scorecardresearch

Tamil news today: இந்த கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை

Tamil Nadu News, Tamil News Petrol price Today – 21 Oct 2022- இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil news today: இந்த கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர்.. உயர் நீதிமன்ற மதுரை கிளை

பெண்களுக்கு தனது விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரிந்து கொள்ளாமல், கட்டாயப்படுத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆண்கள் நினைக்கின்றனர். இந்த கால இளைஞர்கள் சுலபமாக உணர்ச்சி வசப்படுகின்றனர். எதிர்பார்ப்புகள் மறுக்கப்படும் போது பின்விளைவுகள் பற்றி கவலைப்படாமல் கொடூர மனநிலைக்கு செல்கின்றனர் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.

பெட்ரோல், டீசல்விலை

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

மழை நிலவரம்

மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு. கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு திருவாரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

ஹெலிகாப்டர் விபத்து: உடல்கள் சென்னை வந்தடைந்தது

கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான தமிழகத்தை சேர்ந்த 3 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தது.  கடந்த 18ம் தேதி கேதார்நாத் அருகே தனியார் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

Live Updates
22:30 (IST) 21 Oct 2022
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றில் லக்‌ஷ்யா சென்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில், பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் இளம் வீரர் லக்‌ஷ்யா சென்

22:28 (IST) 21 Oct 2022
டி20 உலகக் கோப்பை : ஜிம்பாப்வே அணி சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் நடைபெற்ற கடைசி போட்டியில் ஸ்காட்லாந்தை வென்ற ஜிம்பாப்வே அணி சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.

20:42 (IST) 21 Oct 2022
புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் செவ்வாய்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

20:40 (IST) 21 Oct 2022
உலககோப்பை கிரிக்கெட் : சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து

டி20 உலககோப்பை தொடரில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது அயர்லாந்து. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரில் இருந்து வெளியேறியது.

20:08 (IST) 21 Oct 2022
முன்னாள் ராணுவ வீரரை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய முயன்ற மனைவி கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. முன்னாள் ராணுவ வீரரான இவர் கடந்த சில நாட்களுக்குமுன்பு சில மர்மநபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது ஒரு கை துண்டானது. இந்த சம்பவம் குறித்து காவல்துறை நடத்திய விசாரணையில், மாரிமுத்துவை பிரிந்து வாழும் அவரது மனைவி கவிதா சொத்தக்காக தனது காதலனுடன் சேர்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கவிதா அவரது காதலன் மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டள்ள நிலையில், தப்பி ஓடிய மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

19:22 (IST) 21 Oct 2022
திருவள்ளூர் அருகே அம்மன் சிலை தீவைத்து எரிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே கோயிலில் இருந்த 7 அடி உயர அம்மன் சிலை தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18:50 (IST) 21 Oct 2022
இந்தியா மதசார்பற்ற நாடு.. வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க 3 மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்தியா மதசார்பற்ற நாடு. வெறுப்பு பேச்சில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி, உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

18:36 (IST) 21 Oct 2022
சத்யா கொலை- சிபிசிஐடி கோரிக்கை

சென்னை பரங்கிமலை ரயில்வே நிலையத்தில் ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட சத்யா வழக்கு தொடர்பாக தகவல்கள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

18:18 (IST) 21 Oct 2022
டெல்லி ரோகிணி பகுதியில் தீ விபத்து

டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

18:15 (IST) 21 Oct 2022
செஞ்சியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளியை முன்னிட்டு செஞ்சியில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆகின.

17:39 (IST) 21 Oct 2022
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: கொலை வழக்கு பதிய சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ள இந்தியக் கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

மேலும் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

17:12 (IST) 21 Oct 2022
அருணாச்சலப் பிரதேசம்: ஹெலிகாப்டர் விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அப்பர் சியாங் பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

15:46 (IST) 21 Oct 2022
இந்திய கடற்படையால் சுடப்பட்ட மீனவருக்கு நிதி

இந்திய கடற்படையால் சுடப்பட்ட மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரவேலுக்கு, ரூ.2 லட்சம் நிதி வழங்கவும், சிறப்பான சிகிச்சை அளிக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

15:46 (IST) 21 Oct 2022
இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.

14:59 (IST) 21 Oct 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. 3 பேர் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது வருவாய் வட்டாட்சியர்களாக இருந்த சந்திரன், சேகர், கண்ணன் ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

14:59 (IST) 21 Oct 2022
எம்.பி. ரவீந்திரநாத் ஆஜராக சம்மன்

தேனி கைலாசப்பட்டியில், எம்.பி. ரவீந்திரநாத்திற்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக எம்.பி. ரவீந்திரநாத் உட்பட மூன்று நில உரிமையாளர்கள் 2 வாரத்திற்குள் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

14:59 (IST) 21 Oct 2022
7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, கோவை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

13:49 (IST) 21 Oct 2022
சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறிய அயர்லாந்து அணி

டி20 உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. 146 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி, 17.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 150 ரன்கள் எடுத்தது. மொத்தமாக 4 புள்ளிகளுடன் அயர்லாந்து அணி சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியது.

13:09 (IST) 21 Oct 2022
ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்து

அருணாச்சல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அப்பர் சியாங் மாவட்டம் டுட்டிங் தலைமையகத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளது.

12:47 (IST) 21 Oct 2022
விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஹோட்டலில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கிய போது 3 பேர் உயிரிழப்பு

12:12 (IST) 21 Oct 2022
துப்பாக்கிச்சூடு சம்பவம் – 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது காவல் ஆய்வாளராக இருந்த திருமலை பணியிடை நீக்கம் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கை எதிரொலியாக டிஜிபி உத்தரவு நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக திருமலை தற்போது பணியாற்றி வருகிறார் . சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகிய காவலர்களும் சஸ்பெண்ட் – டிஜிபி சைலேந்திர பாபு

11:31 (IST) 21 Oct 2022
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது பணியிலிருந்த காவல் ஆய்வாளர் திருமலை பணியிடை நீக்கம்; பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திருமலை தற்போது நெல்லை மாநகர சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராக பணியாற்றி வருகிறார்

10:05 (IST) 21 Oct 2022
3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

10:04 (IST) 21 Oct 2022
ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு

சிவகங்கை அருகே ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு செங்குளம் பகுதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளான 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்ட 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா, தாய் விஜயலட்சுமி உயிரிழப்பு

10:04 (IST) 21 Oct 2022
தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு படகை நிறுத்துமாறு கூறிய போது, நிறுத்தாமல் சென்றதால் படகை நோக்கி துப்பாக்கிச்சூடு படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் படுகாயம்

10:03 (IST) 21 Oct 2022
ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

தர்மபுரி: ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு காவிரி ஆறு மற்றும் சின்னாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ள நீர் 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் கரையோர பகுதிகளுக்கு எச்சரிக்கை கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

Web Title: Tamil news today live rain school leave helicopter death