பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
தீ விபத்து
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை குப்பை கிடங்கில் தீ விபத்து தீயை அணைக்கு பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம். மக்களுக்கு பாதிப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் – ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி. 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அதிமுகவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் மனு . டெல்லி உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏப்ரல் 10ம் தேதி விசாரிக்கிறது
தனது பதவிபிரமாணத்திற்கு முரணாகவும், மாநில நலனுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுனருக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில், தெரிவித்து நிர்வாக ஒழுங்கை கெடுக்கும் வகையில் ஆளுனர் செயல்படுகிறார். மாநில அரசின் சுருக்கெழுத்துதான் ஆளுனர் என்று சுருக்கமாக சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு தி கிரேட் டிக்டேட்டராக ஆளுனர் தன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்.
இதனை உணர்ந்து தமிழக மக்கள் நலனுக்காவும், அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுனர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றும் வகையில் ஆளுனர் செயல்படுவார் என்று நம்புகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் வரும் 10ம் தேதி முதல், காணொளி வழியே வழக்கு விசாரணை நடத்தப்படும் என பதிவாளர் அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இம்முடிவு என தகவல்
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து ஆர்சிபி பவுலர் ரீஸ் டாப்லி விலகுகிறார். ஏற்கனவே ஆர்சிபி அணியில் இருந்து வில் ஜாக்ஸ், ரஜத் படிதார் விலகியுள்ளனர்; ஜோஸ் ஹேசில்வுட் இன்னும் அணியில் இணையவில்லை!
பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டத்தில் சமையல் கியாஸ் விலை நிர்ணயத்திற்கு திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களுக்கு ஒப்புதல்
சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகும் 'சூர்யா 42' டைட்டில் & ரிலீஸ் தேதி வரும் 16ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியீடு – படக்குழு அறிவிப்பு
சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை – 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் . பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
பேச வாய்ப்பு அளிக்கவில்லை என சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு
செய்தனர். பேச அனுமதிக்கவில்லை என்று வெளிநடப்பு செய்வது விந்தையாக இருக்கிறது. யாரையும் பேசவிடாமல் அவர்கள் குரல் வளையை நெறிக்கவேண்டும் என்று முதலமைச்சரும் சொல்லவில்லை, நானும் செய்யவில்லை. பேச வாய்ப்பு கொடுக்கப்படுகிறது என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
வரும் 8 ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனியே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஈரோடு, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், சேலம்ம், நாமக்கல், விருதுநகர், மதுரை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வெளியாகவுள்ள பிச்சைக்காரன் – 2 திரைப்படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது; இதற்கு விஜய் ஆண்டனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தி.மு.க எம்.பி கனிமொழி: “ஆளுநர் ஆதரங்களைத் தர வேண்டும்; மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் ஆளுநரைக் கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ: “வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடினார்கள் என்று உளறியுள்ளார் ஆளுநர் ரவி; தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று 30 ஆண்டுகளாக போராடியவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்கிறது” என்று கூறினார்.
