/tamil-ie/media/media_files/uploads/2023/04/neet-exam-students.jpg)
Tamil News Updates
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு பொறியியல் கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக இன்று தொடங்குகிறது.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் 425-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
- 22:18 (IST) 21 Jul 2023மணிப்பூர் கொடூரம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட சம்பவத்துக்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
“மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை இழிவுபடுத்தி இரக்கமற்ற வகையில் நடந்திருக்கும் கொடிய சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள்; நாட்டிற்கே தலைக்குனிவை ஏற்படுத்தும் வகையில் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக கடும் தண்டனை வழங்க வேண்டும்; இது போன்ற இழிசெயலை இனி யாரும் செய்ய துணியாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எடப்பாடி பழனிசாமி என்று வலியுறுத்தியுள்ளார்.
- 21:58 (IST) 21 Jul 2023கோயில் விழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை - ஐகோர்ட்
சீர்காழி காளியம்மன் கோயில் ஆடித் திருவிழாவிற்கு பாதுகாப்பு அளிக்கக் கோரிய வழக்கில், “கோயில் விழாக்கள் நடத்துவதில் உண்மையான பக்தி இல்லை; யார் பெரியவர் என பலத்தை நிரூபிக்கவே கோயில் விழாக்கள் நடத்தப்படுகின்றன; அமைதிக்காக மக்கள் கோயிலுக்கு செல்லும் நிலையில், திருவிழாக்களில் வன்முறை வெடிப்பது துரதிருஷ்டம்; கோயில் திருவிழாவுக்கு பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது; சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் திருவிழாவை நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்ட ஐகோர்ட் வழக்கை முடித்து வைத்தது.
- 21:51 (IST) 21 Jul 2023சென்னையில் மகளிர் காவலர் விடுதி; ரூ. 9.73 கோடி ஒதுக்கீடு
பணியிட மாறுதலில் சென்னை வரும் பெண் காவலர்களுக்கு உதவும் வகையில், 200 பெண் காவலர்கள் தங்கும் வகையில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில், மகளிர் காவலர் விடுதி அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ரூ.9.73 கோடி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- 21:41 (IST) 21 Jul 2023கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எச்சரிக்கை
“நாங்கள் தயாரிக்கும் படங்களுக்கு எந்தவொரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நியமிக்கவில்லை. திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- 21:09 (IST) 21 Jul 2023மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஜூலை 24-ல் வி.சி.க ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஜூலை 24-ம் தேதி மதுரையில் வி.சி.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்; மணிப்பூர் மாநில முதல்வரை கைது செய்ய வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
- 21:07 (IST) 21 Jul 2023‘நாங்கள் எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமையில்லை’ - எடப்பாடி பழனிசாமி
சேலத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு: “எப்போது பார்த்தாலும் என்னை பா.ஜ.க-வின் அடிமை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் எந்த கட்சிக்கும் எப்போதும் அடிமையில்லை என பலமுறை தெளிவுபடுத்திவிட்டேன்” என்று கூறினார்.
- 21:04 (IST) 21 Jul 2023எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா!
எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடரில் பங்களாதேஷ் 33 அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஏ அணி. கொழும்புவில் ஜூலை 23-ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ அணி எதிர்கொள்கிறது.
- 21:02 (IST) 21 Jul 2023500-வது சர்வதேச போட்டியில் விராட் கோலி சதம்
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 500வது சர்வதேச போட்டியில் சதம் விளாசினார்.மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் கோலி சதம் விளாசி அசத்தினார்.
- 20:21 (IST) 21 Jul 2023மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தமிழக அரசு அரசாணை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை 2 மடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயில்வோருக்கான கல்வி உதவித் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயில்வோருக்கான கல்வி உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்வோருக்கான கல்வி உதவித் தொகை ரூ.4,000-ல் இருந்து ரூ.8,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.6,000-ல் இருந்து ரூ.12,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இளநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு ரூ.7,000-ல் இருந்து ரூ.14,000 ஆக கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
- 19:51 (IST) 21 Jul 2023கூடங்குளம் போராட்ட வழக்கு: 18 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை - வள்ளியூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு
கூடங்குளம் போராட்டம் தொடர்பான வழக்கில், 18 பேருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போராட்டத்தில் கலந்துகொள்ள மறுத்த மீனவர்களை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 19 பேர் குற்றம் சாட்டப்பட்டனர். வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில், ஒருவர் உயிரிழந்ததால், மீதமுள்ள 18 பேருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் இருந்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், புஷ்பராஜன், ஜேசுதாஸ் ஆகியோரை விடுதலை செய்து வள்ளியூர் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- 19:23 (IST) 21 Jul 2023கர்நாடகா குடிநீர் தேவை போக மீதம் உள்ள தண்ணீரை திறந்து விடுவோம் - டி.கே. சிவக்குமார்
தமிழகத்திற்கு ஜூன் மாதம் விட வேண்டிய தண்ணீரை முறையாக திறக்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளித்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், “கர்நாடக மக்களின் குடிநீர் தேவையை தாண்டி அணையில் மீதம் உள்ள தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விடுவோம். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் அணையில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. நீதிமன்ற தீர்ப்புக்கு எப்போதுமே கர்நாடக அரசு கட்டுப்படும். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்போது இரு மாநிலங்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
- 18:55 (IST) 21 Jul 2023முதலிடம் பிடித்த பேஸ்புக்
உலக அளவில் அதிக பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக் முதல் இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து youtube இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளனர் .
- 18:45 (IST) 21 Jul 2023டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வசந்த மாளிகை
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வசந்த மாளிகை திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்று வெளியானது. அவரது நினைவு நாளை ஒட்டி இந்த படம் வெளியாகி உள்ளது.
- 18:37 (IST) 21 Jul 2023நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி கடிதம்
நீதிபதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாதிக்க கூடாது; நீதிபதிகள் தங்களின் அதிகாரங்களை நியாயமாக பயன்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
- 17:39 (IST) 21 Jul 2023தமிழ்நாட்டின் வறட்சி பாதித்த பகுதிகள்
2022ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால், 33%-க்கும் அதிகமாக பயிர்சேதம் ஏற்பட்ட பகுதிகள் வறட்சி பாதித்த பகுதிகளாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 25 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- 17:29 (IST) 21 Jul 2023எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதி விடுவிப்பு
2023-24 நிதியாண்டுக்கான எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டுக்காக ரூ.351 கோடிக்கு நிதி விடுவிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
- 17:26 (IST) 21 Jul 2023திருவிழாவுக்கு பாதுகாப்பா? உயர் நீதிமன்றம் கேள்வி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள கோவில் ஒன்றின் திருவிழா நடந்துவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், “வன்முறை வெடித்தால் கோவில்கள் இருப்பது அர்த்தமற்றதாகிவிடுகிறது. திருவிழாவில் யார் பெரியவன் என்பதுதான் தலைதூக்குகிறது. பக்தி இல்லை” என்று வேதனை தெரிவித்துள்ளது.
- 16:25 (IST) 21 Jul 2023செந்தில்பாலாஜி வழக்கு - தள்ளிவைப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் அடுத்த வாரத்திற்கு தள்ளிவைப்பு. தமிழக அரசு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்
- 16:25 (IST) 21 Jul 2023குப்பை கிடங்கில் தீ - பொதுமக்கள் சாலை மறியல்
நெல்லை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் 2 நாட்களாக கொழுந்து விட்டு எரியும் தீயினால் மக்கள் பாதிப்பு. பாதிக்கப்பட்ட மக்கள் சங்கரன்கோவில் - நெல்லை சாலையில் மறியலில் போராட்டம் 2 கி.மீ. தூரத்திற்கு சாலையில் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
- 16:23 (IST) 21 Jul 2023தமிழ்நாட்டுக்கு நீர் திறந்து விடுவோம் : டி.கே.சிவக்குமார்
தேவைக்கான நீரை வைத்துக்கொண்டு மீதமுள்ள நீரை கண்டிப்பாக தமிழ்நாட்டுக்கு திறந்து விடுவோம்" என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
- 15:35 (IST) 21 Jul 2023தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவிப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் வேளாண் வறட்சி பகுதிகளாக அறிவித்து அரசிதழ் வெளியீடு வடகிழக்கு பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவால் பாதிக்கப்பட்ட 25 பகுதிகள் அறிவிப்பு ராமநாதபுரம் - 11, தென்காசி - 5, சிவகங்கை - 4, புதுக்கோட்டை, விருதுநகர் - தலா 2, தூத்துக்குடி - 1 பகுதிகள் அறிவிப்பு
- 15:35 (IST) 21 Jul 2023சென்னையில் நாளை பள்ளிகள் இயங்கும்
சென்னையில் நாளை 6 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கும் என மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு. மழையால் கடந்த ஜூன் 19ம் தேதி விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நடவடிக்கை
- 15:34 (IST) 21 Jul 2023செல்போன்களை திருடி சென்ற வழக்கில் அரியானா வாலிபர்கள் கைது
காஞ்சிபுரம் : சுங்குவார்சத்திரம் பகுதியில், கடந்த 16ம் தேதி செல்போன் விற்பனை கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை திருடி சென்ற வழக்கில் அரியானா மாநிலம் மோவாட் பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ₹43 லட்சம் மதிப்பிலான 234 செல்போன்கள், தப்பிச் செல்ல பயன்படுத்திய லாரி உள்ளிட்டவை பறிமுதல்!
