றும் காமராஜர் நினைவிடங்களுக்குச் செல்கிறார். மேலும் மகாத்மா காந்தி மண்டபத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
மகாத்மா காந்தி நினைவிடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்ள உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
திமுகவின் 10 எம்.எல்.ஏக்கள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் உள்ளனர். தொண்டர்களால் நடத்தப்படும் அதிமுகவில் தலைவர்களுக்கு இடமில்லை. தினகரன், சசிகலாவுக்கு இடமில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். திமுக ஆட்சியில் மேயருக்கு மரியாதை கொடுக்கப்படுவதில்லை. அம்மா உணவகம் மூடப்பட்டதற்கு, தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
இன்று ஒற்றுமை இந்தியா யாத்திரை தொடங்க உள்ள நிலையில், தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது 3 மாம்பழத்தை வைத்து ராகுல் வழிபட்டார்
இன்று மாலை “இந்திய ஒற்றுமை பயணம்” என்ற பாதயாத்திரை தொடங்க உள்ள நிலையில், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு புறப்பட்டார் ராகுல் காந்தி. விமானத்தில் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து கன்னியாகுமரி செல்கிறார் ராகுல் காந்தி.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்ராவிற்கு ஒற்றுமையை வெளிப்படுத்துங்கள், ராஜ்யசபா எம்பி ஆனந்த் சர்மா, சக யாத்ரீகர்கள் தனது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தை அடையும்போது அவர்களுடன் சேர ஆவலுடன் இருப்பதாகக் கூறினார்.
“பாரத் ஜோடோ யாத்ரா இந்தியாவின் உள்ளடக்கிய ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், அநீதி, சமத்துவமின்மை மற்றும் சகிப்பின்மைக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கும் ஒரு நோக்கம்” என்று ஆனந்த் ஷர்மா ட்வீட் செய்துள்ளார்.
டெல்லியில் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இருந்து தொடங்கப்பட உள்ள பாரத் ஜோடோ யாத்திரைக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை கூறுகையில், இது இந்திய அரசியலில் ஒரு மாற்றமான தருணத்தை குறிக்கும் என்றும், கட்சி அமைப்பை வலுப்படுத்தவும், மக்களுடன் மீண்டும் இணைக்க காங்கிரசுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் கூறினார்.”
பொதுக்குழு தீர்ப்புக்கு பிறகு நாளை காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தொண்டர்கள் கலந்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
காங். பாதயாத்திரை தொடர்பாக ராகுல் காந்தியை வரவேற்க டிரம்ஸ் செட் ஏற்பாடுகள்.
”வெறுப்பு மற்றும் பிரிவினையால் எனது அப்பாவை நான் இழந்தேன். ஆனால் நான் நேசிக்கும் நாட்டை இழக்க மாட்டேன்”. அன்பு வெறுப்பை வீழ்த்தும். நம்பிக்கை பயத்தை வீழ்த்தும். நாம் ஒன்றாக எல்லாவற்றையும் கடந்து வருவோம்” – ராகுல் ட்வீட்
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் . கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பாதயாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்கிறார். குமரி காந்தி மண்டபத்தில் ராகுல்காந்திக்கு தேசிய கொடி வழங்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு . அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு, ஜூலை 11ஆம் தேதி வானகரத்தில் பொதுக்குழு நடந்த போது,அதிமுக அலுவலகத்தில் மோதல். அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு வரும் சிபிசிஐடி போலீசார்.
சேலம், தலைவாசல் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
சேலம், தலைவாசல் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மீண்டும் சென்னை புறப்பட்டார் ராகுல் காந்தி.
ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த சென்ற அர்ஜூன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையில் இருந்து கன்னியாகுமரிக்கு ரயிலில் சென்ற போது திண்டுக்கல்லில் கைது. அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 4 பேரை கைது செய்த போலீசார்.