ஆளுநர் ரவியின் சர்ச்சை பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஆளுநரின் போக்கு முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது, இது பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கை; ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கோபண்ணா: “எந்த மசோதாவையும் நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது; போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார் ஆளுநர் ரவி” என்று விமர்சித்துள்ளார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்க தலைவர் வாஞ்சிநாதன்: “ஸ்டெர்லைட் போராட்டம் தன்னெழுச்சியாகத்தான் நடந்தது என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ; ஒன்றிய அரசின் கீழ் உள்ள சிபிஐ பொய் சொல்கிறதா? வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது என பேசிய ஒருவர்கூட அதற்கான ஆதாரத்தை சிபி.ஐ வசம் கொடுக்கவில்லை. அர்ஜுன் சம்பத் பேசியதை ஆளுநர் ரவி பேசிக்கொண்டு இருக்கிறார்.” என்று கூறினார்.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மசோதாக்கள் கிடப்பில் போட்டாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்று பேசியதற்கு வி.சி.க தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா, தி.மு.க எம்.பி. திருச்சி சிவா ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பா.ஜ.க.,வில் இணைந்தார். கடந்த ஜனவரி மாதம் அனில் ஆண்டனி காங்கிரசில் இருந்து விலகினார்
ஸ்டெர்லைட் ஆலை நாட்டின் 40% காப்பர் தேவையை பூர்த்தி செய்து வந்தது. வெளிநாட்டு நிதி மூலம் மக்களை தூண்டிவிட்டு, ஸ்டெர்லைட் ஆலையை மூடி விட்டனர் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்
ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால், அதற்கு நிராகரிப்பதாக பொருள் என சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்
திருச்சியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை அதிகரிக்க ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இது பஞ்சப்பூர் பகுதியில் அமையும். 10000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் காணொளி வாயிலாக நாளை அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்துகிறார்
அண்ணாமலை குறித்து அவதூறு கருத்து பரப்புவதாக, காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜி.எஸ். மணி சென்னை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பிய விவகாரத்தில், பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாந்த் குமார் உம்ரா மனுவுக்கு தமிழக அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதில், 11 பேர் நிபந்தனையுடன் இலங்கை ஊர்க்காவல்துறை விடுவித்தது. ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
பிரதமர் மோடி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரும் 9ம் தேதி வருவதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ட்ரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் பூரண உடல்நலத்துடன் இருப்பதாகவும், மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாகவும், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஜெகர்நாத் மகதோ (56) காலமானார்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்.10ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களில் 11 பேர் நிபந்தனையுடன் விடுதலை
ஒரு மீனவருக்கு மட்டும் 14 மாதம் சிறை தண்டனை விதித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு
மீனவர்களின் விசைப்படகுகள் அந்நாட்டு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்
சென்னை, நங்கநல்லூர் மூவரசம்பட்டு குளம் தற்காலிகமாக மூடப்படுகிறது
தீர்த்தவாரி நிகழ்வின் போது குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த நிலையில் அறிவிப்பு
உரிய பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகளுக்கு பிறகு திறக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் தகவல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சுவாசக்கோளாறு, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு திரும்பினார்
ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்வில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில்
தீர்த்தவாரி நடைபெற்ற குளம் கோயில் குளம் அல்ல, பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படும் குளம். இந்த கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது. தீர்த்தவாரி குறித்து அறநிலையத்துறைக்கு தகவல் இல்லை. குளத்தை தூர்வாரமல் தீர்த்தவாரி நடைபெற்றது குறித்து முதல்வர் என்னை கண்டித்தார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நங்கநல்லூரில் கோயில் தீர்த்தவாரியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும் என ஈபிஎஸ்கோரிக்கை
தீர்த்தவாரி நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – ஜி.கே.மணி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
2-ம் அமர்வு எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி அமளியால் முற்றிலும் முடங்கியது
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் – 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
ஏற்கனவே 124 பேர் கொண்ட முதல் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 42 பேர் கொண்ட 2வது பட்டியல் வெளியீடு
சித்தராமையா போட்டியிட விரும்பிய கோலார் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை
காஞ்சிபுரம் சாலபோகம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து 6 சிறுமிகள் தப்பி ஓட்டம்
இன்று காலை 16 வயது கொண்ட 6 சிறுமிகள் தப்பி ஓட்டம் – தேடும் பணி திவிரம்
பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு
வரும் 8ம் தேதி பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார்
வரும் 16ம் தேதி அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு. கர்நாடக சட்டமன்ற பொதுத்தேர்தல் குறித்தும், உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200க்கு விற்பனை . ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 5,650க்கு விற்பனை.
சென்னை, நங்கநல்லூர் கோவில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது நீரில் மூழ்கி 5 இளம் அர்ச்சகர்கள் உயிரிழந்த விவகாரம் . உயிரிழந்தவர்களுக்காக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆகவே தொடரும். புதிய நிதி கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்தார் இதன் மூலம் வங்கிக்கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய வட்டி மேலும் உயராது என்பது குறிப்பிடத்தக்கது .
நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு நோட்டீஸ் . வேளாண் மண்டலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஏலம் விட்டது குறித்து, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் விளக்கமளிக்க கோரிக்கை .
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் கைதான மணீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு . யூடியூபர் மணீஷ் காஷ்யப்-ஐ ஏப்ரல் 19ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ஏற்கனவே உத்தரவு
6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு . ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி 2023 : கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதல் . இன்று இரவு 7.30 மணிக்கு இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்குகிறது 9.76 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்