பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
பணிப்பெண் மற்றும் ஓட்டுநருக்கு ஜாமீன்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை கொள்ளை சம்பவம் . பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகிய இருவருக்கும் சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவு.
ஐபிஎல் இன்று
ஐபிஎல் 2023: இன்று பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 469 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது கொரோனாவுக்கு 2,684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தமிழ் பாரம்பரியத்தால் கவரப்பட்டுள்ளேன் என்று கூறினார்.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,086 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார்
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் இரவு 8.15 மணிக்கு நடைபெறவுள்ள தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்தில் நான் பங்கேற்கவிருக்கிறேன். தமிழக் கலாச்சாரத்தைப் போற்றுவோர்களில் ஒருவராக நான் இந்த விழாவை பேராவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார்
முஸ்லீம்களுக்கான நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான பாஜக தலைமையிலான கர்நாடக அரசின் முடிவு, “முற்றிலும் தவறான அனுமானத்தின்” அடிப்படையிலானது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கவனித்தது, செய்தி நிறுவனம் PTI தெரிவித்துள்ளது.
வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு 2 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தும் மாநில அரசின் முடிவையும் நீதிமன்றம் “அதிர்ச்சியானது” மற்றும் “குறைபாடு கொண்டது” என்று கூறியது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் நலனுக்காக 3 புதிய கல்லூரி விடுதிகள், ரூ.1.30 கோடி செலவில் தொடங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவித்துள்ளார்
ராஜஸ்தான் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25% சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பனிப்பொழிவு காரணமாக தாங்களை கேட்காமல் பந்தை நடுவர்கள் மாற்றியதாக அஸ்வின் விமர்சனம் செய்த நிலையில், ஐபிஎல் நடத்தை விதிகளை அஸ்வின் மீறியதாக ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது
சிறுபான்மையினர் உரிமைகள் தினத்திற்கு வழங்கப்படும் தொகை ரூ. 10000 ஆக உயர்த்தப்படும். உலமாக்கள் மற்றும் இதர பணியாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ரூ. 1000 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட சிறுபான்மையினர் நலத்துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்
அமைச்சர் உதயநிதி ட்வீட்: “லக்னோவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5வதுதேசிய பாரா-பேட்மிண்டன் போட்டியில், கலப்பு இரட்டையர் பிரிவில், வெண்கலம் வென்ற தம்பி சேலம் சுதர்சன் அவர்களை தலைமை செயலகத்தில் இன்று வாழ்த்தினோம். பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் தம்பியின் வெற்றி மேலும் தொடரட்டும்” என்று வாழ்த்து தெரிவித்துளார்.
பெங்களூருவில் ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. கர்நாடகாவில் அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ. 1 கோடி பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் என தகவல் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் பேச்சு: “தமிழ்மொழியைச் சிறப்பிக்கும் வகையில், நிலவிலிருந்து பார்த்தாலும் ‘தமிழ்’ என்ற வார்த்தை தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாபெரும் காடு உருவாக்கப்படும்”என்று கூறினார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவிப்பு: “பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவியர் நலனுக்காக 3 புதிய கல்லூரி விடுதிகள், ரூ.1.30 கோடி செலவில் தொடங்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் விடுதிகளுக்கு சிறப்பு பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை மற்றும் கோவையில் ரூ.81.68 லட்சம் செலவில் 2 புதிய சிறுபான்மையினர் கல்லூரி மாணவர்கள் விடுதி துவங்கப்படும். உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதவி பெற்ற உறுப்பினர்களுக்கு, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ. 20,000-ல் இருந்து ரூ.30,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
சேலம் மாவட்டம் கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில்,
மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்தார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
மாணவர்கள் மணிகண்டன் (இடங்கனசாலை), முத்துசாமியின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், பாண்டியராஜன், மணிகண்டன் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம் தொடர்பான நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பதில் அறிக்கையில் தேதி குறிப்பிட வேண்டும் என்ற விதி கூட உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா? என்று கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளனர்
100 நாள் வேலை திட்டத்தில் முறையாக ஊதியம் வழங்காததால் நாகலெட்சுமி என்ற பெண் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மையிட்டான்பட்டி ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. கூடுதல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அளித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம நிர்வாகிகள் 7 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. சென்னையில் தங்கியிருந்து சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி ஜெகதீஷ் சந்திரா நிபந்தனை விதித்து உத்தரவு
சேலம், சங்ககிரியை அடுத்துள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற 4 மாணவர்கள் நீரில் மூழ்கி மாயமான நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும் 3 மாணவர்களை தீயணைப்பு துறை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடை நீக்கம். டப்பிங் உரிமை குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படாது என தயாரிப்பாளர் உத்தரவாதம் அளித்ததை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பாஜக பொருளாதாரப் பிரிவு மாநில துணைதலைவர் கிருஷ்ணப்பிரபு கட்சிக்கு அவப்பெயர் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை என தமிழ்நாடு பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டி கிருஷ்ணப்பிரபு, கட்சியில் இருந்து விலகிய நிலையில் பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் 'மகாலா'வுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், “2 வாரம் விளையாட மாட்டார்” என சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார்.
இதேபோல், சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு முழங்கால் பகுதியில் காயம் ஏற்பட்டு இருப்பதையும் அவர் உறுதி செய்துள்ளார்.
காசோலை மோசடி வழக்கில் மேல்முறையீடு செய்ய இயக்குனர் லிங்குசாமி முடிவு செய்துள்ளார். லிங்குசாமிக்கு 6 மாத சிறையை உறுதி செய்த சென்னை அமர்வு நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பை காட்டிலும் அதிகபட்ச வெப்பநிலை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று 10 மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது
திமுக ஊழல் பட்டியல் நாளை காலை 10.15-க்கு வெளியிடப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “DMK Files“ என குறிப்பிட்டும் உள்ளார்.
2021ம் ஆண்டு ரூ.10 லட்சம் வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய, நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் வசந்தி, காவல்துறை பணியில் இருந்து நிரந்தர நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“கலாஷேத்ரா பாலியல் விவகாரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 6 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 17ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் கூறியுள்ளது.
“நல்லதே நடக்க, நானிலம் சிறக்க, மகிழ்ச்சி பொங்க, மனிதநேயம் சிறக்க, வரவேற்கிறது தமிழ் புத்தாண்டு ” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பெண்கள் மட்டுமே இயக்கும் ரேபிடோ பைக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி கொடியசைத்து தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, எழும்பூர், சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அதிகாரியான அமுதா ஐஏஎஸ் மீண்டும் வரும் 17, 18ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ள உள்ளார்.
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விசாரிக்கப்பட்ட மைக்கேல் ராஜ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சுமார் ரூ1,749 கோடி பணப்பரிவர்த்தனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் நேற்று அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா என்று குறிப்பிட்டதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை பாஜக கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர்.
ஏப்.16-ல் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி
தமிழ்நாட்டில் ஏப்ரல் 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டத்திற்கு அனுமதி. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து ஆர்.எஸ்.எஸ் அனுமதி கேட்ட 45 இடங்களுக்கும் அனுமதி வழங்கியது காவல்துறை
இந்தியாவில் முதலீடு செய்ய முறையாக அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பிபிசி மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு. பிரதமர் மோடி குறித்த ஆவணப்படம் வெளியிட்டதை தொடர்ந்து, பிபிசி அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அறிக்கை வெளியீடு.
விசாரணைக்கு சென்றதில் இருந்து 20-வது நாள் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அருண்குமார். அருண்குமார் வாயில் பல இடங்களில் பற்கள் சேதம் என மருத்துவ அறிக்கையில் தகவல்.
சாவர்க்கர் குறித்து பேச்சு – ராகுல் காந்தி மீது புனே நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு
சாவர்க்கர் குறித்து அவதூறாக பேசியதாக புனே நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. லண்டனில் பேசியபோது அவதூறு கருத்துகளை ராகுல் தெரிவித்ததாக சாவர்க்கர் உறவினர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னத்துக்கு அனுமதி – ஏப்.17-ல் மத்திய அரசு பரிசீலனை
சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தமிழக அரசு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக ஏப்.17-ல் மத்திய அரசுபரிசீலனை. தமிழக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பரிசீலிக்க உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்பு
எதிர்க்கட்சியினர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை உள்ளிட்டவற்றை கண்டித்து கருப்பு மாஸ்க் அணிந்து கொண்டு பங்கேற்பு
உலக பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது
நாட்டிற்கான புதிய வாய்ப்புகளையும், சாத்தியங்களையும் புதிய இந்தியா உருவாக்கியுள்ளது.
71 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உரை
அம்பேத்கரின் 133வது பிறந்த நாளை முன்னிட்டு “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு
சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்துக்கொள்வதற்காக சட்டப்பேரவை ஒத்திவைப்பு
ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் 2 வது நாளாக சாலைமறியல்
சாலையில் படகுகளை வைத்து மீனவர்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ. வேலு பேச்சுவார்த்தை
நாளை அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாடவிருப்பதாக தகவல்
அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம்
விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமா? என சந்தேகம்
ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்
இந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது . சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்களிடம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு. தமிழ் மீது இந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்து ரூ. 45,408க்கு விற்பனை ஒரு கிராம் தங்கம் ரூ. 5,676-க்கு விற்பனை
பஞ்சாப், பதிண்டா ராணுவ மையத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 பேரில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் * தேனியை சேர்ந்த யோகேஷ் குமார்(24), சேலத்தை சேர்ந்த கமலேஷ்(24) ஆகிய இருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு . பிரேத பரிசோதன முடிந்த நிலையில், இன்று அவர்களது உடல்கள் சொந்த ஊருக்கு அனுப்பப்பட உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் பகுதியில் அரசு பேருந்து, லாரி மோதி விபத்து . அரசு பேருந்தில் பயணித்த ஓட்டுநர், நடத்துனர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது . கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 10,158 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. கொரோனாவின் காரணமாக சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 44,998ஆக உயர்வு
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய வரும் 20ந்தேதி கடைசி நாள்.
மருத்துவ படிப்புக்கான நீட் இளநிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் இன்று இரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்