/tamil-ie/media/media_files/uploads/2020/08/Congress-MP-H-Vasanthakumar-Dies.jpg)
காங்கிரஸ் எம்.பி.ஹெச்.வசந்தகுமார்
Tamil News Today Updates: காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் மறைவால் வருத்தம் அடைந்துள்ளேன். வணிகம் மற்றும் சமூக சேவைகளில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. அவருடனான தொடர்புகளின்போது, நான் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து அவரது ஆர்வத்தைக் கண்டேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு காய்கறி சந்தை அடுத்த மாதம் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. தனி நபருக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சென்னை, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை. மேலும் தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மூலம் மாநில அரசுகள் கடன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மாணவர்களின் மன உளைச்சலை குறைப்பதற்காகவே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். நீட் தேர்வுக்கு எதிராக ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களும் வழக்குத் தொடுக்க வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நீட் மற்றும் ஜேஇஇ தேர்வெழுத மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக மத்திய உயர் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil Nadu News Today Updates
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.” என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. வசந்தகுமார் அவர்களது மறைவுச் செய்தி அறிந்து துயருற்றேன். அவர் அரசியல் மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்கியவர். தமிழக மக்களின் நலனுக்கான அவரது அர்ப்பணிப்பு போற்றத்தக்கது. அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
— President of India (@rashtrapatibhvn) August 28, 2020
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆலுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 28, 2020
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமார் மறைவால் வருத்தம் அடைந்துள்ளேன். வணிகம் மற்றும் சமூக சேவைகளில் அவரது பணி குறிப்பிடத்தக்கது. அவருடனான தொடர்புகளின்போது, நான் தமிழகத்தின் முன்னேற்றம் குறித்து அவரது ஆர்வத்தைக் கண்டேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு நாளை காலை 8 தலைவர்கள், பொதுமக்கள் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தஞ்சையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி. அதிமுக தலைமையில்தான் வரும் தேர்தலை சந்திப்போம். எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் தலைமை வகிக்கும்.” என்று கூறினார்.
கொரொனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு கிசிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. உயிர் காக்கும் எக்மோ கருவி மூலம் எஸ்.பி.பி-யின் உடல்நிலை கண்காணிக்கப்படு வருகிறது. அவருக்கு பிஸியோதெரப்பி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து ஆலோசனை நடத்திய பின் பேசிய முதல்வர் பழனிசாமி, “கொரோனா பரவலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தஞ்சையில் கோவிட் கேர் மையங்களில் 650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சுகாதாரம், உள்ளாட்சி துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தஞ்சையில் 2227 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தஞ்சையில் கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு, குழந்தைகள் நல மையம் கட்டப்படுகிறது. தஞ்சை பட்டுக்கோட்டையில் மீன் உலர்தளம் அமைக்கப்படும் என்று கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். தி.மு.க. கட்சித் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தி.மு.க. தலைவராக மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மருத்துவமனை வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் அண்மையில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை உள்ளிட்ட 5 பேர் மீது காட்டூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை உட்பட ஐந்து பேர் மீது கோவை காட்டூர் காவல் நிலையத்தில் தனிநபர் இடைவெளியை பின்பற்றவில்லை உட்பட கொரோனா தடுப்பு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச்செல்வி மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட கழக செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான @OSManianofl அவர்களின் மனைவி திருமதி.கலைச்செல்வி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து வேதனையுற்றேன். துணைவியாரை இழந்துவாடும் மாண்புமிகு அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 28, 2020
"தேசியக் கொடியை அவமதித்ததாக தொடரப்பட்ட வழக்கில் செப் 2ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்வோம். செப் 2 வரை எஸ்.வி.சேகருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது, என முன் ஜாமீன் மனு மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்ய உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து யுஜிசி வழிக்காட்டுதல்படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு நடைபெறும். தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாகவா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 1ம் தேதி முதல் அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நூலகத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அரசு பொது நூலகங்களுக்கு வர அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி. கொரோனா பொது முடக்கம் காரணமாக 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த பொது நூலகங்கள் மீண்டும் 1ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights