Tamil News Today chennai unlock : சென்னையில் இருந்து மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு மீண்டும் விமான சேவை இன்று முதல் தொடக்கம்.
செப்டம்பர் 14-ம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்னதாகவே முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற இரு சபைகளும் மார்ச் 23-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து சமூக இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டு, நாடாளுமன்ற மக்களவை செப்டம்பர் 14-ம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணியளவில் தொடங்குவதாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி. டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பிரணாப் முகர்ஜி இல்லத்தில், அவரது புகைப்படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி!
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Live Blog
Tamil Nadu News Today Updates சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
இந்தியாவில் ஒரே நாளில் 69,921 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் தொற்றில் இருந்து 65,081 பேர் குணமடைந்துள்ளனர்; தொற்றால் 819 பேர் உயிரிழந்துள்ளனர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்.
பொறியியல் படிப்புகளுக்கான ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது . தமிழப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புகளில் சேர, எழுதவேண்டிய பொது நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
’தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்’ வீரமான வீரலட்சுமி!
கொரோனா தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளின் படி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜிக்கு ஆறுதல் கூறினார் பிரதமர் .
நாட்டின் கடைகோடி கிராமத்தில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைந்திருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தின் 64ஆவது பிறந்த நாள் இன்று
தேர்தல் ஆணையராக இருந்துவந்த அசோக் லவாசா ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் நிதித்துறை செயலாளருமான ராஜீவ் குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் ராஜீவ் குமார் இன்று இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 6,031 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 74 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது.
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “செப்டம்பர் 15-க்குப் பிறகு பல்கலைக்கழக இறுதி பருவத் தேர்வு நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவனை விரைவில் வெளியிடப்படும். மாணவர்கள் நேரில் வந்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகா மாநிலம், தட்சிண கன்னடத்தில் உள்ள புட்டிலா அருகே யானை ஒன்று மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. யானையின் மரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இன்று 1,084 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் 4,844 தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா தொற்று 2 வாரங்களுக்கும் மேலாக தினசரி தொற்று 1,100 – 1,300க்குள் ஒரு நிலையாக பதிவாகி வருகிறது. ஆனால், சென்னைக்கு வெளியே அதிக அளவில் மாறி மாறி பதிவாகி வருகிறது. கடந்த சில நாட்களாக கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,928 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிப்பால் 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: “தமிழகத்தில் எங்கிருந்து வந்தாலும் இனி தனிமைப்படுத்துதல் முறை கிடையாது. வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்து தனிமைப்படுத்தப்படும். தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், தொற்று குறைந்து விட்டது என்று நினைக்காமல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை எச்சரிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற பயணம், வெளியே சுற்றுவதை 3 மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை செப்டம்பர் 14ம் தேதி காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இம்மாதம் 14ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 1ந் தேதி வரை நடைபெறுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பைக் கருத்திற்கொண்டு, சமூக இடைவெளியைப் பின்பற்ற ஏதுவாக, இரு அவைகளின் உறுப்பினர்களும், வழக்கமான இருக்கைகள் மட்டுமின்றி, பார்வையாளர் மாடம் உள்ளிட்ட இடங்களிலும் அமர வைக்கப்பட உள்ளனர் என்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையங்கள் ஆணையகத்தின் பெயரில் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக எச்சரிக்கை செய்துள்ள விமான நிலையங்கள் ஆணையகத்தின் சென்னை அலுவலக துணைப் பொது மேலாளர் எஸ் ரவி, இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் முன்னணி நாளிதழ்களிலும், http://www.aai.aero என்ற ஆணையகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மட்டுமே வெளியிடப்படும் என்றும் மேலும் கூறியுள்ளார்.
