Tamil News Highlights : பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,117 ஏரிகள் நிரம்பியுள்ளன.

Tamil News Today Live Updates: ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 1,117 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் தண்ணீர் தேவை பூர்த்தியடைந்திருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நாளை நடைபெறும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேல் யாத்திரையை இன்று திருச்செந்தூரில் நிறைவு செய்கிறது பாஜக.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Live Blog

Tamil News Today: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அனைத்து முக்கிய செய்திகளையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.


22:30 (IST)07 Dec 2020

பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்கலாம்

பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி. அரசுப் பேருந்துகளின் இயக்கத்தை தேவைக்கேற்ப உயர்த்திக் கொள்ளலாம் – தமிழக அரசு

21:02 (IST)07 Dec 2020

பருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு

பருத்தி நூல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடம் தமிழ்நாடு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்வீட் செய்தார்.   

20:23 (IST)07 Dec 2020

மருத்துவக் கலந்தாய்வு முக்கிய அறிவிப்பு

வரும் 11 முதல் 14-ம் தேதி வரை SC, ST & SCA பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்தது. 

20:05 (IST)07 Dec 2020

கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் வாகனங்களுக்கு தடை

கொடைக்கானலில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் கொடைக்கானல் பழனி மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்படுகிறது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சாலையில் அனைத்து வாகனங்களுக்கும் இன்று மாலை 7.30 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது.

20:03 (IST)07 Dec 2020

நதிகளின் இணைப்பு மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர்

நாட்டின், நீர், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், தண்ணீர் பஞ்சம் உள்ள, வறட்சியால் பாதிக்கப்பட்ட மற்றும் மழையை நம்பியுள்ள விவசாயப் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கும் நதிகளின் இணைப்பு மிகவும் அவசியம் என்று மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன் லால் கட்டாரியா தெரிவித்தார்.

தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் 34-வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் நதிகளின் இணைப்புக்கான சிறப்புக் குழுவின் 18-வது கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

20:02 (IST)07 Dec 2020

விவசாயிகள் வீதிக்கு வந்து போராட வேண்டும் : அண்ணா அசாரே 

bharat bandh latest news: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக நாட்டிலுள்ள ஓவ்வொரு விவசாயியும் வீதிக்கு வந்து போராட வேண்டும் என்று சமூக ஆர்வலர் அண்ணா அசாரே கேட்டுக் கொண்டார். “இதுபோன்ற போராட்டங்கள் மீண்டும் மீண்டும் நடக்க கூடாது,  பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க இது சரியான தருணம்” என்று தெரிவித்தார்.

20:01 (IST)07 Dec 2020

நாளை பிரதமர் உரை

பிரதமர் நரேந்திர மோடி, நாளை நடைபெறும் இந்தியா மொபைல் மாநாடு 2020-ல் காணொலி வாயிலாக துவக்க உரை ஆற்றுவார். இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையும், இந்திய செல்போன் நிறுவனங்கள் சங்கமும் இணைந்து இந்தியா மொபைல் மாநாடு 2020-ஐ நடத்துகின்றன. இந்த மாநாடு 2020, டிசம்பர் 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும்.

19:01 (IST)07 Dec 2020

திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

வடகிழக்கு பருவ மழையினால்  அமராவதி அணை,வரதமாநதி மற்றும் குதிரையாறு, பொருதலாறு உள்ளிட்ட நீர்தேக்கங்களில் இருந்து அமராவதி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் திருப்பூர்,கரூர் மாவட்டங்களில் ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

17:54 (IST)07 Dec 2020

CA அடிப்படை தேர்வு (தாள் – 1) ஒத்திவைப்பு

நாளை நடக்க இருந்த CA அடிப்படை தேர்வு (தாள் – 1) ஒத்திவைக்கப்படுகிறது. நாளை நடக்க இருந்த தேர்வு, அதே தேர்வு மையத்தில் டிசம்பர் 13ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.   

17:52 (IST)07 Dec 2020

திமுகவையும், திமுக கூட்டணியையும் விரட்டவே வேல் யாத்திரை – எல். முருகன்

கந்த சஷ்டிக் கவசத்தையும் அதன் மூலம் தமிழ் கடவுள் முருகனையும் கொச்சைப் படுத்திய கருப்பர் கூட்டத்தையும், திமுகவினருக்கும் பாடம் புகட்டவே வேல் யாத்திரையை தொடங்கினோம் திமுகவையும், திமுக கூட்டணியையும் விரட்டவே இந்த வேல் யாத்திரை என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.  

17:51 (IST)07 Dec 2020

கொடி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது

முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றி அவர்களது மறுவாழ்வுப் பணிகளுக்கு நிதி வழங்கும் கொடி நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1949-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி படை வீரர் கொடி நாளாக கொண்டாடப்படுகிறது.

17:11 (IST)07 Dec 2020

கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

16:27 (IST)07 Dec 2020

மத்தியக்குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை!

சென்னை தலைமைச் செயலகத்தில், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக்குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி நாளை காலை ஆலோசனை . வெள்ள பாதிப்புகளுக்காக தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார். 

16:26 (IST)07 Dec 2020

கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

சோனியாகாந்தி பிறந்தநாளான டிச.9ல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் .மாவட்ட நிர்வாகிகளுக்கு காங். மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

16:04 (IST)07 Dec 2020

மத்திய குழு நேரில் ஆய்வு!

கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் மத்திய குழு நேரில் ஆய்வு . மத்திய அரசு உள்துறை இணைச்செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி தலைமையிலான குழு பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு.

15:57 (IST)07 Dec 2020

கருணாமூர்த்தி ஆஜர்! 

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் சூரப்பா புகார் தொடர்பான விசாரனையில், கலையரசன் விசாரணை குழு முன்பு நாளை கருணாமூர்த்தி ஆஜர்.

15:56 (IST)07 Dec 2020

கொடி நாள்!

கொடி நாளையொட்டி ரூ.1 லட்சம் வழங்கி நிதி வசூலை தொடங்கி வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

15:13 (IST)07 Dec 2020

முதல்வர்  உத்தரவு!

ராணிப்பேட்டையில் விபத்தில் இறந்த காவலர் அய்யனமூர்த்தி குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிதியுதவி . காவலர் அய்யனமூர்த்தி குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் முதல்வர்  உத்தரவு

14:42 (IST)07 Dec 2020

கமல்ஹாசன் ட்வீட். !

அறத்தின் பக்கம் நிற்பவனைப் பார்த்து சங்கி, பி டீம் என்கிறவர்களின் நோக்கம் ஊழலைப் போற்றுவது. தன் வாழ்க்கையே, தன் செய்தி என வாழ்ந்து காட்டிய காந்திக்குத்தான் நான் பி டீம்’ கமல்ஹாசன் ட்வீட். 

13:56 (IST)07 Dec 2020

நாளை கடலூர் செல்கிறார் முதல்வர்

நாளை கடலூர் செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. நாளை கடலூரில் ஆய்வு செய்யும் அவர், நாளை மறுநாள் திருவாரூர், நாகையிலும் ஆய்வு செய்கிறார். 

13:45 (IST)07 Dec 2020

உயர் நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டம்

ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணித்து விபத்து நேர்ந்தால் அவர்களுக்கு நிவாரணம் தரமுடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. 

13:03 (IST)07 Dec 2020

மு.க.ஸ்டாலின் தாக்கு

விவசாயிகளுக்கு திமுக எப்போதும் ஆதரவாக இருக்கும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன் என்றார். ரஜினியின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; ரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும், பிறகு கருத்து தெரிவிக்கிறேன் என்றார். 

12:48 (IST)07 Dec 2020

சாதிவாரி புள்ளி விவரங்களுக்கு ஆணையம் அமைப்பு

தமிழகத்தில் சாதிவாரி புள்ளி விவரங்களை சேகரிக்க ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

12:12 (IST)07 Dec 2020

விவசாயிகளுடன் டெல்லி முதல்வர் சந்திப்பு

சிங்கு எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். 

11:52 (IST)07 Dec 2020

சிபிசிஐடி அலுவலகத்தில் வேல்முருகன் ஆஜர்

கடலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விசாரணைக்காக ஆஜர். விருத்தாசலம் கைதி செல்வமுருகன் மரணம் தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட ஆதாரம் பற்றி விசாரணை. 

11:48 (IST)07 Dec 2020

விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

நாளை விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார். 

11:35 (IST)07 Dec 2020

படகு சவாரி மீதான தடை நீக்கம்

கொடைக்கானலில் கோவிட்-19 தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் படகு சவாரிக்கு அனுமதி அளிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆலோசனைப்படி, சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

11:33 (IST)07 Dec 2020

ரூட்டு தல அட்டகாசம் – பாதுகாப்பு பணியில் போலீஸார்

சென்னையில் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் ‘ரூட்டு தல’ பெயரில் பேருந்தில் மாணவர்கள் அட்டகாசம் செய்வார்கள் என்பதால் பெரம்பூர், பிராட்வே, அமைந்தகரை, அரும்பாக்கம் பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். 

11:28 (IST)07 Dec 2020

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு

தடை விதிக்கவில்லை என்பதால் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கலாமா என மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

11:22 (IST)07 Dec 2020

ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் – வழக்கறிஞர் ஜோதி

ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து எனக்கு தெரியும் என்பதால், ஆ.ராசாவுடன் விவாதிக்க தயார் என, வழக்கறிஞர் ஜோதி தெரிவித்துள்ளார். 

10:29 (IST)07 Dec 2020

அண்ணனிடம் ஆசி வாங்கிய ரஜினி

அரசியலில் நுழையவிருக்கும் ரஜினி, தனது அண்ணன் சத்ய நாராயணாவை சந்தித்து ஆசி பெற்றார். 

10:03 (IST)07 Dec 2020

8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறப்பு

தமிழகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. வாரத்தில் 6 நாள்கள் கல்லூரிகள் செயல்படும். தொற்று அறிகுறி இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை. கல்லூரியின் விடுதியில் ஒரு அறையில் ஒரு மாணவர் மட்டுமே இருக்க வேண்டும். கல்லூரிகளுக்கு அருகே உள்ள உறவினர்கள் வீடுகளில் மாணவர்கள் தங்கிக் கொள்ளலாம் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

10:01 (IST)07 Dec 2020

மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண உதவி. சென்னை கொளத்தூர் பகுதியில் அவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். 

09:54 (IST)07 Dec 2020

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு – டி.ஆர்.பாலு தலைமையில் கூட்டம்

திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கருத்துக்கேட்பு கூட்டம் திருச்சியில் தொடங்கியுள்ளது. திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். 

09:22 (IST)07 Dec 2020

வேலூர் மாவட்டத்தில் மத்தியக்குழு ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்தியக் குழுவினர் ஆய்வு. பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் தலைமையிலான மத்தியக் குழு ஆய்வு செய்து வருகிறது. 

09:21 (IST)07 Dec 2020

கடலுக்கு நாகை மீனவர்கள் அனுமதி

வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட 15 கிராம நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி. கடல் சீற்றத்தால் 17 நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் இருந்த நிலையில் மீன்வளத்துறை அனுமதியளித்துள்ளது. 

08:40 (IST)07 Dec 2020

புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவு.

08:37 (IST)07 Dec 2020

கள்ளக்குறிச்சியில் கனமழை

தொடர்மழையால் கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனவே நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

08:30 (IST)07 Dec 2020

நடிகர் சங்க கட்டிடத்தில் தீ விபத்து

தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்க அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tamil News: ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. சித்தூர் கலவகுண்டா அணையில் 12,000 கன அடிக்கு மேல் நீர் திறக்க உள்ளதாக வந்த தகவலை அடுத்து ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையோர மகக்ளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாலாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வேலூர் பொன்னை நதி கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil news today live rain in tamil nadu farmers protest bharat bandh

Next Story
அம்பேத்கர் மணிமண்டபம் வந்த அர்ஜூன் சம்பத்துக்கு கடும் எதிர்ப்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com