தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.24 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.
2k VS தமிழ்நாடு வெதர்மேன்
என்னிடம் வந்து விடுமுறை பற்றி கேட்டாதீர்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ”2கே தலை முறை மிகவும் மோசம். ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே தண்ணீர் லாரியை எடுத்துச் சென்று ஸ்பிரே பண்ணுங்கள் “ என்று அவர் முகநூலில் போட்ட பதிவு கடும் வைரல். இதை அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
- 22:53 (IST) 04 Nov 2022'ஜவான்' படம் குறித்து அட்லி மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான 'பேரரசு' திரைப்பட கதையை தான் அட்லி ஹிந்தியில் படமாக எடுப்பதாக சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், உண்மை நிலையை தெளிவுபடுத்த கோரி 'பேரரசு' திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்க நாராயணன் புகார் மனு அளித்துள்ளார். நவம்பர் 9ம் தேதி விளக்கம் அளிப்பதாக சென்னை தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
- 22:51 (IST) 04 Nov 2022உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12ம் தேதி தமிழகம் வருகை
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நவம்பர் 12ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்
- 22:49 (IST) 04 Nov 2022தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக தேனி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
- 20:27 (IST) 04 Nov 2022மத்திய அமைச்சர்கள் திருக்குறள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள்... தமிழை ஆட்சி மொழியாக்க மறுப்பது ஏன்? - எ.வ. வேலு கேள்வி
அமைச்சர் எ.வ.வேலு: “தமிழ்நாட்டிற்கு வரும் ஒன்றிய அமைச்சர்களுக்கு திருக்குறள் மிகவும் பிடிக்கும் என்கிறார்கள்,ஆனால் ஏன் தமிழை ஆட்சி மொழியாக மாற்ற மறுக்கிறீர்கள். ஆங்கிலம் எங்களுக்கு இணைப்பு மொழி. அதனால் தான், உலகம் முழுவதும் எந்த நாட்டிற்கு சென்றாலும் படித்து வேலை பார்த்து பொருளாதார வளம் பெற்று வருகிறார்கள். "குஜராத் மாநிலத்தில் குஜராத்தி மொழி 2-ம் இடத்தில் தான் உள்ளது; நீங்கள் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் அமித்ஷா, மோடி.இந்திதான் உங்கள் மாநிலத்தில் முதல் மொழி.அந்த நிலை வர நாங்கள் விடமாட்டோம்” என்று தெரிவித்துள்லார்.
- 19:40 (IST) 04 Nov 2022இ.பி.எஸ் ஆதரவாளர்கள் பாஜகவில் இணைவார்கள் - ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி: “எடப்பாடி பழனிசாமியுடன் இருப்பவர்கள் விரைவில் பா.ஜ.க-வில் இணைவார்கள்; அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது; பழனிசாமி, தங்கமணி, வேலுமணி இவர்களில் யார் நினைத்தாலும் அந்த எண்ணம் ஈடேறாது.” என்று கூறினார்.
- 18:57 (IST) 04 Nov 2022ரூ.15 ஆயிரம் லஞ்சம்.. 3 ஆண்டு சிறை.. கம்பியென்னும் முன்னாள் நில அளவை துணை ஆய்வாளர்
கோவை மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய முன்னாள் நில அளவை துணை ஆய்வாளர் ஒருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இவர், நில அளவைக்கு ஒப்புதல் வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
- 18:52 (IST) 04 Nov 2022சென்னை விமான நிலையத்தில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் இலங்கையிலிருந்து வந்த பயணியிடம் இருந்து 1,038 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.46.24 லட்சம் ஆகும்.
- 18:36 (IST) 04 Nov 2022பழைய குற்றாலத்தில் குளிக்க தடை
வடகிழக்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
இதனால் பழைய குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட இடங்களில் குளிக்க தடை இல்லை.
- 18:33 (IST) 04 Nov 2022என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு அறிவிக்கை நவ.9 வெளியீடு
2022-23 ஆண்டிற்கான பொறியியல் துணை கலந்தாய்விற்கான அறிவிக்கை நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
- 18:26 (IST) 04 Nov 2022டி20 உலககோப்பை: இலங்கை வெளியேற்றம்
T20 உலக கோப்பை தொடரில் இருந்து இலங்கை அணி அதிகாரப்பூர்வமாக வெளியேறியது.
இன்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா வென்றதால், இலங்கைக்கு இருந்த கடைசி வாய்ப்பும் தகர்ந்தது
- 18:15 (IST) 04 Nov 2022கோவாவில் கடற்கரையோரம் மது அருந்த தடை
சுற்றுலா மாநிலமான கோவாவில் கடற்கரையோரம் மது அருந்தவும், சாலையோரங்களில் சமைத்து சாப்பிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
- 18:02 (IST) 04 Nov 2022அமிர்தசரஸில் சிவசேனா பிரமுகர் சுட்டுக்கொலை
பஞ்சாப் மாநிலம் அமிர்தரஸில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குண்டடிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவசேனா மூத்த தலைவர் சுதிர் சூரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
- 17:46 (IST) 04 Nov 2022பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்.. திமுக அரசு அறிக்கை
பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம் என திமுக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம்; அந்த வகையில் மாநிலத் தலைநகரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 17:42 (IST) 04 Nov 2022TNPSC தேர்வில் போலி சான்றிதழ் சமர்பிப்பு.. மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதிப்பு..!
மருத்துவர்கள் ராஜேந்திரன், கவுசல்யா, ராஜேந்திர குமார் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த லதா ஆகிய நால்வருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், போலிச்சான்றிதழ் தயாரித்துக்கொடுத்த இருவர், இறந்துவிட்டதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ST என போலிச்சான்று அளித்து அரசுப்பணியில் சேர முயன்ற 3 மருத்துவர்கள், உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1995இல் TNPSC நடத்திய தேர்வில் இம்மோசடி நடக்க, பல கட்டங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் 26 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 17:42 (IST) 04 Nov 2022TNPSC தேர்வில் போலி சான்றிதழ் சமர்பிப்பு.. மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு சிறை தண்டனை விதிப்பு..!
மருத்துவர்கள் ராஜேந்திரன், கவுசல்யா, ராஜேந்திர குமார் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர் பணிக்கு விண்ணப்பித்த லதா ஆகிய நால்வருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், போலிச்சான்றிதழ் தயாரித்துக்கொடுத்த இருவர், இறந்துவிட்டதால் அவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ST என போலிச்சான்று அளித்து அரசுப்பணியில் சேர முயன்ற 3 மருத்துவர்கள், உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1995இல் TNPSC நடத்திய தேர்வில் இம்மோசடி நடக்க, பல கட்டங்களாக நிலுவையில் இருந்த வழக்கில் 26 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 17:02 (IST) 04 Nov 2022சென்செக்ஸ் 113 புள்ளிகள் உயர்வு
இன்றைய வர்த்தகத்தை இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் நிறைவு செய்தன.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 113 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 64.45 புள்ளிகளும் உயர்ந்தன.
- 16:44 (IST) 04 Nov 2022டிவிட்டர் நிறுவனத்தில் இன்று முதல் ஆட்குறைப்பு: இ-மெயில் மூலம் ஊழியர்களுக்கு அறிவிப்பு!
டிவிட்டர் நிறுவனத்தில் இன்று முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்னஞ்சல் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய நிலையில், 7000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், நிறுவனத்தின் நலன் கருதி ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும் டிவிட்டர் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
- 16:15 (IST) 04 Nov 2022ஆப்கானிஸ்தான் அணிக்கு 169 ரன்கள் இலக்கு!
டி-20 உலகக் கோப்பை இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணி அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது ஆஸ்திரேலியா. அந்த அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 54 ரன்கள் அடித்தார்.
- 16:03 (IST) 04 Nov 2022ஆர்.எஸ்.எஸ். 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி: ஐகோர்ட்டு நீதிபதி உத்தரவு
ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், வருகிற நவம்பர் 6 ஆம் தேதி கோவை, திருப்பூர், கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களிலும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்குக என்றும், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை, பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் உளவுத்துறை அறிக்கைகளை ஆய்வு செய்த பின் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- 15:47 (IST) 04 Nov 2022அரை இறுதிக்கு முதல் அணியாக முன்னேறிய நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பையின் அரை இறுதிக்கு முதல் அணியாக நியூசிலாந்து அணி முன்னேறியுள்ளது. அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கான கடைசி ஆட்டத்தில் அயர்லாந்தை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நிலையில், தற்போது 7 புள்ளிகளுடன் குரூப்1ல் இருந்து அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது
- 15:44 (IST) 04 Nov 2022அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி!
டெல்லியில் காற்று மாசை குறைக்கும் வகையில் 50% அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிய மாநில அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.
- 15:43 (IST) 04 Nov 2022அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவு!
திருச்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 100 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
விதிமுறைகளை மீறி குடியிருப்புகளை கட்ட உதவிய அரசு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனுமதியின்றி கட்டிடம் கட்டினால், அதை இடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
- 15:13 (IST) 04 Nov 2022முதல்வர் வேட்பாளரை அறிவித்தது ஆம் ஆத்மி கட்சி
குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக இசுதான் காத்வி போட்டியிடுகிறார்.
- 14:50 (IST) 04 Nov 2022மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள பக்க முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயில் விவரங்களை http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- 14:49 (IST) 04 Nov 2022வானிலை மையம் எச்சரிக்கை
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 14:00 (IST) 04 Nov 2022டி20 உலக்கோப்பை
டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
- 13:16 (IST) 04 Nov 2022இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில், நீலகிரி, கோவை, திருப்பூர்,தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை,கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:14 (IST) 04 Nov 2022நியூசிலாந்து அணி வெற்றி
டி20 உலக்கோப்பை சூப்பர் 12 சுற்றில், அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
- 12:53 (IST) 04 Nov 2022குஷ்பு புகார்
பாஜக பெண் நிர்வாகிகள் குறித்து தரக்குறைவாக பேசியதாக திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
- 12:44 (IST) 04 Nov 2022பட்டியலின மக்களை அனுமதிக்க வேண்டும்
திண்டுக்கல் சித்தரேவு கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோயில், செல்வ விநாயகர் கோயிலில், பட்டியலின மக்களை அனுமதிக்க வேண்டும்" *உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- 12:44 (IST) 04 Nov 2022பாஜக ஆளும் மாநிலங்களை விட, தமிழகத்தில் பால் விலை குறைவுதான்
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பால் விலை ரூ. 6 உயர்த்தப்பட்டது. பாஜக ஆளும் மாநிலங்களை விட, தமிழகத்தில் பால் விலை குறைவுதான். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது - அமைச்சர் நாசர்
- 12:43 (IST) 04 Nov 2022பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும்
ஐ.ஜி. முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. மற்றும் விசாகா கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு . லஞ்ச ஒழிப்பு துறையில் பணியாற்றிய ஐ.ஜி. முருகன், பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் எஸ்.பி. புகார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையை எதிர்த்து முருகன் தொடர்ந்த வழக்கு . தற்போதைய விசாகா கமிட்டி விசாரிப்பதில் ஆட்சேபனை இல்லை - ஐ.ஜி. முருகன்
- 12:09 (IST) 04 Nov 2022காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை
டெல்லியில் காற்று மாசு சீராகும் வரை தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை. தலைநகர் டெல்லியை காற்று மாசு அச்சுறுத்திவரும் நிலையில் மாநில அரசு அறிவிப்பு .காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
- 11:55 (IST) 04 Nov 2022தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (2014) சட்டப்படி செல்லும்
தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (2014) சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த கேரளா, ராஜஸ்தான், டெல்லி உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக மனு . தொழிலாளர் வைப்புநிதி நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு
- 11:54 (IST) 04 Nov 2022பொதுநல மனு
டெல்லி காற்று மாசு தொடர்பாக பொதுநல மனு . நவம்பர் 10ம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
- 11:53 (IST) 04 Nov 2022பால் பாக்கெட் விலை உயர்வு குறித்து அமைச்சர் நாசர் விளக்கம்
நீல, பச்சை நிற பால் பாக்கெட் விலையை உயர்த்த வாய்ப்பு இல்லை. பால் உற்பத்தியாளர்கள் நலனுக்காக ஆவின் பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது . ஆரஞ்சு பால் பாக்கெட் விலை உயர்வு குறித்து அமைச்சர் நாசர் விளக்கம்
- 11:23 (IST) 04 Nov 2022அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, அரியலூர் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
- 11:17 (IST) 04 Nov 2022தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ. 72 குறைந்து, ரூ. 37,648க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.. 4,706க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- 11:13 (IST) 04 Nov 2022தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றம்.
கால்வாய் கட்டாத இடங்களில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் வெளியேற்றம். திமுக சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பருவமழை முடிந்தவுடன், பழுதடைந்த சாலைகள் சீரமைக்கப்படும் . கடந்த ஆண்டு ஏற்பட்ட அளவிற்கு, தற்போது பெரிய அளவில் பாதிப்பு இல்லை - சென்னை, கொளத்தூரில் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
- 10:07 (IST) 04 Nov 2022விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம்,
மத்திய பிரதேச சாலை விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிவாரணம் - பிரதமர் மோடி
- 10:03 (IST) 04 Nov 2022NET தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
UGC NET தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு - தேசிய தேர்வு முகமை
- 08:49 (IST) 04 Nov 2022நவம்பர் 8ம் தேதி வரை கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் நவம்பர் 8ம் தேதி வரை கனமழை தொடரும்
. வளிமண்டல சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்யக்கூடும். இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
- 08:46 (IST) 04 Nov 2022கார் மீது பேருந்து மோதி விபத்து: 11 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசம், பெதுல் அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழப்பு - ஒருவர் படுகாயம்
- 08:45 (IST) 04 Nov 20223 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு : ஊரப்பாக்கம் அருகே வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி வெடித்து விபத்து . ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.