கைபேசியில், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் செய்திகள் வாயிலாகப் பெறப்படும் போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து கவனமாக இருக்குமாறும், இத்தகைய விளம்பரங்களைப் பற்றி இந்திய விமான நிலையங்கள் ஆணையக அலுவலகத்திற்கோ, காவல் துறைக்கோ தெரிவிக்குமாறும், அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாந்தால் அதற்கு ஆணையகம் பொறுப்பல்ல என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது; நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று நானும் எனது சகோதரியும் நேரில் சந்தித்தோம்; எங்களை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார் என்று எஸ்.பி.பி சரண் தெரிவித்தார்.
தளர்வுகளைத் தொடர்ந்து நாம் வெளி வரும் போது, நம் உயிருக்கும் உறவுகளுக்கும் நம் அலட்சியம் ஆபத்தாகி விடக்கூடாது. மருந்தே இல்லாத இந்நோயில் இருந்து, நம் வாழ்முறையும், முன்னெச்சரிக்கையும் மட்டுமே, நமைக் காத்திடும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9 % இந்திய பொருளாதாரத்தின் அழிவு பணமதிப்பிழப்புடன் தொடங்கியது. அப்போதிலிருந்தே, அரசாங்கம் தவறான கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
சுங்க கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ,’ கொரோனா பேரிடரைத் தொடர்ந்து சுமார் ஐந்து மாதங்கள் பொது முடக்கத்தால் முடங்கி இருந்த ஏழை மக்கள் இப்போதுதான் பொருளாதாரம் சார்ந்த இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்களை மறைமுகமாக பாதிக்கக்கூடிய வகையில் சுங்க கட்டண உயர்வை அமல்படுத்தியிருப்பது அம்மக்களை மேலும் வேதனைப்படுத்தவே செய்யும். எனவே, உடனடியாக அந்த கட்டண உயர்வை திரும்பப்பெறவேண்டும். இன்னும் சொல்லப்போனால், கொரோனா பேரிடர் முழுமையாக நீங்கும் வரை சுங்கக் கட்டணத்தில் ஏதேனும் சலுகை காட்டமுடியுமா என மத்திய அரசு சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
“பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தில் ‘ரேட் பேசி தகுதிகள் விற்கப்பட்டதா’ என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர விசாரணை நடத்திட வேண்டும்” என்று திமுக கழக பொருளாளர் துறைமுருகன் தெரிவித்தார்.
நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
மார்ச் மாதம் எடுக்கப்பட்ட 1000 ரூபாய்க்கான மாதாந்திர பேருந்து பயண அட்டை, செப்டம்பர் 15-ம் தேதி வரை அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலா மையங்கள் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மாவட்டத்திற்கு வர தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.
யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று இந்தியாவின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றார். பிப்ரவரி 19, 1960 இல் பிறந்த ராஜீவ் குமார் 1984 வருட ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
திமுக பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய வரும் 9ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு
ரஜினி தேசியவாதி, ஆன்மிகவாதி. அவர் தேர்தலில் களம் கண்டால் சிறப்பாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.
மதுரையில் 165 நாட்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, பக்தர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளின் படி அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் 21 இடங்களில் சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.
தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிவு , 144 தடை உத்தரவை மீறி 100க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி, பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றதாக 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்தில் மார்ச் மாதம் எடுத்த ஆயிரம் ரூபாய் பாஸை பயன்படுத்தலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் பூலித்தேவன் உருவ படத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தென்காசி மாவட்டத்தில் பூலித் தேவனின் பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார். இதன் காரணமாக நெற்கட்டும் செவலில் அரசு சார்பில் நடைபெற இருந்த பூலித் தேவனின் 305 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களின் சான்றிதழ் 7 ஆண்டுக்கு மேல் செல்லாது. மீண்டும் தேர்வு எழுத வேண்டும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம். டெட் தேர்வு எழுதி, தேர்ச்சி அடைந்து 7 ஆண்டு நிறைவு செய்தவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.2013ல் தேர்ச்சி பெற்றவர்கள்,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் வகையில் அறிவிக்க கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அறிவிப்பு.