scorecardresearch

Tamil news today: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அபார வெற்றி

Tamil Nadu News, Tamil News , Petrol price Today – 09 Sep 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today: ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று: இலங்கை அபார வெற்றி
Tamil news updates
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில், வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றது. முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 121 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 3 விக்கெட்களையும், தீக்சனா மற்றும் மதுஷன் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, 17 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்த 124 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதி போட்டியில் மீண்டும் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெட்ரோடீசல் விலை பெட்ரோல்டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோ ரூ.102.63-க்கும் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சகாப்தம் மறைந்தது

ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்குகள், 10 நாட்களுக்கு பின் நடைபெறுகிறது. 5 நாட்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் உடல் வைக்கப்படவுள்ளது. மேலும் அவரது மறைவுக்கு நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இவரது மறைவால் பிரிட்டனின் புதிய மன்னராக ராணி எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராகுல்: 3 நாள் பயணம்

நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் 3வது நாள் நடை பயணத்தை தொடங்கினார், ராகுல். தக்கலை வரை இன்று பயணம் மேற்கொள்ள திட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

Live Updates
20:24 (IST) 9 Sep 2022
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

18:52 (IST) 9 Sep 2022
பட்டங்களில் வேறுபாடு இல்லை- யுஜிசி

ஆன்லைன், தொலைதூர கல்வி, நேரடி கல்வி என அனைத்து முறையில் பெறும் பட்டங்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

18:44 (IST) 9 Sep 2022
நடிகர் விஜய்க்கு கதை ரெடி!

நடிகர் விஜயை கவரும் வகையில் கதை ஒன்றை தயார் செய்துவருகிறேன் என மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

18:40 (IST) 9 Sep 2022
ஷங்கர் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா

ராம்சரண் நடிப்பில், ஷங்கர் டைரக்ஷனில் உருவாகிவரும் புதிய படத்தில் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கிறார்.

தற்போது நடிகராகவுள்ள எஸ்.ஜே. சூர்யா கடந்த காலங்களில் அஜித் குமார், விஜய் ஆகியோரை வைத்து ஹிட் படங்களை கொடுத்தவர் ஆவார்.

18:15 (IST) 9 Sep 2022
ராகுல் டீசர்ட் விவகாரம்: காங்., பாஜக மோதல்

ராகுல் காந்தி ரூ.42 ஆயிரம் மதிப்புள்ள டீ-சர்ட் அணிந்து பாத யாத்திரை மேற்கொள்கிறார் என பாஜகவின் ட்விட்டர் கணக்கில் புகைப்படம் வெளியானது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், “பிரதமர் நரேந்திர மோடியின் ரூ.1.5 லட்சம் கண்ணாடி ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை குறித்து பேச வேண்டியிருக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

17:58 (IST) 9 Sep 2022
பில்கிஸ் பானு வழக்கு: குஜராத் பதிலளிக்க உத்தரவு

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை கைதிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கில் குஜராத் மாநில அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

17:56 (IST) 9 Sep 2022
சினிமா பட வாய்ப்பு ஆசைக்காட்டி ஆபாச படம்

சினிமா ஆசை காட்டி இளம் பெண்களை ஆபாச படம் எடுத்த விவகாரத்தில் கைதான போலி சினிமா இயக்குனர், வேல் சத்ரியனை 6 நாள் காவலில் விசாரிக்க சேலம் குற்றவியல் நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக போலி சினிமா இயக்குனர் வேல் சத்ரியன் பேசும் ஆபாச ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

17:29 (IST) 9 Sep 2022
குரூப்-1 தேர்வு நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பு !

குரூப்-1 முதல் முதல் நிலை தேர்வு வரும் அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருந்த நிலையில், தற்போது நவம்பர் 19ம் தேதிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.

17:25 (IST) 9 Sep 2022
உதயநிதி படத்தோடு போஸ்டர் வெளியிட்ட கமல்ஹாசன்

விக்ரம் படத்தின் 100ஆவது நாள் பட போஸ்டரில் திமுக எம்எல்ஏ உதயநிதி படத்தையும் சேர்த்து கமல்ஹாசன் போஸ்டர் வெளியிட்டுள்ளார்.

17:17 (IST) 9 Sep 2022
பிரிட்டன் மன்னராக சார்லஸ் நியமனம்

பிரிட்டன் மன்னராக இளவரசர் சார்லஸ் நாளை பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

17:05 (IST) 9 Sep 2022
கேரளத்தில் ரூ.700 கோடி மது விற்பனை

கேரளத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரூ.700 கோடி வரை மதுபானம் விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது கடந்த காலங்களில் இல்லாத வகையில் மிகப்பெரிய அளவிலான மது விற்பனை ஆகும்.

16:35 (IST) 9 Sep 2022
ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் இ.பி.எஸ் தரப்பு மனு – ஜெயக்குமார்

ஜெயக்குமார் பேட்டி: ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபியிடம் மனு அளித்தோம். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபியிடம் கோரிக்கை. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓபிஎஸ் செல்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறினார்.

16:06 (IST) 9 Sep 2022
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை – ஜெயக்குமார் பேட்டி

டி.ஜி.பி. அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ். வருவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; கட்சிக்கு தொடர்பில்லாத அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிமுக அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; ஓ.பி.எஸ். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இல்லாத நிலையில் அவர் தொடர்ந்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறி வருவது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்று கூறினார்.

16:04 (IST) 9 Sep 2022
அதிமுகவுக்கும் ஓபிஎஸ்.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை – அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் கும்பல் சூறையாடியது. ஓபிஎஸ் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

15:29 (IST) 9 Sep 2022
எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை நீட்டிப்பு – ஐகோர்ட்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலுமணி தொடர்பான வழக்குகளில் உயர் நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். அதை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளதால் உயர் நீதிமன்றம் தற்போது விசாரிப்பது சரியாக இருக்காது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

14:52 (IST) 9 Sep 2022
ராணி எலிசபெத் மறைவு.. அரசு நிகழ்ச்சிகள் ரத்து

பிரிட்டன் ராணி இரண்டாவது எலிசபெத் மறைவை ஒட்டி இந்தியா முழுவதும் வரும் 11ம் தேதி துக்கம் அனுசரிக்கப்படும். அன்றைய தினம் தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

14:03 (IST) 9 Sep 2022
எஸ்.பி.வேலுமணி வழக்கு

எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

13:35 (IST) 9 Sep 2022
ராகுல் பேட்டி

கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், காங்கிரஸ் தன்னுடைய பாதையில் சரியாக சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் உள்ள அனைத்து துறைகளையும் பாஜக அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வருமானவரி, அமலாக்கத்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்து செயல்படுகிறது என்றார்.

13:33 (IST) 9 Sep 2022
ராணி எலிசபெத் மறைவு.. கமல் இரங்கல்

உலக அரசியல் மாறிவிட்டது என்பதை உணர்ந்த உலகத் தலைவர் எலிசபெத் ராணி. புதிய உலகை அனுபவித்து நீண்ட நாட்கள் வாழ்ந்த உலகத் தலைவர்களில் ஒருவர். காலனி மனப்பான்மையில் இருந்து மாறிய இங்கிலாந்தின் பிரதிநிதியாக இந்தியா வந்திருந்தார்- கமல்ஹாசன்

13:05 (IST) 9 Sep 2022
அரசியல் ரீதியாக சசிகலாவை சந்திக்கவில்லை.. வைத்திலிங்கம்

சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது, அரசியல் ரீதியாக சசிகலாவை சந்திக்கவில்லை, இபிஎஸ் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி தருவார்கள் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

13:02 (IST) 9 Sep 2022
மாணவன் உயிரிழந்த விவகாரம் – சிபிஐ விசாரணை கோரி மனு

காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த விவகாரம். மகன் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோர் கோரிக்கை மனு

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூரிடம் சிறுவனின் பெற்றோர் கோரிக்கை மனு

12:56 (IST) 9 Sep 2022
கண்துடைப்பு பதவியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி – முதல்வர்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி – முதல்வர் ஸ்டாலின்

அதிமுக எம்எல்ஏக்களே கட்சி தலைமையிடம் பேசுவதில்லை. கண்துடைப்பு பதவியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

12:43 (IST) 9 Sep 2022
பள்ளி மாணவன் உயிரிழப்பு – 2 மருத்துவர்கள் சஸ்பெண்ட்

காரைக்காலில் பள்ளி மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கொடுத்த விவகாரம். அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் குற்றச்சாட்டு

காரைக்கால் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் சஸ்பெண்ட் – புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

12:38 (IST) 9 Sep 2022
பொதுநல மனு – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தேர்வு முறைகேடுகளை தடுக்க இணையதள சேவையை முடக்கும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு

மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

12:37 (IST) 9 Sep 2022
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்

சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு 2 வாரங்கள் அவகாசம்

விஷால் ஆஜராகாத நிலையில், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதற்கான அவகாச கோரிக்கையை ஏற்றது சென்னை உயர் நீதிமன்றம்

ரூ. 21.29 கோடி கடனை செலுத்தாமல் படத்தை வெளியிடுவதாக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு

வழக்கு விசாரணை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

12:08 (IST) 9 Sep 2022
திருமண நிகழ்ச்சியில் சசிகலா – வைத்திலிங்கம் சந்திப்பு

தஞ்சை : ஒரத்தநாடு அருகே திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் சந்திப்பு

வைத்திலிங்கத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் வி.கே.சசிகலா

12:06 (IST) 9 Sep 2022
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்றம் – பொதுநல மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வர கோரிய பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

11:48 (IST) 9 Sep 2022
டெல்லியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

டெல்லி, ஆசாத் மார்க்கெட் பகுதியில் இன்று காலை 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம்.

விபத்தில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என தகவல் – மீட்பு பணிகள் தீவிரம்

11:47 (IST) 9 Sep 2022
தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தனியார் மருத்துவ கல்லூரிகள் 50% மாணவர்களிடம் அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்

தேசிய மருத்துவ ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

11:24 (IST) 9 Sep 2022
ஆன்லைன் ரம்மி – நிறுவனங்கள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு மனு

ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

வழக்கு விசாரணை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவு

11:09 (IST) 9 Sep 2022
ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள்- ஸ்டாலின்

திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மக்களுக்காக ஓயாமல் உழைத்து கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்கள் நலனுக்காக பகலிரவு பாராமல் உழைத்து கொண்டிருக்கிறோம்- முதல்வர்

11:05 (IST) 9 Sep 2022
திமுக மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள்

திமுக மீது நம்பிக்கை வைத்தே மக்கள் வாக்களித்தார்கள். வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

11:04 (IST) 9 Sep 2022
109 கடைகளுக்கு சீல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 109 கடைகளுக்கு சீல்.

11:03 (IST) 9 Sep 2022
கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகத்தில் அந்நாட்டின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

11:02 (IST) 9 Sep 2022
ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல நீதிமன்ற அனுமதி தேவை

ஓபிஎஸ் அதிமுக அலுவலகம் செல்ல நீதிமன்ற அனுமதி தேவை . நீதிமன்றம் அனுமதித்தால் காவல்துறை சார்பாக பாதுகாப்பு தர தயார். ஓபிஎஸ் ஆதரவாளர் ஜேசிடி பிரபாகர் அளித்த மனு மீது காவல்துறை விளக்கம்

10:31 (IST) 9 Sep 2022
தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி

3வது நாள் நடைபயணம் : கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் அருந்தினார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி உடன் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கலந்துரையாடல்.

10:31 (IST) 9 Sep 2022
கிணற்றுக்குள் 3 பேருடன் பாய்ந்த கார்

கோவை மாவட்டம் சித்திரைச்சாவடியில் 120 அடி ஆழ கிணற்றுக்குள் 3 பேருடன் பாய்ந்த கார் . ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு ஊர் திரும்பிய போது, கிணற்றுக்குள் பாய்ந்த கார். காரை ஓட்டி வந்த வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரோஷன் நீரில் நீந்தி வெளியே வந்தார்

09:33 (IST) 9 Sep 2022
கொல்லப்பட்ட சிறுவன் ; கடைஅடைப்பு

காரைக்காலில் விஷம் வைத்து கொல்லப்பட்ட சிறுவன் பாலமணிகண்டன் விவகாரம் . சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் கடைஅடைப்பு போராட்டம் . ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் வெறிச்சோடி காட்சி அளிக்கும் சாலைகள்

09:19 (IST) 9 Sep 2022
3வது நாள் பயணம்: ராகுல்

நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியில் 3வது நாள் நடை பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. தக்கலை வரை இன்று பயணம் மேற்கொள்ள திட்டம்

09:17 (IST) 9 Sep 2022
உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு தடை

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை – மத்திய அரசு

Web Title: Tamil news today live queen elizabeth rahul gandhi cricket