Tamil Nadu News Today Live Updates : தமிழக மக்களின் நம்பிக்கை நாயகராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணியையும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பணியையும் ஒப்பிட்டு பார்த்தால் ஸ்டாலின் செயல்பாடுகள் பூஜ்யத்தில் இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடியுடன் காணொளி மூலம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது. மழை காரணமாக மீட்புப் பணிகள் சவாலாக இருப்பதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டியது. புதிதாக தமிழகத்தில் 5914 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது. இதிலிருந்து 1.30 கோடி பேர் மீண்டிருக்கிறார்கள்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Live Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலை எடப்பாடி பழனிசாமி தலைமயில் தான் சந்திப்போம் என்று உதயகுமார் தெரிவித்தார். அதிமுக முதல்வர் வேட்ப்ளார் எடப்பாடி. பழனிசாமி தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்தார்.
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. இதுகுறித்து கருத்து தெரிவத்த திமுக எம்.பி கனிமொழி, தனது ட்வீட் செய்தியில், "ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் ! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம்" கருத்து தெரிவித்தார்.
பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. இதுகுறித்து கருத்து தெரிவத்த திமுக எம்.பி கனிமொழி, தனது ட்வீட் செய்தியில், "ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் ! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம்" கருத்து தெரிவித்தார்.
லெபனான் வெடிவிபத்து சம்பவத்திற்கு பொறுப்பேற்று, அந்நாட்டின் பிரதமர் அஸன் டையப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த வெடிவிபத்தால் ஏராளமான கட்டிடங்கள் சேதம் அடைந்ததோடு உயிரிழப்பும் ஏற்பட்டதை அடுத்து, கவனக் குறைவாக நடந்து கொண்ட அரசைக் கண்டித்து அந்நாட்டில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
கோவிட்-19-க்கு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்ஸின் தடுப்பூசியின் 2-ம் கட்ட சோதனை இன்று நாக்பூரில் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோ டெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்துடன் இணைந்து இந்த தடுப்பு மருந்தை தயாரித்து வருகிறது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்புய் எண்ணிக்கை 3,08,649 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6,005 -பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2,50,680 -பேர் இதுநாள் வரையில் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
அரசு மருத்துவமனைகளில் கோவிட்-19 நோய் தொற்று அல்லாத பிற நோய்களுக்கும் எவ்வித தங்குதடையுமின்றி அவசரகால மருத்துவ சேவை உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் 24 மணி நேரமும் அளிக்கப்பட்டு வருகிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தினர்.
பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிப்பு
புதிய அறிவிப்பு வரும் வரை பயணிகள் மற்றும் புறநகர் ரயில் சேவை ரத்து நீட்டிக்கப்படுவதாக ரயில்வே அறிவிப்பு
தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும்
மும்பையில் மட்டும் தேவைக்கு ஏற்ப உள்ளூர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு
மாதம் ஒன்றுக்கு ரூ.3,600 முதல் ரூ.4,000 வரை ஊதிய உயர்வு அறிவிப்பு
வீட்டு வாடகை, செலவு படி, உணவு படி போன்ற இதர சலுகைகள் - தலா இரண்டு செட் சீருடை வழங்கவும் உத்தரவு.
இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் 2026ம் ஆண்டு டிசம்பர் வரை அமலில் இருக்கும்
இதன்மூலம் 14000 ஒப்பந்த தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்
இந்த ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் அனைத்தும் முன்தேதியிட்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து வழங்கப்படுகிறது.
- என்எல்சி நிர்வாகம்
உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை: உடற்பயிற்சி கூடங்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!https://t.co/5wMBD3FLqB | #Corona | #Gym | #COVID19 | @Vijayabaskarofl | @SPVelumanicbe | @CMOTamilNadu pic.twitter.com/S2h4nWpoGP
— News7 Tamil (@news7tamil) August 11, 2020
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விரைந்து குணமடைய வேண்டுகிறேன் என்று முதல்வர் பழனிசாமி ட்வீட் செய்துள்ளார்.
I Wish and Pray to the almighty for speedy recovery of Shri Pranab Mukherjee, former president of India.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 11, 2020
எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். புதிய கல்விக் கொள்கை குறித்து திமுக சார்பில் டி.ஆர்.பாலு மனு அளித்த நிலையில் அமைச்சர் விளக்ககம் அளித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சார்பாக T.R பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன். pic.twitter.com/KR93takYEN
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) August 11, 2020
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அங்கு இத்தனை நாட்களுக்கு பிறகு உள்ளூர் மக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாவது இதுவே முதல்முறை. இதனையடுத்து அந்தப் பகுதிக்கு மட்டும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், ஆனால் யாரிடம் இருந்து தொற்று பரவியது என்பது தொடர்பான தகவல்கள் இல்லை என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக போராடி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இனி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் இதுவரை அரசு மருத்துவமனைகளில் 5.09 கோடி பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 1.80 லட்சம் பிரசவங்களும் 68,479 சிசேரியன் அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றுள்ளன
உள்நோயாளிகளாக 27.30 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர்
- அமைச்சர் விஜயபாஸ்கர்
உலகில் முதல் முறையாக கொரோனா தடுப்பு ஊசியை கண்டு பிடித்தது ரஷ்யா
அதிபர் புதின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதனை வெற்றி பெற்றதாக தகவல்
மாஸ்கோவில் உள்ள ஹேமாலயா இன்ஸ்டிடியுட் மற்றும் ரஷ்ய ராணுவ ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து சாதனை
செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அறிவிப்பு
ஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, "சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆண் வாரிசை போலவே பெண் பிள்ளைகளுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு என்று பெண்களுக்கு சொத்துரிமையில் சமபங்கு வழங்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின் "உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு" என்று பாராட்டியுள்ளார்.
பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.
பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது!
உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!
— M.K.Stalin (@mkstalin) August 11, 2020
கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும் போராடி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலத்தின் பங்கும் மிகவும் முக்கியமானது. குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது நாம் சரியான பாதையில் செல்வதை காட்டுகிறது. கொரோனா தடுப்பு-சரியான திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம். சுகாதார பணியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய சவால்களை எதிர்கொள்கின்றனர். COVID19 பரவல் நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது-புதிய சூழலும் உருவாகிறது
- பிரதமர் மோடி
எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் திருமிகு. பாரதிராஜா அவர்களுக்கு என் உளப்பூர்வமான நன்றிகள்.. https://t.co/qR32iviTfO
— Suriya Sivakumar (@Suriya_offl) August 11, 2020
எடப்பாடியார் என்றும் முதல்வர்!
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தை சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் கான்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!— KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) August 11, 2020
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளன்று வீட்டில் அழகிய வண்ண கோலங்களிட்டு வாசலில் மாவிலை, தென்னங்குருத்து ஓலைகளால் ஆன தோரணங்களை கட்டி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழவகைகள், பலகாரங்கள் போன்றவற்றை படைத்து குழந்தைகளை கண்ணனை போல் அலங்கரித்து குழந்தைகளின் பாத சுவடுகளை மாக்கோலத்தில் தங்கள் இல்லங்களுக்குள் பதித்து அந்த குழந்தை கிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்குள் வந்தது போல் மனதில் நினைத்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights