Tamil News Today Live Updates: ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,117 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேல் யாத்திரையை இன்று திருச்செந்தூரில் நிறைவு செய்கிறது பாஜக.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Live Blog
Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.
பருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு! #TNAhead pic.twitter.com/RQYqSGxJYr
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) December 7, 2020
பருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்தார்.
கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் இன்று மாலை 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.
நாட்டின், நீர், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தண்ணீர் பஞ்சம் உள்ள, வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் மழையை நம்பியுள்ள விவசாயப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் நதிகளின் இணைப்பு மிகவும் அவசியம் என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார்.
தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 34-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் நதிகளின் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 18-வது கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
bharat bandh latest news: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டிலுள்ள ஓவ்வொரு விவசாயியும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா அசாரே கேட்டுக் கொண்டார். "இதுபோன்ற போராட்டங்கள் மீண்டும் மீண்டும் நடக்க கூடாது, பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இது சரியான தருணம்" என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, நாளை நடைபெறும் இந்தியா மொபைல் மாநாடு 2020-ல் காணொலி வாயிலாக துவக்க உரை ஆற்றுவார். இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இந்தியா மொபைல் மாநாடு 2020-ஐ நடத்துகின்றன. இந்த மாநாடு 2020, டிசம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும்.
வடகிழக்கு பருவ மழையினால் அமராவதி அணை,வரதமாநதி மற்றும் குதிரையாறு, பொருதலாறு உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து அமராவதி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கந்த சஷ்டிக் கவசத்தையும் அதன் மூலம் தமிழ் கடவுள் முருகனையும் கொச்சைப் படுத்திய கருப்பர் கூட்டத்தையும், திமுகவினருக்கும் பாடம் புகட்டவே வேல் யாத்திரையை தொடங்கினோம் திமுகவையும், திமுக கூட்டணியையும் விரட்டவே இந்த வேல் யாத்திரை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்' கமல்ஹாசன் ட்வீட்.
அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது.
வாழ்நாள் முழுக்க தமிழகத்தைச் சுரண்டித் தின்பவர்கள், ஊழல் தொழிலுக்கு ஆபத்து வருகையில் ஒன்றிணைந்து கொள்வதில் ஆச்சர்யமில்லை.
திஹாரையும் பரப்பன அக்ரஹாரத்தையும் நிரப்பினவர்கள் அல்லவா?
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 7, 2020
விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என்றார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்றார்.
கொடைக்கானலில் கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆலோசனைப்படி, சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும். கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights