பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கால்பந்து இன்று
மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெல்ஜியம் – மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை, இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் குரோஷியா – கனடா அணிகள் மோதல். மாலை 3.30 மணிக்கு ஜப்பான் – கோஸ்டாரிகா அணிகள் மோதல்.
தீப கொடியேற்றம்
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய திருவிழா டிச.6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது .
மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் டேவிட் முர்ரே உயிரிழந்துள்ளார்
சபரிமலை மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்ட 12 நாட்களில் இதுவரை ரூ.52.55 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது
அரசியலமைப்பு நாள் கொண்டாட காரணம் பிரதமர் மோடி தான். அதற்கு முன் எந்த பிரதமரும் கொண்டாட நினைத்ததில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
புரோ கபடி லீக்கில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 39-42 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தமிழ் தலைவாஸ் வெற்றி பெற்றுள்ளது
மாமன்னர் படத்தின் Glimpse வெளியிட்டு நடிகர் உதயநிதிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தஞ்சை அருகே உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது
கரூர், மாயனூர் புது கட்டளை மேட்டு வாய்க்கால் பகுதியில் மருத்துவ மாணவர் முகமது ஜமீன்கான் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி வழங்கப்பட்டது. திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம். உதயநிதி மட்டுமல்ல அவருக்குப் பிறகு அடுத்த வாரிசு வந்தாலும், திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை தாங்கும் நிலை உள்ளது. திமுகவினரைப் பார்த்து பயப்படும் நிலையில் தான் முதல்வர் உள்ளார். வாரிசு அரசியலை எதிர்த்து தான் அதிமுக உருவானது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்
சென்னை, மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை திறக்கப்பட்டுள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ1.14 கோடி மதிப்பீட்டில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்
அமைச்சர் அன்பில் மகேஷ்: இன்று எம்.எல்.ஏ.வாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், அடுத்த பிறந்தநாளில் அமைச்சராக வேண்டும். இது தனிப்பட்ட விருப்பமில்லை ஒட்டுமொத்த தி.மு.க மற்றும் பொதுமக்களின் ஆசையாக உள்ளது. திராவிட இயக்கத்தின் முதுகெலும்பு இளைஞரணிதான் என்று கூறினார்.
திமுகவில் புதிதாக இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய அணிகளுக்கு மாநில நிர்வாகிகளை நியமித்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவராக கதிர் ஆனந்த் எம்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளராக தயாநிதி மாறன் எம்.பி., நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தலைவர் மு.க. ஸ்டாலின்
பொதுச் செயலாளர் துரைமுருகன்,
பொருளாளர் டி.ஆர் பாலு
தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு
துணைப் பொதுச் செயலாளர் க. பொன்முடி
துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா
துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் ப. செல்வராஜ்
துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி
அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி
ஆகியோருடன் ஆற்காடு நா வீராசாமி
டி.கே.எஸ் இளங்கோவன்
தயாநிதி மாறன்
சுப. தங்கவேலன்,
எஸ்.எஸ். பழனிமாணிக்கம்,
கரூர் கே.சி. பழனிசாமி
கோவை மு. கண்ணப்பன்,
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
பொன் முத்துராமலிங்கம்
திருச்சி சிவா
எ.வ. வேலு
எஸ். ஜெகத்ரட்சகன்
மு.பெ. சாமிநாதன்
எல். மூக்கையா
திருச்செங்கோடு எம். கந்தசாமி
கும்முடிப்பூண்டி கி. வேணு
பெ. குழந்தைவேலு
குத்தாலம் பி. கல்யாணம்
சென்னை, ராயப்பேட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி: அதிமுகவை ஓபிஎஸ், ஈபிஎஸ் பலவீனப்படுத்திவிட்டனர். ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதே என் எண்ணம் என்று கூறினார்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.70 ஆயிரம் இழந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பந்தனா என்ற இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது.
இவர் தென்காசி அருகேயுள்ள கரிவலம்வந்த நல்லூர் என்ற பகுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் உள்ள கனிமொழி எம்.பி., வீட்டிற்குள் புகுந்த மர்மநபர் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது தொடர்பாக கனிமொழி தரப்பின் சிப்கார்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
எடப்பாடி, ஓ.பி.எஸ்., ஆகியோர் அதிமுகவை பலவீனப்படுத்திவிட்டனர் என டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை தீபத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 2 ஆண்டுகளுக்க பிறகு மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெற்றது.
இந்த விழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக நடைபெறவில்லை.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளி குவித்த லவ் டுடே திரைப்படம் டிசம்பர் 2ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
திமுக இளைஞரணி செயலாளரும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் 45ஆவது பிநந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் திமுக சார்பில் படகுபோட்டி நடந்தது.
இந்தப் படகுப் போட்டியில் 3 கிராம மீனவர்கள் கலந்துகொண்டனர்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வீட்டிலேயே ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் இன்று (நவ.27) நடத்திய காவல் பணிக்கான எழுத்துத் தேர்வை 3 லட்சம் பேர் எழுதினார்கள்.
3.66 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 67,000 பேர் தேர்வு எழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது
ஹாமில்டனில் மழை நீடித்ததால் போட்டியைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல்
முதலில் 29 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையில், மழை நீடித்ததால் போட்டி ரத்து
3 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் நியூசிலாந்து முன்னிலை
டிசம்பர் 5ம் தேதி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவஞ்சலி
அதிமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் கடிதம்
சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
கருணாநிதி நினைவிடத்தில் உதயநிதி மரியாதை
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 45வது பிறந்தநாள்
சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மரியாதை
ஒற்றுமை யாத்திரையில் புல்லட் ஓட்டிய ராகுல் காந்தி .
மத்தியப் பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தொண்டர்கள் புடைசூழ ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டிய ராகுல் காந்தி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.
4 மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
சபரிமலையில் நேற்று வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் . இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகரித்துள்ள பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் வருகை அதிகரிப்பு
கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இன்று முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் – மத்திய அரசு
முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
சீருடை பணியாளர்கள் குழுமத் தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கு இன்று தேர்வு தமிழ்நாடு சிறப்பு காவல் படை, ஆயுதப்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை பதவிகளுக்கு தேர்வு
தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.