- 14:58 (IST) 21 Jul 2023மணிப்பூர் கொடூரம்: திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கொடூரம் தொடர்பாக தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வரும் 23ம் தேதி கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
- 14:52 (IST) 21 Jul 202312ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு!
12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வரும் 24ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.
- 14:41 (IST) 21 Jul 2023துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
உயர் கல்வி துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றபட உள்ளது. அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது.
அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5000 ரூபாய் கூடுதலாக ஊதியம். கவுரவ விரிவுரையாளர்கள் சம்பளம் 20 ஆயிரத்தில் இருந்து 25,000 ஆக உயர்த்தப்படும். உயர்கல்விதுறையின் கீழ் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டம்.
பல்கலைக்கழக விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி, ஒரே மாதிரியான ஊதியம், தகுதி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்கப்படும் என்று துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி அறிவிதத்தார்.
- 14:39 (IST) 21 Jul 2023பிரதமர் மோடிக்கும் நன்றி!
பொருளாதார நெருக்கடியின் போது ஆதரவாக நின்ற இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார்.
- 14:34 (IST) 21 Jul 2023செந்தில் பாலாஜியின் மனைவி மேல்முறையீடு மனு!
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை ஜூலை 26-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
- 14:18 (IST) 21 Jul 2023இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
பொருளாதார நெருக்கடியில் இலங்கையுடன் தோளோடு தோள் நின்றோம். இலங்கையில் தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நலன் காக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும். மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும் என்று இலங்கை அதிபர் ரணிலிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
- 14:06 (IST) 21 Jul 2023'மனதை உலுக்கும் சம்பவம்: அரசியல் சண்டை கவலையளிக்கிறது': மாயாவதி பேச்சு!
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெள்ளிக்கிழமை மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட சம்பவம் "வெட்கக்கேடானது மற்றும் இதயத்தைப் புண்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அது தொடர்பான அரசியல் சண்டை நியாயமற்றது மற்றும் கவலையானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் "மணிப்பூரில் பெண்கள் மீது கும்பல் நடத்தும் அட்டூழியங்கள் மிகவும் வருத்தமளிக்கிறது, வெட்கக்கேடானது மற்றும் இதயத்தை வேதனைப்படுத்துகிறது. இதுபோன்ற கொடூரமான குற்றங்கள் எங்கும் மீண்டும் நடக்காத வகையில் மாநில மற்றும் மத்திய அரசுகள் இதுபோன்ற குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று கூறினார்.
- 14:04 (IST) 21 Jul 2023மணிப்பூர் மக்களுடன் எங்களது ஆதரவை தருகிறோம்: மம்தா பானர்ஜி
"நீங்கள் (பாஜக) 'பேட்டி பச்சாவோ' முழக்கத்தைக் கொடுத்தீர்கள், இப்போது உங்கள் முழக்கம் எங்கே. மணிப்பூர் மக்களுடன் எங்களது ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். இன்று மணிப்பூர் எரிகிறது, நாடு முழுவதும் எரிகிறது. பில்கிஸ் பானோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மல்யுத்த வழக்கில் (பிரிஜ் பூஷன் சிங்) ஜாமீனும் கிடைத்ததுள்ளது. வரும் தேர்தலில் நாட்டின் பெண்கள் உங்களை நாட்டு அரசியலில் இருந்து தூக்கி எறிவார்கள்." என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
- 13:26 (IST) 21 Jul 2023முடங்கிய மக்களவை... மணிப்பூர் வன்முறை எதிரொலி!
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் 2வது நாளாக மக்களவை முடங்கியது. மக்களவை வருகிற திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- 12:57 (IST) 21 Jul 2023நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து
டெல்லியில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே - பிரதமர் மோடி சந்திப்பில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம்
நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்
- 12:34 (IST) 21 Jul 2023மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஜூலை 24ம் தேதிவரை ஒத்திவைப்பு
- 12:27 (IST) 21 Jul 2023தங்கம் விலை
இன்று தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து, 44, 560 ரூபாயாக உள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் 5, 570 ரூபாயாக விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 40 பைசா குறைந்து, 82 ரூபாயாக விற்பனையாகிறது.
- 12:24 (IST) 21 Jul 2023ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை
ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை;
ஓரிரு நாட்களில் விமானம் மூலம், 15 மீனவர்களும் தாயகம் திரும்புவார்கள் என தகவல்
கடந்த மாதம் 9ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்த மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
- 12:23 (IST) 21 Jul 202312 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியுள்ளது
மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்
- 11:45 (IST) 21 Jul 2023மோடி, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
டெல்லியில், பிரதமர் மோடி உடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு
இருநாட்டு நல்லுறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை
- 11:33 (IST) 21 Jul 2023ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு
குஜராத் அரசு மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- 11:32 (IST) 21 Jul 2023மாநிலங்களவை மதியம் 2.30 வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் கலவரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கடும் அமளி
மாநிலங்களவை மதியம் 2.30 வரை ஒத்திவைப்பு
- 11:30 (IST) 21 Jul 2023கூடுதல் போலீசார் பாதுகாப்பு
சென்னை பீச் ரயில் நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு
- 11:30 (IST) 21 Jul 2023சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
703 ரேஷன் கடைகள் மூலம் இதுவரை 15% டோக்கன், விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. 703 ரேஷன் கடைகளுக்கு ஏற்றபடி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு குழுவினர் அந்தந்த ரேஷன் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்- சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி
- 11:29 (IST) 21 Jul 2023கார்கேவுக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
கடினமான நேரத்தில் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைக்கும் உங்கள் முயற்சிக்கு பாராட்டு,
வலுவான இந்தியாவை உருவாக்க உங்களின் முயற்சி வளர்ச்சி பாதையில் செல்லட்டும்- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
- 11:28 (IST) 21 Jul 2023மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதிலளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை;
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவை சபாநாயகர் அனுமதி மறுப்பு
எதிர்க்கட்சியின் கடும் அமளி காரணமாக, மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
- 10:43 (IST) 21 Jul 2023மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை: முக்கிய குற்றவாளி கைது
மணிப்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது. கைதி ஹுய்ரெம் ஹெரோதாஸ் வீட்டை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தினர்
- 10:42 (IST) 21 Jul 20234 சிறார்களிடம் டிஎன்ஏ பரிசோதனை
வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறார்களிடம் டிஎன்ஏ பரிசோதனை
- 10:34 (IST) 21 Jul 2023எந்த தேசியவாதமும் வெறுப்பு அரசியலாகக் கூடாது
மனித குலத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் என அனைத்தையும் பாதுகாக்கும் பெட்டகம் மொழி; இந்திய தேசியம் என்பதும் தேசியவாதம்தான்; இந்து தேசம், தமிழ் தேசியம் என்பதும் தேசியவாதம்தான்; எந்த தேசியவாதமும் வெறுப்பு அரசியலாகக் கூடாது" - மலேசியாவின் உலகத் தமிழ் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு
- 09:57 (IST) 21 Jul 2023பூக்களின் விலை உயர்வு
ஆடி வெள்ளிக்கிழமை, ஆடிப்பூர விழாவை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு . குமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்தது .நேற்று ஒரு கிலோ ரூ.250க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.400க்கு விற்பனை . மல்லிகை விலை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்வு
- 09:32 (IST) 21 Jul 2023ப்ராஜெக்ட் கே
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'ப்ராஜெக்ட் கே' திரைப்படத்திற்கு 'கல்கி 2898 ஏடி' என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு . அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர்
- 08:52 (IST) 21 Jul 2023தக்காளியின் விலை ரூ. 10 குறைவு
கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளியின் விலை ரூ. 10 குறைவு . நேற்று ரூ. 100க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது ₨90க்கு விற்பனையாகிறது
- 08:51 (IST) 21 Jul 2023நிலநடுக்கம்
ராஜஸ்தான், ஜெய்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம் . முதல் நிலநடுக்கம் 4.4 ரிக்டர், 2வது நிலநடுக்கம் 3.1 ரிக்டர் அளவிலும் பதிவு
- 08:47 (IST) 21 Jul 2023ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு
ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் . அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற சூரத் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி மேல்முறையீடு
- 08:44 (IST) 21 Jul 2023அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மனுவை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.