Advertisment

Tamil news Highlights : சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.,வில் அனுமதி

Tamil Nadu News, Tamil News, Petrol price Today - 02 October 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil news Highlights : சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.,வில் அனுமதி

பெட்ரோல், டீசல் விலை

Advertisment

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. 134-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

சாலை மறியல்

காரைக்கால் மாவட்டம் முழுவதும் மீண்டும் 2 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் மின் தடை.  பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

கிராம சபை கூட்டம்

மகாத்மா காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களுக்கு ஏற்பாடு.  அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 21:37 (IST) 02 Oct 2022
  மின் துறை ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு எச்சரிக்கை

  மின் துறை ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மின் விநியோகப் பணியை மேற்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமாகும் என புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது • 20:58 (IST) 02 Oct 2022
  இந்திய அணி 237 ரன்கள் குவிப்பு

  முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது. ரோகித் 43, ராகுல் 57, சூர்யகுமார் 61, கோலி 49 ரன்கள் அடித்தனர் • 20:24 (IST) 02 Oct 2022
  சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் ஐ.சி.யூ.,வில் அனுமதி

  சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டார்.

  யாதவ் (82) தற்போது குர்கானில் உள்ள மேதாந்தாவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிற்பகலில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இவரது மகன் அகிலேஷ் யாதவ்; மருமகள், டிம்பிள் யாதவ்; மேலும் சில குடும்ப உறுப்பினர்கள் மாலையில் மருத்துவமனைக்கு வந்தனர்.

  கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. “மதிப்பிற்குரிய தலைவர் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அவரது உடல்நிலை சீராக உள்ளது. மூத்த மருத்துவர்களின் மேற்பார்வையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று ட்வீட் செய்துள்ளார். • 19:53 (IST) 02 Oct 2022
  பெண்ணுக்கு பாலியல் தொல்லை – வி.ஏ.ஓ கைது

  குளித்தலை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் பகுதியில் வீட்டில் இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சிவாயம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் அன்புராஜ் கைது செய்யப்பட்டுள்ளார் • 19:17 (IST) 02 Oct 2022
  தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது • 19:08 (IST) 02 Oct 2022
  2வது டி20 கிரிக்கெட் போட்டி; டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பந்துவீச்சு தேர்வு

  கவுகாத்தியில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா பந்துவீச்சு தேர்வு செய்துள்ளார் • 19:01 (IST) 02 Oct 2022
  சென்னையில் போக்குவரத்து மாற்றம்

  அக்.3ஆம் தேதி முதல் அக்.4ஆம் தேதிவரை மழை நீர் வடிகால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஈ.வெ.ரா. சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் ஈ.வெ.ரா சாலையில் பர்னபி சாலை சந்திப்பில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

  இதனால் ஈ.வெ.ரா சாலையில் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பில் இருந்து ஈகா சந்திப்பை நோக்கி நேராக செல்லலாம். ஈ.வெ.ரா சாலையில் ஈகா சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி நேராக செல்ல அனுமதியில்லை. • 18:37 (IST) 02 Oct 2022
  கிராமசபை கூட்டத்தில் பாதியில் வெளியேறிய அமைச்சர்

  விழுப்புரம் மாவட்டம் வீரபாண்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, கூட்டத்தில் பாதியில் இருந்து வெளியேறினார். • 18:15 (IST) 02 Oct 2022
  பெட்ரோல் குண்டுவீச்சு: முதலமைச்சர் பதிலளிக்காதது ஏன்? பிரேமலதா கேள்வி

  தேமுதிக பொருளாளர் பிரேமலதா திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தி.மு.க அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒருநிலைப்பாடு, ஆட்சிக்கு வந்தபின்னர் ஒரு நிலைப்பாடு என இரட்டை வேடம் போடுகிறது.

