Live

Tamil News Highlights: உத்திர பிரதேசத்தில் வன்முறை நடந்த இடத்தைப் பார்வையிட தடை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

Tamil Nadu news live updates : தமிழகத்தில் நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

Tamil Nadu news updates : தமிழகத்தில் இன்று நடைபெறும் அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தீபாவளி பண்டிகை – அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோருக்காக, அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி உட்பட பல்வேறு நகரங்களுக்கு சொகுசு பஸ்களும், படுக்கை வசதி உடைய பஸ்களும், குளிர்சாதன பஸ்களும் இயக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.01 ரூபாய், டீசல் லிட்டர் 95.31 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, எந்த மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, நீலகிரி, ஈரோடு, மதுரை, விருதுநகர், திருச்சி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு 23.56 கோடியைக் கடந்தது

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23.56 கோடியைக் கடந்துள்ளது. இதுவரை 48.15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே போல, கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.25 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

Live Updates
4:31 (IST) 4 Oct 2021
உத்திர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்திற்கு பதிலாக கில்லிங் ராஜ் நடக்கிறது; மம்தா விமர்சனம்

உத்திர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியத்திற்கு பதிலாக கில்லிங் ராஜ் நடக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.

4:28 (IST) 4 Oct 2021
உத்திர பிரதேசத்தில் விவசாயிகளிடமிருந்து பாஜக எம்.எல்.ஏ மீட்பு

உத்திர பிரதேசம் ஹிஜாரில் விவசாயிகளிடம் பிணைக்கைதியாக இருந்த பாஜக எம்.எல்.ஏ கமல் குப்தா காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்

4:15 (IST) 4 Oct 2021
ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் செயலிழப்பு

ஃபேஸ்புக், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்கள் செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

4:10 (IST) 4 Oct 2021
உத்திர பிரதேசம்; வன்முறை நடந்த இடத்தைப் பார்வையிட தடை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

உத்திர பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை நடந்த இடத்தைப் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன

4:02 (IST) 4 Oct 2021
லக்னோவில் நாளை ‘ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா’ மாநாடு; பிரதமர் மோடி பங்கேற்பு.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் நாளை நடைபெறும் 'ஆசாதி75-புதிய நகர்புற இந்தியா' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

3:24 (IST) 4 Oct 2021
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவை தருவார்கள் – அண்ணாமலை

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என திருப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

2:56 (IST) 4 Oct 2021
உலக ஆணழகன் போட்டி – தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்

உஸ்பெஸ்கிஸ்தானில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டி ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மற்றொரு தமிழக வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

2:21 (IST) 4 Oct 2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,467 பேருக்கு கொரோனா;16 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,467 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

1:21 (IST) 4 Oct 2021
பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் – அமைச்சர் நாசர்

பால்வளத்துறையில் பணியிட மாற்றம், புதிய நியமனங்களுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

1:09 (IST) 4 Oct 2021
‘அண்ணாத்த’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' திரைப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இமான் இசையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்

12:41 (IST) 4 Oct 2021
ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி வரை என்சிபி காவல் – மும்பை நீதிமன்றம்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு அக்டோபர் 7 ஆம் தேதி வரை என்சிபி காவலில் விசாரணைக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

11:17 (IST) 4 Oct 2021
உ.பி. விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழப்பு துயரமளிக்கிறது – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: “உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் 8 விவசாயிகள் உயிரிழந்தது துயரமளிக்கிறது. கோரிக்கை வைக்கவே உயிரிழக்க வேண்டும் என்ற நிலைமை கொடுமை” என்று தெரிவித்துள்ளார்.

11:00 (IST) 4 Oct 2021
போதை பொருள் விவகாரம் : நடிகர் ஷாருக்கான் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் கைதான ஆரியன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 11 வரை காவலில் எடுத்து விசாரிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளது.

9:57 (IST) 4 Oct 2021
தமிழக அரசுக்கு உத்தரவு

திரையரங்குகளில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

9:52 (IST) 4 Oct 2021
மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் ஆகியோருக்கு நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

9:40 (IST) 4 Oct 2021
பஞ்சாப் முதல்வருக்கு லக்கிம்பூர் வர தடை

144 தடை உத்தரவு காரணமாக பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் லக்கிம்பூர் வர அனுமதி தர முடியாது என்று உத்திரபிரதேச அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

8:56 (IST) 4 Oct 2021
தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிவகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதலாம் ஆண்டு நேரடி வகுப்புகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை தருகின்றனர்.

8:53 (IST) 4 Oct 2021
உலகின் மிக வயதான மனிதராக ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் சாதனை

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சாசாதுர்னினோ டி லா ஃப்யூன்டே கார்சியா என்பவர் தற்போது 112 வயதை கடந்துள்ள நிலையில், உலகின் மிக வயதான மனிதராக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். தற்போது இவருக்கு 112 வயது முடிந்து 211 நாட்கள் ஆகிறது.

8:51 (IST) 4 Oct 2021
நீட் மறு தேர்வு நடத்தக்கோரிய மனுவை தள்ளுபடி

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், தேர்வை ரத்து செய்துவிட்டு மறுத்தேர்வு நடத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

8:49 (IST) 4 Oct 2021
எதற்காக போராடுகிறீர்கள் – விவசாயிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

3 வேளான் சட்டங்களும் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக போராடுகிறீர்கள் என்று போராடும் விவசாயிகளிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

8:07 (IST) 4 Oct 2021
புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கோரிக்கை

வார்டுகள் ஒதுக்கீடு தொடர்பான குளறுபடிகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என்பதால் புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க புதுச்சேரி அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

7:32 (IST) 4 Oct 2021
வானிலை முன்னறிவிப்பு

தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கும், டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, ஈரோடு, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

7:30 (IST) 4 Oct 2021
மாற்றுத்திறனாளிகளுக்கு தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் – உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கடந்த அதிமுக ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு தரமற்ற பேட்டரி வீல் சேர்கள் வழங்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

7:27 (IST) 4 Oct 2021
நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கல்விதுறை நிர்வாகத்தில் மாநில அரசின் உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று கோரிக்கை

6:35 (IST) 4 Oct 2021
தமிழகம் முழுவதும் 7ம் தேதி அன்று பாஜக ஆர்பாட்டம்

கோவில்களை திறக்கக் கோரி பாஜகவினர் வருகின்ற 7ம் தேதி அன்று காலை 11 மணிக்கு ஆர்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆர்பாட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்விடுத்துள்ளார்.

6:19 (IST) 4 Oct 2021
ஷாரூக் கானை நேரில் சந்தித்த சல்மான்

ஆர்யன் கான் கைது குறித்து ஆறுதல் கூற, மும்பையில் உள்ள ஷாருக் கான் வீட்டிற்கு நள்ளிரவில் சல்மான் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஸ்பெயினில் நடைபெற்று வந்த படபிடிப்பை ரத்து செய்த ஷாருக் கான் மும்பை திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

5:49 (IST) 4 Oct 2021
சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்பட்ட 2 விரைவு பேருந்து

மக்கள் கோரிக்கையை ஏற்று மதுரை – பாப்பாபட்டிக்கு இன்று முதல் 2 விரைவு பேருந்துகள் சாதாரண கட்டண பேருந்துகளாக மாற்றப்படும் என்றும் மொத்தம் மூன்று பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார் முதல்வர்.

5:37 (IST) 4 Oct 2021
அகிலேஷ் யாதவ் கைது

லக்கீம்பூர் கேரி செல்ல முயன்ற உ.பியின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவிற்கு அங்கே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்து தர்ணா செய்த அவர் கைது செய்யப்பட்டார்.

5:26 (IST) 4 Oct 2021
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்தது

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

4:46 (IST) 4 Oct 2021
ஆர்யன் கான் இன்று ஜாமின் கோரி மனு தாக்கல்

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இன்று ஜாமின் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3:47 (IST) 4 Oct 2021
20 ஆயிரத்து 799 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,799 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 180 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதே சமயம், ஒரே நாளில் 26,718 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

2:46 (IST) 4 Oct 2021
விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது

லக்கிம்பூரில் நடந்த போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா போலீசை மீறி சென்றதால் அதிகாலை 5.30 மணிக்கு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்

2:32 (IST) 4 Oct 2021
இன்று முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகிறது. கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Web Title: Tamil news today live rain alert deepavali special buses corona count

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X