/tamil-ie/media/media_files/uploads/2022/06/covid.jpg)
Most of the covid 19 cases are having mild to moderate symptoms says Gagandeep Singh Bedi
சென்னை - செங்கல்பட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை சென்னையில், 286, செங்கல்பட்டில் 119 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,311 பேர், செங்கல்பட்டில் 552 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகம் முழுவதும் 2694 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக விசாரணை!
ஈரோட்டில் சட்ட விரோதமாக சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம். சிறப்பு மருத்துவக் குழு 2வது நாளாக இன்றும் விசாரணை . ஈரோடு மகிளா நீதிமன்ற அனுமதியின் பேரில் தரகர் மாலதியிடம் மருத்துவக்குழு, போலீசார் விசாரணை.
அணை நீர் மட்டம்
பவானிசாகர் அணை நீர்மட்டம் - 82.62 அடி, நீர் இருப்பு - 17.1 டிஎம்சி, நீர்வரத்து - 1,014 கனஅடி, நீர் வெளியேற்றம் - 1,005 கன அடி.
ராகுல்காந்தி கோரிக்கை- அமலாக்கத்துறை அனுமதி
நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணையில் 4 நாட்கள் ஆஜராக விலக்களிக்க கோரி அமலாக்கத்துறைக்கு ராகுல் காந்தி கோரிக்கை. ராகுல் காந்தியின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் ஜூன் 20ம் தேதி வரை ஆஜராவதில் இருந்து அமலாக்கத்துறை விலக்கு.
பெட்ரோல் டீசல் விலை
சென்னையில் 26வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 21:48 (IST) 17 Jun 2022ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடக்க வாய்ப்பு - ராஜ்நாத் சிங்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்த பிறகு சட்டசபையின் அமைப்பு மாறும் என்று கூறினார்.
- 20:48 (IST) 17 Jun 2022விக்ரம் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் - கமல்ஹாசன்
விக்ரம் வெற்றி விழாவில் கமல்ஹாசன் பேச்சு: படத்தின் வெற்றிக்கு நான் காரணம் என்று சொல்லிவிட முடியாது; உடன் நின்றவர்களால்தான் வெற்றி சாத்தியமானது; 10 வருடத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நான் ரிலீஸ் செய்த படம் விக்ரம் தான்; என் திறமைக்கு அதிகமாக என்னை தமிழக மக்கள் தூக்கி பிடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை; என்னை விட திறமையானவர்கள் இங்கே காணாமல் போயுள்ளார்கள், அதையும் நான் பார்த்திருக்கிறேன்; இந்த வெற்றி மிக ஈஸியாக வந்தது இல்லை; சாய்ந்து படுத்துவிட மாட்டேன். இனி பதட்டமாக இறுக்கையின் நுணியில் நான் அமரவேண்டும்” என்று கூறினார்.
- 19:11 (IST) 17 Jun 2022மு.க. ஸ்டாலின் கருத்துக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டங்களை ஆண்டுக்கு 3 முறை நடத்த வேண்டும் என்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துக்கு ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆதரவு தெரிவித்துள்ளார். அனைத்து மாநில அரசுகளீன் ஒத்துழைப்புடன் கூட்டாட்சி தத்துவத்தை அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என்று ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
- 18:23 (IST) 17 Jun 2022மேகதாது அணை குறித்து ஜூன் 23ல் விவாதிப்போம் - காவிரி நீர் மேலாணமை ஆணையம் தலைவர் ஹல்தர்
காவிரி நீர் மேலாணமை ஆணையம் தலைவர் ஹல்தர் பேட்டி: “மேகதாது அணை குறித்து வரும் 23ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் நிச்சயம் விவாதிப்போம்; காவிரி நீர் மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
- 17:35 (IST) 17 Jun 2022வலுக்கும் அக்னிபத் போராட்டம்: பீகார் - உ.பி. ரயில் சேவைகள் ரத்து - தென்னக ரயில்வே அறிவிப்பு
அக்னிபத் போராட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில்,
தென்னக ரயில் கோட்டத்தில் இருந்து பீகார், கிழக்கு உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யபடுகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
- 17:04 (IST) 17 Jun 2022“என்னுடைய ஆதரவு ஓபிஎஸ்க்கு தான்“ -தனியரசு
என்னுடைய ஆதரவு பன்னீர்செல்வத்துக்கு தான் ஓபிஎஸ் யாரையும் புறக்கணிக்காமல் அரவணைத்து செல்வார் என்று தமிழ்நாடு கொங்கு பேரவை தலைவர் தனியரசு கூறியுள்ளார்.
- 16:40 (IST) 17 Jun 202210-ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு உடனடி தேர்வு - கல்வித்துறை நடவடிக்கை
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அடுத்த மாதம் நடைபெறும் உடனடித் தேர்வில் பங்கேற்க கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- 15:56 (IST) 17 Jun 2022பீகாரில் பள்ளி பேருந்து மீது தாக்குதல்
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டம் வெடித்து வரும் நிலையில், பீகார் மாநிலம் தர்பங்காவில் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பள்ளி பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
- 15:20 (IST) 17 Jun 2022போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் தொடர் போராட்டம் வெடித்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்திலும் அக்னிபத் போராட்டம் வெடித்துள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர்.
- 15:18 (IST) 17 Jun 2022மத்திய அமைச்சருடன் பசவராஜ் பொம்மை சந்திப்பு
டெல்லியில் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சந்தித்து பேசியுள்ளார்.
- 15:17 (IST) 17 Jun 2022வன்முறை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்
வன்முறை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம் என இளைஞர்களை நோக்கி கோரிக்கை விடுக்கிறேன் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
- 14:17 (IST) 17 Jun 2022பாஜக அலுவலகத்திற்கு தீ வாய்ப்பு!
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்த போராட்டத்தில் பீகாரின் மந்திபூரா பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
- 14:16 (IST) 17 Jun 2022அக்னிபாத் போராட்டம்: போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; 8 பேர் படுகாயம்!
தெலங்கானா, செகந்திராபாத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர், டெல்லி, அரியானா, உத்தர பிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை தொடர்ந்து தெலங்கானாவிலும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
- 14:06 (IST) 17 Jun 2022பாஜகவிற்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை - ராகுல் காந்தி விமர்சனம்!
அக்னிபத் - இளைஞர்கள் நிராகரிப்பு, வேளாண் சட்டம் - விவசாயிகள் நிராகரிப்பு, பணமதிப்பிழப்பு - பொருளாதார அறிஞர்கள் நிராகரிப்பு, ஜிஎஸ்டி - வர்த்தகர்கள் நிராகரிப்பு. பாஜகவிற்கு நண்பர்களின் குரல்களை தவிர, வேறு எதுவும் கேட்பதில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
- 14:04 (IST) 17 Jun 2022டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு!
அக்னிபத் எதிர்ப்பு போராட்டங்கள் வலுவடையும் நிலையில், டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
அக்னிபத் போராட்டம் அரியானா, உத்தர பிரதேசம், பீகாரை தொடர்ந்து டெல்லியிலும் பரவிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டுள்ளது.
- 13:59 (IST) 17 Jun 2022ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்படுவர் - வைத்திலிங்கம்!
"ஒற்றை தலைமை குறித்து கொண்டுவரும் தீர்மானம் சட்டபடி செல்லாது. மீறி கொண்டு வந்தால் அதிமுக அழிவுப் பாதைக்கு சென்றுவிடும். ஓபிஎஸ் உடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கட்சி வலுவாக இருக்க வேண்டும் என்பதை குறித்து விவாதிக்கப்பட்டது. திட்டமிட்டபடி பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் நடைபெறும்: ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து செயல்படுவர்" என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
- 13:55 (IST) 17 Jun 2022குடியரசுத் தலைவர் தேர்தல்; 14 பேர் கொண்ட மேலாண்மை குழு!
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட மேலாண்மை குழு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் அமைக்கப்பட்ட மேலாண்மை குழுவில் தமிழ்நாட்டை சேர்ந்த வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார். மேலும், மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங் செகாவத், கிஷண் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோருக்கு குழுவில் இடம்பெற்றுள்ளார்.
- 13:27 (IST) 17 Jun 202225 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- 13:25 (IST) 17 Jun 2022ராணுவத்தில் ஆள்சேர்ப்பு!
இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே அறிவித்துள்ளார்.
- 13:24 (IST) 17 Jun 2022முகக்கவசம் கட்டாயம் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி!
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வரும் 20ம் தேதி முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
"வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் உயர் நீதிமன்றம் வருவதை தவிர்க்க வேண்டும்" என்றும் நீதிபதி பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.
- 13:00 (IST) 17 Jun 2022குர்கானில் 144 தடை உத்தரவு!
அக்னிபாத் போராட்டங்களை கருத்தில் கொண்டு, குர்கானில் நான்கு பேருக்கு மேல் கூடுவதை கட்டுப்படுத்தும் பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
- 12:33 (IST) 17 Jun 2022பொதுத்தேர்வு முடிவுகள்!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பள்ளிகளில் வெளியிட வேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 12:33 (IST) 17 Jun 2022ஓ.பி.எஸ். ஆலோசனை!
ஓ.பன்னீர்செல்வத்துடன், தம்பிதுரை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நட த்தி வருகின்றனர். ஏற்கெனவே, சேலத்தில் ஈ.பி.எஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தம்பிதுரை பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
- 12:30 (IST) 17 Jun 2022200 ரயில் சேவைகள் பாதிப்பு!
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில், போராட்டம் வெடித்த நிலையில், நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
- 12:01 (IST) 17 Jun 2022தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி!
சோனியா காந்தி மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் அறிக்கையில் கூறியுள்ளார்.
- 12:01 (IST) 17 Jun 2022ஓ.பி.எஸ். தரப்பில் அழைப்பு!
ஓ.பி.எஸ். தரப்பில் அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- 11:51 (IST) 17 Jun 2022அக்னிபாத் திட்டம்.. 3வது நாளாக தொடரும் போராட்டம்!
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் மூன்றாவது நாளாக இன்றும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள், ரயில் பாதை மற்றும் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லக்கிசராய் நகரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் விக்ரம்ஷிலா விரைவுவண்டியின் மூன்று பெட்டிகளை எரித்துள்ளனர்.
- 11:40 (IST) 17 Jun 2022பி.கே.இளமாறன் காலமானார்!
தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார்.
- 11:26 (IST) 17 Jun 2022ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்'!
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169வது திரைப்படத்திற்கு 'ஜெயிலர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
- 11:24 (IST) 17 Jun 2022ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி வழங்க 'நியமனத்தேர்வு' என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
- 10:15 (IST) 17 Jun 2022காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குப் பதிவு
சென்னையில் ஆளுநர் மாளிகையை காங்கிரஸ் கட்சியினர் நேற்று முற்றுகையிட்ட விவகாரம் . சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் 271 காங்கிரஸ் கட்சியினர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு
- 10:05 (IST) 17 Jun 2022ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணமிழந்தவர் தற்கொலை
சென்னை, மணலியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணமிழந்த பெருமாள் என்பவர் தூக்கிட்டு தற்கொலை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக பணத்தை இழந்த பெருமாள், கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார்
- 10:03 (IST) 17 Jun 2022பொருளாதர நெருக்கடியால் 7 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வருகை
இலங்கை, மன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பத்தைச் சேர்ந்த 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வருகை தந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அகதிகளாக தமிழ்நாடு வருகை எனத் தகவல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.