  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்” என்றார். • 17:56 (IST) 02 Oct 2022
  கோதுமை விலையை கண்காணிக்கும் மத்திய அரசு

  பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் வகையில், விலைகள் கண்காணிக்கப்படுகின்றன என மத்திய அரசு கூறியுள்ளது. • 17:46 (IST) 02 Oct 2022
  இந்தியாவை ஒன்றிணைப்போம்- ராகுல் காந்தி

  அண்ணல் காந்தியடிகள் உண்மை மற்றும் அகிம்சையின் பாதையில் நடக்க கற்றுக் கொடுத்தார். அன்பு, கருணை, நல்லிணக்கம் மற்றும் மனிதநேயம் ஆகியவற்றின் அர்த்தத்தை விளக்கினார்.

  காந்தி ஜெயந்தியான இந்த நன்நாளில், அவர் அநீதிக்கு எதிராக நாட்டை ஒன்றிணைத்தது போல், நமது இந்தியாவையும் ஒன்றிணைப்போம்” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். • 17:01 (IST) 02 Oct 2022
  ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்தில் அமைச்சர் பங்கேற்பு

  புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் அமைச்சர் நமச்சிவாயம் சீருடை அணிந்து கலந்துகொண்டார். • 15:13 (IST) 02 Oct 2022
  காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது. அவர்களை மதிப்பது வேதனை - சபாநாயகர் அப்பாவு பேச்சு

  சபாநாயகர் அப்பாவு பேச்சு: “காந்தியை மதிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கிராமசபை கூட்டம் நடைப்பெறுகிறது; ஆனால், காந்தியை கொன்றவர்களை மதிக்க கூடாது.அவர்களை மதிப்பது வேதனைக்குரியது. திமுக அரசின் நல்லாட்சியை கொச்சை படுத்தும் விதத்தில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள்; அரசின் நல்ல திட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் அமைச்சர்கள் பேச்சு வழக்கில் பேசுவது கூட பெரிதாக்கப்படுகிறது” என்று கூறினார். • 13:41 (IST) 02 Oct 2022
  சவுக்கு சங்கர் சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம்; உடல்நலம் பாதிப்பு... மருத்துவமனையில் அனுமதி

  கடலூர் சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த சவுக்கு சங்கருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. • 13:09 (IST) 02 Oct 2022
  ஆர்.எஸ்.எஸ் பேரணி என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது? சீமான் கேள்வி

  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: “என்ன நோக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும்; மக்கள் பிரச்னைக்காக பேரணி நடத்துகிற நோக்கம் இருக்கிறதா அதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். • 13:09 (IST) 02 Oct 2022
  சனாதன அரசியலை தமிழகத்தில் நுழையவிட மாட்டோம்; காமராஜர் நினைவு தினத்தில் உறுதிமொழி - திருமாவளவன்

  வி.சி.க தலைவர் திருமாவளவன்: “புரட்சிகரமான இந்தியாவை,ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க தம்மை ஒப்படைத்து கொண்டவர் காமராஜர்; காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். "சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழையவிட மாட்டோம் என அவரது நினைவு தினமான இன்று விசிக உறுதி ஏற்கிறது” என்று கூறினார். • 13:08 (IST) 02 Oct 2022
  சனாதன அரசியலை தமிழகத்தில் நுழையவிட மாட்டோம்; காமராஜர் நினைவு தினத்தில் உறுதிமொழி - திருமாவளவன்

  வி.சி.க தலைவர் திருமாவளவன்: “புரட்சிகரமான இந்தியாவை,ஜனநாயக இந்தியாவை கட்டமைக்க தம்மை ஒப்படைத்து கொண்டவர் காமராஜர்; காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர். "சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழையவிட மாட்டோம் என அவரது நினைவு தினமான இன்று விசிக உறுதி ஏற்கிறது” என்று கூறினார். • 13:05 (IST) 02 Oct 2022
  ஆர்.எஸ்.எஸ் பேரணி என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது? சீமான் கேள்வி

  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: “என்ன நோக்கத்திற்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும்; மக்கள் பிரச்னைக்காக பேரணி நடத்துகிற நோக்கம் இருக்கிறதா அதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். • 12:39 (IST) 02 Oct 2022
  2வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

  உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் 26 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 2வது நாளாக ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் . கட்டணம் செலுத்தாமல் சுங்கச்சாவடியை கடந்து வாகனங்கள் ஃபாஸ்டேக் வசூலும் நடைபெறாததால் பல லட்சம் வருவாய் இழப்பு என புகார் • 12:26 (IST) 02 Oct 2022
  தூய்மையான காமராஜ் மாடல் தேவை

  காமராஜரின் பொற்கால ஆட்சியின் அடிப்படையிலே, தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது வளமான தமிழ்நாட்டிற்கு நேர்மையான, எளிமையான, தூய்மையான காமராஜ் மாடல் தேவை காமராஜரின் நினைவுநாளில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி • 12:25 (IST) 02 Oct 2022
  உயர் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

  பல்கலைக்கழக ஊழியர்களை குத்தகை முறையில் நியமிக்கும் முடிவை கைவிட வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் . உயர் கல்வித்துறைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் • 12:24 (IST) 02 Oct 2022
  "செயற்கையான மின் தடையை ஏற்படுத்துவத்துவது சரியல்ல

  தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மின்துறை ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாய வாய்ப்பு "செயற்கையான மின் தடையை ஏற்படுத்துவத்துவது சரியல்ல" புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பேட்டி • 12:23 (IST) 02 Oct 2022
  மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

  பேதங்களைக் கடந்து அன்பும், அமைதியும் மிளிரும் சமூகமாக இந்தியாவை உருவாக்கிட உழைத்தவர் அண்ணல் காந்தியார் சமத்துவமும், சகோதரத்துவமும் இந்த மண்ணில் தழைத்து, வெறுப்புணர்வைத் தூண்டும் சக்திகளுக்கு என்றும் இடமில்லை;இது காந்திய மண் என அவரது பிறந்தநாளில் சூளுரைப்போம் . மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் • 12:23 (IST) 02 Oct 2022
  ஓபிஎஸ் தரப்பினர் தொண்டர்களை குழப்புகின்றனர்

  ஓபிஎஸ் தரப்பினர் தொண்டர்களை குழப்புகின்றனர். ஓபிஎஸ் தரப்பினர் உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரித்து கூறி வருகின்றனர் அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் யாரும் சசிகலாவுடன் சேர மாட்டார்கள் - ஜெயக்குமார் • 10:22 (IST) 02 Oct 2022
  ஆர்.என்.ரவி மரியாதை

  சென்னை, எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தியின் திருவுருவப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை மகாத்மா காந்தியின் 154வது பிறந்தநாளை ஒட்டி மலர் தூவி அஞ்சலி • 10:21 (IST) 02 Oct 2022
  ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வரலாம்- டிடிவி தினகரன்

  தமிழகத்தில் தற்போதைய சூழலை பார்த்தால் ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வரலாம் தஞ்சையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி • 09:56 (IST) 02 Oct 2022
  இன்று அலைமோதும் மக்கள் கூட்டம்

  புரட்டாசி மாதத்திலும் களைகட்டும் காசிமேடு மீன் மார்க்கெட் கடந்த 2 வாரங்களாக மீன் விற்பனை மந்தமாக இருந்த நிலையில், இன்று அலைமோதும் மக்கள் கூட்டம் அதிகாலை முதலே காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்து வரும் மீன்பிரியர்கள் • 09:53 (IST) 02 Oct 2022
  காதி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி

  சென்னை, காதி கிராமோத்யோக் பவனில் காதி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மகாத்மா காந்தியின் 154வது ஜெயந்தி விழாவை ஒட்டி ரூ.75 ஆயிரத்திற்கான காதி துணிகளை வாங்கினார் அமைச்சர் காந்திAdvertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment